LATEST ARTICLES

என் நாவு உம்முடைய வசனத்தை விவரித்துச் சொல்லும்.

மே 22 "என் நாவு உம்முடைய வசனத்தை விவரித்துச் சொல்லும்." சங் 119:172 எல்லா கிறிஸ்தவர்களும் இப்படிச் செய்வார்களானால் உலகில் அறியாமை குறையும். தேவனுடைய வசனம் ஒன்றுதான் பெருமையாய்ப் பேச தகுதியுடையது. நாம் அதை வாசித்து¸ விசுவாசித்து¸ நேசித்து¸ அதன்படி செய்து அதை அனுபவித்து¸ மற்றவர்களுக்கும் சொல்லும்படித்தான் அது நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அது பாவிகளைச் சீர்ப்படுத்தும். ஆகவே அதை அவர்களுக்குச் சொல்ல வேண்டும். அது விசுவாசிகளை ஊன்றக் கட்டும். ஆகவே அதை அவர்களுக்குப் போதிக்க வேண்டும். அது பின் வாங்கிப் போனவர்களை செவ்வையான பாதைக்குத் திரும்பப்பண்ணும். ஆகவே...

நீர் எப்பொழுது என்னைத் தேற்றுவீர்.

மே 21 "நீர் எப்பொழுது என்னைத் தேற்றுவீர்." சங் 119:82 தேவ ஜனங்கள் அடிக்கடி ஆறுதலற்று தேறுதலற்று வெகு காலமாய் அல்லல்படுகின்றனர். இதற்கு ஏதோ காரணம் இருக்க வேண்டும். அதைச் சரிசெய்யும் விதத்தை அறிந்துக்கொள்வது அவசியம். தேவன் எப்பொழுது¸ எப்படி அவர்களைத் தேற்றுவார் என்று நம்மால் சொல்ல முடியாது. அது அவரவர் நிலைமைக்குத் தக்கதாய் இருக்கும். கர்த்தர் ஒருவனைப் பார்த்து நீ எனக்கு முன்பாகத் தாழ்த்தி நான் காட்டுகிற இரட்சிப்பின் மார்க்கத்துக்கு மனதார ஒப்புக்கொடுத்து என் நீதிக்கு கீழடங்கும்போது உன்னைத் தேற்றுவேன் என்கிறார். மற்றொருவனை, உன் பாவத்தை...

இவள் தன்னால் இயன்றதைச் செய்தாள்

மே 20 "இவள் தன்னால் இயன்றதைச் செய்தாள்." மாற்கு 14:8 மரியாள் விசுவாசமுள்ளவள். அவள் விசுவாசம் அன்பினால் கிரியை செய்தது. அன்பானது இயேசு இருந்த இடத்திற்கு அவளைக் கொண்டு சென்றதால், அவரைக் கனப்படுத்தி, தன் நன்றியறிதலை வெளிப்படுத்தத் தன்னால் ஆனதைச் செய்தாள். இது நமக்கு நல்ல முன்மாதிரி. நாம் நம்மால் ஆனதைச் செய்தோம் என்று நம்மைக் குறித்துச் சொல்லமாட்டோம். ஆனால் இதன் பொருளை அறிய வேண்டும். நம்மால் ஆனமட்டும் நாம் இயேசுவை நேசிக்கிறோமா? நம்மால் கூடியமட்டும் ஜெபித்துத் துதிக்கிறோமா? நம்மால் முடிந்தவரை சத்தியத்தைப் பிரபலபடுத்த, ஆத்துமாக்களை இரட்சிக்க, இரட்சகரை...

சாந்தகுணமுள்ளவர்களுக்குத் தமது வழியைப் போதிக்கிறார்

மே 19 "சாந்தகுணமுள்ளவர்களுக்குத் தமது வழியைப் போதிக்கிறார்." சங் 25:9 சாந்த குணமுள்ளவர்கள் தங்கள் மதியீனத்தை அறிந்து போதனையடையவேண்டும் என்று விரும்பி இன்னும் அதிகம் அறியவேண்டுமென்று ஆசைக்கொள்கிறார்கள். தேவனால் போதிக்கப்பட வேண்டும் என்பதே முக்கிய நோக்கம். தேவ கரத்திலிருந்து பெற்றுக்கொள்ளுகிற ஒவ்வொரு சின்ன இரக்கத்திற்கும் தங்களை அபாத்திரர் என்று எண்ணினபோதிலும், அவர் வாக்களித்திருக்கிறபடியால் பெரிய காரியங்களைத் தேடி அவைகள் கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கிறார்கள். சாந்தம் தேவனுக்கு மிகவும் பிரியமான காரியம்.. சாந்தகுணமுள்ளவர்கள் தேவனிடம் எல்லா தயவையும் பெற்றுக்கொள்வார்கள். சாந்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக் கொள்ளுவார்கள். அவர்களுக்குக்...

எனக்குப் பிரியமான சகோதரரே உறுதிப்பட்டவர்களாய் இருங்கள்

மே 18 "எனக்குப் பிரியமான சகோதரரே உறுதிப்பட்டவர்களாய் இருங்கள்." 1கொரி 15:58 தனக்குத் துக்கம் வருவித்து, தன் எஜமானுடைய காரியங்களுக்குக் குறைச்சல் உண்டாக்கினவர்களுக்கு அப்போஸ்தலன் எவ்வளவு பட்சமாய் எழுதுகிறார். சகோதரர் என்று மட்டும் அல்ல, பிரியமான சகோதரர் என்று அவர்களை அழைக்கிறார். இது அவர் நமக்கு முன் வைக்கிற நல்ல மாதிரி. இந்த வேளையிலும் நீங்கள் கவனிக்க வேண்டியது அவர் சொன்ன புத்திமதிதான். நம்மில் அநேகர் அப்போஸ்தலன் காலத்தில் இருந்தவர்களைப்போல நிலையற்றவர்கள். உறுதியற்ற நிலை பெரிய தீமையே. அது நம்முடைய ஆத்துமாவுக்கும் சேதம் உண்டாக்கும். மற்றவர்களுக்கும் இடறலும்...

