Home செய்திகள் கடைசிக்காலச் சத்தியங்கள்

கடைசிக்காலச் சத்தியங்கள்

3086
0
கடைசிக்காலச் சத்தியங்கள்

1. பாவம் – இது எது?

‘சட்டத்தை மீறுதல்” என்பது பாவம் என்ற சொல்லின் சரியான மொழியாக்கமாகும். 1யோவான் 3:4 . மனிதனின் நிலை தேவ சித்தத்திற்கு கட்டுப்படுதல் ஆகும். பாவம் சுய விருப்பத்தின் நடக்கையாகும்.

‘விசுவாசத்தினாலே வராத யாவும் பாவமே” ரோமர் 14:24. அதாவது விசுவாசம் நம்மை தேவ சந்நிதியில் சேர்க்கிறது. பின் நாம் கவனமாக, விழிப்புடன் ஜீவியத்தை அவர் சந்நிதியில் நடத்துகிறோம்.

‘தீய நோக்கம் பாவ (மா)ம்” நீதி 24:9. நம் நோக்கமானது, நாம் சுபாவத்தின்படி எப்படிப்பட்டவர்கள் என்பதை நமக்கு அறிவுறுத்துகின்றது (மாற்கு 7:21).
‘எல்லாரும் பாவம் செய்து, தேவ மகிமையற்றவர்களாகி” ரோமர் 3:23 இதுவே அப்போஸ்தலனாகிய பவுல் எடுத்துச் சொல்லி வருதலின் மொத்தக் கருத்தாகும். பாவம், தேவனின் விண்ணுலக அளவுகோலாக அளக்கப்படுவதால், ‘தேவ மகிமை அற்றவர்களாகி” என்று வாசிக்கிறோம்.

மறுபடியும் பிறந்த ஒருவனின் தத்துவம் என்னவென்றால், பழைய சுபாவத்திற்கு இடம் அளிக்காமல் இருப்பதாகும். எபே 4:22 ‘ஒருவன் நம்மை செய்ய அறிந்தவனாயிருந்தும், அதைச் செய்யாமற்போனால், அது அவனுக்குப் பாவமாகும்” (யாக் 4:17).

நாம் ஆதாமின் மக்களாக ‘பாவ சுபாவத்தின் படி” இருப்பவர்கள் என்று வேதம் கூறுகிறது. (சங் 51:5). நாம் ரோமர் 6,7 ஆம் அதிகாரங்களில் பாவத்தின் விளைவைப் பார்க்கிறோம். நமக்கு பாவத்திலிருந்தும், அதின் வல்லமையிலிருந்தும், ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் திருப்பெயரில் பற்றுதல் வைத்ததும் விடுவிக்கப்படுகிறோம்.

2. மன்னிப்பு

ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் முதலாம் வருகைக்கு முன் ‘நித்திய (பாவ) மன்னிப்பு” என்பது அறியப்படாததாகும். பழைய ஏற்பாட்டில் காணப்படும், மன்னிப்பானது இம்மைக்குரியது, நித்தியத்திற்குரிதன்று.

எபிரேயர் 10:14 வசனத்தை உறுதியாய்ப் பற்றிக் கொண்டிருக்கும் விசுவாசிகளுக்கு, மேற்படி வசனத்தின் போதனையாக இந்நிரூபம் எழுதப்பட்டிருக்கிறது.

‘பரிசுத்தமாக்கப்படுகிறவர்களை, ஓரே பலியினாலே இவர் என்றைக்கும் (தடையற்ற) பூரணப்படுத்தியிருக்கிறார்.”
இதுவே கிறிஸ்தவத்தின் ஆசீர்வதிக்கப்பட்ட நிலை: பாவத்திற்காக இனி பலிசெலுத்தப்பட வேண்டிய அவசியமில்லை (எபி 10:18)

இதுவே தேவனுடைய பார்வையில் விசுவாசி ஒருவனின் நிலையாகும். இதையே பேதுரு அப் 10:43ல் பிரசங்கித்தார். அப் 13:38-39 ல் பவுல் அடிகள் நீதிமான்கள் ஆக்கப்பட்டிருப்பதையும் சேர்த்துக் கூறுகிறார். என்னமேன்மையான நிலை. ரோம 8:1 வசனம் தேவனுடைய கிருபையின் கிரியையை விசுவாசித்தவர்களுக்குரியதாகும், இயேசு கிறிஸ்துவுக்குட்பட்டவர்களுக்கு……. ஆக்கினைத் தீர்ப்பு இல்லை.

கல்வாரிச் சிலுவையில் தேவக்குமாரன் நிறைவேற்றிய கிரியையிலிருந்து பிரவாகித்து வரும் இந்த மேன்மையையும் மகிமையுமானதை, எந்த ஒரு நூதனமான போதனையோ, கார்மேகமோ மறைக்காதிருப்பதாக. கர்த்தரைத் துதிப்போம். அவரையே எக்காலத்திலும் உயர்த்துவோமாக.

3. சமாதானம்

‘இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்” (ரோமர் 5:1).

இந்த விசுவாசத்தினால் தேவன் கிறிஸ்துவை நம்மீறுதல்களினிமித்தம் ஒப்புக்கொடுத்து, நாம் நீதிமான்களாகும்படி எழுப்பினார். எபேசியர் 2:14 ன் படி அவரே நம்முடைய சமாதானக்காரணர். கொலோ 1:20 ன் படி அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினால் சமாதானத்தை உண்டாக்கினார்.

தேவன் தாமே கர்த்தர் இயேசுவின் கிருபாதாரபலியை நம்புவோருக்கு வழங்கி உள்ள நற்கனியாகும். கல்வாரி சிலுவையில் கிரியை நிறைவுபெற்றது. ஆண்டவர் இயேசுவின் உயிர்த்தெழுதல், தேவன் தம் குமாரனின் கல்வாரிக் கிரியையை அங்கீகரித்தார் என்பதற்கு அத்தாட்சியாகும்.

