Home கட்டுரைகள் ஆவியின் கனி

ஆவியின் கனி

113
0

‘ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்.” (கலாத்தியர் 5:22-23).

அன்பு
நீங்கள் அன்பாயிருந்தால் சண்டைபோட மாட்டீர்கள்.

சந்தோஷம்
நீங்கள் சந்தோஷமாயிருந்தால் கோபப்பட மாட்டீர்கள்.

சமாதானம்
நீங்கள் சமாதானமாயிருந்தால் பிரிவினை உண்டாக்க மாட்டீர்கள்.

நீடியபொறுமை
நீங்கள் நீடிய பொறுமை உள்ளவர்களாயிருந்தால் போராட மாட்டீர்கள்.

தயவு
உங்களிடத்தில் தயவு நிறைந்திருந்தால் மென்மையான பதில் அளிப்பீர்கள்.

நற்குணம்
உங்களிடத்தில் நற்குணம் இருந்தால் எரிந்துவிழ மாட்டீர்கள்.

விசுவாசம்
கர்த்தர் மேல் உங்கள் விசுவாசம் திடமாயிருந்தால் சுயபலத்தை நம்பமாட்டீர்கள்.

சாந்தம்
உங்களிடத்தில் சாந்தம் குடிகொண்டிருந்தால் வார்த்தைக்கு வார்த்தை எதிர்த்து பதில் பேசமாட்டீர்கள்.

இச்சையடக்கம்
நீங்கள் இச்சையடக்கம் உள்ளவர்களாயிருந்தால் உங்களையே அடக்கி ஆளுவீர்கள்.