Home கட்டுரைகள் புறாவும் ஆட்டுக்குட்டியும்

புறாவும் ஆட்டுக்குட்டியும்

1060
0

புறாவும் ஆட்டுக்குட்டியும்

‘இயேசு ஞானஸ்நானம் பெற்று, ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, இதோ, வானம் அவருக்குத் திறக்கப்பட்டது@ தேவ ஆவி புறாவைப்போல இறங்கி, தம்மேல் வருகிறதைக் கண்டார்.” (மத்தேயு 3:16)

இதோ ஒரு அழகிய சொற்சித்திரம் – தெய்வ ஆவியாகிய வெண்புறா வானிலிருந்து மெல்ல இறங்கி தேவ ஆட்டுக்குட்டியின் மீது அமர்கிறது என இயேசுவானவர் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டதைக் காண்கிறோம். இயேசுவானவர் தம்மிடம் வருவதை யோவான் ஸ்நான் கண்டபோது, “இதோ உலகத்தின் பாவத்தைச் சுமந்துத் தீர்க்கிற தேவாட்டுக்குட்டி” என்று கூறினார். பின்னர் யோவானால் ஞானஸ்நானம் பெற்றுக்கரையேறினபோது பரிசுத்த ஆவியானவர் அவர்மீது இறங்கியதைக் குறித்து யோவான் ‘ஆவியானவர் புறாவைப்போல வானத்திலிருந்து இறங்கி இவர்மேல் தங்கினதைக் கண்டேன்” எனச் சாட்சி பகர்ந்தார் (யோவான் 1:29,32).

தாழ்மையே உருவான தெய்வம்

இந்த அழகிய சித்திரமானது நமது சிந்தனையைத் தூண்டுகதாக இருக்கிறதல்லவா? பரலோகத்திலிருந்து புறாவானவர் இறங்கி வந்து ஆட்டுக்கட்டியானவர்மீது தங்கினார் என்பது எத்தனை அதிசயம்! தேவனால் படைக்கபட்ட உயிரினங்களுள் ஆட்டுக்குட்டியும் புறாவுமே சாந்தகுணம் உள்ளவை என்றறிகிறோம். பணிவிற்கும் கீழ்ப்படிதலுக்கும் ஆட்டுக்குட்டி ஓர் எடுத்துக்காட்டாகும். புறா சமாதானத்தின் அடையாளச் சின்னமாகும். இதோ போல தெய்வத்தின் திவ்யவுள்ளமானதும் தாழ்மையால் நிரம்பியுள்ளது. நித்திய பிதா தமது திருக்குமரன் மூலம் இவ்வுகிற்குத் தம்மை வெளிப்படுத்தியபோது அவர் ஆட்டுக்குட்டி என்று அழைக்கப்பட்டார். பரிசுத்த ஆவியானவர் இவ்வுலகிற்கு வந்தபோது இயேசுவாவர் மிது புறாவைப்போல் இறங்கினார். எனவே தேவனோடு நாம் நடந்து செல்லுகையில் தாழ்மையோடிருப்பதன் அவசியம் யாதெனில் தேவன் நம்மைவிட மிகப் பெரியர். வல்லமையுடையவர் என்பதல்ல. அவரே தாழ்மையின் திருவுருவாகத் திகழ்ந்தார் என்பதேயாம் (மத்தேயு 11:29).

இந்நிகழ்ச்சியிலிருந்து நாம் அறிந்துகொள்வது யாது? கர்த்தராகிய இயேசுவானவர் ஆட்டுக்குட்டியைப்போல சாந்தகுணமுள்ளவராய் இருந்தமையாலேயே புறாவைப்போன்ற பரிசுத்த ஆவியானவர் அவர்மீது இறங்க முடிந்தது. அவர் தாழ்மையும், பணிவும், கீழ்ப்படிதலும் உள்ளவராய்த் தம்மை முற்றிலும் பிதாவுக்கு ஒப்புக்கொடுத்திருந்தார். இதற்கு மாறாக, அவர் சாந்தகுணமற்று, ஆவியில் பணிவில்லாதவராய் இருந்திருந்தாரெனில் புறா அவர்மீது வந்திறங்காமல் பறந்து பறந்தோடியிருக்குமல்லவா?