‘தேவ சிந்தையில் அவர் தம் குமாரன் மூலமாய்
பாய்ந்தோடி வரும் சமாதான நதியே!
ஓ! கல்வாரி நாயகர் சமாதான காரணர்
‘முடிந்தது” என்றார், சமாதானம் தந்தார்”

4. மறு – புதிய பிறப்பு

‘மறுபடியும் பிறப்பது” என்றால் தேவனால் பிறப்பது என்பதே நேர்முகமான பொருள். அதாவது இந்தப் புதிய பிறப்பை நமக்கு இலவசமாக கொடுக்கும் ஆண்டவர் இயேசுவின் திவ்விய சுபாவத்தையும், அவர் தம் ஜீவனையும் அடைந்து அனுபவிப்பதாகும்.

புதிய பிறப்பானது, ஒரு மனுஷனுடைய மனதில் உள்ள சிங்காசனத்தில் ஆள் மாற்றுதல் அல்லது மேலும் பழைய சுபாவத்தை மெருகேற்றி சீர்ப்படுத்துவதும் அல்ல. ‘நாம் அவர் திருப்பெயரில் பற்றுதல் – விசுவாசம் வைத்தலும், நாம் ‘தேவனுடைய பிள்ளைகள்” ஆனோம் என்று யோவான் 1:12 ம் வசனம் கூறுகிறது.
இந்த புதிய புனித வாழ்க்கை, இதை இலவசமாக கொடுத்த ஆண்டவர் இயேசுவையே நோக்கமாகக் கொண்டதாகும்.

தேவன் தம் குமாரனின் மூலமாக நம்மைப் பற்றி வெளிப்படுத்திய யாவையும் அறிந்து, ஒளியில் நடப்பதாகும் 1யோவா 1:7.

இந்த மாறுபட்ட வாழ்க்கையின் நற்கனிகளாவன: முதலாவது கீழ்ப்படிதல் (1யோவான் 2:3-5). இரண்டாவது கனி, நீதியை நிறைவேற்றல் (1யோவான் 2:29): இப்படிப்பட்ட தெய்வீக நற்பண்புகள், அவரையே நோக்கமாக கொண்டதும், மற்றெல்லா தேவ மக்கள் மீதும் அன்பு பாராட்டும் தெய்வீக சுபாவம் கொண்டதுமாகும்.

மறுபிறப்படைந்த புதிய புனித வாழ்க்கை, நடைமுறையில் வெளிப்படுத்தப்பட்டது. உலகம் அதை விபரம் கண்டுக்கொள்ள இயலாது. ஏனெனில் இந்த புதிய வாழ்க்கையின் நாட்டமெல்லாம், இவ்வுலகக் காரியங்களுக்கு மாறுபட்டவிதத்தில், புதுமையான விருப்பம், புதுமையான நோக்கம் கொண்டதாகும். பிதாவாகிய தேவனுக்குள், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் நித்திய மகிழ்ச்சியை அடைந்து அனுபவிப்பதுமாகும்.

5. பாவ நிவாரணம்

பாவ நிவாரணம் என்ற எபிரெய சொல்லின் கொருள் ‘மூடுதல்” என்பதும், தேவனுடைய பார்வையில் நம் பாவ பரிதாப நிலையை, அப்புறப்படுத்துதல் என்பதாகும்.

பாவ நிவாரணம்: பாவத்திற்கு முழு அளவில் பரிகாரம் செய்து முடித்த சிலுவையையும் சுட்டிக்காட்டுகிறது.

தேவனுடைய புனித சுபாவமானது, பாவத்திற்கு தண்டனையை வற்புறுத்திக் கோரிற்று ஆனால், தேவ அன்பானது அந்த தண்டனையை ஏற்றுக்கொள்ள ஒரு பலியை வழங்கியது.

தேவனின் சகல உரிமைகளும் சிலுவையில் சந்திக்கப்பட்டு தீர்க்கப்பட்டது. எனவே தேவ கிருபையின் நிறைவு வெளிப்பட்டுள்ளது. ஆகையால் நற்செய்தியை நம்பினோருக்கு அவருடைய மகாகிருபையின் திரள் பூரண அளவில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த ஆசீர்வாதத்தின் நிறைவு தேவ ஆவியானவரால் அப்போஸ்தலர்களின் நிருபங்கள் மூலமாய் கொடுக்கப்பட்டது. இது கிறிஸ்துவானவர் பரலோகிலிருந்து பேசுவதாகும் (எபிரெய 12:25).

இந்த அறிவு கர்த்தருடைய வசனத்தின்மேல் வைக்கும் விசுவாசத்தின் மூலமாய் கிடைக்கிறது. கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்படிந்து, நீதியின் பாதையில் நடக்கும்போது, இதன் பலனை அனுபவிக்கிறோம். இந்நிலையில்: தேவனாகிய பரிசுத்த ஆவியானவர் எவ்வித தடையுமின்றி நம்முடைய இருதயத்தை கிறிஸ்துவின் அன்பினாலும், நம்முடைய சிந்தையை அவர் நிறைவேற்றிய பாவநிவாரண பணியின் கனியினாலம் நிரப்புகிறார். நம் பாவத்தை, சிலுவையின் இரத்தம் கொண்டு அகற்றியதன் மூலம் தேவன் மகிமை அடைகிறார்.

6. பதிலீடு

திருவசனத்தில் ‘பதிலீடு” (ளுரடிளவவைரவழைn) முறையானது விசுவாச மக்களைப்பற்றிய காரியங்களைச் சார்ந்தே குறிப்பிடப்பட்டுள்ளது. வேறுவிதமாக இதை நாம் வசனத்தில் காண்பதில்லை.

பரிகாரம் (கிருபாதாரபலி) முழு உலகிற்கும் உரிய (1யோவான் 2:2). அதாவது, கிறிஸ்துவானவர் தேவனுடைய பரிசுத்த நிலைக்குரிய காரியங்களுக்கு ஈடுசெய்து சிலுவையில் பாவத்திற்கான தண்டனையைச் சுமந்தார். இந்த மாபெரும் தியாகத்தால் நீதிபரராகிய தேவன் கிறிஸ்துவின் நற்செய்தியை நம்புகிற ஒவ்வொருவருக்கும் மன்னிப்பை இலவசமாக வழங்கமுடியும்.

வசனம் சொல்லுகிறது, ‘அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து” ஏசாயா 53:14, எபிரெயர் 9:28 மேற்படி வசனத்தை உறுதிப்படுத்துகிறது.

