LATEST ARTICLES

மே 22 "என் நாவு உம்முடைய வசனத்தை விவரித்துச் சொல்லும்." சங் 119:172 எல்லா கிறிஸ்தவர்களும் இப்படிச் செய்வார்களானால் உலகில் அறியாமை குறையும். தேவனுடைய வசனம் ஒன்றுதான் பெருமையாய்ப் பேச தகுதியுடையது. நாம் அதை வாசித்து¸ விசுவாசித்து¸ நேசித்து¸ அதன்படி செய்து அதை அனுபவித்து¸ மற்றவர்களுக்கும் சொல்லும்படித்தான் அது நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அது பாவிகளைச் சீர்ப்படுத்தும். ஆகவே அதை...
மே 21 "நீர் எப்பொழுது என்னைத் தேற்றுவீர்." சங் 119:82 தேவ ஜனங்கள் அடிக்கடி ஆறுதலற்று தேறுதலற்று வெகு காலமாய் அல்லல்படுகின்றனர். இதற்கு ஏதோ காரணம் இருக்க வேண்டும். அதைச் சரிசெய்யும் விதத்தை அறிந்துக்கொள்வது அவசியம். தேவன் எப்பொழுது¸ எப்படி அவர்களைத் தேற்றுவார் என்று நம்மால் சொல்ல முடியாது. அது அவரவர் நிலைமைக்குத் தக்கதாய் இருக்கும். கர்த்தர் ஒருவனைப்...
மே 20 "இவள் தன்னால் இயன்றதைச் செய்தாள்." மாற்கு 14:8 மரியாள் விசுவாசமுள்ளவள். அவள் விசுவாசம் அன்பினால் கிரியை செய்தது. அன்பானது இயேசு இருந்த இடத்திற்கு அவளைக் கொண்டு சென்றதால், அவரைக் கனப்படுத்தி, தன் நன்றியறிதலை வெளிப்படுத்தத் தன்னால் ஆனதைச் செய்தாள். இது நமக்கு நல்ல முன்மாதிரி. நாம் நம்மால் ஆனதைச் செய்தோம் என்று நம்மைக் குறித்துச் சொல்லமாட்டோம்....
மே 19 "சாந்தகுணமுள்ளவர்களுக்குத் தமது வழியைப் போதிக்கிறார்." சங் 25:9 சாந்த குணமுள்ளவர்கள் தங்கள் மதியீனத்தை அறிந்து போதனையடையவேண்டும் என்று விரும்பி இன்னும் அதிகம் அறியவேண்டுமென்று ஆசைக்கொள்கிறார்கள். தேவனால் போதிக்கப்பட வேண்டும் என்பதே முக்கிய நோக்கம். தேவ கரத்திலிருந்து பெற்றுக்கொள்ளுகிற ஒவ்வொரு சின்ன இரக்கத்திற்கும் தங்களை அபாத்திரர் என்று எண்ணினபோதிலும், அவர் வாக்களித்திருக்கிறபடியால் பெரிய காரியங்களைத் தேடி அவைகள்...
மே 18 "எனக்குப் பிரியமான சகோதரரே உறுதிப்பட்டவர்களாய் இருங்கள்." 1கொரி 15:58 தனக்குத் துக்கம் வருவித்து, தன் எஜமானுடைய காரியங்களுக்குக் குறைச்சல் உண்டாக்கினவர்களுக்கு அப்போஸ்தலன் எவ்வளவு பட்சமாய் எழுதுகிறார். சகோதரர் என்று மட்டும் அல்ல, பிரியமான சகோதரர் என்று அவர்களை அழைக்கிறார். இது அவர் நமக்கு முன் வைக்கிற நல்ல மாதிரி. இந்த வேளையிலும் நீங்கள் கவனிக்க வேண்டியது...
மே 17 "நம்முடைய உருவம் இன்னதென்று அவர் அறிவார்." சங் 103:14 இது இனிமையான, நம்மைத் தைரியப்படுத்துகிற வசனம். நாம் பெலவீனராய் இருக்கும்போது பெலவான்கள் என்றும் வியாதியாய் இருக்கும்போது சுகமுள்ளர்கள் என்றும், துன்பப்படும்போது எரிச்சலுள்ளவர்கள் என்றும் மற்றவர்கள் எண்ணலாம். ஆனால் அவரோ நம்முடைய உருவம் இன்னதென்று அறிவார். இது வெறும் அறிவல்ல அன்போடு சேர்ந்த அறிவு. உருக்கத்தை...
மே 16 "நமக்கு சுதந்தரமாக தெரிந்தளிப்பார்." சங் 47:4 இந்த வாக்கியத்தை உன்னால் மனதாரச் சொல்ல முடியுமா? எனக்காக சுதந்தரத்தை அவர் தெரிந்துக் கொள்ளுவார் என்று சொல்லத்தக்கதாக அவருடைய ஞானத்தின்மேல் நம்பிக்கை வைத்து, அவரின் அன்பை உறுதியாய் விசுவாசித்து, கர்த்தருடைய சித்தத்திற்கு உன்னை முற்றிலும் ஒப்புக்கொடுத்து, அவருடைய மகிமை மட்டும் பெருக வேண்டுமென்று நீ விரும்புகிறாயா? உனக்காக...
மே 15 "தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்." ரோமர் 5:1 இயேசுவின் ஜீவன் நமக்கு நீதி. அவருடைய மரணம் நமக்குப் பிராயச்சித்தம். அவரை விசுவாசித்து முற்றிலும் நீதிமான்களாக்கப்படுகிறோம். நீதிமான்களாக்கப்பட்டு சமாதானம் பெறுகிறோம். நமது தேவன் நம்முடைய அக்கிரமங்களை நம்மேல் சாட்டாமல் இயேசுவில் நம்மை மாறாத அன்பினால் நேசிக்கிறார். நிகழ்காலத்தில் நமக்குக் கிடைத்திருக்கும் நன்மைகளும், எதிர்காலத்தில் கிடைக்கப்போகிற நன்மைகளும் அவரின்...
மே 14 "நீங்கள் உலகத்திற்கு வெளிச்சமாய் இருக்கிறீர்கள்." மத் 5:14 நாம் அந்தகாரம் நிறைந்த உலகில் இருக்கிறோம். சத்தியத்தின் ஒளியையும் பரிசுத்தத்தின் ஒளியையும் நாம் பெற்றிருக்கிறபடியால் நாம் ஒளியை பிரகாசிக்கச் செய்ய வேண்டும். தினமும் இயேசுவாகிய சூரியனிலிருந்து நமக்கு ஒளியைப் பெற்றுக் கொள்ளுகிறோம். சந்திரனைப்போல் நமக்காக மட்டும் அந்த ஒளியை பெற்றுக் கொள்ளாமல் நாம் மற்றவர்களுக்கும் அந்த...