Home செய்திகள் நித்திய ஜீவன்

நித்திய ஜீவன்

2858
0

நித்திய ஜீவன்

எங்குமுள்ள மனிதர்கள் சிருஷ்டி கர்த்தராகிய கடவுளை அறிந்துகொள்ளவும் அவரின் அருளைப்பெறவும் வாஞ்சிக்கின்றனர். இந்த விருப்பத்தினடியாய்த் தோன்றினவைகளே உலக சமயங்கள் அனைத்தும். மனிதன் தேவனைத் தேடும் முயற்சிகள் இவைகள். சமயச்சடங்குள், ஆசாரங்கள், பக்தி முயற்சிகள், தொழுகை, புண்ணிய யாத்திரைகள், பலிகள். ஆனால் இவைகளின்மூலம் மக்கள் தாங்கள் விரும்பும் பலனை எட்டிவிடுவதில்லை. மனிதனின் எந்தப் புண்ணியச் செயல்களும் அவனை இறைவனுக்கு ஏற்புடையவானக்குகிறதில்லை. பாவத்தினால் அவன் பரிசுத்த கடவுளுக்குத் தூரமாய்ப் போனவன். அவரை நெருங்குவதற்கும் அருகதையற்றவன்.

மனிதன் தன்னுடைய அறிவைக் கொண்டு தேவனை அறிந்துகொள்ள முடிவதில்லை. ஏனெனில் அவன் மனமும் இருளடைந்து போனது. தேவன் தம்மைக் குறித்த அறிவை பலவிதங்களில் தெரிவித்திருக்கிறார். படைக்கப்பட்டபடைப்புகளின்மூலம் காணப்படாத கடவுளின் ஞானம், நித்திய வல்லமை, தெய்வத்தன்மை ஆகியவைத் தெளிவாய்க் காணப்படும் (ரோமர்1:20). வானங்கள் இறைவனின் மகிமையை வெளிப்படுத்துகிறது. ஆகாய விரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது (சங் 19:1). மனுஷன் அவைகளைக் குறித்துச் சிந்திப்பதுமில்லை: உணருவதுமில்லை.

தேவனைக்குறித்து அறியப்படுவது மனுஷர்களுக்குள் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. அவர்கள் தேவனையறிந்தும் அவரை தேவனென்று மகிமைப்படுத்தாமலும் ஸ்தோத்தரியாமலுமிருந்து தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள். உணர்வில்லாத அவர்கள் இருதயம் இருளடைந்தது. தங்களை ஞானிகள் என்று சொல்லிலும் பயித்தியக்காரரானார்கள் (ரோமர் 1:21-22). தேவன் ஆவியாயிருக்குpறார். தேவனுடைய ஆவியேயன்றி ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டான். இவ்வுலகத்தின் ஞானம் தேவனுக்கு முன்பாகப் பைத்தியமாயிருக்குpறது. அப்படியே, ஞானிகளை அவர்களுடைய தந்திரத்திலே பிடிக்கிறாரென்றும், ஞானிகளுடைய சிந்தனைகள் வீணாயிருக்கிறதென்றும் கர்த்தர் அறிந்திருக்கிறார் (1கொரி 3: 19-20). உலகமானது சுயஞானத்தினாலே தேவனை அறியாதிருக்கையில் தேவன் இந்தக் கடைசிகாலத்தில் தம்முடைய குமாரனாகிய இயேசுவின்மூலம் நமக்குத் திருவுளம் பற்றினார் (எபி 1:1-2).

இயேசு ஒரு சமயத்தை ஸ்தாபிக்க வந்தவரல்ல. இவரே தேவனை நமக்கு வெளிப்படுத்த வந்தவர். பாவியாகிய மனிதனைத் தேடி வந்த இறைமகன். மெய்யான தேவனுமானவர். சத்தியமுள்ளவரை நாம் அறிந்துகொள்வதற்குத் தேவனுடைய குமாரன் வந்து நமக்குப் புத்தியைத் தந்திருக்கிறார் என்று அறிவோம் (1யோவான் 5:29). ‘தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரே பேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்” (யேவாhன் 1:18). இயேசு கிறிஸ்து தாமே யூதர்களிடம் சொல்லியிருப்புதைக் கவனிப்பீர்: ‘நீங்கள் சத்தியமுள்ளவராகிய என் பிதாவை அறியாதிருக்கிறீர்கள்: அவரே என்னை அனுப்பினார். நான் அவரை அறிந்திருக்கிறேன்” (யோவான் 7: 28:29). ‘தேவனிடத்திலிருந்து வந்தவரே தவிர வேறொருவரும் பிதாவைக் கண்டதில்லை. இவரே பிதாவைக் கண்டவர். நான் உயர்விலிருந்துண்டானவர். நான் தேவனிடத்திலிருந்து வந்திருக்கிறேன். அவரே என்னை அனுப்பினார். நீங்கள் என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிவீர்கள்” (யோவான் 8:19,23,42). ‘பிதாவை எங்களுக்கு காண்பியும், அது எங்களுக்குப் போதும் என்று கேட்ட பிலிப்புவிடம் இயேசு, பிலிப்புவே நீ இன்னும் என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்” என்றார். (யோவான் 14:9). சீஷர்களிடம் அவர், ‘நானே வழி, சத்தியம்,ஜீவன் என்னாலேயல்லாமல் ஒருவனும்பிதாவினிடத்தில் வரான். என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிந்திருப்பீர்கள் என்று கூறுகிறார்” (யோவான் 14:6-7). இவ்வாறு அநேக உறுதி வாக்கினால் இயேசு தம்மைக்குறித்து சாட்சியாக அறிவித்திருக்கிறார். இவ்வளவு தெளிவாகவும் ஆணித்தரமாகவும் தேவனையறியும் வழியைக் குறித்துத் தெரிவித்துள்ளவர் வேறு யாரேனும் உண்டா? இரட்சிப்பின் வழியை இவ்வளவு நிச்சயத்துடன் எளிதாக அறிந்து கொள்ளும் விதமாயும் காட்டும் நூல் சத்தில வேதமேயல்லாமல் வேறு ஆகமம் ஏதேனும் உண்டா? இவ்வாறிருந்தும் ஏன் மனுமக்களில் அநேகர் விசுவாசிப்பதில்லை. நம்மில் எத்தனைபேர் இந்த வழியை ஏற்றுக்கொண்டோம்? இயேசுவைப் பற்றிய சுவிசேஷ நூல்களைப் படிப்புதின் மூலம் கடவுள் அமைத்துள்ள இரட்சிப்பின் வழியை நாம் அறிந்து கொள்ளவேண்டும்.

