Home செய்திகள் வழியும் வாழ்வும் உண்மையும்

வழியும் வாழ்வும் உண்மையும்

183
0

வழியும் வாழ்வும் உண்மையும்

புறஜாதிகளுக்குப் பிரகாசிக்கிற ஒளியாகவும், உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு மகிமையாகவும், தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம்பண்ணின உம்முடைய இரட்சணியத்தை எம் கண்கள் கண்டது.

இயேசுகிறிஸ்து யார் அவர்?

இவ்வுலகில் எல்லோரும் அறிந்திருக்க வேண்டிய ஒருவர் உண்டென்றால் அவர்தான் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து. இவ்வுலக மக்கள் அனைவரையும், அவர்கள் யாராயிருந்தாலும், அவர்கள் எப்படிப்பட்டவர்களாயிருந்தாலும் அவர்களை உண்மையாய் நேசிக்கக்கூடிய ஒருவர் உண்மென்றால் அவர்தான் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து. இன்றைய உலகில் வாழும் மக்களின் எல்லாத் தேவைகளையும் நிறைவுப்படுத்தக்கூடிய, திருப்தி செய்யக்கூடிய ஒருவர் உண்டென்றால் அவர்தான் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து. மனிதர்களின் இந்த உலக வாழ்க்கையின் முடிவாகிய மரணத்திற்குப்பின் உள்ள நித்தியத்தை, மோட்;சத்திலே பரம சந்தோஷத்துடன் வாழ வழிவகுத்த ஒருவர் உண்டென்றால் அவர்தான் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து.

இயேசுகிறிஸ்துவைப்பற்றி நீங்கள் முன்னரே கேள்விப்பட்டிருக்கலாம். அல்லது ஒரளவிற்கு அவரைப்பற்றி தெரிந்திருக்கலாம். இயேசுகிறிஸ்துவைப் பற்றி பலரும் பலவாறாக நினைக்கிறார்கள். ‘அவர் யார்? அவர் எப்படிப்பட்டவர்? அவர் ஏன் உலகத்திற்கு வந்தார்? அவர் உங்களுக்காக என்ன செய்திருக்கிறார்? உங்கள் வாழ்க்கையில் இயேசுகிறிஸ்து என்ன செய்ய விரும்புகிறார்? அவரைப்பற்றி நீங்கள் ஏன் அறிந்துகொள்ள வேண்டும்? கிறிஸ்தவர்கள் இயேசுகிறிஸ்துவைக் குறித்து மற்றவர்களுக்கு அறிவிப்பதன் காரணமென்ன?” இந்தக் கேள்விகளுக்கெல்லாம் நீங்கள் பதில்களை தெரிந்துக்கொள்வது உங்களுக்கு உதவியாக இருக்கும். இச்சிறு பகுதியை கருத்துடன் படித்துப் பாருங்கள்.

அவரே தேவனின் ஒரே குமாரன்

இயேசுகிறிஸ்து உலகத்தில் தோன்றிய மகாத்மாக்களில் ஒருவர் என பலரும் நினைக்கிறார்கள். ஆனால் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து மகாத்மாக்களிலும் மேலானவர். அவரே தேவனின் அவதாரம். ஒரே குமாரன்.

கடவுள் மனிதருக்குத் தன்னை வெளிப்படுத்த மனித உரு எடுப்பதை ‘அவதாரம்” என்று சொல்லுவார்கள். பொதுவாக ‘கடவுள் பக்தியுடன் ஆராதிக்க வேண்டும். அவரை அறிந்துக்கொள்ள வேண்டும்” என்ற தீராத தாகம் எல்லா மனிதனுக்குள்ளும் உண்டு. இத்தேவையை நிறைவுபடுத்தத்தான் இயேசுகிறிஸ்து மனிதனாகப் பிறந்தார். பாவத்தின் காரணமாக கடவுளுடைய சாயலையும், கடவுளோடு கொண்டிருந்த உறவையும் இழந்த நிலையிலிருக்கும் மனித இனத்தை ஈடேற்றவும் அவர்களுக்கு நல்வாழ்வைக் கொடுக்கவும் கடவுள் தன்னை மனிதனாக வெளிப்படுத்தினார். பலதடவைகளில், பலவிதங்களில், பலர் மூலமாக அவர் அவதாரம் எடுக்காமல் ஒரேமுறை ‘இயேசுகிறிஸ்துவாக” அவர் அவதாரம் எடுத்தார்.