நம்முடைய உருவம் இன்னதென்று அவர் அறிவார்

மே 17 "நம்முடைய உருவம் இன்னதென்று அவர் அறிவார்." சங் 103:14 இது இனிமையான, நம்மைத் தைரியப்படுத்துகிற வசனம். நாம் பெலவீனராய் இருக்கும்போது பெலவான்கள் என்றும் வியாதியாய் இருக்கும்போது சுகமுள்ளர்கள் என்றும், துன்பப்படும்போது எரிச்சலுள்ளவர்கள் என்றும் மற்றவர்கள் எண்ணலாம். ஆனால் அவரோ நம்முடைய உருவம் இன்னதென்று அறிவார். இது வெறும் அறிவல்ல அன்போடு சேர்ந்த அறிவு. உருக்கத்தை எழுப்பிவடுகிற அறிவு. மனவிருப்பத்தைச் செய்கையென்று ஏற்றுக்கொள்ளும் அறிவு. நமது சரீதத்தின் பெலவீனத்தையும்,பாவ குணத்தையும்,பிறர் அறியாத வியாதியையும்,நமது மனமடிவையும் அவர் அறிவார். சரீர பெலவீனங்கள் இன்னதென்றும், இருதயத்தின் கேட்டினின்று பிறக்கிறது...

நமக்கு சுதந்தரமாக தெரிந்தளிப்பார்

மே 16 "நமக்கு சுதந்தரமாக தெரிந்தளிப்பார்." சங் 47:4 இந்த வாக்கியத்தை உன்னால் மனதாரச் சொல்ல முடியுமா? எனக்காக சுதந்தரத்தை அவர் தெரிந்துக் கொள்ளுவார் என்று சொல்லத்தக்கதாக அவருடைய ஞானத்தின்மேல் நம்பிக்கை வைத்து, அவரின் அன்பை உறுதியாய் விசுவாசித்து, கர்த்தருடைய சித்தத்திற்கு உன்னை முற்றிலும் ஒப்புக்கொடுத்து, அவருடைய மகிமை மட்டும் பெருக வேண்டுமென்று நீ விரும்புகிறாயா? உனக்காக அவர் தெரிந்துக் கொள்ளும் எல்லாவற்றிலும் உனக்குச் சம்மதம்தானா? உன் சொந்த புத்தியின்மேல் சாயாமல் இருந்தாலொழிய இதைச் சொல்ல முடியாது. இது உன்னை முற்றிலும் கர்த்தருக்கு அர்ப்பணிக்கச் செய்யும். முற்றிலுமாய்...

தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்

மே 15 "தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்." ரோமர் 5:1 இயேசுவின் ஜீவன் நமக்கு நீதி. அவருடைய மரணம் நமக்குப் பிராயச்சித்தம். அவரை விசுவாசித்து முற்றிலும் நீதிமான்களாக்கப்படுகிறோம். நீதிமான்களாக்கப்பட்டு சமாதானம் பெறுகிறோம். நமது தேவன் நம்முடைய அக்கிரமங்களை நம்மேல் சாட்டாமல் இயேசுவில் நம்மை மாறாத அன்பினால் நேசிக்கிறார். நிகழ்காலத்தில் நமக்குக் கிடைத்திருக்கும் நன்மைகளும், எதிர்காலத்தில் கிடைக்கப்போகிற நன்மைகளும் அவரின் அன்பிலிருந்தே உண்டாகிறது. தேவன் நம்மீது கோபம் கொண்டாலும் நம்மைப் பகைப்பது இல்லை. உலகம் உண்டாகும் முன்னே நம்மை நேசித்தபடியினாலே நமக்கு இரட்சிப்பு என்னும் வழியை ஏற்படுத்தியிருக்கிறார். அந்த...

நீங்கள் உலகத்திற்கு வெளிச்சமாய் இருக்கிறீர்கள்

மே 14 "நீங்கள் உலகத்திற்கு வெளிச்சமாய் இருக்கிறீர்கள்." மத் 5:14 நாம் அந்தகாரம் நிறைந்த உலகில் இருக்கிறோம். சத்தியத்தின் ஒளியையும் பரிசுத்தத்தின் ஒளியையும் நாம் பெற்றிருக்கிறபடியால் நாம் ஒளியை பிரகாசிக்கச் செய்ய வேண்டும். தினமும் இயேசுவாகிய சூரியனிலிருந்து நமக்கு ஒளியைப் பெற்றுக் கொள்ளுகிறோம். சந்திரனைப்போல் நமக்காக மட்டும் அந்த ஒளியை பெற்றுக் கொள்ளாமல் நாம் மற்றவர்களுக்கும் அந்த ஒளியைக் கொடுக்க வேண்டும். ஆகவே நம்முடைய ஒளி எப்படிப்பிரகாசிக்கிறது? அந்த ஒளி எங்கே பிரகாசிக்கிறதா என்று சரி பார்க்க வேண்டும். நம் ஒளி எங்கே பிரகாசிக்கிறது? துன்பப்படுகிறவர்களுடைய...