1பேதுரு 2:24ல் இவ்வாறு கூறுகிறார் பேதுரு: ‘அவர் தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்”

சத்தியவழியான கிறிஸ்தவமானது, ஒவ்வொரு மெய்க்கிறிஸ்தவனும் தேவனுக்கு முன்பாக மன்னிக்கப்பட்டவன் என்ற மேலான நிலையில் இருக்கச் செய்கிறது. அவரது அளவற்ற கிருபைக்காக அவரைத் துதிப்போம்.

7. கிருபாதார பலி – பரிகாரப் பலி

தேவனுடைய புனிதத் தன்மைக்கடுத்த காரியங்களை முறைப்படி நிறைவாக்குதல் ‘பரிகாரம்” ஆகும்.

ரோமர் 3:26 ல் கிறிஸ்துவானவர் தமது இரத்தத்தின் மூலமாய் பரிகாரம் உண்டாக்கினதைப் பார்க்கிறோம். விசுவாசத்தினால் அவர் உண்டாக்கின இந்த ஆசீர்வாதங்களை அடைந்து அனுபவிக்கிறோம்.

‘தேவன்…………. கிருபாதார பலியாக அவரையே ஏற்படுத்தினார்” ரோமர் 3 ம் அதிகாரத்தில் உள்ள இந்த வசனமானது: தேவனுடைய உள்ளத்தின் ஆழத்திலிருந்து அவர் தம் திருச்சித்தத்தின்படி, இந்த கிருபாதாரபலியை ‘பாவ பரிகாரத்தை” வழங்கிற்று.

1யோவான் 2:2 ல் ‘சர்வலோகத்தின் பாவங்களையும் நிவர்த்தி செய்கிற பலி” என்று வாசிக்கிறோம். ஆதிமனிதன் ஆதாமின் சந்ததியைச் சேர்ந்த அனைவரும் கிறிஸ்துவானவரிடம் வரலாம். மீட்பை விடுதலையை இலவசமாய் பெறலாம்.

புதிய ஏற்பாடு எழுதப்படும் நாள்வரை, ‘உலக இரட்சகர்” அல்லது ‘இரட்சிக்கும் தேவன்” என்று தேவன் தம்மை இவ்வுலகிற்கு வெளிப்படுத்தவில்லை. அவரது இரக்கத்திற்காக அவரை மகிமைப்படுத்தி, ரோமர் 15:9படி உம்முடைய நாமத்தை சொல்லி, சங்கீதம் பாடுவேன்: என அவரையே மனதார உயர்த்துவோமாக!

8. நீதிமானாக்கப்படுதல்

நேர்மையின் வெளிப்பாடு ‘நீதிமானாக்கப்படுதல்”

‘நீதிமானாக்கப்படுதல்” என்றால் விசுவாசி ஒருவன் தேவனுக்கு முன்பாக, கிறிஸ்துவுக்குள் காணப்படும் புதிய நிலையாகும்.

விசுவாசி ஒருவன், ‘கிறிஸ்துவுக்குள்” தேவ சந்நிதியில் நீதிமானாக்கப்பட்டவன்.
கிருபையே இதன் வாசல் (ரோமர் 3:4)

விசுவாசமே இதன் திறவுகோல் (ரோமர் 3:28)

இரட்சகரின் திருரத்தமே இதன் அடிப்படை (ரோமர் 5:9)

‘நம்முடைய ஜீவனாகிய கிறிஸ்து” வுக்குள் (கொலோ 3:4) தேவனுக்கு முன்பாக, நீதிக்கு ஏதுவான தீர்ப்பு உண்டாயிற்று (ரோமர் 5:18) என்ற மேன்மையான நிலையில் இருக்கிறோம்.

அற்புத கிருபை! தேவனுக்கு முன்பாக இரட்சகர் இயேசு கிறிஸ்துவுக்குள் சார்ந்துள்ள, அடைந்திருக்கிற மேன்மையான நிலையை நினைக்கையில், நமது ஓயா துதி, தேவனுடைய உள்ளத்தை சந்தோஷப்படுத்துகிறதல்லவா? தேவனுடைய திருச்சித்தமும், அவர்தம் திட்டமும் இந்த மேலான நிலைமைக்கு நம்மைச் சேர்த்துள்ளது.

நமது ஓயா துதியின் மூலம் அவரது திருநாமம் மென்மேலும் உயர்த்தப்படுவதாக!

9. மீட்பு – விடுதலை

‘மீட்பு” – ‘விடுதலை” என்றால், நம் (பாவ) அடிமைத்தன நிலையிலிருந்து, மாபெரும் சிலைக்கொடுத்து, விடுவிக்கப்பட்டிருத்தல் ஆகும்.

மெய்யான மீட்பின் அனுபவ அறிவானது, நம்மை சம்பூரண சமாதானத்திற்குள்ளாக்கும். மேலும் இது ‘மீட்பரையே” ‘மீட்பர் இயேசுவையே” அனைத்துக் காரியங்களிலும் சார்ந்திருக்கும்.

இஸ்ரவேல் மக்கள் செங்கடல்களைக் கடந்து, எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டனர். உடனே, அவர்கள் விடுதலைப் பாடலைப் மனநிறைவுடன் பாடினர் (யாத் 15 அதிகாரம்). அது போல நாமும்: ‘நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலுமாய்” தேவனைப் பற்றியும் மேன்மை பாராட்டுகிறோம் (ரோமர் 5:11)

நாம், நம் சரீர மீட்பிற்காய் காத்திருக்கிறோம் (ரோமர் 8:23). நம் கர்த்தர் நமக்காக சபைக்காக இரண்டாம் முறையாக வருகையில், மரித்தோருக்கும் உயிருடன் உள்ளோருக்கும், மகிமையான சரீரத்தை அளிப்பார் (1கொரி 14:51-54, பிலி 3:21).

இந்த விடுதலையின் இறுதியான உன்னத நிலையானது, புதிய சிருஷ்டிப்பில் வெளிப்பட இருப்பதை, விசுவாசியின் உள்ளம் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளது. மாபெரும்கிரயம் செலுத்தி சம்பாதிக்கப்பட்டதன்றோ! (ரோமர் 8:19-22, எபே 1:14).

