Home செய்திகள் மரணத்தின் முடிவில் என்ன?

மரணத்தின் முடிவில் என்ன?

2719
0

மரணத்தின் முடிவில் என்ன?

(ஐசுவரியவானும் லாசருவும்)
லூக்கா எழுதின சுவிசேஷம் 16:19-31 வசனம் முடிய, மரணத்திற்கு பின் உள்ள வாழ்க்கையின் மீதுள்ள திரை தூக்கப்ட்டு நமது கவனத்தைக் கவரும் சில உண்மைகள் நமக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இதைச் சொன்னவர் ஆண்டவராகிய கிறிஸ்துவே. அப்பகுதி பின்வருமாறு:

ஐசுவரியமுள்ள ஒரு மனுஷன் இருந்தான்@ அவன் இரத்தாம்பரமும் விலையேறப்பெற்ற வஸ்திரமும் தரித்து, அநுதினமும் சம்பிரமமாய் வாழ்ந்துகொண்டிருந்தான். லாசரு என்னும் பேர்கொண்ட ஒருதரித்திரனும் இருந்தான்@ அவன் பருக்கள் நிறைந்தவனாய், அந்த ஐசுவரியவானுடைய வாசலருகே கிடந்து, அவனுடைய மேஜையிலிருந்து விழுந் துணிக்கைகளாலே தன் பசியை ஆற்ற ஆசையாயிருந்தான்@ நாய்கள் வந்து அவன் பருக்களை நக்கிற்று. பின்பு அந்தத் தரித்திரன் மரித்து, தேவதூதரால் ஆபிரகாமுடைய மடியிலே கொண்டுபோய் விடப்பட்டான்@ ஐசுவரியவானும் மரித்து அடக்கம்பண்ணப்பட்டான். பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது, தன் கண்களை ஏறெடுத்து, தூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டான். அப்பொழுது அவன்: தகப்பனாகிய ஆபிரகாமே, நீர் எனக்கு இரங்கி, லாசரு தன் விரலின் நுனியைத் தண்ணீரில் தோய்த்து, என் நாவைக் குளிரப்பண்ணும்படி அவனை அனுப்பவேண்டும்@ இந்த அக்கினிஜுவாலையில் வேதனைப்படுகிறேனே என்று கூப்பிட்டான். அதற்கு ஆபிரகாம்: மகனே, நீ பூமியிலே உயிரோடிருக்குங் காலத்தில் உன் நன்மைகளை அனுபவித்தாய், லாசருவும் அப்படியே தீமைகளை அநுபவித்தான், அதை நினைத்துக்கொள்@ இப்பொழுது அவன் தேற்றப்படுகிறான், நீயோ வேதனைப்படுகிறாய். அதுவுமல்லாமல், இவ்விடத்திலிருந்து உங்களிடத்திற்குக் கடந்துபோகவும், அவ்விடத்திலிருந்து எங்களிடத்திற்குக் கடந்துவரவும் மனதுள்ளவர்களுக்குக் கூடாதபடிக்கு, எங்களுக்கும் உங்களுக்கும் நடுவே பெரும்பிளப்பு உண்டாக்கப்பட்டிருக்கிறது என்றான். அப்பொழுது அவன்: அப்படியானால், தகப்பனே, எனக்கு ஐந்துபேர் சகோதரருண்டு, அவர்களும் வேதனையுள்ள இந்த இடத்துக்கு வராதபடி, அவன் போய் அவர்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும்பொருட்டு, நீர் அவனை என் தகப்பன் வீட்டுக்கு அனுப்பும்படி உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான். ஆபிரகாம் அவனை நோக்கி: அவர்களுக்கு மோசேயும் தீர்க்கதரிசிகளும் உண்டு, அவர்களுக்கு அவர்கள் செவி கொடுக்கட்டும் என்றான். அதற்கு அவன்: அப்படியல்ல, தகப்பனாகிய ஆபிரகாமே, மரித்தோரிலிருந்து ஒருவன் அவர்களிடத்திற்குப் போனால் மனந்திரும்புவார்கள் என்றான். அதற்கு அவன்: அவர்கள் மோசேக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் செவிகொடாவிட்டால், மரித்தோரிலிருந்து ஒருவன் எழுந்துபோனாலும், நம்பமாட்டார்கள் என்று சொன்னான் என்றார்.