இயேசு கிறிஸ்துவை ஒரு குருவாகவோ, இலட்சிய புருஷராகவோ, தியாகமூர்த்தியாகவோ ஒருவர் அங்கீகரிப்பதினால் அவருக்கு யாதொரு பயனும் இல்லை. ஆனால் இயேசு உலகில் மனிதனாக வந்த தேவனுடைய குமாரன் என்று ஒருவர் விசுவாசிக்கவேண்டும். இவரே தன்னுடைய பாவங்கள் அனைத்தையும் நீக்கும்படியாய்ச் சிலுவையிலே பலியானவர் என்பதையும் நம்பவேண்டும். பாங்குளை விட்டு மனந்திரும்பி, இயேசு தன்னுடைய இரட்சகராகவும் ஆண்டவருமாகவும் ஏற்க வேண்டும். அப்பொழுதுதான் அவர் பாவமன்னிப்பைப் பெற்று தேவனோடு ஒப்புரவாக்கப்படுகின்றார். ஒன்றான மெய்த் தேவனையும் அவர் அனுப்பின இயேசுகிறிஸ்துவையும் அறிந்துகொள்ளுகிறான். இதுவே நித்திய ஜீவன் (யோவான் 17:3). குமாரனையுடையவன் ஜீவனையுடையவன் (1யோவான் 5:12).
இந்த அறிவுக்கு ஒப்பானது வேறொன்றுமில்லை. இது அறிவுமட்டுமல்ல. இது மேன்மையான அனுபவம். இதைக்குறித்தே ஒருவர் மேன்மை பாராட்டலாம். ‘பூமியிலே கிருபையையும் நியாயத்தையும், நீதியையும் செய்கிற கர்த்தர் நான் என்று என்னை அறிந்து உணர்ந்திருக்கிறதைக் குறித்தே மேன்மைபாராட்டக்கடவன் என்று கர்த்தர் சொல்லுகிறார் (எரேமியா 9:24). பரிசுத்த பவுல் உலகப்பிரகாரமாக அநேக காரியங்களைக் குறித்து மேன்மைபாராட்டக்கூடும். ஆனாலும் அவர் இயேசு கிறிஸ்துவை அறிந்து கொண்டபின் மற்ற உயர்வுகளெல்லாம் அவருக்கு உயர்வாகத் தெரியவில்லை. ‘என் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டடென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன்” என்றார் அவன் (பிலிப்பியர் 3:8).

கர்த்தரை அறிந்து கொள்ளும் போதுதான் நாம் உண்மையான விடுதலையடைகிறோம். ‘பாவம் செய்கிறவன் பாவத்துக்கு அடிமை. குமாரன் உங்களை விடுதலையாக்கினால் நீங்கள் மெய்யாகவே விடுதலையாவீர்கள். நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே சீஷராயிருப்பீர்கள். சத்தியத்தை அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” என்றார் இயேசு (யோவன் 8:31,32,34). இயேசுவை தங்கள் இரட்சகராகவும் ஆண்டவராகவும் அறிந்துகொள்ளுபவர்கள் தங்களை கட்டியிருக்கும் பாவக்கட்டுகளிலிருந்தும் அடிமைப்படுத்தும் தீய பழக்கங்களிலிருந்தும் விடுதலை பெறுகின்றனர். இயேசு அவர்களை விடுவிக்கிறார்.

பிதாவை அறிந்திருக்கிறவர்கள் பலவான்களாகவும் பொல்லாங்களை ஜெயிக்கிறவர்களாகவும் இருக்கிறார்கள். இவரை அறிந்திருக்கிறேன் என்று சொல்லுகிறவர்கள் அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறார்கள் (யேவான் 2:13-14). நாம் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தின்மேல் விசுவாசமாயிருந்து அவர் நமக்குக் கட்டளையிட்டபடி ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்பதை அவருடைய கற்பனை. அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது. அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து அவரை அறிந்திருக்கிறான்: அன்பில்லாதவன் தேவனை அறியான். தேவன் அன்பாகவே இருக்கிறார்.