Home தினதியானம் எனக்குப் பிரியமான சகோதரரே உறுதிப்பட்டவர்களாய் இருங்கள்

எனக்குப் பிரியமான சகோதரரே உறுதிப்பட்டவர்களாய் இருங்கள்

50
0

மே 18

“எனக்குப் பிரியமான சகோதரரே உறுதிப்பட்டவர்களாய் இருங்கள்.”
1கொரி 15:58

தனக்குத் துக்கம் வருவித்து, தன் எஜமானுடைய காரியங்களுக்குக் குறைச்சல் உண்டாக்கினவர்களுக்கு அப்போஸ்தலன் எவ்வளவு பட்சமாய் எழுதுகிறார். சகோதரர் என்று மட்டும் அல்ல, பிரியமான சகோதரர் என்று அவர்களை அழைக்கிறார். இது அவர் நமக்கு முன் வைக்கிற நல்ல மாதிரி. இந்த வேளையிலும் நீங்கள் கவனிக்க வேண்டியது அவர் சொன்ன புத்திமதிதான். நம்மில் அநேகர் அப்போஸ்தலன் காலத்தில் இருந்தவர்களைப்போல நிலையற்றவர்கள். உறுதியற்ற நிலை பெரிய தீமையே. அது நம்முடைய ஆத்துமாவுக்கும் சேதம் உண்டாக்கும். மற்றவர்களுக்கும் இடறலும் துக்கமும் விளைவிக்கும். இது சாத்தானுக்கும் நம்மேல் இடங்கொடுக்கிறதாகும். அவன் ஒரே நோக்கமுள்ளவன், உறுதியற்றவன் அல்ல. தன் காரியத்தில் விடா கண்டன். முற்றிலும் அழிப்பேன். இல்லாவிட்டால் வதைப்பேன் என்பதுதான் அவனுடைய குறிச்சொல்.

சகோதரரே, கிறிஸ்துவை அறிக்கையிடுவதிலும் அவருடைய மகிமையை விருத்தி செய்வதிலும், உறுதியாய் இருப்போமாக. நாம் உறுதியாய் இருக்க வேண்டுமானால் சரியான அஸ்திபாரத்தின்மேல் கட்டுகிறோம் என்பதும், அவரின் ஜீவனோடு ஐக்கியப்பட்டு அவரின் புகழ்ச்சிக்காய் முற்றிலும், பிரதிஷ்டையாக்கப்பட்டிருக்கிறோம் என்பதும் நிச்சயமாக வேண்டும். எல்லாவற்றையும் இருக்கிறபடி நம்பாமல் சகலத்தையும் சோதித்துப் பார்க்க வேண்டும். நியாயப்பிரமாணத்தண்டைக்கு சாட்சியண்டைக்கும் போக வேண்டும். சகலத்தையும் வேத வசனத்தோடு ஒத்துப் பார். பரிசுத்தாவியானவரின் போதனையைக் கருத்தாய்த் தேடு. ஜெபத்தில் உறுதியாய் தரித்திரு. உனக்குள்ளதை உறுதியாய்ப் பிடித்துக் கொள்.

மோசங்கள் சூழ்ந்தாலும்
உறுதியாய் நிற்போம்
அவர் கற்பிக்கும் எதையும்
உற்சாகத்தோடு செய்வோம்.