வேதாகமத்தின் இந்தப் பகுதி புரிந்து கொள்வதற்கு எளிமையானது. முக்கியமான பகுதியாகும். ஒருவர் இதை ஒத்துக் கொள்ளாதிருக்கலாம், இதன் உண்மையை மறுக்கலாம். இதன் போதனையைத் தகுதியற்றதென்று தள்ளலாம். ஆனால் இதைப் புரிந்துகொள்ளவில்லையானால் அவர் மந்த புத்தியுள்ளவர் என்பதில் சந்தேகமே இல்லை. இயேசு சொன்னார் என்பதைத் தங்களால் புரிந்துகொள்ள முடியவில்லையென்று ஒரு சிலரே சொல்லவிரும்புவர். சிறந்த மத அறிஞர்களின் உள்ளத்தை வருத்தும் முடிவுகளும் பல இங்கே உள்ளன. ஆனால் அடிப்படை உண்மை சிறு குழந்தையும் புரிந்து கொள்ளக்கூடியதாகும். அதாவது வாழ்வதெல்லாம் வாழ்க்கைய்ல. மரிப்பதெல்லாம் மரணமல்ல என்பதே இந்த உண்மை. எல்லாவற்றிக்கும் முடிவு மரணமல்ல.
மரணத்திற்குப் பின்பு என்ன நிகழ்கிறது. என்பதைக் குறித்துப் பலவித எண்ணங்கள் உள்ளன. நாம் ஒருவருக்கொருவர் இதை ஓத்துக்கொள்ளாதபோதிலும், பலர் இதைக் குறித்து ஆழமான மர்மம் ஒன்று உண்டு, மரணத்திற்கு அப்பாலுள்ள உலகத்தோடு தொடர்பு கொள்வதற்காக இந்த மர்மத்தை ஊடுருவ முயற்சி செய்யும் மக்கள் என்றும் உள்ளனர். குறைவான வெளிச்சமும் சிறிய துவாரமும் உள்ள அறைகளில் இறந்தவர்களின் ஆவியை அழைக்கும் சக்தியுள்ளவர்களை வாடகைக்கு அமர்த்துவதில், பல லட்சக்கணக்கான பணம் செலவிடப்பட்டுள்ளன. இறந்தவர்களிடம் பேசுவதைவிட சிறப்பான காரியத்தைச் செய்யவும் கூடும். ஆண்டவராகிய இயேசு அதிகாரத்தோடு பேசின காரியங்களை நாம் கேட்டு அறியலாம். நாம் சிறிதும் அறியாத உலகத்தில் அவர் இருந்திருக்கிறார்.
இனிவரும் காரியங்களைக்குறித்து இயேசு சொன்ன மற்றொரு வசனம் ‘என் பிதாவின் வீட்டிலே அநேக வாசஸ்தலங்கள் உண்டு, அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன். ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம் பண்ணப் போகிறேன். நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணின பின்பு நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்வேன்” என்று சொன்னார்.
பல வாசஸ்தலங்கள் உள்ள அந்த வீட்டிற்கு மனிதன் இயற்கையாகவே தயாராக இல்லை. மனிதன் இழந்துவிட்டான் என்ற உண்மையை நமது இரட்சகர் அறிவார். அதைத் திரும்பக் கொடுக்க கர்த்தர் வந்தார். ‘மனுஷன் உலக முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு இலாபம் என்ன? மனுஷன தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?” என்று சொன்னார் (மாற் 7:36-37). இழந்துபோன மனிதனை மீட்பதே அவர் வேலை. கடவுளின் இரக்கத்தையும் கிருபையையும் பெறுவதில் தீவிரமாகவும் உண்மையாகவும் செயலாற்றுமாறு எங்குமுள்ள மனிதர் யாவருக்கும் கர்த்தர் உதவி செய்கிறார்.
