Home செய்திகள் பாவம் எவ்வாறு உண்டானது?

பாவம் எவ்வாறு உண்டானது?

3003
0

பாவம் எவ்வாறு உண்டானது?

‘எல்லாரும் பாவம் செய்து தேவ மகிமையற்றவாகளானார்கள் ரோமர் 3:23″

கடவுள் நீதியும் அன்புமுள்ளவரயிருந்தால் ஏன் உலகம் பொல்லாப்பும், பாடுகளும், துக்கமும் மிகுந்துள்ளது. நாம் காணும் பகைமை எப்படி உண்டாயிற்று? மக்கள் ஏன் பொய்யான விக்கிரகங்களைப் படைத்துள்ளார்கள்? போர், பொருளாசை, சுயநலம் ஆகியவற்றை நாம் தொழுவது ஏன்? பத்து கற்பனைகளை நியமித்து அவைகளைக் கைக்கொள்ளவேண்டுமென்று வற்புறுத்த வேண்டியதாகும்படி கடவுள் சாயலில் படைக்கப்பட்ட மனித இனம் எப்படிச் சீர்கேடு அடைந்தது? நம்மை இரட்சிக்கக் கடவுள் தம் சொந்த குமாரனை ஏன் அனுப்பவேண்டியதாயிற்று? கடவுள் படைத்தவர்கள் இச்சை முதலிய தீங்குகளினால் நிறைந்தது எப்படி?

ஏன் ஒரு நாட்டாருக்கு விரோதமாக இன்னோர நாட்டார் போர் புரிகிறார்கள்? ஏன் குடும்பங்கள் பிரிந்து கிடக்கின்றன. ஏன் ஒவ்வொரு செய்தித்தாளும் கொடுமை, பகை ஆகிய இவற்றைப்பற்றிய செய்தியால் நிறைந்திருக்கிறது என்பதைத் தெளிவாய் அறிந்துகொள்ள நாம் ஆதிகாலத்தை முதலாவது கவனிக்கவேண்டும். ஆதியாகமம் முதலாம் அதிகாரம் கூறும் ஆதாமின் வரலாற்றைப் படிப்பது அவசியம்.

நமக்கு நன்றாகத் தெரிந்த படைப்பின் வரலாற்றை ஒரு கட்டுக் கதை என்று சிலர் சொல்லுகின்றனர். உலகத்தின் தோற்றத்தை குறித்து விடை கூற முடியாத வினாக்களைப் பிள்ளைகளுக்கு விளக்கும் ஒரு எளிய வழியே இது என்பது அவர்கள் கூற்று. ஆனால் காரியம் அப்படி அல்ல. ஆதியில் நடந்ததை அது நடந்தபடியே வேதம் கூறுகிறது. அதுவுமின்றி மனிதன் தான் தொன்றுதொட்டு அழிவை நோக்கிச் செல்வதன் காரணத்தையும் அது கூறுகிறது.

கடவுள் இந்த உலகத்தைப் படைத்தார். பூரணமாகவே படைத்தார். அழகாகவும் இசைவாகவும் அமைக்கப்பெற்ற இந்த உலகத்தை மனிதன் வேண்டாம் என்று தள்ளிவிட்டான். நாம் மீண்டும் அடையவிரும்பும் குறைவற்ற உலகத்தை, நாமெல்லாரும் நாடிக்கொண்டிருக்கிற உலகத்தை அவர் படைத்தார்.

கடவுள் தாம் படைத்த குறைவற்ற உலகத்தில் ஒரு குறைவற்ற மனிதனை வாழச்செய்தார். ஆதாம் என்பவன் குறைவற்றவனாய் இருந்திருக்க வேண்டும். ஏனெனில் கடவுள் செய்கிற எதுவும் குறைவுள்ளதாய் இருக்கவே முடியாது. அந்தப் பூரணமான மனிதனுக்கு திவ்விய ஈவுகளிலெல்லாம் மிகவும் விலையேறப்பெற்றதாய் விளங்கும் சுயாதீனம் என்னும் ஈவை கடவுள் வழங்கினார். ஆகவே, தேர்ந்தெடுக்கும் உரிமையை மனிதன் பெற்றிருந்தான்.

முதல் மனிதன் ஒரு குகையில் வாழ்ந்தவனன்று. தெளிவாகப் பேச முடியாமல் பிதற்றுகிறவனாகவும், பன்றியையும் நாயையும் போன்று உறுமித் திரிந்த காட்டுவாசியாகவும், காட்டு விலங்குகளையும் வனத்திற்குரிய பல இடங்களையும் அடக்கியாள முயன்று கொண்டிருந்தவானகவும் அவன் இருக்கவில்லை. மனத்திலும் சரீரத்திலும் இயல்புவலிமைகள் அனைத்தும் பூரண வளர்ச்சியடைந்தவனாகவே ஆதாம் படைக்கப்பட்டான். அவன் கடவுளோடு நடமாடி அவரோடு ஐக்கியப்பட்டிருந்தான். பூமியில் ஒர் அரசனைப்போல இருந்து கடவுள் சித்தம்படி ஆட்சி செலுத்தவே கடவுள் அவனைப் படைத்தார்.

