Home செய்திகள் மனந்திரும்பாதவர்கள்

மனந்திரும்பாதவர்கள்

2686
0

மனந்திரும்பாதவர்கள்

‘கர்த்தரைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள், அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள்.” ஏசாயா 55:6

‘இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார்” லூக்கா 19:10

இது வேதவசனம் எல்லாவற்றிலும் அதிக மதுரமான வசனம். இந்தச் சிறு வசனத்திலே கிறிஸ்துவானவர் உலகத்துக்குள் ஏன் வந்தார் என்று சொல்லப்படுகிறது. ஒரு நோக்கத்தோடு வந்தார்: ஒரு வேலையைச் செய்ய வந்தார். இச்சிறு வசனத்திலே அந்த நோக்கமும் வேலையும் சொல்லப்படுகிறது. உலகத்தை நியாயத்தீர்ப்புக்குள்ளாக்க அல்ல, உலகத்தை இரட்சிகக்கும்படிக்கே வந்தார்.
நீதிமான் இரட்சிக்கப்படுவது அரிதானால் பாவியும் துன்மார்க்கனும் எங்கே நிற்பார்கள்? பாவியே உனக்கு என்ன நேரிடப்போகிறது? எப்படித் தப்பப்போகிறாய்? நீ எங்கே இருக்கிறாய்? நீ உலகத்திலே தேவனற்றவனும் நம்பிக்கையற்றவனுமாய் இருப்பது உண்மையோ? நீ சடுதியாய் வியாதிகண்டு மரித்துப்போனால், உன் ஆத்துமாவுக்கு என்ன நேரிடும் என்று எப்போதாவது நினைத்துப்பார்த்தாயா? பாவிக்கு தேவன் இல்லை, நம்பிக்கை இல்லை என்று வேதத்தில் வாசிக்கிறேன். நீ இரட்சிக்கப்படாவிட்டால் என்ன நியாயம் சொல்வாய்? அது தேவனுடைய குற்றம் என்று சொல்வாயோ? அவர் உன்னை இரட்சிக்க மிக வாஞ்சையாய் இருக்கிறார். நீ இரட்சிக்கப்படவிரும்பினால் இரட்சிக்கப்படக்கூடும் என்று இன்று உனக்குச் சொல்லுகிறேன். மரணத்தை விட்டு ஜீவனில் பிரவேசிக்க நீ உண்மையால் விரும்பினால், நித்திய ஜீவனுக்குச் சுதந்திரவாளியாய் வர விரும்பினால், அல்லது நீ தேவனுடைய பிள்ளையாய் வர விரும்பினால் தேவனுடைய இராஜ்யத்தைத் தேடும்படி இந்த நிமிடமே தீர்மானம் செய். நீ தேவனுடைய இராஜ்யத்தைத் தேடினால் நீ அதைக் கண்டுபிடிப்பாய் என்று இந்த வேதத்தின் சத்தியத்தைக்கொண்டு உனக்குச் சொல்கிறேன். தன் முழு இருதயத்தோடும் கிறிஸ்துவைத் தேடின ஒருவனாவது அவரைக் கண்டுபிடியாதிருப்பதில்லை. ஒருவன் இந்த காரியத்தைச் செய்யத் துவங்கி அதைச் செய்ய முடியாமல் போனதாக நான் ஒருபோதும் கேள்விப்பட்டதில்லை.

உன் இருதயம் வரவரக் கடினமாகிறது. இரவு வர வர இருளாகிறது. ஒருநாள் மரணநிழல் உன்னைச் சூழ்ந்துகொள்ளும். என் சிநேகிதனே, எங்கே இருக்கிறாய்? திரும்பவும் பார். அதற்கு மேலே றேறொரு பிரேதக்கல் இருக்கிறது. அது ஒரு சிறு பிள்ளையின் பிரேதக் குழி. அது ஒருவேளை நீ மெய்யாய் ஆசைப்பட்டு நேசித்த ஒரு பெண் பிள்ளை, அல்லது ஆண்பிள்ளை. அந்தப் பிள்ளை மரித்தபோது என் அன்பான பிள்ளையே மோட்சத்தில் சந்திப்பேன் என்று நீ தேவனுக்கு வாக்குப்பண்ணவி;ல்லையா? வாக்கை நிறைவேற்றினாயா? நினைத்துப்பார். இன்னும் தேவனுக்கு விரோதமாய்ப் போராடுகிறாயா? உன் இருதயத்தை பின்னும் கடினப்படுத்துகிறாயா? ஐந்து வருடத்துக்குமுன் நீ கேட்ட, உன்னை எழுப்பிவிடத் தக்க பிரசங்கங்கள் இப்பொழுது உன்னை உணர்த்துகிறதா? இல்லையா? இரட்சிப்பை ஏன் தாமதம் பண்ணுகிறீர்கள்? ஆண்டவர் கிறிஸ்து உன் வாசலில் நின்று கதவைத் தட்டுவது உன் காதுகளுக்கு கேட்கவில்லையா? அல்லது கேட்டும் அலட்சியம் செய்கிறாயா? ‘இதோ, வாசற்படியில் நின்று தட்டுகிறேன்@ ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்” (வெளி; 3:20) ,’இப்போது நீர் போகலாம்: எனக்குச் சமயமானபோது உம்மை அழைப்பிப்பேன்” என்று கர்த்தராகிய இயேசுவுக்கு இன்று ஏன் சொல்லுகிறாய்? இன்று ஏன் அவரை உள்ளே ஏற்றுக்கொள்ளாய்? உன் இருதயத்தைத் திறந்து மகிமையின் இராஜானே, உள்ளே பிரவேசியும் என்று சொல்… அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள். இதுவே உன் வாழ்வின் நிச்சயம்!!!

ஆண்டவர், ஆயக்காரனுடன் விருந்துக்குப் போனார். அவர் அங்கே இருக்கிறபொழுது பரிசேயர் முறுமுறுத்துக் குற்றம் சொன்னார்கள். இந்த மனிதன் பாவிகளை ஏற்றுக்கொள்கிறான் என்றார்கள். இப்படிப்பரிசேயர் குறைசொல்லுகிறபொழுதுதான் மேலேவாசித்த முகவுரை வாக்கியத்தை நமது ஆண்டவர் சொன்னார். அவர் சொன்னது எப்படி இருக்கிறதென்றால், நான் சகேயுவினிடத்தில் வந்தது அவனுக்கு வருத்தத்தை அல்லது விசனத்தை உண்டுபண்ண அல்ல, அவனை இரட்சித்து ஆசீவதிக்கவே வந்தேன். ‘இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார்” என்றார்.