இரட்சகர் இயேசுவை நம்பாதோர், விடுதலை பெறாதவர்கள். ஆனால் இவர்கள் காரிருளுக்குள் தள்ளப்படுவதற்கு முன், கிறிஸ்துவை, கர்த்ருக்குள் அங்கீகரித்துப் பணிந்துக் கொள்வர் (ஏசாயா 45:23, ரோமர் 14:11, பிலி 2:10).

10. பரிசுத்தமாக்கப்படுதல்

‘நீதிமானாக்கப்படுதலின்” முன்னிகழ்வு ‘பரிசுத்தமாக்கப்படுதலாகும்”; (1கொரி 6:11).

ஒருவன் பரிசுத்தமாக்கப்பட்டவன் என்றால் ‘தேவனுக்கென்று முழுவதுமாக பிரத்தியேகப்படுத்துதல்” ஆகும். இயேசு கிறிஸ்துவினுடைய சரீரம் ஒரேதரம் பலியிடப்பட்டதினாலே, தேவ சித்தத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம் (எபி 10:10).

நம் அருள்நாதர் சிலுவையில் முடித்த திருப்பணியின் நற்கனியினால், நாம் தேவனுக்கு முன்பாக எப்பொழுதும் இந்நிலையில் இருக்கிறோம், இது நிரந்தரமான பரிசுத்தமாக்கப்படுதல். இந்நிலை மாறாது.

சேனைகளின் கர்த்தரை பரிசுத்தம் பண்ணுதல் என்றால், எப்பொழுதும் அவருக்கு முதலிடம் அளித்தலும், (மற்ற யாவரையும்) பாவமான கரியங்களை விலக்குதலுமாகும். எனவே அவர் இருக்கிற வண்ணமாகவே, தம்மை நமக்கு வெளிப்படுத்தியிருக்கிறபடியால் அவரையே உயர்த்தி மேன்மைப்படுத்துவோமாக (ஏசாயா 8:13).

நிரந்தரமானப் பரிசுத்தமாக்கப்பட்டிருத்தல், இதுவே: அனைத்து விசுவாசிகளின் நிலையாகும்.

இதைப்பற்றி 1தெச 5:23 தெளிவாக்குகின்றது. ‘உங்கள் ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக” பவுல் அடிகளின் ஜெபம்.
எபிரெயர் 12:13 லும் வாசிக்கிறோம், ‘யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள்@ பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே”.

நாம் பரிசுத்தமாக்கப்பட அலைந்து திரிய வேண்டியதில்லை. ஏனெனில் நாம் தேவ சாயலாகச் சிருஷ்டிருக்கப்பட்ட புதிய மனிதனை (சுபாவத்தை) தரித்துக்கொண்டிருக்கிறோம் (எபேசியர் 4:24).

இது புதிய ஜீவியத்தின் திவ்விய சுபாவமாகும். இதை நம் தினசரி ஜீவியத்தில் வெளிப்படுத்த நாம் தூண்டப்படுகிறோம்.

மகிமையில் இருக்கும் கிறிஸ்துவே: இதன் மதிப்பளவு,

இது – விசுவாசத்தினால் அடைவதாகும்:

இது கிறிஸ்துவையே நோக்கும்.

பரிசுத்த ஆவியானவர் இதன் வல்லமை.

நாம் நடைமுறை வாழ்க்கையில் சத்தியத்தை எந்த அளவுக்கு கனப்படுத்தி நடந்துக் கொள்ளுகிறோம், அந்த அளவின்படி, பரிசுத்தமாக்கப்பட்ட இந்நிலையை அனுபவிக்கிறவர்களாய் இருப்போம் (1கொரி 1:2).

நாம் அவர் திருவார்த்தைக்குக் கீழ்ப்படிந்து பொல்லாத தீமைக்கு விலகி, தூய பாதையில் நடக்க கிறிஸ்துவின் தெய்வீக அன்பு நம் உள்ளத்தை நெருக்கி ஏவுவதாக!

11. அதிகாரபூர்வமான மன்னிப்பு

இத்தலைப்பின் பொருள்: தேவப் பிள்ளைகள் என்ற அடிப்படையில், தேவன் தாமே நம்மீது செலுத்தும், தெய்வீக அதிகாரமாகும். இது இம்மைக்குரியது.

விசுவாசி ஒருவன் பாவம் செய்கையில், தேவப்பிள்ளை என்ற முறையில் அவரோடு உள்ள ஐக்கியத்தை மட்டுமே இழக்கிறான். இதனால் தந்தை மகன் என்ற உறவு பாதிக்கப்படாது.

1யோவான் 1 அதிகாரத்தின் பொருள் ஐக்கியமாகும். எனவே யோவான் கூறுகிறார் ‘நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், (கவனிக்கவும்: அறிக்கையிடுதல் மட்டும், மன்னிப்பக் கேட்பதில்லை) பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.

மேற்படிப் பொருளை நாம் கர்த்தருடைய ஜெபத்துடன் ஓப்பிடலாம்: (மத் 6:14-15, 18:31, லூக்கா 11:4: ‘எங்கள் பாவங்களை எங்களுக்கு மன்னியுங்கள்: நாங்களும் எங்களிடத்தில் கடன்பட்ட எவனுக்கும் மன்னிக்கிறோமே” (யாக் 5:15 வாசிக்கவும்)
1யோவான் 5:16ல் வாசிக்கிற ‘மரணத்துக்கு ஏதுவான பாவம்” என்னவெனில், விசுவாசி ஒருவன் கர்த்தரை பெருமளவில் கனவீனப்படுத்தி பாவம் செய்கையில், அவன் தேவ ஆளுகை அல்லது அதிகாரத்திலிருந்து நீக்கப்படுகிறான். ஆனால் அவன் இரட்சிப்பை இழப்பதில்லை!

1கொரி 11:30 ம் வசனம்கூறுகிறது: அநேகர் வியாதியுள்ளவர்களுமாய் இருக்கிறார்கள்: அநேகர் நித்திரையும் (மரணத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டோர்) அடைந்திருக்கிறார்கள். ஏனெனில் இவர்கள் பயபக்தி இன்றி, ‘அப்பம் பிட்டு” பந்தியில் பங்கு பெற்று, தன்னைத்தானே சோதித்தறியாமல், கவனக்குறைவாக நடந்துக்கொண்டு தீமைக்கும் தீட்டிற்கும் இடமளித்த விசுவாசிகள் ஆவர்.

