Home தினதியானம் நமக்கு சுதந்தரமாக தெரிந்தளிப்பார்

நமக்கு சுதந்தரமாக தெரிந்தளிப்பார்

30
0

மே 16

“நமக்கு சுதந்தரமாக தெரிந்தளிப்பார்.”
சங் 47:4

இந்த வாக்கியத்தை உன்னால் மனதாரச் சொல்ல முடியுமா? எனக்காக சுதந்தரத்தை அவர் தெரிந்துக் கொள்ளுவார் என்று சொல்லத்தக்கதாக அவருடைய ஞானத்தின்மேல் நம்பிக்கை வைத்து, அவரின் அன்பை உறுதியாய் விசுவாசித்து, கர்த்தருடைய சித்தத்திற்கு உன்னை முற்றிலும் ஒப்புக்கொடுத்து, அவருடைய மகிமை மட்டும் பெருக வேண்டுமென்று நீ விரும்புகிறாயா? உனக்காக அவர் தெரிந்துக் கொள்ளும் எல்லாவற்றிலும் உனக்குச் சம்மதம்தானா? உன் சொந்த புத்தியின்மேல் சாயாமல் இருந்தாலொழிய இதைச் சொல்ல முடியாது. இது உன்னை முற்றிலும் கர்த்தருக்கு அர்ப்பணிக்கச் செய்யும்.

முற்றிலுமாய் அவருக்கே உன்னை ஒப்புக்கொடுத்து உன் சோதனை நேரத்திலும், ஆறுதல் நேரத்திலும், உனக்கு வேண்டிய நன்மைகளையும், நீ குடியிருக்கும் ஸ்தலம், நீ மரிக்கும் இடம் எல்லாவற்றையும் அவருக்கு விட்டுகொடு. யோசேப்பு தன் சகோதரருக்கும், தகப்பனுக்கும் செய்ததுப்போல் மிகவும் நலமானதைத்தான் தெரிந்துக்கொள்ளுவாரென்று நீ நம்பி இருக்கலாம். ஆகவே சகலத்தையும் அவர் கையில் ஒப்புக்கொடுத்து உன் காரியங்களையெல்லாம் அவரை நடத்தட்டும் என்று சொல்லி அவரிடம் அர்ப்பணித்து விடுவதே நல்லது. சகல மனுஷரையும் சகல வஸ்துக்களையும் தீர அறிந்திருக்கிற தேவன் உனக்கும் வேண்டியதைத் தெரிந்துக் கொள்ளுகிறது எவ்வளவு சிலாக்கியம். இது எத்தனை பாக்கியம். தேவன் தெரிந்துக்கொள்ளுதலை மனதிருப்தியோடு ஏற்றுக்கொள்ளுகது உன் கடமை அவரை விட உனக்கு நன்மையானவைகளைத் தெரிந்துக்கொள்ள வேண்டாம். தேவன் நம்முடைய சுதந்தரத்தைத் தெரிந்துக்கொள்ளுவார் என்று நம்முடைய இருதயம் எப்போதும் சொல்ல வேண்டும்.

தேவன் நடத்தும் வழி
மகா ஞானமானது
ஆதி முதல் முடிவுவரை
அன்பால் ஏவப்பட்டது.