2000 ஆண்டுகளுக்கு முன்னால் இப்பொழுது இஸரேல் என்று அழைக்கப்படும் பாலஸ்தீனா நாட்டில் ஒரு கன்னியின் வயிற்றில் பிற்ந்த இயேசுகிறிஸ்துவே தெய்வத்தின் அவதாரமாவார். மனிதனின் விழுந்துபோன பாவநிலையிலிருந்து அவனை விடுவித்து, தூக்கியெடுத்து, அவனது வாழ்வை நிறைவுப்படுத்த வந்த ஒரே தெய்வ அவதாரம் இயேசுகிறிஸ்து. ஆம் ‘பாவிகளை இரட்சிக்க இயேசுகிறிஸ்து உலகத்தில் வந்தார்” என்று பரிசுத்த வேதாகமத்தில் எடுதப்பட்டுள்ளது.

அவரது வாழ்க்கைச் சுருக்கம்

இயேசுகிறிஸ்து முப்பத்து மூன்றரை ஆண்டு காலம் இவ்வுலகில் வாழ்ந்தார். அவர் முப்பது வயதாயிருக்கும்போது மக்களுக்கு நற்பணிகளைச் செய்யவும், தெய்வீகப்போதனைகளை எடுத்துச் சொல்லவும் ஆரம்பித்தார். பாலஸ்தீனா நாட்டில் வடபகுதியான கலிலேயா என்ற பகுதியில் ஊழியத்தை ஆரம்பித்தார். தம்மோடு இருக்கவும், நற்செய்தியை பிரசங்கிக்கவும், நோயுற்றோருக்கு தெய்வீக சுகம் கொடுக்கவும், பிசாசின் பிடிகளிலிருந்தோரை விடுவிக்கவும், அவர் பன்னிரெண்டு சீடர்களைத் தெரிந்து அவர்களைப் பயிற்றுவித்தார். இயேசுகிறிஸ்துவின் ஊழியக் காலமெல்லாம் அவர்கள் அவருடனேகூடச் சென்றார்கள்.

இயேசுகிறிஸ்து சிறந்த தெய்வீகப் போதகர். மக்களின் ஆன்மீக வாழ்க்கைக்கான மேலான சத்தியங்களைத் தெளிவாக எளிய முறையில் போதித்தார். அவர் சொன்ன 36 உவமைகள் வேதாகத்தில் புதிய ஏற்பாட்டிலுள்ள சுவிசேஷங்களில் இடம் பெற்றுள்ளன. ஆன்மீகத் தத்துவங்களை விளக்கப் பயன்படுத்தும் உதாரணங்கள் அல்லது கதைகள் ‘உவமைகள்” என்று அழைக்கப்படுகின்றன. ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து அற்புதங்கள் பல செய்தவர். இயேசுகிறிஸ்து மனித உரு எடுத்ததின் மேலான நோக்கம், மக்களது பாவங்களுக்கான பிராயச்சித்தம் செய்வதற்காகக்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இயேசுகிறிஸ்து தமது உலக வாழ்வின் கடைசி நாட்களை பாலஸ்தீனாவின் தலைநகராகிய எருசலேம் நகரில் கழித்தார். அவரது இனத்தவரான யூதமக்கள் அவரைப் புரிந்துகொள்ளவில்லை. ஆதலால் அவரை ஏற்றுக்கொள்ள மறுத்தனர். அவரை முற்றிலுமாக வெறுத்தனர்.