நமக்காக பெரிய காரியங்களைச்செய்த தேவனுக்கு பிரியமாக இக்கடைசி நாட்களில் நடக்க, நம் உள்ளத்தில் தீர்மானம் செய்து, கவனமாகவும், ஜெபசிந்தையோடும் நடந்து முன்னேறுவோமாக!

12. பாவமற்ற வாழ்க்கை

யோவான் 1:11 உறுதி செய்வதென்னவென்றால், நமக்குப் பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம். சத்தியம் நமக்குள் இராது”

யாக்கோபு 3:2 கீழ்கண்டவாறு உறுதி செய்கிறது. ‘நாம் எல்லாரும் அநேக விஷயங்களில் தவறுகிறோம்”

ரோமர் 6:12 நம்மை நற்செய்கைக்கு கீழ்க்கண்டவாறு ஏவுகிறது, ‘ஆகையால், நீங்கள் சரீர இச்சைகளின்படி பாவத்திற்குக் கீழ்ப்படியத்தக்கதாக, சாவுக்கேதுவான உங்கள் சரீரத்தில் பாவம் ஆளாதிருப்பதாக”.

2கொரிந்தியர் 4: 10-11 வசனங்கள் நம்மை எச்சரித்து ஏவுவதென்னவெனில், ‘கர்த்தராகிய இயேசுவினுடைய ஜீவனும் எங்கள் சரீரத்திலே விளங்கும்படிக்கு, இயேசுவின் மரணத்தை எப்பொழுதும் எங்கள் சரீரத்தில் சுமந்து திரிகிறோம். எப்படியெனில், சாவுக்கினமான எங்கள் மாம்சத்திலே இயேசுவினுடைய ஜீவனும் விளங்கும்படிக்கு உயிரோடிருக்கிற நாங்கள் எப்பொழுதும் இயேசுவினிமித்தம் மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கப்படுகிறோம்”

மேற்படி வசனங்கள் விசுவாசிகளாகிய நமக்கு வெளிப்படுத்துவது யாதெனில், ‘பழைய சுபாவம்” இன்னும் விசுவாசியினுள் இருக்கிறதென்பதே. 1பேதுரு 4:7 வாசிக்கிறபடி பழைய சுபாவத்தை மேற்கொள்ள நாம் ஜெபம் பண்ணுவதற்கு ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.

கொலோசெயர் 3:3 கூறும் ‘நீங்கள் மரித்தீர்கள்” என்ற சத்தியமானது, ரோமர் 6 வாசிக்கிறபடி, கிறிஸ்துவுடனே கூட நாம் மரிப்பதாகும்.

13. பரிசுத்தம்

‘பரிசுத்தம்” என்றால் தீமையை அருவருத்துத் தள்ளி, நம்மையில் நாட்டம் செலுத்துவதாகும்.

வேதத்தில் மூன்றுவகையாக இவை பிரிக்கப்பட்டுள்ளது.

அறியாமை – மனித வீழ்ச்சிக்கு முன்னிலை,

வீழ்ச்சி – மனிதனின் தற்கால நிலை,

பரிசுத்தம் – இது தேவ சுபாவம்.

பரிசுத்தம் என்றால் ‘தீமையை விட்டுவிலகி, (விலகுவதுமட்டுமன்றி) விசுவாசி, தேவ சுபாவத்திற்கு உட்பட்டவனாக இருக்கிறான். தேவனுக்கேற்ற வாழ்க்கை வாழ்வதே பரிசுத்தம் என்னப்படும். விசுவாசி தீமையை வெறுக்கிறான்! காரணம் அவன் தேவனால் பிறந்தவன் (1யோவான் 5:1). பேதுரு பேசுகையில், விசுவாச மக்கள் திவ்விய சுபாவத்திற்கு பங்குள்ளவர்களானதால், இச்சையினால் உண்டான இவ்வுலக கேட்டிற்குத் தப்பி, இந்த தெய்வீக சுபாவத்தினால் இதை அருளின தேவனையே இலக்காக வைப்பர். கர்த்தர் இயேசு கிறிஸ்துவே தேவமகிமைக்காக இவ்வுலகில் நம்மை அழைத்து, பின் நடத்தி வருகிறார்.

எபேசியர் 4:24ல் பவுல் அடிகள் மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் நாம் புதிய மனிதனாக படைக்கப்பட்டிருப்பதைக் கூறுகிறார்.

இதைக்குறித்து திருவசனம் கூறும் அறிவுரை எல்லாம் நாம் கிறிஸ்துவுக்குள் கொண்டிருக்கும் நிலைக்கு ஒத்ததாக உள்ளது. பரிசுத்த வாழ்க்கையை நாம் சுய முயற்சியினால் சம்பாதிப்பதில்லை.

எனவே நாம் தேவனால் அடைந்துள்ள இந்த புதிய வாழ்க்கையை போஷித்துக் காப்போமாக. நம் தினசரி வாழ்க்கையில், அவருக்கே புகழ்ச்சி உண்டாகும் அளவில் பரிசுத்த நடக்கை விளங்குவதாக!

‘பரம அழைப்புக்கும் பங்குள்ளவர்களாகிய பரிசுத்த சகோதரரே” (எபிரெயர் 3:1).
‘நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள்” (1பேதுரு 1:16).

14. ஒப்புரவாகுதல்

ஆவியின் சிந்தையில் நாம் வளர ஆரம்பிக்கும் போது, நம்முடைய பழைய நோக்கங்களிலே – இலக்குகளிலே மாற்றம் ஏற்படுகிறது. இந்த மாற்றமே ஒப்புரவாகுதலின் முதல் படியாகும்.

