Home தினதியானம் இவள் தன்னால் இயன்றதைச் செய்தாள்

இவள் தன்னால் இயன்றதைச் செய்தாள்

128
0

மே 20

“இவள் தன்னால் இயன்றதைச் செய்தாள்.”
மாற்கு 14:8

மரியாள் விசுவாசமுள்ளவள். அவள் விசுவாசம் அன்பினால் கிரியை செய்தது. அன்பானது இயேசு இருந்த இடத்திற்கு அவளைக் கொண்டு சென்றதால், அவரைக் கனப்படுத்தி, தன் நன்றியறிதலை வெளிப்படுத்தத் தன்னால் ஆனதைச் செய்தாள். இது நமக்கு நல்ல முன்மாதிரி. நாம் நம்மால் ஆனதைச் செய்தோம் என்று நம்மைக் குறித்துச் சொல்லமாட்டோம். ஆனால் இதன் பொருளை அறிய வேண்டும்.

நம்மால் ஆனமட்டும் நாம் இயேசுவை நேசிக்கிறோமா? நம்மால் கூடியமட்டும் ஜெபித்துத் துதிக்கிறோமா? நம்மால் முடிந்தவரை சத்தியத்தைப் பிரபலபடுத்த, ஆத்துமாக்களை இரட்சிக்க, இரட்சகரை உயர்த்திப் பிடித்து, சாத்தானை எதிர்க்க செய்யக்கூடியதைச் செய்கிறோமா? நமது குடும்பத்தின் ஆத்தும நன்மைக்காக நம்மால் ஆனதை எல்லாம் செய்தோமா? சபையின் ஆறுதலுக்காகவும் வாழ்வுக்காகவும் நம்மால் ஆனமட்டும் செய்தோமா? நம் அயலகத்தாருக்கு நம்மால் ஆனமட்டும் செய்தோமா? சாத்தான் தன்னால் ஆனமட்டும் தீமை செய்கிறான். அநேக துஷ்ட மனிதர் ஆத்துமாக்களைக் கெடுக்க தங்களால் ஆனமட்டும் செய்கிறார்கள். காலமானது நம்மால் முடிந்ததையெல்லாம் செய்ய நம்மை ஏவுகிறது. நம்மால் முடிந்தவைகளை செய்யும்போது இரட்சகர் பார்த்து பிரியம் கொள்ளுகிறார். ஆதலால் அதில் இருக்கும் கட்டளையை உணர்ந்து அதன் போதனைக்குச் செவிகொடுத்து தேவ கிருபையைப் பெற்று அந்த ஸ்திரியைப்போல செய்து சாட்சி பெறுவோமாக. இது நித்திரையை விட்டு எழுந்திருக்க வேண்டிய காலம். நாம் கிரியை செய்கிறது மாத்திரம் போதாது. கர்த்தருடைய கிரியைகளிலும் பெருக வேண்டும். ஏனெனில் நம்முடைய பிரயாசம் வீண் போகாது.

தேவனிடம் வைராக்கியம்
மனுஷரிடம் பிரியம்
இவை என்னில் தோன்ற
தயை செய்யும் தேவா.