Home கட்டுரைகள் விசுவாசம்

விசுவாசம்

2050
0

விசுவாசம்

‘சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டதுபோல மனுஷகுமாரனும், தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, உயர்த்தப்படவேண்டும்.”

‘பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள்.” லூக்கா 23:24

இந்த வார்த்தைகளை இயேசு கிறிஸ்து சிலுவையிலிருந்து கூறினார். சொல்லி முடியாத வேதனையையும், இழிவான மரணத்தையும் அனுபவித்தார். இடுப்புத் துணி மாத்திரம் அணிந்தவராய்த் தொங்கின சாட்சியை நாம் காண்கிறோம். அந்த நாட்களில் ரோமர்களின் சிலுவையில் தொங்கின அனைவரும் இவ்விதமாக வதைக்கப்பட்டனர். ஆண்டவராகிய இயேசுவும் அதற்குத் தப்பவில்லை.

‘குற்றம் சுமந்து, கொடுமை பொறுத்து
நிந்தை சுமந்து, துன்பம் பொறுத்து
எந்தன் இடமதில் நின்றார்.”

துயர் மிகு இவ்வேளையில் தூயவர் இயேசு மன்றாடினார். தனக்காக அல்ல. மற்றவர்களுக்காக. ஒருவர் தனக்காக இறைவனிடம் ஜெபித்தால் அதை நியாயம் என்று ஒப்புக்கொள்வோம். துன்பச் சூழலில் இருக்கும் ஒருவர் தன் நிலைக்காய் ஜெபித்திடல் தப்பு அல்ல. ஆனால் இங்குத் துன்பக்கடலிலே மிதக்கின்றார். எனினும், தனக்கென வேண்டுதல் செய்யவில்லை: மற்றவர்களுக்காக வேண்டுதல் செய்தார். சிநேகிதர்களுக்காய் அல்ல விரோதிகளுக்காய், ஆம்! தன் மரணத்துக்குக்காரணமாயிருக்கும் நபர்களுக்காகப் பரிந்துபேசினார்.

‘பிதாவே இவர்களை மன்னியும்.”

கிரேக்க மொழியிலுள்ள இவ்வார்த்தையை ‘இயேசு ஜெபித்துக்கொண்டேயிருந்தார்” என தமிழில் திரும்புவது பொருத்தமாயிருக்கும். விட்டு விட்டு ஜெபிக்கவில்லை, அதாவது தொடர்ந்து ஜெபித்துக்கொண்டே இருந்தார் என்பதுதான் இதன் பொருள். சரீரத்தை ஆணிகள் துளைத்துச் சென்றபோதும் ‘பிதாவே மன்னியும்” என ஜெபித்தார். மேலும் சிலுவையைத் தூக்கித் தரையில் நாட்டுகின்றபோதும், ‘மற்றர்வகளை இரட்சித்தான் (காப்பாற்றினான்) தன்னைத்தான் இரட்சிக்க (காப்பாற்ற) திராணியில்லை (முடியவில்லை)”என்று பலர் கூறினபோதும் அப்படியே மன்றாடினார். ஆம் , போர்ச்சேவர்கள் அவரது அங்கியைப் பங்கு போடுவதில் கவனம் செலுத்திய போதும்” அன்பே உருக்கொண்ட இயேசு ஆண்டவரிடம், ‘பிதாவே இவர்களுக்கு மன்னியும்” என வேண்டினார்.

நமதாண்டவராகிய இயேசுவின் மரணத்திற்கு நாமும் காரணமாயிருந்தோம்!

ஒருவேளை இயேசுவின் பாடு மரணக் காட்சியிலிருந்து நாம் விடுபட விரும்புவோம். இயேசுவனின் சிலுவை மரணத்திற்குக் காரணமாகும் எல்லாரும் நம்மைவிட இழிவானவர்கள் என நினைப்பதுண்டு. நாம் நேர்மையுள்ளவர்களானால் இயேசுவை சிலுவையிலேற்றி பாவங்களுக்கு சமமானவை நம் உள்ளத்திலும் இருக்கின்றன என்று உணர்வோம். யூதாஸ் காரியோத்து இயேசுவை காட்டிக் கொடுத்து, அவரைக் கைது செய்வதற்கு உதவி செய்தான். ஏன் அவன் அவ்விதம் செய்தான்? பணத்தையடுத்துப் பேராவை பிடித்தவனாயிருந்தான். சீடர்களுக்குள்ளே பணப்பையை சுமக்கிறவனாகவும் அதைத் திருடுகிறவனாகவும் இருந்தான் (யோவான் 12:6) முப்பது வெள்ளிக் காசுக்கு காட்டிக் கொடுத்தான். நாமும் சின்ன யூதாசாக இருந்து, பேராசையுடையவர்களாக இருக்கிறதில்லையா?