இதுதான் ஏதோன் எனப்பட்ட தோட்டத்தில் ஆதாமின் நிலைமை. அவன் பூரண மனிதன்: முதல் மனிதன்: விலைமதிப்பில்லாத சுயாதீனம் என்னும் ஈவை அவன் மட்டுமே இவ்வுலகத்தில் பெற்றிருந்தான். அவன் பெற்ற பூரண சுயாதீனம் ஒன்றை ஏற்றுக்கொள்ளவோ, புறக்கணிக்கவோ, கடவுள் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியவோ அவற்றிற்று நேர்மாறாக நடக்கவோ, மகிழ்ச்சியைப் பெற்று அநுபவிக்கவோ துயரத்தை வருவித்துக்கொள்ளவோ அவனுக்கு உரிமை இருந்தது. சுயாதீனத்தைக் கையாளும் முறையே மிகவும் முக்கியமானது. அதுவே நம்மை நம் மட்டிலும் கடவுளோடும் சமாதானமாக்கிவிடும். அல்லது சமாதானம் இன்மையை உண்டாக்கும்.

இவ்விஷயத்தின் முக்கியமான அம்சம் இதுதான். ஏனெனில் ஒருவன் சுயாதீனம் பெற்றவுடனே தன் முன் இரண்டு பாதைகளைக் காண்கிறான். நாம் செல்லக்கூடிய ஒரே ஒரு வழிமட்டும் இருந்தால் சுயாதீனம் வீணேயாகும். தெரிந்துகொள்ளும் உரிமை, தன் நடத்தையைத் தானெ தீர்மானிக்கும் உரிமை ஆகியவையெல்லாம் சுயாதீனத்தில் அடங்கியுள்ளன.

சிலர் நேர்மையாக வாழ்கின்றனர். ஆனால் நேர்மையாக வாழ்வதை அவர்கள் தெரிந்து கொண்டதினால் அல்ல. நேர்மையற்று நடக்க வாய்ப்பின்மையாலேயே அவர்கள் அவ்வாறு வாழ்கின்றனர். தாங்கள் நல்லவர்கள் என்று பெருமை கொள்வோரை அறிந்திருக்கிறோம். ஆனால் அவர்கள் சூழ்நிலையும் வாழ்ந்த முறையுமே கெட்டவர்களாய் போகாதபடி அவர்களை காக்கின்றன. நமக்குச் சோதனை நேரிடாவிட்டால் நம்மைச் சோதனைக்கு எதிர்த்து நின்றவர்கள் என்று பாராட்டலாகாது.

அத்தகைய தடங்கள் எதையும் கடவுள் ஆதாமுக்குத் தரவில்லை. தேர்ந்தெடுக்கும் உரிமையை அவனுக்கு ஈந்ததோடு அதனைக் கையாளுவதற்கு வேண்டிய வாய்ப்புகளையும் அவனுக்கு அளித்தார். கடவுள் செய்வதெல்லாம் பூரணமானதாகவே இருக்கும். எனவே, ஆதாம் கடவுளைச் சேவிப்பானா சேவிக்கமாட்டானா எனச் சோதித்தறிய ஒரு பூரண சூழ்நிலையையும் அவனுக்குத் தந்தருளினார்.

பாவமற்றவனாக ஆதாம் ஏதோன் தோட்டத்தில் இருந்தான். கறையில்லாத தன்மையுடையவனாயிருந்தான். இன்னும் எழுதப்பெறாத மனுக்குலத்தின் வரலாறு மிகவும் சுத்தமான ஒரு பெரிய தாள்போல அவன் முன் கிடந்தது. அவ்வரலாற்றின் முதல் அத்தியாயத்தை அவன் எழுத வேண்டியிருந்தது. அவனது வருங்காலச் சந்ததியார் வழிநடக்கும் பாதை அந்த முதலாம் அத்தியாயத்திற்கேற்ப இருக்கும்.
கடவுளின் செயல் முடிவடைந்திருந்தது. பூமியில் தோட்டமொன்றை அவர் படைத்து மனிதனுக்குத் தேவையானதை எல்லாம் அதில் வைத்திருந்தார். தம் சொந்த சாயலில் பூரணமான ஒரு மனிதனை அவர் படைத்திருந்தார். மனதையும் ஆன்மாவையும் அம்மனிதனுக்கு வழங்கித் தன் மனதைப் பயன்படுத்தவும், தான் நலமென்று கண்டபடி தன் ஆன்மாவுக்குச் செய்யவும் கடவுள் அவனுக்கு முழு சுயாதீனத்தை அருளியிருந்தார். பின்பு, ஞானமுள்ள ஒரு தந்தையைப்போல, தம் பிள்ளையாகிய மனிதன் எதைத் தெரிந்துகொள்ளுவான் என்பதைக் காண அவர் காத்திருந்தார்..

