Home தினதியானம் சகல ஆறுதலின் தேவன்

சகல ஆறுதலின் தேவன்

203
0

மே 06

“சகல ஆறுதலின் தேவன்.”
2கொரி 1:3

நம்மில் நாம் ஏழைகள். ஆறுதலற்ற சிருஷ்டிகள். உலக காரியங்களைக் கொண்டு நம்மை ஆறுதல்படுத்த முயற்சிக்கும்போதும் அது நடக்காமல் போனால் வருத்தமடைகிறோம். பாவமானது உலகத்திலிருந்து எல்லா உண்மையான ஆறுதலையும், பாக்கியத்தையும் எடுத்து விடுகிறது. தேவனைவிட்டு தூரப்போகும்போது ஆறுதலும், நம்மை விட்டு தூரப்போகும். நமது தேவன் பாக்கியம் நிறைந்தவர். நமக்குப் பாக்கியத்தைக் கொடுக்கிறார். அவர் தரும் ஆறுதல் சுத்தமும் ஆவிக்குரியதுமாய் இருக்கம். அவர் அளிக்கும் ஆறுதல் ஆத்துமாவைச் சந்தோஷப்படுத்தி முகப்பிரகாசத்தை உண்டாக்கும். உலகில் பேசப்படும் எல்லா வார்த்தைகளையும்விட அவர் உதடுகளிலிருந்து பிறக்கும் ஒரு வார்த்தை அதிக ஆறதலைக் கொடுக்கும்.

நாம் நம்மை வெறுத்து நமது தேவனின் ஆறுதலைப் பெற வேண்டும். இல்லாவிட்டால் நிலையான அமைதி கிடையாது. அவர் நமக்கு ஆறுதல் அளிக்க தயாராயிருக்கிறார். அவர் சீயோனின் பாழும் அவாந்தர ஸ்தலங்களையெல்லாம் தேறுதலடை செய்வார். ஒருவனை அவன் தாய் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன். நீங்கள் எருசலேமிலே தேற்றப்படுவீர்கள் என்று ஆறுதலற்ற தமது மக்களைப் பார்த்து ஆறுதலின் தேவன் சொல்கிறார். என் ஜனத்தை ஆற்றுங்கள். தேற்றுங்கள். எருசலேமுடன் பட்சமாய்ப் பேசுங்களென்று தம்முடைய ஊழியக்காரருக்குக் கற்பிக்கிறார். துயரப்படுகிறவர்களுக்கு ஆறுதல் அளிக்கவே தமது குமாரனை இப்பூமிக்கு அனுப்பினார். அவருடைய தயவினால்தான் பரிசுத்தாவியின் ஆறுதலை அனுபவிக்கிறோம். சோர்ந்து போனவர்களையும், துயரத்திலிருப்போர்களையும் ஆற்றித் தேற்றுங்கள். எப்போதும் இதை நினைவிற்கொண்டு செய்யுங்கள். ஆறுதலின் தேவன் உங்களை ஆற்றிக் தேற்றுவாராக.

தேவாதி தேவனே
ஆறுதல் அளியுமே
நிர்ப்பந்தமான பாவி நான்
நீர் தேற்றினால் சுகிப்பேன் நான்.