Home செய்திகள் ஸ்திரியின் வித்து

ஸ்திரியின் வித்து

2179
0

ஸ்திரியின் வித்து

ஆதாமும் ஏவாளும் பிசாசாகிய சர்ப்பத்தினால் வஞ்சிக்கப்பட்டு ஆண்டவருடைய சந்நிதியிலிருந்து விலகித்தங்களை ஒளித்துக் கொண்டபோது;

முன்னுரை: ஆதி 3:14-15

14. அப்பொழுது தேவனாகிய கர்த்தர் சர்ப்பத்தைப் பார்த்து: நீ இதைச் செய்தபடியால் சகல நாட்டு மிருகங்களிலும் சகல காட்டு மிருகங்களிலும் சபிக்கப்பட்டிருப்பாய், நீ உன் வயிற்றினால் நகர்ந்து, உயிரோடிருக்கும் நாளெல்லாம் மண்ணைத் தின்பாய்.

15. உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன். அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிக்காலை நசுக்குவாய் என்றார்.

நிறைவேறுதல்: முதன் முதலாக பிசாவை ஜெயிக்க ஒருவர் பிறப்பார் என்ற முன்னுரைப்பு கர்த்தரால் இங்கே உரைக்கப்பட்டது. அதே சமயத்தில் அப்படிப் பிறப்பவர் மனித சிருஷ்டிப்பின் முறைப்படி ஓர் ஆணின் சேர்கையினால் உண்டாகாமல் பெண்ணின் வித்தினால் மட்டும் பிறப்பார் என்று கூறுகிறார். இயேசு கிறிஸ்து மட்டும்தான் வேதாகமத்தில் ஸ்திரீயின் வித்து என்று அழைக்கப்படுகிறார். ஏனென்றால் அவர் தேவ ஆவியினால் உருவாக்கப்பட்டவர்.

பரிசுத்த வேதாகமத்தில் முழுவதும் ஆண்களுடைய வம்ச வரலாறுதான்! கொடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்: ஈசாக்கு யாக்கோபை பெற்றான்… என்று. ஆனால் இயேசு கிறிஸ்து மட்டும் இதற்கு விதிவிலக்காக ‘அவள் (மரியாள்) பரிசுத்தாவியினாலே கர்ப்பவதியானாள்” (மத் 1:18) என்று கூறப்பட்டிருக்கிறது.

ஸ்திரியின் வித்து – இயேசு கிறிஸ்து

சர்ப்பத்தின் வித்து (சாத்தானின் வித்து) – அந்திக் கிறிஸ்து

தேவதூதன் மரியாளுக்கத் தரிசனமாகி அவளுக்கு பிரதியுத்தரமாக, ‘பரிசுத்தாவி உன்மேல் வரும்: உன்னதமானவருடைய பலன் உன்மேல் நிழலிடும்: ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் எனப்படும்” என்றான் (லூக்கா 1:35).

இவ்விதமாக மனிதன் பாவம் செய்த உடனே அவனைப் பாவத்திலிருந்து மிட்க ஆண்டவர் மனித அவதாரம் எடுக்கத் தீர்மானித்தார்.

ஸ்திரியின் வித்து என்பதின் மூலம் ஆரம்பத்திலேயே மிட்பரின் கன்னிப் பிறப்பை ஆண்டவர் வெளிப்படுத்தியிருக்கிறார். சர்வவல்லமையுள்ள நமது ஆண்டவரோ நடக்கவிருக்கும் காரியங்களை ஆயிரமாயிரம் வருடங்களுக்கு முன்னதாகவே தமது தாசகர்கள்மூலம் முன்னறிவித்து ஏற்ற காலத்தில் அவைகளை வார்த்தைக்கு வார்த்தை நிறைவேற்றி வருகிறார்.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பிறப்பு முதல் அவருடைய ஒவ்வொரு நடத்தையையும் அவர் பிறப்பதற்கு ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பே கர்த்தராலும் அதன்பின் பல தீர்க்கதரிசிகளாலும் வெவ்வேறு காலங்களிலே முன்னறிவிக்கப்பட்டு வந்து கடைசியில் இயேசு கிறிஸ்துவில் அவைகள் முழுவதும் வார்த்தைக்கு வார்த்தை நிறைவேறித் தீர்ந்தன.

இதே விதமாக சர்ப்பத்துக்குக் கொடுக்கப்பட்ட சாபமும் கர்த்தரின் வாக்கின்படியே நிறைவேறியது:

உலகம் உண்டாவதற்கு முன்பே இருந்தவர்

முன்னுரை: நீதி 8:22-30

‘கர்த்தர் தமது கிரியைகளுக்குமுன் பூர்வமுதல் என்னைத் தமது வழியின் ஆதியாகக் கொண்டிருந்தார். பூமி உண்டாகுமுன்னும், ஆதிமுதற்கொண்டும் அநாதியாய் நான் அபிஷேகம் பண்ணப்பட்டேன். ஆழங்களும், ஜலம் புரண்டுவரும் ஊற்றுகளும் உண்டாகுமுன்னே நான் ஜநிப்பிக்கப்பட்டேன். மலைகள் நிலைபெறுவதற்கு முன்னும், குன்றுகள் உண்டாவதற்கு முன்னும், அவர் பூமியையும் அதின் வெளிகளையும், பூமியிலுள்ள மண்ணின் திரள்களையும் உண்டாக்குமுன்னும் நான் ஜநிப்பிக்கப்பட்டேன். அவர் வானங்களைப் படைக்கையில் நான் அங்கே இருந்தேன்@ அவர் சமுத்திர விலாசத்தை வட்டணிக்கையிலும், உயரத்தில் மேகங்களை ஸ்தாபித்து, சமுத்திரத்தின் ஊற்றுகளை அடைத்து வைக்கையிலும், சமுத்திர ஜலம் தன் கரையை விட்டு மீறாதபடிக்கு அதற்கு எல்லையைக் கட்டளையிட்டு, பூமியின் அஸ்திபாரங்களை நிலைப்படுத்துகையிலும், நான் அவர் அருகே செல்லப்பிள்ளையாயிருந்தேன்@ நித்தம் அவருடைய மனமகிழ்ச்சியாயிருந்தது, எப்பொழுதும் அவர் சமுகத்தில் களிகூர்ந்தேன்”

நிறைவேறுதல் : யோவான் 17:5

இயேசு கூறினார் : ‘பிதாவே உலகம் உண்டாகிறதற்கு முன்னே உம்மிடத்தில் எனக்கு உண்டாயிருந்த மகிமையினாலே இப்பொழுது நீர் என்னை உம்மிடத்திலே மகிமைப்படுத்தும்”

யோவான் 1:1-3

ஆதியிலே வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது: அந்த வார்த்தை வேனயாயிருந்தது. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். சகலமும் அவர்மூலமாய் உண்மாயிற்று: உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.

மத்தேயு 3:17

இயேசு ஞானஸ்நானம் பெற்று, ஜலத்திலிருந்து கதையேறினவுடனே வானத்திலிருந்து ஒரு சத்தமுண்டாகி, ‘இவர் என்னுடைய நேசகுமாரன் இவரில் பிரியமாயிருக்கிறேன்” என்று உரைத்தது. இம்மூன்று வேதபாகங்களிலிருந்தும் உலகம் உண்மாக்கப்படுவதற்கு முன்பே இயேசு பிதாவோடே இருதார் என்று இயேசுவும் யோவானும் சாட்சி கூறினர். தேவன் ‘இவர் என்னுடைய நேச குமாரன்” என்று சாட்சி கொடுத்தார் என்று காண்கிறோம்.