அதுவே ஆதாமுக்கு உண்டான சோதனை! அவன் சுயாதீனமுள்ள தன் சித்தத்தைப் பயன்படுத்தி சரியான பாதையையோ தவறான வழியையோ தெரிந்தெடுக்கும் வேளை அது. தான் தெரிந்து கொள்வதற்கு வேறு வழியே இல்லை என்றல்ல. தான் விரும்பினதையே தெரிந்துகொண்டு நடந்தான்.

ஆம், ஆதாம் தனக்குச் சித்தமானதைத் தேர்ந்தெடுத்தான். அதன் விளைவுகளையும் அநுபவித்தான். மனுக்குலத்தார் யாவரும் பின்பற்றப் போகிற மாதிரியை நிறுவிவிட்டான். ‘ஆகையால் ஒரே மீறுதலினாலே எல்லா மனுஷருக்கும் ஆக்கினைக்கு ஏதுவான தீர்ப்பு உண்டானது” (ரோமர் 5:18) என வேதம் கூறுகிறது. ஏனெனில் மனித இனமாகிய ஆற்றுக்கு ஆதாமே ஊற்றுக் கண்ணாவான். பளிங்குபோல் தெளிவான நீரூற்றைப்போல அவன் தோன்றினர். அவ்வூற்றிலிருந்து பாய்ந்த தண்ணீர் இன்னும் செழிப்புமான பசும் புல்வெளியில் பாயும் ஒர நதி ஆகலாம். அல்லது என்றும் பாறைகளில் மோதிக்கொண்டேயிருந்து, இருண்ட ஆழங்களில் கொந்தளித்து, நிர்ப்புந்தமாயக் கிடந்து, தன்னைச் சூழ்ந்துள்ள நிலத்திற்கு வளத்தையும் மகிழ்ச்சியையும் நல்க முடியாமல் கலங்கியோடும் காட்டாறாகலாம். இவ்விரண்டில் ஒன்றைத் தெரிந்துகொள்ள அவன் அனுமதிக்கப்பட்டான்.

உலகம் நீண்டகாலமாக துன்பத்தில் சிக்கித்தவிக்கின்றது. ஆனால் இதைக்குறித்துக் கடவுளைக் குறைகூறக்கூடாது. குற்றம் ஆதாமுடையதேயொழிய வேறல்ல. தேர்ந்தெடுக்கும் உரிமை பெற்று, கடவுளுடைய சத்தியத்திற்குச் செவி சாய்க்காமல் பிசாசு கூறிய பொய்களைக் செவிமடுப்பதையே தெரிந்துகொண்ட ஆதாமே குற்றவாளி. ஆதாம் விட்டு வழுவிப் போன நிலையை மீண்டும் அடையும்படி மனிதர் எடுத்து வரும் பயனற்ற முயற்சியின் வரலாறே அன்று தொடங்கி இன்றுவரை மனுக்குலத்தாரின் வாழ்க்கை வரலாறாகும்.

‘ஆனால் இது நியாயம் அல்லவே. முதல் மனிதன் என்றோ பாவம் செய்ததினிமித்தம் இன்று நாம் ஏன் பாடுபட வேண்டும்? மனுக்குலம் தான் இழந்ததை ஏன் இடைக்காலத்திலே திரும்பப் பெறவில்லை? நம் வாழ்நாளெல்லாம் நாம் தண்டிக்கப்படுவானேன்? ” என்று நீங்கள் கேட்கலாம்.

நதியின் உவமானத்தை மீண்டும் கவனிப்போம். அது குளிர்ந்ததும் இருண்டதுமான ஓர் ஆறு. ஆழமான மலைப்பிளவின் இடையே அது பாய்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த ஆறு தனக்கு மேலே உள்ள வெப்பமும் இனிதுமான வயல்வெளிகளை நோக்கி ஏன் திரும்ப ஓடக்கூடாது. அது பூமியிலிருந்து பாய்ந்தோடும்போது மகிழ்ச்சியாய்த் துள்ளியோடும் நீரோடையாக இருந்ததே. இப்போது தன் முந்திய நிலைமையை ஏன் அடையக்கூடாது? தான் செல்லும் சஞ்சலம்மிக்க வழியை விட்டு ஏன் நீங்கக்கூடாது?

