Home செய்திகள் கடவுளை அறிய முடியுமா?

கடவுளை அறிய முடியுமா?

2711
0

கடவுளை அறிய முடியுமா?

ஆதியில் கடவுள் … என வேதாகமம் கூறுகிறது (ஆதி 1:1). இவ்வாறு ஆரம்பமாகும் திருமறை தனது ஏடுகள் ஒவ்வொன்றிலும் கடவுளைப்பற்றிக் கூறிக்கொண்டே வருகிறது. கடவுளின் தன்மையை நமக்கு விளக்கி வெளிப்படுத்துகிறது. திருமறையின் வாயிலாகக் கடவுள்தாடே நம்மோடு பேசுகிறார் என்றும், தமது பண்புகளை நமக்கு வெளிப்படுத்தி வருகிறார் என்றும் கூறுவது மிகையாகாது. சிலர் கடவுள் இல்லை எனக் கூறுவர். திருமறையோ நாத்திகத்தை மதிகேடு எனக் கண்டிக்கிறது (சங் 14:1). பெரும்பாலும் கடவுள் ஒருவர் இருக்கவேண்டும் எனக் கருதிமத்திரம் ஓதவதிலும், பலியிடுவதிலும், ஏனைய மத நிகழ்ச்சிகளிலும் பங்கு பெறுவதுண்டு.

அனைத்துலக மக்கள் அனைவரும் கடவுள் உண்டு என நம்பும் காரணமென்ன? அறிவில் குறைந்தவர்கள் முதலாய்க் கடவுள் உண்டென்றும், அவர் பயப்படத்தக்கவர் என்றும், அவரை எவ்வாறாயினும் சாந்தப்படுத்த வேண்டும் என்றும் நினைப்பர். பல்கலை கற்றவர்கள் தங்களையும் தங்கள் சூழ்நிலையையும் உற்றாராய்ந்து கரகலான நியாயங்களைக் கொண்டு, கடவுள் இருக்கிறார் என்ற உண்மையை நிலைநாட்ட ஆதிமுதல் முயற்சி செய்து வருகின்றனர்.

குடவுளைப்பற்றிய அறிவு மரபு வழியாக நமக்கு உண்டாகும். தொன்று தொட்டு முன்னோர்களின் கருத்துக்கள் நம்முடையனவாகும் தாயின் பாலை குடிப்புதுபோல பெற்றோரின் மதத்தையும் உட்கொள்ளுகிறேம். கிறிஸ்தவ சமுதாயத்தில் பிறந்து வளர்ந்த மக்களின் மத கருத்துக்கள் ஏறத்தாழக் கிறிஸ்தவ சமயசித்தத்திற்கும் திருமறைக்கும் இசைவாயிருக்கலாம். திருமறை முற்றும்;முடிய நம்பத் தக்க ஒரு தெய்வீக வெளிப்பாடு. மூதாதையார் வழியாக நாம் கற்றவையெல்லாம் உண்மை என்றும் நான் நம்புவதற்கில்லை. பல்விமான்களின் சிறப்புரைகளை எல்லாம் நாம் நம்ப முடியாது. ஆனால் கடவுள்தாமே திருமறையில் தம்மைப்பற்றி விளக்கமாய்க் கூறியதெல்லாம் நம்பத்தக்கது.

ஆகவே மக்கள் கடவுளைப்பற்றி அறியக்கூடிய விதங்கள் நான்கு வகைப்படும்.

