Home தினதியானம் நீங்கள் உலகத்திற்கு வெளிச்சமாய் இருக்கிறீர்கள்

நீங்கள் உலகத்திற்கு வெளிச்சமாய் இருக்கிறீர்கள்

127
0

மே 14

“நீங்கள் உலகத்திற்கு வெளிச்சமாய் இருக்கிறீர்கள்.”
மத் 5:14

நாம் அந்தகாரம் நிறைந்த உலகில் இருக்கிறோம். சத்தியத்தின் ஒளியையும் பரிசுத்தத்தின் ஒளியையும் நாம் பெற்றிருக்கிறபடியால் நாம் ஒளியை பிரகாசிக்கச் செய்ய வேண்டும். தினமும் இயேசுவாகிய சூரியனிலிருந்து நமக்கு ஒளியைப் பெற்றுக் கொள்ளுகிறோம். சந்திரனைப்போல் நமக்காக மட்டும் அந்த ஒளியை பெற்றுக் கொள்ளாமல் நாம் மற்றவர்களுக்கும் அந்த ஒளியைக் கொடுக்க வேண்டும். ஆகவே நம்முடைய ஒளி எப்படிப்பிரகாசிக்கிறது? அந்த ஒளி எங்கே பிரகாசிக்கிறதா என்று சரி பார்க்க வேண்டும். நம் ஒளி எங்கே பிரகாசிக்கிறது? துன்பப்படுகிறவர்களுடைய அறையில்¸ வறுமை நிர்பந்தம் உள்ளவர்களின் வீடுகளில் அறிவீனம்¸ அக்கிரமம் நிறைந்த இடங்களில் பிரகாசிக்கிறதா? எந்த வகையாய் நம்முடைய ஒளி பிரகாசிக்கிறது? பட்சமான வார்த்தைகளாய் மற்றவர்களை போய் சந்திக்கிறதினால்¸ உதாரமான காணிக்கை கொடுப்பதினால் அது பிரகாசிக்கிறதா?

நம்முடைய வெளிச்சம் செய்வதென்ன? அது விதவையின் கண்ணீரைத் துடைக்கிறதா? அநாதைப் பிள்ளைகளின் குறைவைத் தீர்க்கிறதா? பாவம் செய்பவர்களை ஜெப ஆலயத்திற்கு அழைத்து சிலுவையண்டை நடத்த யோர்தான் கரையில் சேர்க்கிறதா? நாம் உலகத்துக்கு வெளிச்சமானால் பிரகாசிக்க வேண்டும். அல்லது அந்தகாரம் ஆளுகை செய்யும். நாம் விளக்குகள்தான்? அதிக எண்ணெய் கிடைக்கும்படி வாஞ்சிக்க வேண்டும். அடிக்கடி நம்மை தூண்டிவிட வேண்டும். சோம்பலான படுக்கையையும்¸ உலகத்தோடு ஐக்கியப்படுதல் என்னும் மரக்காலையும்¸ பாவமான மங்கியெரிகிற விளக்கையும் குறித்து எச்சரிக்கையாய் இருப்போமாக.

உலகில் பிரகாசிக்க
ஒளியை எனக்களித்தீர்
தீபங்களாய் ஒளிவீச
சபையை ஏற்படுத்தினீர்.