Home தினதியானம் பயப்படாதே சிறு மந்தையே

பயப்படாதே சிறு மந்தையே

98
0

மே 12

“பயப்படாதே சிறு மந்தையே.”
லூக்கா 12:32

தேவனுடைய மந்தை சிறியதுதான். இந்த மந்தை காட்டின் நடுவே இருக்கிறது. சத்துருக்கள் அதைச் சூழ்ந்திருக்கிறார்கள். அவருடைய ஆட்டுக்குட்டிகள் கலங்கி பயப்படக்கூடியவை. அவர் அவைகளைப் பார்த்து பயப்படாதே என்கிறார். உங்கள் மேய்ப்பன் உங்களுக்காகக் கவலைப்படுகிறார். நீங்களே அவருடைய சொத்து. அவரின் மகிழ்ச்சி. அவர் எப்போதும் உங்களோடு இருக்கிறர். உங்களைப் பாதுகாக்க அவர் சர்வ வல்லவர். அவரின் ஒவ்வொரு திட்டமும் உங்கள் நன்மைக்கு உபயோகப்படுகிறது. அவரிடம் ஒப்புவித்ததில் ஒன்றாவது காணாமல் போனதில்லை. காணாமற்போகவுமாட்டாது.

ஒரு தீர்க்கன் அவரைக் குறித்து அவர் என் மேய்பனைப்போல் தமது மந்தையை மேய்ப்பார். ஆட்டுக்குட்டிகளைத் தமது புயத்தினால் சேர்த்து, தமது தோளிலே சுமந்து, கறவலாடுகளை மெதுவாய் நடத்துவார் என்று சொல்லியிருக்கிறான். அவர் மேய்ச்சலின் அவைகளை மேய்த்து ஓடிப்போனால் திரும்பக் கொண்டுவந்து சேர்ப்பார். தமது கோலாலும் அவைகளைப் பாதுகாத்து தம்முடைய சொந்தம் என்று அவைகளுக்குக் குறிபோடுகிறார். அவைகள்மேல் அவர் வைத்திருக்கும் அன்பு நம் அறிவுக்கு எட்டாதது. அவர் ஆடுகளுக்கு வேண்டியதையெல்லாம் வைத்திருக்கிறார்.

தேவ பிள்ளைகளே! நமது மேய்ப்பனை அறிந்து கொண்டு அவர் சத்தத்திற்குச் செவி கொடுத்து அவர் சமீபத்திலே இருந்து, அவர் ஆடுகளோடுத் தங்கி, மேய்ந்து, அவருடைய பட்சத்தையும், தரிசனத்தையும் நம்பி, பயத்தை நம்மைவிட்டுத் துரத்துவோமாக. நாம் ஏன் திகைக்க வேண்டும்? நம்முடைய கவலைகளை எல்லாம் அவர்மேல் வைத்து விடக்கடவோம்.

கலங்காதே இயேசு உன்னை
முற்றும் முடிய காப்பார்.
மேய்ப்பன் சத்தம் கேட்டு அவர்
பின் செல் அவர் ஆதரிப்பார்.