1. மக்கள் யாவருக்கும் இயற்கையாய் உண்டாகும் உள்ளுணர்வு.
2. முன்னோர், பெற்றோர், ஆசிரியர் நமக்கு ஊட்டும் பாரம்பரிய கருத்துக்கள்.
3. திருமறை
4. அறிஞர் கூறும் நியாயங்கள் ( இவை சிறிதளவில் உதவும். ஆனால் இன்றியமையாதவை எனக்கூறுவதற்கில்லை)

திருமறையை ஆராய்ந்து நாம் எவ்வளவு தியானம் செய்து கற்றாலும் தேவன் தம்மை எவ்வளவு நமக்கு வெளிப்படுத்தினாலும் கடவுளையும் அவர் செயலையும் தீர அறிந்தாயிற்று என நாம் எண்ணலாகாது. அவரைப்பற்றி நாம் கொள்ளும் மிக மேலாக கருத்துக்களையும் அப்பாற் கடந்து செல்பவராவார் கடவுள். கடவுளை முழுவதுமாய் நாம் அறிய இயலாதிருந்தும் அவரை உண்மையாய் அறியக்கூடும். எந்த அளவிற்கு நாம் திருமறையை நமது ஆராய்சிக்கு ஆதாரமாகக் கொள்வோமோ, அந்த அளவிற்கு நமது மதக் கருத்துக்கள் உண்மையானவையாகும். கடவுளைப் பற்றி அறிவது மட்டும் போதாது: கடவுளை அறியும் அறிவே மேலானது. அதுவே நித்திய ஜீவனுக்கேதுவான அறிவாகும். கிறிஸ்தவச் சித்தாந்தத்தைக் கற்றுப் பட்டம் பெற்றும், கடவுளை உள்ளபடி அறியாதவருமுண்டு. மெய்யான ஒரே கடவுளாகிய உம்மையும், நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன் (யோவான் 17:3).

அறிஞர்கள் காட்டும் நியாயங்கள் மூலம் கடவுள் உண்டு என்பதை நிலைநாட்ட முடியாது. எனினும் அந்த நியாயங்களை நாம் அறியவேண்டும். ஏனெனில் கடவுள் இல்லை என்று சாதிக்கும் மக்களோடு உரையாடும்போது இந்த நியாயங்கள் ஒருவேளை நமக்குப் பயன்படும்.

1. உலகத்தைப் பார்த்தாலும் மக்களின் வாழ்க்கை வரலாற்றைப் பார்த்தாலும் அவை எப்பொழுதும் மாறிக்கொண்டும், குறைந்து கொண்டும், அழிந்து கொண்டும் இருக்கின்றன. இதை அறிந்து அங்கலாய்க்கும் நாம் நித்திய பரம் பொருள் ஒன்று இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். அவ்வாறான மாறாதவர் ஒருவர் இருப்பாரேயானால் அவர் வணக்கத்திற்குரிய தெய்வமாயிருப்பார் அன்றோ?

2. உலகும் அதில் காணும் யாவும் உண்டாவதற்கு ஒரு காரணம் இருத்தல் வேண்டும். இவ்விதமாக, நாம் ஒவ்வொரு காரணத்திற்கும் மற்றொரு காரணத்தைத் தேடிக்கொண்டே பின்னிட்டுச் செய்வோமாகில் இறுதியில், எல்லாவற்றிற்கும் மூலமாகிய ஆதிகாரணத்தைக் கண்டடைவோர், இந்த ஆதி காரணமே யாவற்றையும் உண்டாக்கி, சர்வலோகங்களையும் பராமரித்து நடத்துகிற கடவுளாவார்.