ஒருநாள் கெத்சமனே என்ற தோட்டத்தில் உருக்கமாக அவர் ஜெபித்துக்கொண்டிருந்போது அவரை எதிர்த்தவர்களால் இயேசுகிறிஸ்து கைதுசெய்யப்பட்டார். யூதமதத் தலைவர்கள் முன்னிலையில் விசாரணை செய்யப்பட்டார். அவரைக் கொலைசெய்ய அவர்மேல் அபாண்ட பழிகளைச் சுமத்தினர். ‘அவனைச் சிலுவையில் அறையும்” என தேவசத்தின் அதிபதியான பிலாத்து என்பவன் முன் ஆவேசக்குரல் எமுப்பினர். இறுதியாக ‘இயேசுகிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட வேண்டும்” என அவர்மேல் மரணதண்டனை விதிக்கப்பட்டது. ரோம நாட்டு போர்ச்சேவகர்கள் அவரைக் கொடுமையாகத் துன்புறுத்தினர். முட்களினால் கிரீடம் ஒன்றைக் செய்து அவர் தலையின்மேல் வைத்து அழுத்தினர். பாரமான சிலுவை மரத்தை சுமந்தவராய் இயேசுகிறிஸ்து எருசலேம் தெருக்களின் வழியாக ‘கொல்கதா” என்று அழைக்கப்படும் கல்வாரி மலைக்குக் கொண்டுச் செல்லப்பட்டார். அங்கு இரண்டு கொடியவர்களின் நடுவில் அவர் சிலுவை மரத்தில் அறையப்பட்டார். கைகளிலும், கால்களிலும் ஆணிகள் கடாவப்பட்டவராய் சிலுவை மரத்தில் இயேசுகிறிஸ்து தொங்கினார். அந்தச் சமயத்திலும் தன்னை துன்புறத்தினவர்களுக்காக மன்றாடினார். சில மணிநேரங்களின் பின் ‘முடிந்தது” என்று கூறி உயிர்விட்டார். அவர் மரித்துவிட்டதை உறுதிப்படுத்த அவரது விலாவில் ஈட்எயினால் குத்தப்பட்டது. இயேசுகிறிஸ்து மரித்தபோது பூமி அதிர்ந்தது. நடுப்பகல் வேளை எங்கும் இருள் சூழ்நதது. அப்பொழுதுதான் அவரது தெய்வீகத்தன்மை பலருக்கு விளங்கியது. அவரை சிலுiவில் அறைந்த ரோமபோர் வீரர்கள் ‘இவர் மெய்யாகவே தேவகுமாரன்” எனக் கூறினர்.

இயேசுகிறிஸ்து உடல் குகைபோன்ற ஒரு கல்லறையில் வைக்கப்பட்டு, அதன் வாசலில் ஒரு பெரிய கல் வைத்து மூடப்பட்டு, முத்திரை செய்யப்பட்டது. ரோமப்போர்ச்சேவர்கள் அதைக் காவல் காத்தனர். ஆனால் மூன்றாம் நாள் இயேசுகிறிஸ்து உயிருடன் எழும்பினார். இந்த உலகில் வாழந்த மற்ற மகாத்மாக்களைப்போல இயேசுகிறிஸ்துவின் சரித்திரம் மரணத்தோடு முடிந்துவிடவில்லை. இயேசுகிறிஸ்து தாம் முன்னமே சொல்லிருந்தபிரகாரமாக மூன்றாம் நாள் மரணத்தை வென்றவராக உயிர்த்தெழுந்தார். உயிர்த்தெழுந்த பின்னர் நாற்பது நாட்கள் அவர் தம்முடைய சீடர்களுடன் இருந்தார். சடைசியாக சில முக்கியமான கட்டளைகளை அவர் தம் சீடர்களுக்கு கொடுத்து விட்டு, அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கையில் பரமேறிச் செற்றார். அவர் எப்படியாக பரத்துக்கு எழுந்தருளிச் சென்றாரோ, அந்தவிதமாக யாவருமே பார்க்கும் வகையில் மீண்டும் இந்த உலகத்திற்குத் திரும்பி வருவார். மிக விரைவில் அவர் இந்த உலகத்திற்கு மீண்டும் வரவிருக்கிறார்.

இயேசுகிறிஸ்து, சரித்திரத்தில் புகழ்பெற்று தலைசிறந்து விளங்கினவர் மட்டுமல்ல அவர் தன்னிகரற்ற தேவகுமாரன். இந்த உலகில் பிறக்கும் மனிதர்கள் யாவரும் வாழ்வதற்காகவே பிறக்கின்றனர். ஆனால் இயேசுகிறிஸ்துவோ மரிப்பதற்காகப் பிறந்தார். ஆனால் மரித்தவர் மீண்டும் உயிரோடெழுந்தார். அவர் மீது நம்பிக்கை கொண்டு, அவரை உறுதியாகப் பற்றி கொள்ளுகிறவர்கள் உள்ளத்திலேயே அவர் அரசாட்சி செய்கிற ஆண்டவராகி இருந்து, அவர்களுக்கு நல் வாழ்வையும் நித்திய ஜீவனையும் அளிக்கிறார்.

