Home தினதியானம் உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்று இருக்கக்கடவோம்.

உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்று இருக்கக்கடவோம்.

120
0

மே 08

“உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்று இருக்கக்கடவோம்.” 1.தீமோ 6:8

இதைவிட அதிகம் நமக்குத் தேவையில்லை. இதைவிட அதிகம் தேவன் நமக்குக் கொடாவிட்டால், அதிகம் வேண்டுமென்று நாம் விரும்பவும் கூடாது. நமது போஜனம் மிக எளிதையாயும், உடை வெகு சாதாரணமாயும் இருக்கலாம். அதனால் என்ன? தேவ சமுகத்தைவிட தேவ ஆசீர்வாதத்தையும்விட ஒரு பெரிய நாடு கிடைத்தாலும் அதனால் பயனில்லை. தேவன் நமக்கு அதிகம் கொடுக்கவில்லையென்றால், அவ்வாறு கொடுப்பது நமக்கு தீமைவிளைவிக்குமோவென்று நாம் அதிகம் எண்ண வேண்டும். ஒன்று தேவன் நம்மை நேசிக்கிறார். அல்லது நேசிக்கவில்லை. ஒன்று நமக்காக் கவலைப்பட்டு வேண்டியதைத் தருகிறார். அல்லது ஏனோ தானோவென்று விட்டுவிடுகிறார். நாம் இயேசுவை நேசிக்கிறார். நமக்காகக் கவலைப்பட்டு நமக்கு வேண்டியதைத் தருகிறார். அவர் நம்முடைய குடியிருப்பின் எல்லையைக் குறித்திருப்பாரானால் நமக்கு தேவையானதையெல்லாம் கொடுப்பேனென்று வாக்களித்திருப்பாரானால், ஏனாதானோவென்றிருக்கிறார் என்று சொல்லக்கூடாது. எல்லாம் நமக்காய்ச் செய்கிறார். ஆதலால் நமக்குப் போதும் என்று மனந்திருப்தியாய் இருக்கக்கடவோம். எந்த நிலையிலிருந்தும் போதுமென்றிருப்போம்.

போதுமென்கிற மனதுடனே கூடிய தேவ பக்தியே மிகுந்த ஆதாயம் என்று வேதம் சொல்கிறது. அல்லது அதுவே பெரிய ஆஸ்தி என நினைக்கக்கடவோம். ஜீவனுக்கும் பக்திக்கும் வேண்டிய சகலமும் நம் இயேசுவைப்பற்றின அறிவின்மூலம் நமக்குக் கொடுக்கப்படுகிறதை மறவாதிருப்போமாக. இயேசுவை அறிந்திருந்தோமானால் அவர்மூலம் நமக்குக் கிடைக்கும் எல்லாவற்றிலும் நாம் மனதிருப்தியாய் இருப்பது நமது கடமை.

பெருமையைத் தேடேன்
சிறப்பையும் நாடேன்
எனக்கு வேண்டியது கொஞ்சம்
அதோடு தாரும் நல் நெஞசம்.