ஆவியின் சிந்தையில் புதிய மனிதன் – சிருஷ்டிப்பு என்ற புதியதோர் வாழ்க்கை ஆரம்பமானது. அதாவது தேவ சுபாவத்திற்கேற்ற காரியம் பிறக்கிறது.
ஒப்புரவாகுதல் எப்பொழுதும் கிறிஸ்துவின் மரணத்துடன் இணைக்கப்பட்டதாகவே இருக்கிறது. இந்த புதிய திவ்விய சுபாவத்தை பெற்றிருப்பதினால்தான், நாம் ஓப்புரவாக்கப்பட்டு இருக்கிறோம்.

2 கொரிந்தியர் 5:19 கூறுகிறது : தேவன் கிறிஸ்துவுக்குள்; உலகத்தை தம்முடன் ஒப்புரவாக்கிக் கொள்ள திட்டமிட்ட போது, மனிதன் இவ்வொப்புரவையும், தேவனால் இதை நமக்கு அருளும் இயேசு கிறிஸ்துவின் கிருபையையும் புறக்கணத்தான். தேவ வசனம் தேவன் ஒப்புரவானதாக கூறுவதில்லை. மனிதனே தேவனுடன் ஒப்புரவாக வேண்டியவன். ஒப்புரவாகுதலின் மூலமாக தேவனும் மனிதனும் உறவாடும் ஒரு உன்னதநிலை ஏற்படுகிறது.

இப்போது இந்த மகிழ்ச்சியின் உண்மையான காரியம் யாதெனில், பாவம் அறியாத அவர் (கிறிஸ்து) நமக்காக பாவமாக்கப்பட்டார். பாவம் அறியாத அவர், நமக்காக ‘பாவ பலி” யானார். ஏனெனில், கிறிஸ்துவாகிய அவருக்குள் நாம் தேவ நீதியாகும்படிக்கு (இதைக்குறித்து அறிவிக்கப்படுவதென்னவென்றால், விசுவாசத்தினாலே இவர்கள் ஒப்புரவடைகிறார்கள்).

மனிதன் தேவனோடு ஒப்புரவாக்கப்பட, தேவையான காரியம் ‘விசுவாசம்” இந்த ஒரு வார்த்தை தேவனுக்கும் நமக்கும் ஒரு புதிய உறவை ஏற்படுத்திக்கொடுக்கின்றது.

பிலிப்பியர் 2:10 கூறுவதாவது, ‘பூமியின் கீழானோர்” (விபரிக்கு முடியாத படைப்புகள்) முழங்கால்யாவும் முடங்கும், ஆனால் இவைகள் ஒப்புரவாவதில்லை.

அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி……… யாவையும் அவர் மூலமாய்த் தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ள………. அவருக்குப் பிரியமாயிற்று. கொலோசெயர் 1:20.

15. தேவ நீதி

தேவ நீதியானது அவரது சகல கிரியைகளிலேயும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

விசுவாசிகளாகிய நாம், கிறிஸ்துவுக்குள் ‘தேவனுடைய நீதியாக்கப்ட்டிருக்கிறோம்” (2கொரி 5:21).

தேவ சந்நிதியில், கிறிஸ்துவே நம்முடைய நீதியாக இருக்கிறார் (1கொரி 1:30).

கிறிஸ்துவின் தகுதி நமக்கு அளிக்கப்படுவதாலோ, அல்லது அவர் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றினதாலோ இது நமக்கு கிடைப்பதில்லை.

தேவ நீதியின் தீர்ப்பானது: பாவம் ஆகிய (இதன்) வேர் மீதும், ‘பாவங்கள்” ஆகிய (இதன்) கனியின் பேரிலும், வழங்கிய தீர்ப்பை சிலுவையில் காணலாம். இதுவே தேவ நீதியின் தீர்ப்பாகும்.

கிறிஸ்துவின் திரு இரத்தம் நம் பாவங்களை நீக்குகின்றுது (1யோவான் 1:7). கிறிஸ்துவின் மரணம், ஆதாமின் கறைபடிந்த வரலாற்றுக்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தது (2கொரி 5:17).

இப்பொழுது கிறிஸ்துவே நம்முடைய ஜீவன் (கொலோ 3:4).

நாம் கிறிஸ்துவுக்குள் தேவ சந்நிதில் இருக்கிறோம். (ரோம 8:1).

கிறிஸ்துவே விசுவாசியின் தேவ நீதியாக, தேவ சந்நதியில் இருக்கிறபடியால், மற்று (சுய) நீதிகள் யாவையும் தகுதியற்றதாக்கி புறக்கணிக்கிறார். பிலி 3:7-9 ன் மூலமாக நாம் இந்தக் காரியத்தை உணர்ந்துகொள்ளமுடியும்.

16. நித்திய ஜீவன்

நித்திய என்பது சாகா ஜீவன் மட்டுமல்ல. இரட்சிக்கப்படாதவர்களும், தேவ நியாயத்தீர்ப்பிற்குட்பட்டு ஜீவிப்பர். ஆனாலும் இவர்கள் நித்திய ஜீவனை அடைவதில்லை. 1யோவான் 5:12 வாசிக்கவும் (குமாரனை உடையவன்) மேலான பேருண்மை 1யோவான் 1:2 திருவசனங்களின்மூலமாக நாம் அறிந்துகொள்ள முடியும். சுவிசேஷத்தை விசுவாசிக்கிற அனைவருக்கும் தேவன் அருளும் வெகுமதியே நித்திய ஜீவன் (ரோமர் 6:23).

கிறிஸ்து நம்முடைய ஜீவனாக இருக்கiயில், நாம் தேவ குணாதிசயத்தை உடையவர்களாயிருந்து, இதற்கேற்ற நன்னடத்தை, ஒழுக்கும் ஆகியவைகளின் வாயிலாக வெளிப்படும். இந்தப்புதிய ஜீவன் பாவம் செய்யாது (1யோவான் 3:9).

யோவான் சுவிசேஷம், தேவகுமாரனில் இந்த ‘நித்திய ஜீவன்” (மெய்வாழ்வு) வெளிப்பட்டதை அறிவிக்கிறது.

யோவான் நிருபம் ‘தேவனால் பிறந்தவர்களுக்குள்” இந்த ஜீவன் வெளிப்படுத்தப்பட்டதைத் தெரிவிக்கின்றது.

