Home தினதியானம் நம்முடைய உருவம் இன்னதென்று அவர் அறிவார்

நம்முடைய உருவம் இன்னதென்று அவர் அறிவார்

166
0

மே 17

“நம்முடைய உருவம் இன்னதென்று அவர் அறிவார்.”
சங் 103:14

இது இனிமையான, நம்மைத் தைரியப்படுத்துகிற வசனம். நாம் பெலவீனராய் இருக்கும்போது பெலவான்கள் என்றும் வியாதியாய் இருக்கும்போது சுகமுள்ளர்கள் என்றும், துன்பப்படும்போது எரிச்சலுள்ளவர்கள் என்றும் மற்றவர்கள் எண்ணலாம். ஆனால் அவரோ நம்முடைய உருவம் இன்னதென்று அறிவார். இது வெறும் அறிவல்ல அன்போடு சேர்ந்த அறிவு. உருக்கத்தை எழுப்பிவடுகிற அறிவு. மனவிருப்பத்தைச் செய்கையென்று ஏற்றுக்கொள்ளும் அறிவு.

நமது சரீதத்தின் பெலவீனத்தையும்,பாவ குணத்தையும்,பிறர் அறியாத வியாதியையும்,நமது மனமடிவையும் அவர் அறிவார். சரீர பெலவீனங்கள் இன்னதென்றும், இருதயத்தின் கேட்டினின்று பிறக்கிறது இன்னதென்றும் அவர் நன்கு அறிந்திருக்கிறார். சோதனை வரும் வாய்ப்புக்களையும், மனக்கவலைகளையும், தொய்வுகளையும் வீணாய் வரும் பழிகளையும் அவர் அறிந்தவரானபடியால், மற்றவர்கள் நம்மைக் குற்றப்படுத்தும்போதும் அவர் நம்மேல் மனதுருகுகிறார். பிறர் நம்மை கெட்டவர்கள் என்று தீர்க்கும்போது, அவர் நமது நல்லதைக் கண்டு நமக்காகப் பரிதபிக்கிறார். ஆவியானது உற்சாகமுள்ளதுதான். மாம்சமோ பெலவீனமுள்ளதென்று அறிந்தே சற்று விட்டுக் கொடுக்கிறார். அன்பர்களே, உங்கள் மனமடிவு வெடுவெடுப்பு, ஆத்திரம் ஆகியவற்றிற்குக் காரணம் உங்களுக்குத் தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல அவர் நமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார்.

நாம் மண்ணென அறிவார்
நம்மேல் மனதுருகுவார்
தகப்பன்போல் இரங்குவார்
நேசித்து ஆதரிப்பார்.