Home தினதியானம் நீங்கள் தேவனுக்குப் பிரியமாயிருக்க வேண்டும்.

நீங்கள் தேவனுக்குப் பிரியமாயிருக்க வேண்டும்.

59
0

மே 01

“நீங்கள் தேவனுக்குப் பிரியமாயிருக்க வேண்டும்.”
1தெச 4:1

இதைவிட நல்லது உண்டா? இதைவிட பிரயோஜனமானது உண்டா? அவர் நம்முடைய பிதா. எப்போதும் நமது ஷேமத்தை விரும்புகிறார். நமக்குத் தேவையானதையெல்லாம் சவதரித்து வைத்திருக்கிறார். நம்முடைய நலனை அவர் விரும்புகிறபடியால், அவருக்குப் பிரியமாய் நடக்க பார்க்க வேண்டும். சிநேகிதனே, தேவனுக்குப் பிரியமாய் நடப்பது முக்கியமென்று உணருகிறாயா? அவருக்குப் பிரியமாய் நடந்து அவரைச் சந்தோஷப்படுத்த நீ விரும்புகிறாயா? அப்படியானால் கிறிஸ்துவானவர் முடித்த கிரியையினால் மட்டுமே நீ ஏற்றுக்கொள்ளப்படலாம் என்று அதைப்பற்றிக்கொள். அவர் உன்னை நேசிக்கிறார் என்பதை உறுதியாய் நம்பு. நம்பத்தகுந்த அவர் வாக்கை ஏற்றுக்கொள். அவர் சிங்காசனம் முன் நீ வரும்போது உன்னை ஏற்றுக்கொண்டு உனக்குப் பதில் கொடுக்கிறாரென்றறி. அவர் சித்தத்தை தெரிந்துக்கொள்ள அவர் வசனத்தைத் தியானித்துப்பார். அவர் சித்தம் தெரிந்தவுடன் அதைச் செய்ய முயற்சி செய். அதை உடனே செய். சந்தோஷமாய் இரு. அவர் சொல்லுகிறபடியெல்லாம் செய். அவருக்குப் பிரியமுண்டாக செய். அவர் வாக்கு உன்னை நடத்துவதற்கெல்லாம் அடங்கியிரு.

அவரை மகிமைப்படுத்துவதே உன் விருப்பத்திற்கும் உன் நோக்கங்களுக்கும் உன் செயல்களுக்கும் காரணமாய் இருக்கட்டும். இது அவருக்குப் பிரியத்தைக் கொடுக்கும். இது அவருக்குப் பிரியத்தைக் கொடாமல் இருக்காது. நீ எவ்வளவோ அவரிடத்தில் பெற்றுக்கொண்டாய். இன்னும் எவ்வளவோ அவரிடத்தில் பெற்றுக்கொள்ள நினைக்கிறாய். ஆகையால் அவரைப் பிரியப்படுத்துகிறது உன் கடமை.

தேவனைப் பிரியப்படுத்துவதே
உன் கடமையாகட்டும்
அவர் சித்தப்படி செய்வதே
உன் மகிமையாகட்டும்.