பிரதான ஆசாரியர்கள் அவரை ஒழித்துக் கட்டுவதற்காய் முப்பது வெள்ளிக் காசு கொடுக்க தயாராயிருந்தனர். பிலாத்துவுக்குத் தெரியும். அவர்கள் பொறாமையால் இவையெல்லாம் செய்கிறார்கள் என்பது (மத்தேயு 27:17). பொறாமையின் விளைவை நாம் அறிந்திருக்கிறோமா?

இயேசு குற்றமற்றவர் என்பது பிலாத்துவுக்குத் தெரிந்திருந்ததும் சிலுவையிலறையப்பட சேவர்களிடம் ஒப்படைத்தான். நீதியைவிடத் தன் பதவியும், மேன்மையும் ஆபத்திலிருப்பதை உணர்ந்தான். இன்றைய உலகம் கௌரவத்தையும் செல்வத்தையும் அத்தனை முக்கியமல்ல என்று கருதக்கூடிய நிலையிருக்கிறதா? நம்மை விட மற்றவர்கள் புகழப்புடும்போது அல்லது விரும்பப்படும்போது எரிச்சலடைகிறோம். நேர்மையை விட்டு விலகி நம் பெயரைக் காப்பாற்ற முற்படுகிறோம் அல்லவா? இவையெல்லாம் மனித வர்க்கத்தின் சீர்கெட்ட மனிநிலையாகும். இவை இயேசுவின் மரணத்திற்கு அடிப்படைக் காரணமாயிருந்தன. இவை நம்முடைய பாவங்களுமாயிருப்தினால் மன்னிப்பு நமது பெரியதேவையாகும்.

வேதபாரரும், பரிசேயரும் ‘தேவன் ஒருவரேயன்றிப் பாவங்களை மன்னிக்கத்தக்கவர் யார்?” (மாற்கு 2:7) என்று தங்களுக்குள்ளே சொல்லிக் கொண்டார்கள். இயேசு அதை அறிந்து பிரதியுத்திரமாக ‘பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டும்” என்றார். அவர் படுக்கையில் கிடந்த திமிர்வாதக்காரனை நோக்கி, ‘உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது” என்றார் ( மத்தேயு 9:2). விபச்சாரத்திலே கண்டுபிடிக்கப்பட்ட பெண்னை நோக்கி, ‘நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை. நீ போ இனிப் பாவம் செய்யாதே” என்றார். (யோவான் 8:11). எனவே, இப்போது பிதாவிடம் மன்னிக்குமாறு வேண்டுதல் செய்கின்றார். மனிதகுமாரனாக இயேசு இப்பொழுது பூமியில் வாசம்பண்ணவில்லை என்று நாம் நினைக்கலாமா? சிலுவையில் தொங்கும்போது அவர் பரிந்துபேசிஜெபிக்கத் தொடங்கினார். கர்த்தராகிய இயேசு பரமேறியபின்னர் இவ்வுலகில் ஆரம்பித்த ஊழியத்தைத் தொடர்ந்து பிதாவிடம் பரிந்துப் பேசிக்கொண்டிருக்கிறார். இவ்வுலக வாழ்விலே எவ்விதம் பரிந்துபேசினாரோ அவ்வண்ணமே அங்கும் செய்து கொண்டிருக்கிறார். கடவுளோடுள்ள பழைய உடன்படிக்கைக்கிணங்க பலியும் பலிபீடமும்! தேவைப்பட்டது. அதைத் தேவ ஆட்டுக்குட்டியாகிய இயேசுகிறிஸ்து தன்னை அர்ப்பணித்ததின் மூலம் நிறைவேற்றிப் பாவபரிகாரம் ஏற்படச் செய்தார். தன்னைத் தியாகம் செய்ததின் பயனாய் மானிடரை மன்னித்திட வேண்டிக்கொள்ள முடிந்தது. அன்று தொடங்கிய அந்தச் செயலை இன்னமும் செய்துக் கொண்டேயிருக்கிறார். தேவனுக்கு முன் நமக்காகப் பரிந்துபேசுகிறார்.

‘தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள்”

பாவத்தில் அறிவும், அறியாமையும் கலந்துகாணப்படுகிறது. இரக்கத்துடன் இயேசு, அவர்கள் அறியாமல் செய்யகிறார் என்று சொன்னபோதிலும், அவர்கள் செய்வதை அற்பமானதாகக் கருத முன்வரவில்லை. தாங்கள் பாவஞ்செய்கிறதை அவர்கள் அறியாமலிருந்தார்கள். ‘நாசரேத்து இயேசு” தேவனின் நித்தியக் குமாரன் என்பதைப் பிலாத்து அறிந்து கொள்ளவில்லை. ஆனால் தனக்கு முன்னால் நிறுத்தப்பட்டுள்ள மனிதர் சாதாரணவர் அல்ல என்றும், சொல்லுபடுகிற குற்றங்கள் அவரில் இல்லை என்பதையும் நன்கு அறிந்திருந்தான். பிரதான ஆசாரியர்கள் இயேசுவில் மேசியாவைக் கண்டு கொள்ளவில்லை. ஆனால் தங்கள் உள்ளத்தின் பொறாமையும் பகையுமே இந்தக் காரியத்தைச் செய்ய தூண்டுகிறதென்பதை அறிந்திருந்தன.

