Home துண்டுப் பிரதிகள் உறவுப்பாலம்

உறவுப்பாலம்

265
0

உறவுப்பாலம்

மனிதவாழ்க்கைப் பயண நிறைவானது நித்திய வாழ்வில் முடிவடைவதாகும். ஆனால் அப்பயண முயற்சியில் மனித இனம் தோல்வியையே தழுவுகிறது.
ஏன் ?

மனிதன் வாழும் பாவபூமியிலிருந்து.. பரிசுத்த தேவன் வாழும் பரிசுத்த உலகம்வரை அந்தப்பயணப்பாதை உள்ளது. பாவபூமியிலிருந்து புறப்படும் பாதைக்கும் பரிசுத்த உலகம் இருக்கும் பாதைக்கும் இடையே பெரிய பிளவு இருக்கிறது. இதை இணைக்கப் பாலம் தேவை.

ஆம்! இதை எப்படி உருவாக்குவது?

இதை மனிதனால் உருவாக்க முடியாது. பாலத்தின் ஒரு பக்கமாயுள்ள பூமியிலிருந்து வேலை செய்ய மனிதன் தகுதி பெறுகிறான். பாலத்தின் மற்றப் பக்கத்தை இணைக்க அங்கே செல்லமுடியாதல்லவா?

கவலை வேண்டாம். மனித குலத்தை உருவாக்கிய தேவனே தனது ஒரே பேறான குமாரன் இயேசு கிறிஸ்து மூலமாக பரிசுத்த நகரத்துக்கு உறவுப்பாலம் அமைத்துத் தந்திருக்கிறார்.