Home கட்டுரைகள் இரட்சிப்பு என்றால் என்ன?

இரட்சிப்பு என்றால் என்ன?

278
0

இரட்சிப்பு என்றால் என்ன?

இரட்சிப்பு என்பது இன்றையப் பிரசங்கிகளின் நவீன கண்டுபிடிப்பு அல்ல!

இது முதலாவது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்மூலமாய் அறிவிக்கப்பட்டது. ‘இயேசு” என்ற பெயருக்கே, ‘இரட்சகர்” என்பதுதான் பொருள். இவ்வுலுகில் இருந்த காலத்தில் இயேசு பல நன்மைகளை மக்களுக்குச் செய்தார். ஆனால் அவரது பிரதான நோக்கமும் ஊழியமும் பாவிகளை இரட்சிப்பதே. இரட்சிப்பை இயேசுவிலிருந்து பிரிக்க முடியாது.

அடுத்து, இயேசுவின் சீஷர் இந்த இரட்சிப்பின் செய்தியை உலகமெங்கும் எடுத்துச் சென்றார்கள். அவர்கள் கொடுத்த செய்தியை தேவன் அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் உறுதிப்படுத்தினார்.

இன்று இதைவாசிக்கும் போது உங்களுக்கு வருவதும் அதேசெய்திதான். திறந்த மனதுடன் வாசியுங்கள்.

நீங்கள் இரட்சிக்கப்படவேண்டும் என்று சொன்னதும், ‘அப்படியானால் இரட்சிக்கப்பட்டவர்களெல்லாரும் பாவமே செய்யாமலிருக்கிறார்களோ?” என்பதுதானே பலம் கேட்கும் கேள்வியாகும். உங்கள் கேள்வி நியாயமானது. விடை தருகிறேன் வாசியுங்கள்.

இரட்சிப்பின் அனுபவம் முக்காலத்துக்குரியதாகும். கடந்த கால இரட்சிப்பு, நிகழ்கால இரட்சிப்பு, எதிர்கால இரட்சிப்பு.

கடந்தகால இரட்சிப்பு என்பது பாவத்தின் தண்டனையிலிருந்து கிடைக்கும் விடுமலையாகும். ‘பாவத்தின் சம்பளம் மரணம் (அதாவது, தேவனிடமிருந்து என்றென்றுமாய் பிரிக்கப்படுதல்), தேவனுடைய கிருபை வரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உண்டான நித்திய ஜீவன்.” கடந்த கால இரட்சிப்பானது பாவத்தண்டனையிலிருந்து நம்மை விடுவித்து தேவனோடு ஜக்கியப்படுத்துகிறது.

நிகழ்கால இரட்சிப்பு என்பது பாவத்தின் வல்லமையிலிருந்து கிடைக்கும் விடுதலையாகும். ‘நீங்கள் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால் பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது.” இரட்சிக்கப்பட்ட பிறகும் சோதனை வரத்தான் செய்யும். ஆனால் இரட்சிக்கப்பட்டவன் தன் சுயபெலத்தில் சாராமல் கிறிஸ்துவின் கிருபையையும் வல்லமையையுமே சார்ந்திருந்தால் பாவத்தின் மேல் அனுதினமும் வெற்றியை அனுபவிப்பான்.

எதிர்கால இரட்சிப்பு என்பது பாவத்தின் பிரசன்னத்திலிருந்தே கிடைக்கும் விடுதலையாகும். இது இவ்வுலகில் அல்ல, பரலோகில் கிடைக்கும் உன்னத ஆசீர்வாதமாகும். அங்கு சாத்தானுக்கு இடமில்லையாதலால், பாவச் சோதனையோ பாவப் பிரசன்னமோ கிடையாது. போராட்டம் இல்லை. நித்திய இளைப்பாறுதல்! பரலோகத்தைக்குறித்து இப்படி வாசிக்கிறோம். ‘நரகத்திற்கு வெளிச்சங்கொடுக்க சூரியனும் சந்திரனும் அதற்கு வேண்டுவதில்லை. தேவனுடைய மகிமையே அதைப் பிரகாசிப்பித்தது. ஆட்டுக்குட்டியானவரே அதற்கு விளக்கு. இரட்சிக்கப்படுகிற ஜனங்கள் அதின் வெளிச்சத்திலே நடப்பார்கள்.

பாவத்தைவிட்டு மனந்திரும்பி இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கும்போது கடந்தகால இரட்சிப்பைப் பெறுகிறோம். இயேசுவின்மேல் சார்ந்திருந்து பாவத்தின்மேல் வெற்றிபெறும்போது நிகழ்கால இரட்சிப்பை அனுபவிக்கிறோம். விழிப்போடும் பிரயாசத்தோடும் இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்குக் காத்திருக்கும்போது அவர் நம்மை மகிமையில் சேர்த்து நித்திய இரட்சிப்பை அனுபவிக்க அருள்செய்வார்.
இவ்வளவு பெரிதா இரட்சிப்பைக் குறித்து நான் கவலையற்றிருக்கலாமா?
(எபி 2:3-4, மத் 1:21, 1தீமோ 1:15, ரோம 6:23,14, வெளி 21:23-24, எபி 9:28)