நதியானது அவ்வாறு செய்வதற்கில்லை. ஏனென்றால் அதனால் முடியாது. தான் எப்போதும் செய்துவருவதையேயன்றி வேறு எதையும் செய்ய அதற்கு சக்தி இல்லை. செங்குத்தான மேட்டினின்று இருளான பள்ளத்தில் பாய்ந்தபின்னர் மேலே உள்ள சூரிய ஒளிமிக்க நிலத்தை அடைய அது தன்னைத்தானே உயர்த்திக்கொள்ள முடியாது. அது உயர்த்தப்படக்கூடிய வழிவகைகள் அண்மையிலே உள. ஆனால் அவற்றைப் பயன்படுத்த அந்த நதிக்குத் தெரியாது.

மனுக்குலமாகிய நதியை அதன் கடுந்துயரத்தினின்று விடுவித்துச் சமாதானப் பள்ளத்தாக்கில் மீண்டும் சேர்க்குக்கூடிய ஓர் அற்புதம் உண்டு. ஆனால் நதி அதை அறிவதோ கவனிப்பதோ இல்லை. வளைந்து வளைந்து செல்லும் வழியில் ஓடி முடிவில் அழிவாகிய கடலிலே பாய்வதைத் தவிர வேறேன்றையும் தான் செய்ய முடியாது என்று அது நினைக்கிறது போலும்.

ஆதாமின் காலம் முதற்கொண்டு இதுவரைக்கும் மனிதரின் வாழ்க்கை வரலாறு இந்த ஆற்றின் கதைதான். ஆதாவது வளைந்தும் திருகியும் சென்று திகிலுண்டாக்கும் இருட்டான ஆழங்களுள் முழ்குதலே மனிதரின் வரலாறாகும். உதவி வேண்டுமென்று நாம் உரக்கக் கத்தினாலும் ஆதாமைப்போலவே மனதாரத் தவறான பாதையைத்தான் தெரிந்து கொள்ளுகிறோம். நம் மனக்கசப்பில் நாம் கடவுளுக்கு விரோதிகளாகி நாம் தவிக்கும் சிக்கலான நிலையின் நிமித்தம் அவரைக் குற்றப்படுத்துகிறோம். அவரது ஞானம், இரக்கம், அன்பு ஆகியவற்றைத் தவறெனத் தீர்க்கிறோம்.

நம் அரசுக்கு ஜனாதிபதி தலைவராயிருப்பதுபோல மனித இனத்திற்கு ஆதாம் தலைவனாக இருந்ததை நாம் மறந்துவிடுகிறோம். இந்நாட்டு ஜனாதிபதி செயலாற்றும் போது உண்மையில் நமது தேசத்தார் யாவரும் அவர் வழியாக அச்செயல் புரிகின்றனர். குடியரசுத் தலைவர் செய்யும் தீர்மானம் நாட்டு மக்கள் அனைவரின் தீர்மானமாகவே கருதப்படுகிறது.

ஆதாம் மனித குலத்தின் தலைவன். அவன் தவறி சோதனைக்குட்பட்டபோது அவனோடுகூட அவன் சந்ததியாரும் பாவத்துக்குட்பட்டனர். ஏனெனில் ஆதாமின் பாவம் அன்று பிறந்திராத அவன் சந்ததியாரையும் தொடர்ந்து பிடிக்கும் என்று வேதாகமம் வெகுதெளிவாகத் தெரிவிக்கிறத. ஆதியாகமம் மூன்றாம் அதிகாரத்தில் பதினேழாம் வாக்கியம் முதல் பத்தொன்பதாம் வாக்கியம் வரை கூறியிருப்பது உண்மையென நன்றாயறிவோம். ஆதாமின் செயலில் நாம் அடைந்துள்ள துன்பத்தை இந்த வாக்கியங்கள் விவரிக்கின்றன. ‘பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும். நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்தத்தோடே அதின் பலனைப் புசிப்பாய். அது உனக்கு முள்ளும் குருக்கும் முளைப்பிக்கும். வெளியின் பயிர்வகைகளைப் புசிப்பாய். நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய். நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய் ” என இவ்வாக்கியங்கள் உரைக்கின்றன.

ஏவாள் என்பவளுக்கு கடவுள் சொன்னது: நீ கர்ப்பவதியாயிருக்கும்போது உன் வேதனையை மிகவும் பெருகப் பண்ணுவேன், வேதனையோடே பிள்ளை பெறுவாய்: உன் ஆசை உன் புருஷனைப்பற்றியிருக்கும். அவன் உன்னை ஆண்டுகொள்வான்” என்பதே.