நரகத்தின் ஜீவாலையை அணைக்க நாம் முயல்கிறோம். இதை நாம் பல வழிகளில் முயற்சி செய்கிறோம். பாவம் என்று ஒன்று இல்லை என்று மறுப்பதன்மூலம் இதை நாம் செய்ய முயற்சி செய்கிறாம். பாவம் இல்லையென்று சொல்வோமானால் நிச்சயமாக ஓர் உலக இரட்சகர் வரத்தேவையில்லையே? பாவத்திற்குத் தண்டணை தேவையில்லையே?
உண்மைக்கு இது நன்றாக ஒத்துவரவில்லை என்பதை நாம் விரைவில் கண்டுகொள்ளுகிறோம். ஏனென்றால் நாள் தவறாமல் மனிதர் ஒருவருக்கொவர் பயங்கரமான காரியங்களைச் செய்கிறார்கள். ஆகையால் நீதியைச் சமன் செய்யும் ஏதோ ஒன்று எங்கோ இருக்கவேண்டும் என்ற நம்பிக்கையில் நாம் ‘நல்லது, பூமியி;ல் மனிதனுக்கு என்ன இருக்கிறதோ அதைத்தான் நரகமென்று அவனறிவான்” என்று கூறுகிறோம்.
கடவுள் எனக்குத்தேவையில்லை என்று நாம் கூறுவதில்லை. இந்த இருள், நரகத்தைப்பற்றிய உண்மையை நாம் காணுவதினின்றும் நம்மைத் தடுக்கிறது. ஆகையால், ‘தேவனே இரங்கும்” என்று நாம் கூக்குரலிடுவதில்லை. ஆனால் அவ்விசுவாசமோ வெறுத்து ஒதுக்குவதோ, உண்மையை மாற்றமுடியாது. கடவுளின் வார்த்தை நிலைத்திருப்பதைப் போல அவை நிலைத்திருக்கின்றன. பாவத்தைக் குறித்த தேவகோபாக்கினையை எங்கோ ஏதோ ஒரு நேரத்தில், எப்படியோ சந்தித்தாகவேண்டும்.
மெய்வாழ்க்கையில் இரண்டு பெரிய அங்கங்கள் உண்டு. முதல் அங்கத்தில், மரணத்திற்கு இப்புறத்தில் என்ன நடைபெறுகிறது என்று நாம் காண்கிறோம். இரண்டாவ அங்கத்தில் மரணத்திற்குப்பின் என்ன நடைபெறுகிறது என்று நாம் காண்கிறோம்.
முதல் அங்கத்தில் ஐசுவரியவானின் வாழ்க்கையில் எல்லாம் அழகாயிருந்தது. இயேசு அவன் ஐசுவரியவான் என்பதற்காக அவனைக் கண்டிக்கவில்லை. செல்வமானது ஒரு மனிதனைக் கெட்டவனாக்கவேண்டுமென்பது அவசியமல்ல. அது அவனுடைய கெட்ட செயல்கக்குக் காரணமாயிருக்கலாம்: அவைகளைச் செய்ய அதிக வழிகளைக்காண்பிக்கலாம்.அவ்வளவுதான். இந்த மனிதன் கெட்டவனாக இருந்தான் என்ற கருத்து, ‘அநுதினமும் சம்பிரமமாய் வாழ்ந்துகொண்டிருந்தான்” என்ற வார்த்தைகளில் காணப்படுகிறது. அந்த ஐசுவரியவானின் வாசலில் ஒரு தரித்திரன் பசியோடிருந்தான் என்பதுதான், அவன் அநுதினமும் சம்பிரமமாய் வாழ்ந்து கொண்டிருந்தது தீய செயல் என்பத்குக் காரணமாகும். ஐசுவரியவான் சிந்தின சிறிய உணவுப் பண்டங்களைப் புசிக்க அந்தத் தரித்திரன் விரும்பினான். அதைக்கூட அவர் அடைத்தான் என்று நமக்குச் சொல்லப்படவில்லை.
