Home தினதியானம் நீங்கள் இனி அந்நியரல்ல.

நீங்கள் இனி அந்நியரல்ல.

49
0

மே 02

“நீங்கள் இனி அந்நியரல்ல.”
எபே 2:19

கிருபை நமக்குள்ளே ஆச்சரியமான மாறுதலை நடப்பிக்கிறது. நமக்கு அதிசயத்தையும் உண்டாக்குகிறது. முன்னே, நாம் தேவனுக்கு அந்நியராய்ச் சமாதானத்திற்குத் தூரமானவர்களாய், மெய் மார்க்கத்தின் சிலாக்கியங்களை அறிந்தவர்களாய் இருந்தோம். ஆனால் கிறிஸ்துவின் இரத்தத்தால் நாம் தேவனுக்குச் சமீபமானோம். அவர் குமாரன் மரணத்தால் தேவனோடு ஒப்புரவானோம். பரிசுத்தாவியினால் அவரின் சித்தத்தை அறிந்துக்கொள்ளுகிறோம். இயேசுவில் நற்கிரியைகளுக்கென்றுப் புதிதாய் சிருஷ்டிக்கப்பட்டோம். முன்பு பரம காரியங்களெல்லாம் நமக்கு அந்நியமாய் இருந்தது. நாமும் இதற்கு அந்நியராயிருந்தோம். அதன் உபதேசம் ஒன்றும் விளங்காமல், அதன் அனுபவம் ஒன்றும் இல்லாமல் அதன் கிரியைகளையும் முழுவதும் விரோதித்தோம்.

இப்பொழுதோ தேவனை அறிவோம். இயேசுவோடு ஒன்றாயிருக்கிறோம். பரிசுத்த ஆவியின் ஐக்கியத்தை அனுபவிக்கிறோம். பரிசுத்தவான்களோடு ஒன்றாயிருக்கிறோம். நாம் சியோன் தேசத்துக் குடிகள். கிறிஸ்து மார்க்க நியமங்களில் பழகி இருக்கிறோம். அதன் சிலாக்கியம் நம்முடையவைகள். வேத வசனமும், கிருபாசனமும், திறக்கப்பட்ட ஊற்றும், சமாதான வழியும், கல்யாண வஸ்திரமும், தேவக் குமாரருக்குரிய போராட்டங்களும் நமக்குண்டு. நாம் அவர் குடும்ப மக்கள். நாம் அவருடைய மந்தையின் ஆடுகள். மேன்மையான காரியங்களை அனுபவித்து, நேசித்து வருகிறோம். சகோதரரே, முன்னே நீங்கள் அந்தகாரமாய் இருந்தீர்கள். இப்பொழுதோ கர்த்தருக்கு ஒளியாயிருக்கிறீர்கள். ஆகவே ஒளியின் பிள்ளைகளாய் நடவுங்கள்.

கர்த்தர் எனக்குச் சொந்தம்
அவர் வார்த்தை மகா ஆனந்தம்
அவர் தயவை நம்பி
அவர்க்கென்றே பிழைப்பேன்.