அதாவது, ஆதாம் செய்த மூல பாவத்தின் காரணமாக, அதற்கு முன்னே அழகும் உணவுக்கு ஏற்றுதுமான தாவரங்களை மட்டுமே விளைவித்த நிலம் இப்போது நல்லவைகளையும் தீயவைகளையும் விளைவிக்கிறது. ஆதி மனிதனுக்குத் தேவையான உணவு அந்தத் தோட்டத்தில் விளைந்தது. உடையோ, விடோ அவனுக்கு வேண்டியதாக இருக்கவில்லை. இப்போதோ, அவன் சந்ததியாருக்குத் தேவையான இப்படிப்பட்டவைகளைச் சம்பாதிக்க அவர்கள் தங்கள் வாழ்நாளெல்லாம் பாடுபட்டு உழைக்க வேண்டும். பெண்ணானவள் ஆதியில் மற்ற சகல உயிரினங்களைக்காட்டிலும் கவலையற்றவள். இப்போதோ, அவள் குமாரத்திகள் துக்கத்தாலும் வேதனையாலும் நெருக்கப்படுகின்றனர். மேலும் ஆவிக்குரிய மரணத்திற்கும் சரீரத்திற்குரிய சாவுக்கும் ஆணும் பெண்ணும் ஆளாகியிருக்கின்றனர்.

ஆதாமின் வழியாகப் பாவம் மனிதருக்குள் புகுந்தது. அக்கால முதலே அதிலிருந்து விடுதலை பெற மக்கள் வீணில் முயன்று வந்திருக்கின்றனர். நம்மை தீமை அறியத்தக்க மரத்தின் கனியை அவன் உண்டால் மரிப்பது திண்ணம் என்று கடவுள் ஆதாமை ஏற்கெனவே எச்சரித்திருந்தார் என்று வேதம் கற்பிக்கிறது. ஆதாமும் ஏவாளும் பலுகிப்பெருகிப் பூமியை நிரப்ப வேண்டுமென்று கடவுள் அவர்களுக்குக் கட்டளையிட்டதாகவும் வேதாகமம் கூறுகிறது. எனினும் அவர்கள் கடவுள் சாயலில் படைக்கப்பட்டிருந்தும் அவர்கள் பாவத்திற்கு ஆளானபின் தங்கள் சொந்த சாயலில் தங்களைப் போன்ற பிள்ளைகளைப் பெற்றெடுத்தனர். அதன் விளைவாகக் காயீனும் ஆபேலும் சாவுக்கேதுவான பாவநோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதைத் தம் பெற்றோரிடமிருந்து அவர்கள் பெற்று, தங்கள் மரபினர் அனைவருக்குமே அதைத் தந்தனர். நாம் எல்லாருமே மரபுரிமைப்படி பாவிகள்: எவ்வளவுதான் முயன்றாலும் அதை விட்டுத் தப்பியோட முடியாது.

ஆதாம் இழந்துவிட்ட நிலையை திரும்பவும் அடைய எல்லா விதத்திலும் நாம் முயலுகிறோம். நமது சீர்கேடும் பாவமுமான நிலையை நம்மை விட்டகற்றக் கல்வி, தத்துவ அறிவு, மதம், அரசுகள் ஆகியவற்றின் மூலம் வெகுவாக முயன்றிருக்கிறோம். உன்னதத்திலிருந்து மட்டுமே கிடைக்கக்கூடிய தெளிவான அறிவைக் கண்டுகொண்டு மனிதன் செய்ய வேண்டுமென்று கடவுள் விரும்பியவற்றைப் பாவம் மட்டுப்படுத்தியுள்ள நம் மனதால் நிறைவேற்று முனைந்துள்ளோம். நமது நோக்கம் நல்லதுதான். நாம் எடுக்கும், முயற்சிகளில் சில பாராட்டுத்தக்கவையே எனினும் அவையெல்லாம் நாம் அடைய வேண்டின இலக்கினை அடையாமல் போகின்றன. நம் அறிவு, நூதன ஆற்றல்கள், பெருக்கங்கள், பேihவலாய்ப் போடும் திட்டங்கள் ஆகிய இவை நம்மைச் சற்று முன்னேற்றமடையச் செய்கின்றன. ஆயினும் நாம் திரும்பத் திரும்ப பின்வாங்கி நமது முந்திய நிலையையே மீண்டும் அடைகிறோம். ஏனெனில், ஆதாம் செய்த தவறைத்தான் நாம் இன்னும் செய்துகொண்டிருக்கிறோம். அது யாதெனில், கடவுளுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதற்குப் பதிலாக நம் சுய உரிமை, திறமை ஆகிய இவற்றால் அரசாள நாம் இன்னும் முயன்று கொண்டிருக்கிறோம்.