நம்மீது பரிசுத்த ஆவியானவர் வந்திறங்கித் தரித்திருக்க விரும்பினால் நாமும் ஆவியில் எளிமையுள்ளர்களும், சாந்தகுணம் உள்ளவர்களுமாய்த் திகழவேண்டுமல்லவா? நாம் ஆட்டுக்குட்டியைப்போல் விளங்க ஒப்புக்கொண்டால் மட்டுமே புறாவானவர் நம்மீது வந்திறங்கித் தரித்திருக்கமுடியும். ஆவியின் நற்கனிகளால் புறா நம்மை நிரப்ப விரும்புகிறது. அவை அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்ம், இச்சையடக்கம்” என்பனவாம் (கலா 5:22-23). இவைகளை நாம் பெறவேண்டுமானால் முதலில் செய்யவேண்டியது இந்த உலகத்தின் இரட்சகர் இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கவேண்டும்.

தேவ ஆட்டுக்குட்டியின் இயல்பு

பரிசுத்த ஆவியானவர் நம்மிடையே வந்து தங்கியிருக்க வேண்டுமென நாம் வாஞ்சிப்போமாயின் நாம் ஆட்டுக்குட்டியானவரைப்போல் அவர் சுட்டிக்காட்டும் ஒவ்வொரு காரியத்திலும் நடந்துகொள்ள வேண்டும். கல்வாரிப் பாதையில் சிலுவை சுமந்தவராய் ஆட்டுக்குட்டியானவர் செல்லுவதை நாம் உற்றுநோக்குவோமாயின் நமது உள்ளங்களைத் தெளிவாகக் காணலாம். அவருக்கு நாம் எவ்வளவு முரண்பட்டவர்ளாய் வாழ்கிறோம் என்பதனை நாம் அறியும்போது நம்முள் தாழ்மை உருவாவது திண்ணம். ஆனால் ஆட்டுக்குட்டியானவர் ஏற்றுள்ள இடத்தை நாம் எடுத்துக்கொள்ள எத்தனை முறைகள் மனமில்லாதிருக்கிறோம்? என்ன அவலம்!

இதோ, ஆண்டவரை ஓர் ஆட்டுக்குட்டியாக உருவகித்துச் சற்றே உற்றுநோக்குவோம். அவர் ஓர் எளிய ஆட்டுக்குட்டியைப் போன்றவர். ஆட்டுக்குட்டினானது தன்னில் தானே வலிமையற்றது. தனக்கென்று யாதொரு திட்டமும் வகுக்க இயலாதது. அதுபோல் கர்த்தராகிய இயேசுவானவர் நமக்காகத் தம்மை வெறுமையாக்கினார்: ஆம், அவர் ஓர் எளிய ஆட்டுக் குட்டியானார். அவர் தமக்கென்று வலிமையும் கூரறிவும் கொண்டவரல்லர். துன்பத்திலிருந்து தப்பித்துக் கொள்ள அவர் யாதொருவகையும் தேடவில்லை. ஏனெனில் அவர் எப்பொழுதும் தமது பிதாவின்மீதே சார்ந்திருந்தார். ஆம், பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ அதையேயன்றுp வேறொன்றையும் தாமாய் செய்ய மாட்டார் (யோவான் 5:19). ஆனால் நாமோ எம் சுயபலத்தைச் சார்ந்து வாழ்கிறோம். தாழ்மையான ஆட்டுக்குட்டிகளாக மாற நாம் விரும்பாவிடில் தேவ ஆவியாகிய புறாவானவர் நம்மீது வந்திறங்கித் தங்குவது எங்ஙனம்?

மயிர் கத்தரிக்கப்பட்ட ஆட்டுக்குட்டி

ஆட்டுக்குட்டிக்கு மயிர் கத்தரிக்கப்படும்பொழுது அதன் மேலுள்ள கம்பளி ரோமம் யாவும் களையப்படுகிறது. கர்த்தராகிய இயேசுவானவருக்கு நிகழ்ந்ததும் இதுவேயாம். அவர் தமது எல்லா உரிமைகளையும், நற்பெயரையும், தமக்குரிய சுதந்தரத்தையும் இழந்துவிட ஆயத்தமாயிருந்தார். மயிர் கத்தரிக்கப்படும்போது ஆட்டுக்குட்டி எவ்விதமான எதிர்ப்பும் காட்டுவதில்லை. அவ்வாறே தேவ ஆட்டுக்கட்டியும் தமது வாயைத் திறவாதிருந்தார். ஆம், ‘அவர் வையப்படும்போது பதில் வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும் இருந்தார்” (1பேதுரு 1:23). ‘நீங்கள் எனக்கு இதைச் செய்யக் கூடாதே? நான் தேவகுமாரன்னெ;று நீங்கள் அறியீர்களா?” என அவர் ஒருபோதும் கூறியதில்லை. நாமோவென்றால் நமது உரிமைகளை விட்டுக்கொடுக்க எத்தனை முறைகள் மனமில்லாது இருந்திருக்கிறோம்?

