Home தினதியானம் நீர் எப்பொழுது என்னைத் தேற்றுவீர்.

நீர் எப்பொழுது என்னைத் தேற்றுவீர்.

178
0

மே 21

“நீர் எப்பொழுது என்னைத் தேற்றுவீர்.” சங் 119:82

தேவ ஜனங்கள் அடிக்கடி ஆறுதலற்று தேறுதலற்று வெகு காலமாய் அல்லல்படுகின்றனர். இதற்கு ஏதோ காரணம் இருக்க வேண்டும். அதைச் சரிசெய்யும் விதத்தை அறிந்துக்கொள்வது அவசியம். தேவன் எப்பொழுது¸ எப்படி அவர்களைத் தேற்றுவார் என்று நம்மால் சொல்ல முடியாது. அது அவரவர் நிலைமைக்குத் தக்கதாய் இருக்கும். கர்த்தர் ஒருவனைப் பார்த்து நீ எனக்கு முன்பாகத் தாழ்த்தி நான் காட்டுகிற இரட்சிப்பின் மார்க்கத்துக்கு மனதார ஒப்புக்கொடுத்து என் நீதிக்கு கீழடங்கும்போது உன்னைத் தேற்றுவேன் என்கிறார். மற்றொருவனை, உன் பாவத்தை நீ தாராளமாய் அறிக்கையிட்டு இயேசுவின் இரத்தத்தின்மூலம் பாவமன்னிப்பைத் தேடி¸ என் வார்த்தையின்படி செய்ய துவங்கும்போது உன்னை நான் தேற்றுவேன் என்கிறார்.

வேறொருவனைப் பார்த்து நீ வேத வசனத்திற்கு விரோதமான வார்த்தைகளைத் தள்ளி உலகத்தைவிட்டு என்னிடம் அடைக்கலம் தேடும்போது உன்னைத் தேற்றுவேன் என்கிறார். வேவொருவனைப் பார்த்து, ஐயத்துக்குரிய எத்தனங்களைக் கொண்டு ஆறுதல் தேடுகிறதை விட்டு, என் மகிமையை நாடி, அதை விருத்தி செய்ய முயற்சிக்கும்போது உன்னைத் தேற்றுவேன் என்கிறார். வேறொருவனைப் பார்த்து, நீ சோம்பலை விட்டு என்னைப் பற்றிப் பிடித்து மற்றவர்களையும் பாக்கியசாலிகளாக்கப் பார்க்கும்போது, உன்னைத் தேற்றுவேன் என்கிறார். ஒரே வார்த்தையில் அவர் கொடுக்கும் ஆறுதல் தமக்கு மகிமையையும், உனக்கு நன்மையையும் வருவிப்பதால், உன்னைத் தேற்றுவார்.

உம் வாக்கைப் பிடிப்பேன்
உம்மில் கனி கொடுப்பேன்
உம் சுகம் பெறுவேன்
உம்மால் பரிசுத்தம் நாடுவேன்.