உலகத்தைப் பாவம் பற்றிக்கொள்ள அனுமதித்தமையால் கடவுள் அநீதியும் அநியாயமுமானவர் என்ற முடிவுக்கு வருமுன் இவ்விஷயத்தை இன்னும் சற்று ஊன்றிக்கவனிப்போமாக. நாம் அகப்பட்டுள்ள இடுக்கண்ணிலிருந்து வெளியேறும் வழியை நமக்குக் காட்டக் கடவுள் அளவு கடந்த இரக்கத்தால் தம் மைந்தனை இவ்வுலகில் அனுப்பினார். ஆதாமைச் சோதித்த சோதனைகளை அநுபவித்து அவற்றல் வெற்றி சிறக்க அவரை அனுப்பினார். ஆதாமைச் சோதித்ததுபோலவே இயேசுவையும் சாத்தான் சோதித்தான். எவ்வாறெனில் தான் ஆதிகாலத்தில் ஏவாள் மூலம் ஆதாமைச் சோதித்ததுபோலவே அவர் கடவுளை விட்டுவிலகினால் அவருக்கு வல்லமையும் மகிமையும் ஈவதாக அவன் சொன்னான்.

இயேசுகிறிஸ்துவோவெனில் சோதனையை எதிர்த்து நின்றார். இதுதான் ஆதாமுக்கும் அவருக்குமுள்ள பெரிய வேறுபாடு! உலகத்தின் எல்லா இராச்சியங்களையும் அவருக்கு காட்டி அவற்றின் மகிமை முழுவதையும் அவருக்குத் தருவதாக அவன் வாக்களித்தபோது நமது கர்த்தர் கூறியதாவது: ‘அப்பாலே போ சாத்தானே, உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே” (மத்தேயு 4:10) என்பதே. தம்முடைய பாவமற்ற பண்பை வருங்கால மக்கள் அனைவருக்கும் வெளிப்படுத்தும் பொருட்டு அவர் சோதனைக்காரனை முற்றிலும் வென்றார்.

மிக மோசமான இயல்பின் காரணமாக நமக்குண்டான பலவீனத்தில் நாம் ஆதாமின் பின்னடியார் என்பதை நிரூபித்து அவனுடைய அடிச்சுவடுகளைக் கவனமாகப் பின்பற்றியுள்ளோம். நாம் ஆதாமைச் சபித்தாலும் இன்னும் அவனைப்போலவே நடக்கிறோம்.

ஆதாமுக்குண்டான சோதனையை நாமும் அனுதினமும் அநுபவிக்கிறோம். கடவுளின் மெய்யான வார்த்தையையே தேர்ந்தெடுத்துக்கொள்ளும் வாய்ப்புக்கள் நமக்கு உண்டாக்கின்றனர். ஆதாம் பறிகொடுத்த அழகிய தோட்டத்தை நாம் சற்றுக் கிட்டி அணுகவும் பிறரை அங்கு அழைத்துச் செல்லவும் வாய்ப்பு நமக்கு நாடோறும் உண்டு.

ஏமாற்றம், பிணி, சாவு ஆகிய இவை அற்றுப் போகும் நாளைக் காண நாம் மிகவும் நாடுகிறோம். ஆனால் ஆதாமின் பின்னடியாராக நாம் இருக்கும்வரைக்கும் இந்தக் கனவு நனவாக முடியாது. நமது பாவப்பழி நிவர்த்தி செய்யப்பட வேண்டும். மனுக்குலத்தாரின் அடிப்படையான இந்தத் தேவையை நிறைவாக்க கடவுள் என்ன செய்திருக்கிறார் என்பதைப் பின்வரும் அத்தியாயயங்களில் கவனிப்போம்.
ஆதிகாலம் முதற்கொண்டு இந்நாள் மட்டாக மனிதர் அவபக்தியான அதிகார வேட்டை கொண்டவர்கள்: தங்களுக்கு அருளப்பட்ட தேர்ந்தெடுக்கும் உரிமையைத் தங்கள் சுயநலத்துக்காகவே பயன்படுத்த உறுதிகொண்டவர்கள். இதன் பயனாக அழிவை அணுகியுள்ளனர். பல நாகரீகங்களின் அழிபாடுகள் பூமி எங்கும் சிதறிக் கிடக்கின்றன. நிலைத்து நிற்கக்கூடிய ஒரு நாகரீகத்தைக் கடவுள் ஒத்தாசையின்றி மனிதர் கட்டிவிட முடியாது என்ற உண்மைக்கு இவை மவுனமான சான்றுகள். புதிய புதிய அழிபாடுகளும் அவதியும் நாடோறும் சேர்க்கப்பட்டு வருகின்றன. எனினும் வெகு கேடு விளைவிக்கும் வழியிலேதான் மனிதர் இன்னும் செல்லுகின்றனர்.
ஆனால் கடவுள் தம் எல்லையற்ற அறிவுடனும் இரக்கத்துடனும் பார்த்துக்கொண்டே காத்திருக்கிறார். அவர் பொறுமையும் பரிவும் அறிவுக்கெட்டாதவை. தம் இரக்கத்தை நாடி வரும் ஒவ்வொருவருக்கும் இரட்சிப்பையும் சமாதானத்தையும் அருள அவர் காத்து நிற்கிறார். ஆதாமுக்கு முன் கடவுள் வைத்த இரண்டு பாதைகளும் நம் ;முன்னும் இருக்கின்றன. தேர்ந்தெடுக்கும் உரிமை நமக்குமுண்டு. நியாயப்படி நாம் அடையவேண்டிய தண்டனையைக் கடவுள் வருவிக்காமல் தடுத்து வைத்திருக்கும் கிருபையின் காலமே இது.