நித்திய ஜீவனை அடைந்துள்ளுவர்களாகிய நாம், தேவ சிந்தையில் பிரவேசிக்கும் தகுதியை உடையவர்களாய் இருக்கிறோம். இதன் கனியாகிய ஏக சிந்தையில் கிடைப்பதே ‘ஒரே ஜீவன்”. பரிசுத்த ஆவியானவர் நமக்குள் வாசமாயிருந்து, தினசரி ஜீவியத்திற்கானபெலனை அளிக்கிறார். தேவ வசனமானது, நாம் தேவனோடு ஐக்கியம் கொள்ள தடையாக இருப்பவைகளை உணர்த்தி, (நியாயந்தீர்க்க) அந்தப் பாவ காரியங்களிலிருந்து விடுதலை கொடுக்கின்றது. நித்திய ஜீவனை கண்டுக்கொள்ளவும் நமக்கு உதவுகிறது.

நாம் கவனமாகவும் ஜெப சிந்தையோடு நடந்து இதின் மேலான ஆசீர்வாதத்தை அனுபவிப்போமாக: ‘குமாரனை உடையவன் ஜீவனை உடையவன்” (1யோவான் 5:12).

‘நம்முடைய ஜீவனாகிய கிறிஸ்து வெளிப்படும்போது, நீங்கள் அவரோடே கூட மகிமையிலே வெளிப்படுவீர்கள்” (கொலோசெயர் 3:4).

17. மரணம் – இது என்ன?

மரணத்திற்கு திருவசனம் எளிய முறையில் உறுதிச்செய்யும் குறிப்பை யாக்கோபு 2:16ல் பார்க்கிறோம்: ‘ஆவியில்லாத சரீரம் செத்ததாயிருக்கும்”.

சரீரத்தை விட்டு ஜீவன் பிரிவதே மரணம்.

இந்த வாழ்க்கையின் முடிவு மரணம் அல்ல. லூக்கா 16:19-31 வரை உள்ள பகுதி இதைத் தெளிவுபடுத்துகிறது.

நமது ஆண்டவர் சதுசேயர்களுக்கு அளித்த பதிலை லுக்கா 20: 38 ல் பல ஆண்டுகளுக்கு முன்னமே மரிரத்த முற்பிதாக்கள் குறித்துப் பேசுகையில்: ‘எல்லாரும் அவருக்குள் பிழைத்திருக்கிறார்கள்” என்றார்.

பழைய ஏற்பாட்டில், மரணத்திற்கும் உயிர்த்தெழுதலுக்கும் இடைப்பட்ட காலத்திலுள்ள விசுவாச மக்களுக்கு இந்;த வெளிப்பாடு கிடைக்கவில்லை. இப்பொழுது பவுல் அப்போஸ்தலன் சுவிசேஷத்தினால் இது வெளிச்சத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது (2தீமோ 1:9-10)

பிரசங்கி 3:19ல் மனிதன் விஷயங்களை அறிந்துக்கொள்ள ‘சூரியனுக்குக் கீழே” அவன் எடுக்கும் முயற்சியை இந்த வசனம் தெளிவுபடுத்துகிறது. தேவன் பிரசங்கியின் மூலம், மனிதன் தன் சுய திறமையினால், வெளிப்படுத்தப்பட வைக்கப்பட்டுள்ள வருங்கால காரியங்களை அறிந்துக்கொள்ள இயலாதவன் என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.

இரண்டாம் மரணம் என்பது, பூரண அளிவல் மனிதன் தேவனை விட்டு பிரிக்கப்படுதல் ஆகும். இது எத்தகைய எச்சரிப்பு! ‘முதலாம் மரணம்” முடிவுhனதல்ல, என்கின்ற தத்துவத்தை ‘இரண்டாம் மரணம்” எடுத்துக்கூறுகிறது.

18. உயிர்த்தெழுதல்

திருவசனம் பொதுவான உயிர்த்தெழுதலைப்பற்றி போதிப்பதில்லை. வேத குறிப்பை கவனமாக வாசியுங்கள். யோவான் 5:29, அப்போஸ்தலர் 24:15, லூக்கா 14:14.

1கொரி 15:23 ம் வசனம் விசுவாசிகளின் உயித்தெழுதலைப்பற்றி போதிக்கிறது: ‘முதற்பலனானவர் கிறிஸ்து: பின்பு அவர் (கிறிஸ்துவின்) வருகையில் அவருடையவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.”

வெளி 20:5 ம் வசனமானது, இந்த பரிசுத்தவான்கள் கிறிஸ்துவுடன் ஆயிரம் ஆண்டுகள் ஆளுவதைக்குறிக்கிறது. 5ம் வசனமானது: மரித்த மற்றவர்கள் இந்த ஆயிரமாண்டுகள் முடியுவம்வரை உயிரடையவில்லை என்றும் போதிக்கிறது. ‘இதுவே முதலாம் உயிர்த்தெழுதல்கள்” அதாவது மெய்யாகவே இரண்டு உயிர்த்தெழுதல் உண்டென்பதை இது தெளிவுபடுத்துகின்றது.

மரித்தோரிலிருந்து எழுந்திருத்தல் பற்றி நமதாண்டவர் முதன் முறையாக மாற்கு 9:9ல் கூறியுள்ளார். சீஷர்கள் மரித்தோர் உயிர்த்தெழுதலை நம்பினார்கள். இதைக் குறித்த முறையான யூத நம்பிக்கையை பழைய ஏற்பாட்டுக்குறிப்புக்களில் காணலாம் (யோபு 19:25-27, அப் 23:8).

சத்திய மார்க்கமான கிறிஸ்தவம் ‘முதலாம் உயிர்த்தெழுதல்” பற்றிய மேலான சத்தியத்தை அறிவிக்கிறது. ஆண்டவர் இரண்டாம் வருகையில் இது இடம் பெறும் (1தொச 4:15-18).

கர்த்தர் உயிர்த்தெழுந்தார்,
செங்கடலின் தீர்ப்புக்குட்ச் சென்றார்,
தம் திரு ரத்தத்தினால் சகலத்தையும் வென்றார்!
கர்த்தர் உயித்தெழுந்தார்,
நம் பாவ விதியினைக் கடந்தார்,
மூடிய கல்லறையைத் திறந்தார்!

