Home தினதியானம் உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்.

உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்.

253
0

மே 10

“உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்.”
யோவான் 16:20

ஆண்டவருடைய துன்பத்தையும் மரணத்தையும் பார்த்து அவருடைய சீஷர்கள் துக்கித்தார்கள். அவர் மரித்தோரை விட்டெழுந்து தம்முடைய அன்பை அவர்களுக்குக் காட்டினபோது அவர்கள் துக்கம் என்றுமுள்ளதல்ல. அது கோடைக் காலத்தில் தோன்றி மறையும் மேகத்தைப்போலவும், வெயிலுக்கு முன் அடிக்கும் குளிர்ந்த காற்றைப்போலவும் இருக்கும்.

நண்பரே, இப்போது உங்களுக்குத் துக்கம் இருந்தால் உங்கள் துக்கம் சீக்கிரம் சந்தோஷமாக மாறும். ஏனென்றால் நீதிமானுக்குச் சந்தோஷமும் இருதயத்தில் உண்மையானவர்களுக்கு மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டிருக்கிறது. இரவில் அழுகை தங்கும். காலையில் கெம்பீரமுண்டு. உயிர்த்த இரட்சகர் உனக்குத் தோன்றி சமாதான வாழ்த்துக்களைச் சொல்லுவார். இப்போது உனக்கு முகத்தை மறைக்கிற தேவன் உனக்கு சந்தோஷமுண்டாகத் தரிசனமாவார். நீ வெட்கப்படமாட்டாய். உனக்குத் துக்கத்தை உண்டாக்குகிற பாவம் மன்னிக்கப்பட்டு மறக்கப்படும். உன் சமாதானத்தைக் கெடுக்கிற சத்துருக்கள், ஒன்று சீர்ப்படுவார்கள் அல்லது அழிக்கப்பட்டுப் போவார்கள். உன் சூரியனை மறைக்கிற கருத்த மேகங்கள் சீக்கிரமாய் உன் மேல் ஆசீர்வாதமான மழையை வருஷிக்கப்பண்ணும். உனக்கும் உன் தேவ இராஜ்யத்திற்கும் இருக்கிற தூரம் சீக்கிரம் குறைந்து போகும். உன் அழுகையின் நாள்கள் முடிந்து மகிழ்ச்சியின் காலம் துவங்கப்போகிறது. இப்பொழுது நல்ல விதையைத் துக்கத்தோடே எடுத்துக் கொண்டு போகிற நீ நித்திய சந்தோஷக் கீதங்களோடே திரும்பி வாருவாய்.

எத்துன்ப நேரத்திலும்
தேவ அன்பு உனக்காகாரம்
தம்முகம் மறைக்கினும்
அதிலுமுண்டு சந்தோஷம்.