மனுக்குலத்தார் மகிழ்ச்சியாக வாழாதபடி பாவமே தடுக்கிறது. எல்லா நிறைவுகளையும் கொண்டதாகிய உலகு ஒன்றை மனிதர் கனவு கண்டுகொண்டிருக்கிறாhகள். ஆயினும் பாவத்தின் காரணமாகவே அந்த நல்வாழ்வை அடையாதிருக்கிறார்கள். அவர்களது திட்டங்களும் நாகரீகங்களும் முடிவில் அழிவுற்றுப்போகின்றன. ஏனெனில் அவர்களின் செயல்கள் அநீதியாகவே ஆற்றப்படுகிறன்றன. தற்காலம் நம்மைச் சுற்றிலும் அழிவுபட்டுக் கிடப்பனவெல்லாம் பாவமானது உலகை நிரப்பியிருக்கிறதென்பதற்குச் சொல் நியமிக்க சான்றுகளே ஆகும்.

இவ்வுலகத்தின் எல்லாப் பாகங்களிலும் எப்போதும் இயங்கும் ‘காரண விளைவு” விதியை மனிதர் கவனிப்பதில்லைப் போலும். விளைவுகள் மிகத் தெளிவாகக் காணப்படுகின்றன. ஆனால் மறைவில் கிடப்பதும் அனைத்ததையும் இயக்குகிறதுமான காரணம் தெளிவாய்த் தெரிவதில்லை. ‘முன்னேற்றம்” என்ற தற்காலத் தத்துவத்தால் விளையும் கேடாக இருக்கலாம். அல்லது அறிவீனமானதும் மனிதர் படைத்ததுமான இக்கோட்பாட்டால் மக்கள் மிகவும் மயங்கிப் பரீபூரண நிலையை நோக்கி மனித குலத்தார் மெதுவாக ஆனால் திட்டமாக முன்னேறிக்கொண்டிருக்கிறார்கள் என்ற நம்பிக்கையைப் பற்றிக்கொண்டிருப்பதே அதற்குக் காரணமாயிருக்கலாம்.

உலகின் இன்றைய இக்கட்டான நிலை மக்களின் முன்னேற்றத்தில் ஒரு இடைநிகழ்ச்சியேயன்றி வேறல்ல என்றும் தத்துவ அறிஞர் பலர் வாதாடுவர். மனுக்குலத்தாரின் வரலாற்றில் தற்கால நம்பிக்கையற்ற நிலையைப் போன்ற அநேக சமயங்கள் இதற்கு முன் நேர்ந்ததுண்டு என்பர். நாம் தற்காலம் வாழ்ந்துவரும் துக்ககரமான நலைமை நல்ல காலம் ஒன்றைப் பிறப்பிக்கும் பிரசவ வேதனையேயொழிய வேறல்ல என்று தத்துவ அறிஞர் கூற முன்வருவர்! உயிர் வாழ்க்கையின் பாலர் வகுப்பில் தடுமாறிக்கொண்டிருக்கும் பிள்ளைகள் போலவே மனிதர் இப்பொழுது இருக்கிறார்களாம். பல நூற்றாண்டுகள் சென்ற பின்னர் மட்டும் மக்கள் தாங்கள் எய்தும் முதிர்ச்சியையும் அறிவையும் அடைவார்களாம்!
படைப்பவர் கெடுப்பவன் ஆகிய இருவரையுமே இயற்கையானது வெளிப்படுத்துகிறதாக வேதாகமம் தெளிவுறக் காட்டுகிறது. ஆனால் இதை ஒப்புக்கொள்ள விஞ்ஞானிகளுக்குக் கொஞ்சமும் மனதில்லை. கெடுப்பவனின் செயல் பற்றி மக்கள் படைத்தவரைக் குறை கூறுகின்றனர். உலகமானது கடவுள் அதை உண்டாக்கிய நிலைமையில் இப்பொழுது இல்லை என்பதை மனிதர் மறந்துவிடுகின்றனர். அது சீர்குலைந்துவிட்டது. உலகத்தை நல்லதாகக் கடவுள் உண்டாக்கினார். பாவமோ அதை முழுவதும் கொள்ளையடித்துவிட்டது. கடவுள் ஆதிமனிதனைக் குறைவற்றவனாக உண்டாக்கினார். பாவம் புகுந்து அவனைப் பொல்லாதவனாக மாற்றிவிட்டது.

