Home தினதியானம் தேவன் உங்களைப் புத்திரராக எண்ணி நடத்துகிறார்

தேவன் உங்களைப் புத்திரராக எண்ணி நடத்துகிறார்

263
0

மே 09

“தேவன் உங்களைப் புத்திரராக எண்ணி நடத்துகிறார்.”
எபி 12:7

தேவன் நமக்கு நன்மைகளைக் கொடுத்தாலும், கொடாமலிருந்தாலும் நம்மைப் புத்திரராகவே நடத்துகிறார். நாம் பாடுகள் சகிக்கும்போதும் அனுபவிக்கும்போதும் நம்மை அப்படியே நடத்துகிறார். அவர் உங்களைத் தமது குடும்பத்தில் சேர்த்துக் கொண்டு தம்முடைய பரிசுத்தாவியானவரால் நிரப்பி பிள்ளைகளாகப் பாவிக்கிறார். எப்போதுமே அவர் நடத்துகிற விதமே பிள்ளைகளை தகப்பன் நடத்துவதுப்போல்தான். உங்களுக்குச் சேதம் உண்டாகும் இடத்தில் வைக்கவும்மாட்டார். உங்களைக் கோபமாக அல்ல இரக்கமாகவே தண்டிக்கிறார். பிரம்பைக் கையாண்டும், யாரைக் கொண்டு தண்டித்தாலும், தண்டிக்கிறவர் உன் பிதாதான். தம் சித்தத்தின் யோசனைப்படியே நம்மை நடத்துகிறார்.

இப்போதும் உன்னைப் பயிற்சிக்கிறார். நித்தியத்திற்கென படிப்பிக்கிறார். இனிமேலும் நீ படிக்க வேண்டியவைகளும் அனுபவிக்க வேண்டியவைகளும் உன் பிரயோஜனத்திற்காகவும் மேன்மைக்காகவும் இருக்கும். எந்த நஷ்டமும், எந்தப் பாடுகளும், எந்தத் தவறுகளும் அவசியம்தான். இதை நீ விசுவாசிக்கிறாயா? உனக்குச் சம்பவிக்கிற சகலத்திலும் தேவனுடைய கரத்தைப் பார்க்கிறாயா? யோபைப்போல் கர்த்தர் எனக்குச் சுகத்தையும், ஐசுவரியத்தையும், பிள்ளைகளையும், சிநேகிதரையும்தந்து தமது பிள்ளைகளாக்கினார். கர்த்தருடைய நாமம் துதிக்கப்படுவதாக. என்று சொல்ல முடியுமா? ஏலியைப்போல் அவர் கர்த்தர் அவர் தமக்கு நலமானதைச் செய்வாராக. என்று சொல்ல முடியுமா? இவர்களுக்கு வந்ததைவிட உனக்கு வந்தது ஒன்றும் பெரிய சோதனையல்ல. ஆனால் அவர்களுக்குக் கிடைத்ததைவிட உனக்குக் கிடைத்த சிலாக்கியம் பெரியது.

தேவ புத்திரர் யாரும்
சிட்சை அடைவார் பாரும்
அவர் தண்டனைக்குள் ஆகாதோர்
பாத்திரர் அவருக்க
எத்துன்ப நேரத்திலும்
அது ஆறுதல் தருமே.