Home தினதியானம் கர்த்தரை மறவாதபடி எச்சரிக்கையாயிரு

கர்த்தரை மறவாதபடி எச்சரிக்கையாயிரு

200
0

மே 07

“கர்த்தரை மறவாதபடி எச்சரிக்கையாயிரு.”
உபா. 6:12

பொதுவாக உலக வாழ்க்கையைப் பார்க்கும்போது நாம் பாவத்தில் விழ ஏதுவாகிறது. தேவனிடத்தில் நாம் என்னென்ன பெற்றுக்கொண்டிருக்கிறோம், எவ்வளவு பெற்றுக்கொள்ளோம் என்பதையெல்லாம் மறந்து அவருக்குக் கணக்கு ஒப்புவிக்க வேண்டியவர்கள் என்பதை மறந்து விடுகிறோம். நமக்குத் தெரிந்ததை எல்லாம் பயன்படுத்த வேண்டுமானால் அனுதினமும் சகலத்திலும் ஆண்டவரை அறிக்கைப் பண்ண வேண்டும். துன்பமானாலும், இன்பமானாலும் சகலத்திற்கும் அவரிடம் போய் அனைத்தையும் ஒப்புவித்து எல்லாவற்றிலும் அவரைப் பிரியப்படுத்தப்பார்க்க வேண்டும். சோதனை நேரத்தில் அவர் சொன்னபடி உதவிடுவார் என்றும், வேண்டியவைகளையெல்லாம் செய்வார் என்றும் எதிர்ப்பார்த்திருக்க வேண்டும்.

நாம் கர்த்தரை மறவாதபடி இதுமுதல் எச்சரிக்கையாய் இருப்போமாக. ஏனென்றால் அது அவரைக் கனவீனப்படுத்தும். அவருக்குத் துக்கத்தை உண்டாக்கும். அது நம்மைச் சேதப்படுத்தி பயத்தையும் அல்லது இருதய கடினத்தையும், உலக சிந்தனையையும், வீண் கவலையையும், ஜெப அசட்டையையும், சுய நீதியையும், நன்றிக் கேட்டையும் பிறப்பிக்கும். இந்தப் பெரிய பாவத்தை நீக்க ஜெபித்து துவக்குவோமாக. எப்போதும் ஜெப சிந்தயில் இருக்க முயற்சிப்போமாக. எந்தச் சமயத்திலும் தியானிக்கத் தகுந்த காரியம், வேத வாக்கியம். தேவ சுபாவங்கள், கிறிஸ்துவின் கிரியைகள் நாம் பெற்ற நன்மை ஆகியவற்றை நினைத்துக் கொள்வோமாக. கர்த்தரை மறவாதபடிக்கு எச்சரிக்கையாயிரு.

தேவனை மறந்தால் நான்
கெட்டழிந்துப் போவேன்
உம்மை விடாதபடி என்னை
இரட்சியும் நான் உமதடிமை.