3. ஒவ்வொரு காரியத்துக்கும் தக்க காரணம் ஒன்று இருக்கவேண்டுமென்று அறிவோம். புளுவான பாரத்தைத் தூக்க உடல் பலம் அதிகம் வேண்டும் அல்லது அதிகத் தியமை வேண்டும் பலமும் தியமையும் இல்லாத ஒரு சிறு பையன் ஒரு சுதைமாங்கியை நாட்டமுடியுமா? சுரீர பலம் படைத்தும் திறமையின்றி ஒரு பராக்கிரமசாலி தாஜ்மஹால் என்னும் சமாதியைப் போன்றதொன்றைக் கட்டமுடியுமா? இயற்கையில் நாம் காணும் சகல பொருள்களும் தத்தம் தனிநோக்கத்தை நிறைவேற்றத் தக்க கருவிகளுடன் அமைந்திருக்கின்றன என்பது தெளிவு. கை, கால், கண் முதலிய உடலுறுப்புக்களை அமைத்தவர் யார்? கதிரவனையும் தத்தம் ஓட்டத்தில் அதைச் சுற்றியோடுகிற கிரகங்களையும் செய்த சிற்பி யார்? இவையெல்லாம் தற்செயலாய் உண்டானதென்று கூறுமடியுமா? அல்லது இவ்வளவு ஞானமாயும் நோக்கத்திற்கு இசைந்ததாயும் பொருள்களைப் படைத்த அச்சிற்பாச்சாரி நம் போன்ற ஒரு சாதாரண மனிதனாயிருக்க முடியுமா? ஓவ்வொன்றிலும் கிரமம், ஒழுங்கு, இசைவு, ஒற்றுமை, அழகு ஆகிய இவையாவும் ஒருங்கே அமையும்படி உருவாக்கியவர் எல்லாப் புத்திக்கும் மேலான புத்தியும், எல்லாச் சித்தத்திற்கும் மேலான சித்தமும், எல்லா ஞானத்திற்கும் மேலான ஞானமும் படைத்தவராய், தாமே யாவற்றிற்கும் ஆதிகாரணராயிருக்க வேண்டும். அவரே கடவுள்.

4. இதுவரை மனிதனுக்குப் புறம்பேயுள்ள பொருள்களைக் கவனித்துக் கடவுளைப்பற்றி ஓரளவு தெரிந்துக்கொண்டோம். இப்பொழுது மக்களின் மனதில் அமைந்திருக்கும் எண்ணங்களைக் கவனிப்போம். படைப்புக்கெல்லாம் மனிதனே மணிமகுடம். இவனுக்குத் தன்னறிவு, புத்தி, சுயாதீனம் முதலிய சிறந்த பண்புகளுண்டு. அதாவது, இவனுக்கு மனமுண்டு அல்லது ஆன்மா உண்டு. இவ்வளவு மேலான மனிதனைப் படைத்த தேவன் எப்படிப்பட்டவராயிருக்கவேண்டும்? அவரும் தன்னறிவு, சுயாதீனம், புத்தி, பகுத்தறிவு ஆகிய இவைகயையுடைய ஆவியாயிருக்க வேண்டும் அன்றோ? ஆள்தன்மை வாய்ந்தவராயிருக்க வேண்டும் அன்றோ? நாம் ஆத்துமாக்கள்: அவரோ பரமாத்துமா, அதாவது ஆள்தத்துவம் வாய்ந்த பராமாத்துமா.

5. நமது மனசாட்சியே கடவுள் ஒருவர் உண்டு என்று நம்மை ஊகிக்கச் செய்கிறது. நம்மை தீமை இன்னதென்பதை நமக்குத் தெளிவுபடுத்தி நன்மை செய்ய நம்மைத் தூண்;டும் சக்தியே மனசாட்சியாகும். இது நமக்குள்ளிருந்து, நம்மை ஆண்டு அதிகாரத்தோடே நம்மோடு பேசி, கட்டளையிட்டு, நம்மை நல்வழி நடத்தும் ஒரு சுக்கானாகும். நமது சுயத்தன்மையின் சத்தமன்று: பிறர் சத்தமுமன்று, இதை எல்லா அதிகாரமும் வாய்ந்த கடவுளுடைய தொனி என்றே நாம் கூறவேண்டும். மக்களுக்கு மனச்சாட்சியைத் தந்த கடவுள் அசைவற்ற ஒரு பொருளைப் போலல்லாமல் நீதி, நியாயம், பரிசுத்தம், சத்தியம், ஆகியவற்றை விரும்பும் பரம நியாயதிபதியாயிருக்க வேண்டும்.