ஆனால் பின்னர் ஒருநாள் அந்த ஐசுவரியவான சுகவீனமுற்றான். மரணம் எப்போதும் புதிய இரைகளைத் தேடிக்கொண்டு இருக்கிறது. அவனும் மரித்தான். அவனுடைய இறுதிச் சடங்கு எவ்வாறு இருந்திருக்கும்? புதைக்கும் வரையிலும் நீண்ட ஊர்வலம். ஒருவன் மரிப்பதானால் இவ்விதமாய் மரிக்கவேண்டும். அவனைக் கௌரவிக்க அநேக நண்பர்கள் இருந்திருப்பார்கள். நினைவில் வைக்கக்கூடிய அளவுக்கு அருமையான இறுதிச் சடங்குகள் அவனுக்கு நடைபெற்றிருக்கலாம்.
இந்த முதல் அங்கத்தில் உள்ள மற்றொரு நபரான தரித்திரனை நாம் பார்க்கிறோம். ‘லாசரு என்னும் பேர் கொண்ட ஒரு தரித்திரன் இருந்தான், அவன் பருக்கள் நிறைந்தவனாய், அந்த ஐசுவரியவானுடைய வாசலருகே கிடந்து, அவனுடைய மேசையிலிருந்து விழும் துணிக்கைகளாலே தன் பசியை ஆற்ற ஆசையாயிருந்தான். நாய்கள் வந்து அவன் பருக்களை நக்கிற்று” ஒரு நாள் இந்த தரித்திரனும் மரணத்தின் அமைதியில் வீழ்ந்தான். அதன் குளிரான விரல்கள் அவனது உயிரையும் பறித்துக்கொண்டது. அவனுக்காக கவலைப்பட யாருமில்லை. அவன் சடலம் என்ன ஆனது என்பதைக் குறித்து நிச்சயம் நமக்கு ஒன்றும் தெரியாது. கிழக்கத்திய நாய்களைக் குறித்து அறிந்திருப்பதால, அவையே அவனுடைய சடலத்தைக் குறித்துக் கவலைகொண்டு, அவனுடைய பாடை தூக்கிகளாக இருந்து கல்லறைக்குக் கொண்டு சென்று மறைத்திருக்கும் என ஊகம் செய்வது கடினமல்ல.
இப்போது நாம் மறுபக்கத்தையும் பார்க்கவேண்டும்.
மரணத்திற்குப் பின் என்ன?
குணாதிசயம் என்பது இருதயத்தின் தன்மையைப் பொறுத்ததே தவிர, அணியும் ஆடையைப் பொறுத்ததல்ல. இரட்சிப்பென்பது ஆத்துமாவைப்பற்றியதே தவிர உடலைப் பொறுத்ததல்ல. மரணத்திற்குப் பின்னும் இருவருக்குமிடையேயுள்ள வேறுபாடு தொடர்கிறது. தேவதூதர்கள் மகிழ்ச்சியோடு அந்தத் மரித்த தரித்திரனை ஆபிரகாமின் மடியில் ஓய்வு எடுப்பதற்காகக் கொணர்வதைப் பார்க்கிறோம். ஐசுவரியவான் மிகுந்த துன்பம் நிறைந்த இடத்திற்குச் சொன்றான்.
மரணத்திற்கும் பின்பு மனிதர் அநுபவிக்கும் சில காரியங்களை அமைதியாகக் கவனியுங்கள். உண்மையான வாழ்க்கை நாடகத்தில் முதலங்கம் பிறப்பில் துவங்கி இறப்பில் முடிகிறது. இரண்டாம் அங்கம் இறப்பில் தொடங்கி என்றென்றும் சென்று கொண்டிருக்கிறது. இவ்விரு மனிதர்களும் தொடர்ந்து வாழந்துகொண்டிருந்தார்கள். மரணம் வாழ்க்கையின் முடிவல்ல, அது மற்றொரு வாழ்க்கையின் ஆரம்பமே!!