19. தேவ ராஜ்யம்

‘தேவராஜ்யம்” என்கிற பதம் எதின் தொடர்பாக திருவசனத்தில் கூறப்பட்டுள்ளது என்பதை நன்கு கவனித்து, தேவன் எந்த சிந்தையோடு இதை வெளிப்படுத்தியுள்ளார் என்பதை அறிந்து, பின்பு முடிவுச் செய்ய வேண்டும்.

தேவ ராஜ்யம் விண்ணுலகில் நிறுவுதல் குறித்து லூக்கா 13:28, இதைப் இப்பூமியில் நிறுவுதல் குறித்து மாற்கு 15:43: லூக்கா 17:20, 19:11 மற்றும் 21:31 காணலாம்.

இதின் சன்மார்க்கத்தைக் குறித்து ரோமர் 14:17ல் வாசிக்கிறோம். இதன் மாட்சிமையான ஆரம்பம் பொந்தக்கோஸ்தே திருநாள் ஆகும். ஆனால் இன்றைய நிலை சீர்குலைந்துள்ளது. நமதாண்டவர் இயேசு கிறிஸ்து தற்கால நிலையை முன்குறிப்பாக லூக்கா 13:20-21ல் கூறியுள்ளார்.

யோவான் 3:5ன்படி ஒருவன் இதில் பிரவேசிக்க தகுதியுள்ளவனாக வேண்டுமானால், அவன் ‘மறுபடியும் பிறக்க வேண்டும்.”

பவுல் அடிகள்: ‘தேவ ராஜ்யம்” குறித்து பிரசங்கித்தார்: அதாவது இந்த ராஜ்யத்திற்குரிய சன்மார்க்க நெறிகளை பிரசங்கித்தார். அவர், சுவிசேஷத்தை நம்பி தேவராஜ்யத்திற்கும் அதின் மகிமைக்கும் அழைக்கப்பட்ட விசுவாச மக்ளஅனைவரும், அதற்கு தகுதியாக நடந்து, அழைத்த அவரையே உயர்த்த வேண்டுமென 1தெசலோனிக்யேர் 2:12 அறிவுரைக் கூறுகிறார்.

இதின் நித்திய மாறா நிலையானது பூரண அளவில் வெளிப்பட இருக்கிறது: ‘தேவன் எல்லாவற்றிக்கும் எல்லாமாய்” அதாவது தேவனின் பரிபூரணமான குணாதிசயம் வெளிப்பட இருக்கும்புதிய, சிருஷ்டிப்பில் காணப்படும்.

நித்திய இளைப்பாறுதலானது எத்தனை சிறப்பானது! ‘இப்படி இவைகள் அழிந்துபோகிறதாயிருக்கிறபடியால், நீங்கள் எப்படிப்பட்ட பரிசுத்த நடத்தையும் தேவ பக்தியும் உள்ளவர்களாயிருக்க வேண்டும்” (2பேதுரு 3:11). நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார் (2கொரி 5:21).

கர்த்தாவே நாங்கள் ஒவ்வொருவரும் இதை அனுபவித்து உம்மைப்புகழ அருள் தாரும்!

20. நிலையற்றதா நிலையானதா எது?

தேவ இரக்கத்தின் சிறப்பைப்பற்றி
தெளிவாய், தைரியமாய் பேசும் நாம்
இது நம் ஆன்மாவை ஆட்கொள்ளாவிடில்
இலவசமான இதனால் பலன் தான் ஏது?

தேவப் பிதாவின் குமாரன் மூலமாய்
வெளியான அன்பின் மீட்பைப் போற்றும் நாம்:
தேவனுக்கே பிரியமான சாட்சியாக நடந்து,
விசுவாசத்தால் இடை நம் உடமையாக்குவோம்.

பாவிகளை ஏற்கும் பரம வாசலாம் – நம்
பாசமுள்ள இரட்சரை நாடும் நாம்:
பாழான பாவத்தால் பரிதாப நிலையில்
பாவிகளின் நேசரின் திருநாமம் நம்புவோம்.

தேவாட்டுக்குட்டியாம் திருக்குமாரன் இரத்தத்தினால்
தெய்வீக மேன்மையைப் புகழும் நாம்:
இதன் வல்லமை நம்மில் இல்லாவிடில்,
இருளான தீட்டான நிலை நீங்காதன்றோ.

வரும் மகிமையின் நன்னாளை
வரவேற்று நோக்கும் நாம்:
வருமரசர் இயேசுவை நம்பாவிடில்,
வல்லவரின் இராஜ்யத்தின் இடம்தான் ஏது?

21. பரலோக ராஜ்யம்

மனித குமாரரின் ஆட்சிக்குட்பட்டதே பரலோகராஜ்யம்.

யோவான்ஸ்நானகன் இதைக்குறித்துப் பிரசங்கித்தார் (மத்தேயு 3:2). நமதாண்டவர் இயேசு ‘அதுமுதல் இயேசு: மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கிக்கத் தொடங்கினார்.” மத்தேயு 4:17லும், பின்பு அப்போஸ்தலர்களுக்கு ‘பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கியுங்கள” மத்தேயு 10:7 லும் இதைக்குறித்துப் பிரசங்கித்தனர்.

வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட மேசியாவை இஸ்ரவேல் மக்கள் புறக்கணித்ததும், பரலோக ராஜ்யம், ‘பரலோக ராஜ்யத்தின் ரகசியம்” ஆனது (மத்தேயு 13:11). அதாவது கிறிஸ்து வெளிப்படையாக இதை ஆளவில்லை. ஆனாலும், விசுவாசம் கூறும் உறுதி மொழி என்னவென்றால், திரைக்குப் பின்னால் இருந்தபடி தேவன்தாமே எல்லாவற்றிலும் செயலாற்றி வருகிறார் என்பதாகும் (எபேசியர் 1:19-23 , 1பேதுரு 3:2).

சத்திய சுவிசேஷத்தின் விதை விதைக்கப்பட்டு அதனால் ஆன்மாக்கள் கிறிஸ்துவினிடம் சேர்க்கப்படுவதை திருவசனம் ‘பரலோகராஜ்யம்” என்றழைக்கின்றது. இதுவே இவ்வுலகில் கிறிஸ்தவ மக்களின் நிலையாகும்.