மேற்கண்ட ஊகங்களைக் கொண்டு யாராவது எப்போதாவது தேவனை உண்மையாய் அறிந்ததுண்டா என்று கேள்வி கேட்குமிடத்தில் இல்லை என்றே திருமறை பதில் கூறுகிறது. காணப்படாதவைகளாகிய அவருடைய சித்திய வல்லமை, தெய்வத்துவம் என்பவைகள் படைக்கப்பட்டவைகளின் மூலம்.. தெளிவாய்க் காணப்படும். அவர்கள் கடவுளை அறிந்தும் அவரைக் கடவுள் என்று மகிமைப்படுத்தாமலும், அவருக்கு நன்றி செலுத்தாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளில் வீணராகார்கள். விவேகமில்லாத அவர்கள் இருதயம்இருண்டு போயிற்று. அவர்கள் தங்களை ஞானிகள் என்று சாதித்துக் கொண்டே மூடராகி, அழிவில்லாத கடவுளின் மகிமையை அழிவுள்ள மனிதர், பறவைகள், மிருகங்கள், ஊரம் பிராணிகள் ஆகிய இவைகளுடைய ரூபங்களுக்கு ஒப்பாக மாற்றினார்கள் (ரோமர் 1:21-23).

மீறுதலினால் மக்களின் மனக்கண் மங்கி, மேற்கண்ட ஊகங்களின் உண்மையை உணராமல், பல தெய்வ வணக்கத்திற்கும் கணக்கில்லாத மதபேதங்களுக்கும் ஆளானார்கள். ஆகவே, தேவன் தாமே தம்மை வேறு வழியாக வெளிப்படுத்தினாலொழிய நாம் எவரும் அவரைக் கண்டறியவே முடியாது. வேதப் புத்தகத்தின் வாயிலாகத் தேவன் இயற்கையால் தம்மை வெளிப்படுத்திய வெளிப்பாடு இயல்வேதம் என்றும் அழைக்கப்படுவதுண்டு. இயல்வேதத்திற்கும் அருள் வேதத்திற்கும் உள்ள சில முக்கியமான வேற்றுமைகளைக் கவனிப்பது நன்று.

இயல்வேதம் அனைத்துலக மக்கள் யாவருக்குமரியது. அவைகளின் வசனங்கள் பூச்சக்கரத்தின் கடைசி வரைக்கும் செல்லுகின்றன (சங் 19:4, 19:1-6 பார்க்கவும்). எல்லாத்தேசத்தாரும், எக்காலத்திலும் அதன் இனிய மெல்லிய குரலைக் கேட்கலாம். அருள் வேதமோ முதலில் ஒருகுலத்திற்கு மட்டும் அருளப்பட்டது. முதலாவது கடவுளின் திருவாக்குகள் அவர்களிடம் (அதாவது, யூதர்களிடம்) ஒப்புவிக்கப்பட்டன (ரோமர் 3:2). நற்செய்தியை அறிவித்து வேதாகமத்தை இன்னும் குழுக்கள் அரும்பணி ஆற்றியும் அருள்வேதம் இன்னும் பெரும்பாலார்க்குக் கிட்டவில்லை. இயல் வேதத்தில் கடவுள் பொதுவாக யாவரோடும் பேசுகிறார்.

இயல் வேதத்தின் வெளிப்பாடு அரைகுறையான நிழலாட்டம். அருள்வேதமோ நிறைவும் தெளிவும் உள்ளது. இயல்வேதம் கடவுள் உண்டு என்பதை மட்டும் கூறுகிறது. அருள்வேதமோ கடவுள் உண்டு என்பதை ஆதாரமாகக் கொண்டு அவர் எவ்வாறானவர் என்பதையும் கூறுகிறது. இயல் வேதம் இயற்கை சத்தம், அருள் வேதமோ உயிருள்ள தேவ சத்தம்.