உங்கள் பாவங்களிலிருந்து உங்களை இரட்சிக்கிறார்

பொதுவாக மக்கள் பாவத்தைக் குறித்து பேச விரும்புவதில்லை. ஆனால் பாவம் என்ற முக்கியமான அடிப்படைப் பிரச்சனைக்கு தீர்வுகாணாமல் இவ்வுலக வாழ்க்கையை முடிக்கும் மனிதன், மரணத்தின் பின் நித்தியத்தை தேவனை நிறைந்த நரகத்தில் செலவிட வேண்டும் என்பது தவிர்க்க முடியாததும் தப்ப முடியாததுமான ஓர் உண்மையாகும்.

உண்மையில் மனிதனுக்குள் பாவம் செய்யும் சுபாவம் இருப்பதாலேயே அவன் பாவம் செய்கிறான். மனிதன் பாவமான செயல்களைச் செய்வவதனால் அவனை ‘பாவி” என்று அழைப்பதைக் காட்டிலும், அவன் பாவியாக அதாவது பாவம் செய்யும் சுபாவத்தை உடையவனாக இருப்பதினால் ‘அவன் பாவம் செய்கிறான்” என்று கூறுவது பொருத்தமாக இருக்கும். பாவமான செயல்களைச் செய்ததினால் மனிதனுடைய மனசாட்சி அவனைக் குற்றப்படுத்துகிறது அதனால் அவன் மிகவும் வேதனைப்படுகிறான். சிலவேளைகளில் அவன் பாவம் செய்வதிலிருந்து விலகி வாழ விரும்பினாலும்கூட, பாவ பழக்கங்களின் பிடியிலிருந்து அவன் தப்ப முடியாமல், தவித்து அல்லற்படுகிறான். பாவம், அவனை மட்டுமல்ல அவனைச் சுற்றி வாழ்பவர்களையும் பாதிக்கிறது. ஒருவன் பாவத்தோடு வாழ்ந்து, அந்த பாவத்திலிருந்து விமோசனம் பெறாமல் இரட்சிக்கப்படாமல் மரிப்பானாகில், அவனுக்கு நித்திய ஆக்கினையாகிற நரகம் நியமிக்கப்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் உள்ளவர்களை பாவத்தின் தண்டனைத் தீர்ப்பாகிற ‘நரகம்” என்ற நித்திய ஆண்கினையிலிருந்து இரட்சித்து விமோசனம் கொடுக்கவும், அதிலிருந்து விடுதலையாக்கவுமே இயேசுகிறிஸ்து இந்த உலகத்திற்கு வந்தார்.

மனிதன் பாவத்தன்மையுடையவனாய், தெய்வத்தின் மகிமையை இழந்தவனாய் இருக்கிறான். பிறவி வியாதியைப்போல அவனுக்குள் இருக்கும் பாவம் ஒரு பயங்கரமான ஆன்மீக நோயாக இருக்கிறது. வியாதிப்பட்ட ஒருவன் வியாதியின் விளைவாகிய மரணத்தினின்று காப்பாற்றப்பட வேண்டும். வியாதியின் கோரப்பிடியிலிருந்து விடுதலையாக்கப்பட வேண்டும். இப்படி காப்பாற்றப்பட்டு, விடுதலையாக்கப்படுவதைப் போல ஆன்மீக வியாதியாகிய பாவத்தின் தண்டனையிலிருந்தும் பாவத்தின் வல்லமையிலிருந்தும் காப்பாற்றப்பட்டு விடுதலையாக்கப்படுவதே ‘இரட்சிப்பு” என அழைக்கப்படுகிறது.

