Home தினதியானம் நம்மைச் சுற்றி நெருங்கிநிற்கிற பாவம்

நம்மைச் சுற்றி நெருங்கிநிற்கிற பாவம்

125
0

மே 03

“நம்மைச் சுற்றி நெருங்கிநிற்கிற பாவம்.”
எபி12:1

ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் அவனைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவம் உண்டு. மனந்திரும்புதலுக்குமுன் எந்தப் பாவத்திற்கு அடிமையாயிருந்தேனோ அந்தப் பாவம்தான் அவனைச் சூழ்ந்து நிற்கும். ஆனாலும் நாம் எல்லாரும் விழத்தக்க ஒரு பாவம் உண்டு. இது எல்லாரிடத்திலும் பொதுவாய் இருப்பது. நம்மை நெருங்கி நிற்கும் பாவம் அது. தேவனைப்பற்றிய அவ நம்பிக்கையே அப்பாவம். இதுதான் நம்முடைய பந்தய சாலையில் பெரிய தடையாயிருக்கிறது. இது நம்முடைய வளர்ச்சியை தடுக்க பெரிய தடுப்புச் சுவர். நமது பெலனைக் குறைக்கும் வியாதி. நம்மை மனமடிவாக்குகிற மந்தாரம்.

தேவன் தமது குணநலன்களை நமக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். அவரின் உண்மைகளைப்பற்றி சாட்சியிடுகிற பெரிய மேகத்தைப்போன்ற திரளான சாட்சிகளை நமக்கு ஏற்படுத்தியிருக்கிறார். நமது நம்பிக்கையை தைரியப்படுத்த வாக்குத்தத்தத்தின் மேல் வாக்குத்தத்தங்களைக் கொடுத்திருக்கிறார். அப்படியிருந்தும் நாம் சந்தேகிக்கிறோம். அவரைக் குறித்து அவநம்பிக்கை கொள்ளுகிறோம். இந்தக் காரியம்தான் தேவனுக்குக் கனவீனத்தைக் கொண்டு வருகிறது. இதனால்தான் அப்போஸ்தலன் நம்மைச் சூழ்ந்து நெருங்கி நிற்கிற பாவத்தைத் தள்ளிவிடச் சொல்லுகிறான். தேவன்மேல் அவநம்பிக்கை கொள்வதை விட்டுவிடுங்கள். அவர் வாக்கைப்பற்றிப் பிடியுங்கள். இப்படி செய்வதால் பிதாக்கள் காலத்தில் ஆபிரகாமைப்போலவும், நியாயப்பிரமாண காலத்தில் மோசேயைப்போலவும், சுவிசேஷக் காலத்தில் விசுவாசத்திற்குப் பலத்த உபகரணமான இயேசுவைப்போலவும் இருக்கவேண்டும். தேவனை நம்பி பாவத்தை விட்டு விடுகிறவரைக்கும் நீ பலமுள்ளவனாகவும், பொறுமையுள்ளவனாகவும் கர்த்தருடைய வழிகளில் முயற்சி செய்பவனாகவும் இருக்க முடியாது.

என் அவிசுவாசம் உணர்ந்து
உம்மிடத்தில் அறிக்கை செய்வேன்
நான் உண்மையாய் நடக்க
கிருபை அளியும் என்பேன்.