Home தினதியானம் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்

தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்

36
0

மே 15

“தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்.”
ரோமர் 5:1

இயேசுவின் ஜீவன் நமக்கு நீதி. அவருடைய மரணம் நமக்குப் பிராயச்சித்தம். அவரை விசுவாசித்து முற்றிலும் நீதிமான்களாக்கப்படுகிறோம். நீதிமான்களாக்கப்பட்டு சமாதானம் பெறுகிறோம். நமது தேவன் நம்முடைய அக்கிரமங்களை நம்மேல் சாட்டாமல் இயேசுவில் நம்மை மாறாத அன்பினால் நேசிக்கிறார். நிகழ்காலத்தில் நமக்குக் கிடைத்திருக்கும் நன்மைகளும், எதிர்காலத்தில் கிடைக்கப்போகிற நன்மைகளும் அவரின் அன்பிலிருந்தே உண்டாகிறது. தேவன் நம்மீது கோபம் கொண்டாலும் நம்மைப் பகைப்பது இல்லை. உலகம் உண்டாகும் முன்னே நம்மை நேசித்தபடியினாலே நமக்கு இரட்சிப்பு என்னும் வழியை ஏற்படுத்தியிருக்கிறார். அந்த ஒழுங்கினால் அவருடைய தன்மைகள் குறைவின்றி மேன்மை அடைகிறது. அந்த இரட்சண்ய ஒழுங்கு நமது சகல குறைவுகளுக்கும், குற்றங்களுக்கும் வேண்டியதைச் சவதரித்து பூரண சமாதானத்திற்கு அடித்தளம் போடுகிறது.

ஆதலால் நாம் அவருடைய வார்த்தையை நம்பி, இயேசுவின் பூரண கிருபையில் நம்பிக்கை வைத்து ஆண்டவர் நாமத்தினால் பிதாவினிடம் போவோமானால் நமக்குச் சமாதானம் கிடைக்கும். நமக்குச் சமாதானம் இராவிட்டால், இரட்சகர் செய்த கிரியையின் சம்பூரணத்தை நாம் பாராமல் போகிறோம். அல்லது அவரின் உண்மையான வாக்கை நம்பாமல் போகிறோம். அல்லது அவர் நம்மேல் வைத்த அன்பை உணராமல் போகிறோம். அல்லது இயேசுவை பார்க்கிறதற்குப் பதில் நம்மையே பார்க்கிறோம். நாம் இயேசுவை விசுவாசிக்கிறதினால் நீதிமான்களாகிறோம். நாம் நீதிமான்களாக்கப்பட்டால் சமாதானத்தைப் பெற்று அனுபவிக்க வேண்டும்.

விசுவாசத்தால் நீதி பெற்று
சமாதானம் அடைந்தோம்
அவர்மேல் கவலை யாவும் வைத்து
பயமின்றி வாழ்வோம்.