Home தினதியானம் அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்தார்

அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்தார்

111
0

மார்ச் 14

“அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்தார்.”
1யோவான் 3:16

இது ஒரு மகத்துவமான சம்பவம்: பெரிய இரகசியம் ஆகும். நமக்காகப் பாடுபட்டு, நமக்குப் பதிலாக மரிக்க நம்முடைய சுபாவத்தைக் தேவன் தரித்துக்கொண்டார். தேவனாய் இருந்த இயேசு மனிதனானார். அவர் தேவனும் மனிதனுமான ஒருவரே. இப்படிப்பட்வரே நமக்காக உயிரைக்கொடுத்தார். மனதார தமது ஜீவனை அளித்தார். ஒருவரும் அதை வற்புறுத்தி வாங்கவில்லை. அவர் தமது விருப்பமாய்த் தந்தார். நாம் எப்படிப்பட்டவர்களாய் இருக்க வேண்டும்? என்ன செய்ய வேண்டும்? நமக்கு என்ன கிடைக்கும்? இதை எல்லாம் நன்றாய் அறிந்தே தமது ஜீவனைத் தந்தார்.

இப்படிச் செய்யும்படி நம்மிடத்தில் இருந்தது ஒன்றுமில்லை. அவரின் அளவற்ற அன்பான பெரிய கிருபையால்தானே இப்படித் தன் ஜீவனையே தந்தார். வேறெங்கும் இப்படிப்பட்ட அன்பைப் காண முடியாது. வேறு எந்தக் காரியத்திலும் அன்பு இவ்வளவு மகிமையாய் ஆழமாய் விளங்கவில்லை. இயேசுவின் அன்பை எப்போதும் தியானியுங்கள். அவரை நாம் போதுமானபடி நினைப்பது முடியாது. போதுமானபடி அதற்காக அவரைத் துதிக்கவும் முடியாது. தேவனுக்கு முன் நமது நிலைமை என்னதென்றும், நாம் பெறவேண்டிய தண்டனை எப்படிப்பட்டதென்றும் சிந்திப்போம். பிறகு அவர் பாவங்களுக்குத் தக்கதாக நமக்க செய்யாமலும், நமது அக்கிரமங்களுக்க தக்கதாக நமக்கு சரிக்கட்டாமலும் நமக்காக ஜீவனைத் தந்தார் என்ற மகத்தான காரியத்தைச் சிந்திப்போம். நம்மை மீட்க ஜீவனைத் தந்தார். என்னே அதிசய அன்பு.

இயேசுவின் நேசத்தை
யாரால் சொல்ல முடியும்
நாம் அவரோடு வாழவே
இரத்தம் சிந்தி மரித்தாரே.