எபி 9:27 இல் ‘அன்றியும் ஓரேதரம் மரிப்பதும் பின்பு நியாயத்திர்ப்படைவதும் மனிதருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே” என்று நாம் வாசிக்கிறோம். நியாயத்தீர்ப்பு இந்த வாழ்க்கையில் நடைபெறுவதில்லை. முதலில் மரணமும், பின்னர் நியாயத்தீர்ப்பும் நடைபெறுகின்றன. இயற்கையின் விதிகளை மீறும்போதுதான் நாம் துன்பப்படுகிறோம். ஆனால் கடவுளின் விதிகளைத் தண்டனையெதுவுமில்லாமல் மீண்டும் மீண்டும் மீறலாம் எனத்தோன்றுகிறது. கடவுள் ஒரு நாளை நியமித்துள்ளார், அந்த நாளில் தான் மரணத்திலிருந்து உயிர்ப்பித்த (இயேசு கிறிஸ்துவைக்கொண்டு) கடவுள் உலகை நியாயந்தீர்ப்பார் என்று வேதம் கூறுகிறது. அவருடைய கண்களிலிருந்து ஒன்றையும் மறைக்கவே முடியாது. நியாயத்தீர்ப்பின் நாள் வரும். அந்நாள் விடிவதை கடவுள் மட்டுமே காண்பார்.
இம்மனிதர்கள் தங்களின் தனித் தன்மைகளையும், குணாதிசயங்களையும் இழக்கவில்லை. மரணத்திற்குப் பின் தன் செயல்களுக்கான பொறுப்பை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்ற போதனையை அநேகர் மறுக்கிறார்கள்.
ஐசுவரியவான் குளிர் நீருக்காக வேண்டிக்கொண்டு அவனுடைய வேண்டுதல் புறக்கணிக்கப்பட்டபோது, கடந்த நாள்களை ஞாபகப்படுத்திக்கொள்ளுமாறு அவனிடம் கூறப்பட்டது. இந்த ஐசுவரியவான் தன் குடும்பத்திற்கு உதவி செய்ய முடியாத அளவுக்குப் பிந்திவிட்டான். ஆசை அங்கிருந்தது. ஆனால் சந்தர்ப்பம் என்றென்றைக்கும் நழுவிப்போய்விட்டது. இரட்சிப்பைக் குறித்து தனது சகோதரர்களுக்கு யாராவது சாட்சி சொல்ல வேண்டுமென்று அவன் அறிந்திந்தபடியால் யாரோ ஒருவர் எப்போதோ எங்கோ அவனுக்கு சாட்சி சொல்லியிருக்க வேண்டும். அவன் தன் வாய்ப்பைப் புறக்கணித்து தனது ஆத்துமாவையும், தனது குடும்பத்தார் என்ன கூறுவார்களோ என்று அவன் பயந்திருக்கலாம். ஆனால் இப்போது அவன் அந்தப் பயம் இல்லாதவனாக இருந்தான். ஆனால் இப்போது எல்லாம் முடிந்துவிட்டது. நடந்தது நடந்ததே. இனி அதை மாற்றவே முடியாது. காலம் சென்றுவிட்டது. மரணத்திற்குப் பின் இரட்சிக்க எந்த சக்தியும் இல்லை. இரக்கமாயிரும் என்ற கூக்கிரலுக்கு மகனே ஞாபகப்படுத்திக்கொள் என்ற பதில் வந்தது. பிளப்பு நியமிக்கப்பட்டு, எல்லைகள் அமைக்கப்பட்டு, விதி தீர்மானிக்கப்பட்டு விட்டது.
லாசருவைக் காட்டிலும் ஐசுவரியவான் அநேக பணிகளைச் செய்திருப்பான் என்பதில் சந்தேகமில்லை. நல்ல பணிகள் இரட்சிக்கக் கூடுமானால் லாசருக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்காது. தரித்திரனைவிட ஐசுவரியவான் நிச்சயமாக நன்றாயிருந்திருப்பான். நம்மில் யாரும் நற்பணிகள் செய்வதின் மூலமாக இரட்சிக்கப்பட முடியாதென்பதை நமக்கும் ; வலியுறுத்துவதற்காகவே இந்தச் செய்தி கொடுக்கப்பட்டது. நமது பார்வையில் நம்மை நீதிமான்களாக்கும் பணிகளும்கூட நம்மை இரட்சிக்க முடியாது. தரித்திரன் மூலமாக இரட்சிப்படைவதையும் இந்த நிகழ்ச்சி போதிக்கவில்லை. இயேசு ஐசுவரியவானை அவனது ஐசுவரியத்துக்காகக் கண்டிக்காததைப் போலவே, தரித்திரனையும் அவனது தரித்திரத்திற்காகப் பாராட்டவில்லை. பல தரித்திரர்கள் தீயவர்ளாகவும் இருக்கிறார்கள் என்பதை நம்மைப்போல இயேசுவும் அறிந்திருந்தார்.