‘தாங்கள் செய்வது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே” என்று இயேசு ஜெபித்தபோது அவர்களது நடத்தையை மன்னிக்கவோ அவர்களது அறியாமையை பெருமிதப்படுத்தவோ செய்யாது அவர்களது குறைந்த அறிவை உணர்ந்து கொண்டார். அவர்கள் தேவ குமாரனைச் சிலுவையில் அறைவதின் குற்றத்தை தெரிந்துகொள்ளாதவர்களாயிருந்தனர். எனவேதான் பிதாவின் நித்தியமான ஒரே குமாரனை வானலோகத்தில் தூதர்கள் வணங்கித் ஸ்தோத்தரிக்கின்ற மகிமையின் ராஜாவை துப்பிடவும், எள்ளி நகையாடவும் ஏதுவாயிற்று. இதுவே பாவத்தின் அகோரத்தை வெளிப்படுத்துகிறது. நாம் பாவம் செய்யும்போது ஓரளவிற்கு நம் குற்றத்தை உணருகிறோம். ஆனால், அதன் பெரிதான பலா பலனை உணராதிருக்கிறோம். பாவம் சிறியதொரு நரகம் போன்றது. அதனுடைய பிரதிபலனை அளவிட முடியாது. நாமோ அதனை உணராதிருக்கிறோம் இன்றைய சமுதாயத்தில் பலமுறைகளில் அதன் தம்மையை உணர்ந்திடலாம்.

எப்படிப்பட்ட மனநிலையிருந்ததாலும் சரி எவ்விடங்களிலும் உள்ள சகல பாவிகளின் பாவங்களையும் மன்னிக்க வேண்டுமென்று கர்த்தராகிய இயேசு இறைவனிடம் வேண்டிக்கொள்ளவில்லை. தேவவாக்கியங்களின்படி மன்னிப்பு என்பது மனந்திரும்பாமல் கிட்டாது. சிலுவை மன்றாட்டுல் சிலுவை மரணத்திற்குக் காரணமாயிருந்த எல்லாருடைய பாவங்களையும் ஓரேயடியாக நிராகரிப்பதல்ல. அதன் கருத்தென்னவெனில், ‘பிதாவே, இந்தக் கொலைப்பாதகர்களை அழித்துப் போடாதேயுங்கள்: அவர்கள்மேல் வரும் உமது நியாயத்தீர்ப்பைச்சற்றுத் தள்ளிவைக்கவேண்டும். அவர்கள் தகுந்து தருணம் கிடைத்து தாங்கள் செய்கின்றதற்காக மனம் வருந்தும்வரையிலும் தள்ளிவைக்கவேண்டும்.” என்பதேயாகும்.

சிறிபிள்ளைகளை இயேவிடம் கொண்டுவந்தபோது சீஷர்கள் அதட்டினார்கள். அப்பொழுது இயேசு, ‘சிறுபிள்ளைகள் என்னிடம் வருவதற்கு இடங்கொடுங்கள்” என்றார் (மாற்கு 10:14). ‘மன்னித்தல்” என்பது ‘இடங்கொடுங்கள்” என்ற பொருளிலேதான் கூறப்பட்டுள்ளது. ‘சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்: அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்.! இந்த வாக்கியத்தின் பொருள் தெளிவாகச் சொல்வதானால், ‘அவர்களது காரியத்தில் தலையிடாதிருங்கள். அவர்கள் என்னிடம் வருவதற்கு அனுமதி கொடுங்கள்” என்று பொருள்படுகிறது. இவ்விதக் கருத்துடனேதான் இரட்சகர் சிலுவையிலிருந்து, தேவன் அவர்களது பொறாமைச் செயலிலே குறுக்கிடாதிருக்க வேண்டுமென மன்றாடினார். அவர்கள் செயலுக்கு நீதி வழங்குவதைச் சற்று தாமதித்து செய்வதினால் இயேசுவினது மரணத்தின் ஆழமான கருத்தை அவர்கள் அறிந்துகொள்ள முடியும் அதன் மூலம் அவர்கள் மீட்கப்படவும், சுகப்படவும், மன்னிக்கப்படவும் முடியும்.

இதை வாசிக்கிற நண்பர்களே!

‘பிதாவே இவர்களுக்கு மன்னியும்” என்று நம் மீட்பர் இயேசு எப்போதும் நமக்காக பிதாவாகிய தேவனிடத்தில் மன்றாடிக்கொண்டிருக்கிறார் தெரியுமா? அந்த இயேசுவை நாம் எத்தனை முறை சிலுவையில் அறைகிறோம் தெரியுமா?