அவர் மறுமொழி கூறாதவர்

கர்த்தராகிய இயேசுவானர் மௌமான ஆட்டுக்குட்டியாகவும் திகழ்ந்தார். ‘தன்னை மயிர்க் கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சந்தமிடாதிருக்கிற ஆட்டைப்போல அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார்” (ஏசாயா 53:7). மக்கள் அவரைக் குறித்து அவதூறு பேசி, அவர் கொல்லப்படவேண்டுமெனக் கூச்சலிட்டபோது அவர் மறுமொழி ஒன்றும் கூறவில்லை. அவர் தமக்காக வழக்காடவில்லை. தாம் செய்தது ஒன்றையும் குறித்து விளக்கம் கூறவும் இல்லை. ஆனால் நாம் எவ்வாறு நடந்துகொள்ளுகிறோம்? பிறர் நம்மைக் குறித்து அன்ப்ற சொற்களையும், பொய்களையும் கூறும்போது நாம் மௌனமாயிருக்கிறோமா? இல்லை: நமது குரலை உயர்த்தி சினத்தோடு நாம் எதிர்த்து வாதாடுகிறோம்: நாம் செய்தது சரி என நாம் காட்டிக்கொள்ள முற்படுகிறோம். நமது தவறுகளை ஒத்துக்கொள்ளாமல் நாம் குற்றமற்றவர்கள் எனக் காட்டிக்கொள்ள விரும்புகிறோம்.

அவர் தீய எண்ணங் கொள்ளாதவர்

கர்த்தராகிய இயேசுவானர் மாசற்ற ஆட்டுக்குட்டியாகவும் விளங்கினார். அவர் தீய சொற்கள் எவற்றையும் பேசவில்லை. அவரைச் சிலுவை மரணத்திற்கு அனுப்பிய மனிதர்கள் பேரில் அவர் இதயத்தில் அன்பைத் தவிர வேறெந்த உணர்ச்சியும் இல்லை. அவர்களுக்குப் பதிலுக்கும் தீமை செய்ய விரும்பாமலும் அவர்களைக் குறித்து கசப்பான எண்ணங்கள் கொள்ளாமலும் இருந்தது மட்டுமல்ல, நமது கரங்களில் அவர்கள் ஆணிகளை அடித்துக் கொண்டிருக்கும்போதே அவர்களை மன்னிக்கவும் செய்தார்: பிதாவினிடத்தில் அவர்களை மன்னிக்குமாறு வேண்டிக்கொண்டார். இவ்வாறு நமக்காக அவர் தாழ்மையோடு துன்பத்தை அனுபவித்தார். ஆனால் நாம் யாது செய்கிறோம்? கர்த்தராகிய இயேசுவானரைப்போல் நாம் துன்பப்படாவி;ட்டாலும் நாம் பிறரைக் குறித்து எவ்வளவு தீய எண்ணங்களும் கசப்பும் கொள்ளுகிறோம்? நமது இதயங்கள் கறைப்பட்டிருக்கின்றன.

யூதர்கள் ஆட்டுக்குட்டிகளை ஏன் பலியிட்டனர்? அவைகள் சாந்த குணமும், கீழ்ப்படிதலுமுள்ள மிருகங்களாக இருந்ததாலோ? அல்லவே! ஆட்டுக்குட்டியானது ஒரு மனிதனுக்குப் பதிலாகப் பலியிடப்பட்டது. ஆட்டுக்குட்டி கொல்லப்பட்டு அதன் இரத்தமானது பாவ நிவாரணத்துக்கென பலிபீடத்தில் தெளிக்கப்பட்டது. இதனாலேயே கர்த்தராகிய இயேசுவானவர் பலியிடப்படும் ஆட்டுக்குட்டியாகத் தம்மை ஒப்புக்கொடுத்தார். அவர் நமக்குப் பதிலாகச் சிலுவையில் மரணமடைந்து நம் பாவ நிவாரண பலியானார். ஆம், கிறிஸ்துதாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார் (1பேதுரு 2:24). அவர் நமது பாவங்களை மன்னித்து நம்மைத் தூய்மையாக்கும்படி சிலுவை மரத்தில் மரித்தார். நாம் நமது பாவங்களை விட்டு மனந்திரும்பினால் அல்லவா இந்த மன்னிப்பைப் பெறமுடியும்?