‘என் ஐந்து சகோதரர்களும் இரட்சிக்கப்படும்படி அவர்கள் தங்களுக்குண்டான எல்லாவற்றையும் விற்று விடுமாறு சொல்ல யாராகிலும் அனுப்புங்கள்” என்று ஐசுவரியவான் கூறவில்லை. இனிவரும் உலகத்தில் அவர்கள் நன்றாயிருப்பதற்காக லாசருவைப்போல கடினமும் கடுமையும் நிறைந்த வாழ்க்கையில் பங்கேற்க வேண்டுமெ;று அவர்களிடம் கூறுமாறு அவன் சொல்லவில்லை. அவன் தனது படிப்பினையை நன்றாக அறிந்துவிட்டான். அவனது கண் திறந்துவிட்டது. இனிமேலும் இரட்சிப்பு அவனுக்கு மறைபொருளாக இல்லை. ‘அவன் சகோதரர்களும் வேதனையுள்ள இந்த இடத்துக்கு வந்து விடாதபடி அவர்களுக்குச் சாட்சி சொல்ல யாரையாவது அனுப்பும்” என்று அவன் சொன்னான்.
உன்னுடைய நித்தியத்தை நிச்சயிக்கும் காரியமாகிய தேவ மைந்தனின் சாட்சியைக் குறித்தும் இவ்வாறே நீ செய்கிறாய். தன் குமாரனை விசுவாசிக்கும் எவனும் நித்திய ஜீவன் அடையும்படிக்குப் பிதா அவரை இவ்வுலகத்திற்குள் அனுப்பினார்.
உன்னுடைய பாவத்திலிருந்து மீட்பு பெற இயேசுவை உன் இரட்சகராக நோக்குவாயா? விசுவாசித்தல் என்பதன் எளிய பொருள் இதுவே. குமாரனையுடையவன் ஜீவனையுடையவன் என்று இயேசு சொன்னார். இந்தச் சாட்சியை நீ ஏற்றுக்கொண்டு உன்னுடைய வாழ்க்கையில் நடு நாயகராக அவரை ஏற்று, அவர் வாக்குப்படி அவர் உனக்கு எல்லாமாக இருப்பார் என்று அவரை இப்போதே விசுவாசிக்கிறாயா?
பாவம் நம்மைக் கடவுளிடமிருந்து பரித்துவிட்டது. நம்முடைய பாவத்திற்குத் தண்டனை வேண்டும். நம்முடைய பாவங்களுக்குரிய விலையைக் கடவுள் கிறிஸ்துவில் செலுத்திவிட்டார். விரும்புகிற யாவருக்கும் இரட்சிப்பு இலவசமாக அருளப்படுகிறது. இயேசுகிறிஸ்துவண்டை நீ வருவாயா? இன்று அவரை உனது இரட்சகராக நீ ஏற்றுக்கொள்வாயா?
எல்லாம் முடிந்துவிட்டது. நடந்தது நடந்ததே. இனி அதை மாற்றவே முடியாது. காலம் சென்றுவிட்டது. மரணத்திற்குப் பின் இரட்சிக்க எந்த சக்தியும் இல்லை. இரக்கமாயிரும் என்ற கூக்குரலுக்கு மகனே ஞாபகப்படுத்திக்கொள் என்ற பதில் வந்தது. பிளப்பு நியமிக்கப்பட்டு, எல்லைகள் அமைக்கப்பட்டு, விதி தீர்மானிக்கப்பட்டு விட்டது. என்று நீ சொல்லாதபடி ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவை விசுவாசி. அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்.