‘இயேசு” என்ற சொல்லுகிக்கு ‘அவர் தமது மக்களின் பாவங்களை நீக்கி அவர்களை விடுவப்பார்” என்று பொருளாகும். சிலுவை மரத்தில் மனிதனுடைய பாவத்திற்கு ‘நிவாரணம்” அல்லது ‘பிராயச்சித்தம்” செய்யும் வகையில் மரித்த இயேசுகிறிஸ்துவின் இரத்தம், சகல பாவங்களையும் நீக்கி, உங்களையும் சுத்தமாக்க வல்லமையுள்ளதாயிருக்கிறது. நீங்கள் இயேசுகிறிஸ்துவை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளும்போது பாவத்திற்குரிய தண்டனையிலிருந்து விடுதலையையும், பாவத்தின் வல்லமைக்கு மேலான வெற்றியையும் அவர் உங்களுக்குத் தருவார். ‘இயேசுகிறிஸ்துவாலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை. நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும் மனிதர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை” என பரிசுத்த வேதாகமம் கூறுகின்றது. எனவே மனந்திரும்பி, சுவிசேஷமாகிய இந்த நற்செய்தியை விசுவாசிப்பீர்களாயின் நீங்களும் இந்த இரட்சிப்பைக் கண்டுகொள்வீர்கள்.

அவரைப்பற்றி ஏன் அறிவிக்கிறார்கள்?

இயேசுகிறிஸ்துவை நம்புகிறவர்கள், அவரைப்பற்றி மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லுகின்றனர். ‘கிறிஸ்தவர்கள் தங்கள் மதத்தைப் பரப்புகிறார்கள்” என்பது பலருடைய தவறான அபிப்பிராயம். இயேசுகிறிஸ்துவைப்பற்றி எடுத்துச் சொல்லுவது, கிறிஸ்தவ மதத்தை வளர்க்கவேண்டும் எனற மதப்பிரச்சாரம் அல்ல. வியாதியிலிருந்து சுகமடைந்த ஒருவன் அதே வியாதிப்பட்ட இன்னொருவனுக்கு தன்கை; குணப்படுத்திய வைத்தியரை அறுமுகப்படுத்துவதுபோல, இயேசுகிறிஸ்துவை ஏற்றுக் கொண்டவர்களுக்குள், அவரைப் பற்றி எல்லோருக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும் என்ற ஒரு உள்ளான தூண்டுதல் ஏற்படுகிறது.

இயேசுகிறிஸ்து இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில் அவரைச் சந்தித்து அவரால் ஆசீர்வாதம் பெற்றவர்கள், பாவ மன்னிப்பைப் பெற்று வாழ்விலே மாறம் பெற்றவர்கள் அவரைப்பற்றி மற்றவர்களுக்கு அறிவித்தார்கள். தேவை உள்ளவர்களை அவரிடம் கொண்டு ந்தார்கள். ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவிடமிருந்து நன்மைகளைப் பெற்றவர்கள் மற்றவர்களுக்கும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஒரு பரத்த நோக்கத்தோடுதான் இன்றும் அவரைப் பற்றி பிறருக்கு எடுத்துச் சொல்லுகிறர்கள்.

இயேசுகிறிஸ்துவை விசுவாசித்து அவரை உத்தமமாய் பின்பற்றுகிறவர்கள், அவர் கொடுத்த கடைசி கட்டளைக்குக் கீழப்படிய தங்களை அர்ப்பணித்திருக்கிறார்கள். இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்து 40 நாட்களுக்கு பின், அவர் பரமேறிச் செல்வதற்கு முன் தம்முடைய சீடர்களிடம் ‘நீங்கள் உலகமெங்கும் சென்று சர்வ சிருஷ்டிருக்கும் சுவிசேஷத்தை பிரசங்கியுங்கள்” என்று கட்டளையிட்டார். ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை அல்லாமல் ஒரு மனிதனுக்கு மோட்சத்திற்கும் போக வேறு வழியே இல்லை. இவ்வுலக வாழ்விலும் நிறைவான, நிலையான ஆசீர்வாதங்களை ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து ஒருவர் மட்டுமே அருளமுடியும். எனவேதான் இயேசுகிறிஸ்துவை அறிந்தவர்கள் மற்றெல்லாரும் அறிந்துகொள்ள வேண்டுமென்று அவரைப்பறி அறிவிக்கிறார்கள்.

‘நமக்கு ஒரு பாலகன் பிறந்தார், நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்”