சகல விதமான பொல்லாங்கும் ஆதியில் ஆதாம் செய்த பாவத்தின் தன்மையாகனது. அது மனித இனத்துள் முதல் முதலாக நுழைந்த நாள் முதல் இதுவரைக்கும் எவ்வித மாற்றமும் அடையாதிருக்கிறது. அது பலவிதத்தில் தன்னை வெளிப்படுத்துகிறது. ஆயினும் அதன் உள்ளான தன்மை ஒன்றேயாகும். நாகரீகமடையாத ஓர் ஆப்பிரிக்கன் காட்டு வழியோரத்தில் ஈட்டியும் கையுமாய் பதுங்கி நின்று பிறனைக் கொன்றாலும் சரி, அதை காட்டில் தங்களுக்கு ஆபத்து நேரிடும் என எதிர்பாராத ஒரு சிற்றுஷரின் மக்கள் மீது குண்டு வீசும்படி கல்வியறிவும் நல்ல பயிற்சியும் உடைய ஒரு விமானி ஒரு விமானத்தை ஒட்டினாலும் சரி, இவ்விருவரையும் தூண்டுவது ஒரே வகையான பாவமேயாகும்.

நாகரீகத்தின்படி பார்த்தால் இவ்விருவருக்கும் நூற்றுக்கணக்கான ஆண்டு வேறுபாடு உண்டு. எப்படியெனில் ஒருவன் மற்றவனைக் காட்டிலும் அதிக ‘முன்னேற்றம்” அடைந்தவன் என்று கருதப்படுகிறான். மனிதரின் செயலான நாகரீகத்தின் அனுகூலங்கள் அனைத்தும் அவனுக்குக் கிட்டியுள்ளன. ஆனால் மற்றவன் இன்னும் ‘நாகரீகம் அற்ற” நிலையிலேயே இருக்கிறான். அப்படியிருந்தாலும் அவர்கள் உண்மையாகவே மிக வேறுபட்டவர்களா? அவர்கள் இருவருமே அச்சத்தாலும் ஏனைய மக்கள்பால் கொள்ளும் அவ நம்பிக்கையாலும் ஆளப்படுகிறார்களன்றோ? தங்கள் சகோதரனுக்கு என்ன நேர்ந்தாலும் தங்கள் நோக்கம் நிளைவேறினால் போதும் என்று தன்னலம் கருதுவோர்தானே இருவரும்? ஈட்டியைக் கொண்டு கொல்வதைக் காட்டிலும் குண்டுபோட்டு அழிப்பது கொடுமையில் குறைந்ததல்ல. ‘அநாகரீகமானவர்கள்” ‘நாகரீகமானவர்கள்” ஆகிய அனைவருமே தங்கள் அயலாரின் அன்பு கூருவதைக் காட்டிலும் அவர்களைக் கொன்றொழிக்கவே மிக ஆவலுள்ளுவர்களால் இருப்பதால் நம் கஷ்டங்களுக்குத் தப்பித்துக் கொள்ளுலாம் என நம்புவது வீணேயாகும்.

மனுக்குலத்தின் வரலாற்றில் காணப்படும் துக்கம், மனக்கசப்பு, கொடுமை, சோக நிகழ்ச்சிகள், வெட்கம் ஆகிய இவையெல்லூம் பாவம் என்ற சிறு பதத்தில் அடங்கியுள்ளன. இது ஒருவருக்கும் பிரியமான ஒரு வார்த்தையல்ல. நவநாகரீகமான பதமும் அல்ல. என்றாலும் பயங்கரமும் உண்மையுமான ஒரு சொல்லேயாகும்!
அவர்கள் பெற்றோரையும் முன்னோரையும் போல அவர்களும் பாவிகள் என்று மக்குளுக்குச் சொன்னால் அது அவர்களுக்குப் பிடிப்பதில்லை! அப்படியிருந்தும் வேதம் வலியுறுத்திக் கூறுவது: ‘வித்தியாசமே இல்லை, எல்லாரும் பாவஞ் செய்து தேவ மகிமைறயற்றவர்களாகி… (ரோமர் 3:22, 23) என்பதே. கடவுள் பார்வையில் உலகத்திலுள்ள ஒவ்வொரு மனிதனும் பாவிதான் என்று வேதம் கூறுகிறது. இத்தகைய வலிய கூற்றுக்கு யாராவது எதிர்த்துப் பேசனால் ஒரு திருச்சபை மூப்பரின் கதை என் நினைவுக்குவரும். அவா ஒரு நாள் தம் சபைப் போதகரிடம் பாவத்தைப் பற்றிப் பேச வந்தாராம்.

போதகரைப் பார்த்து அவர் இவ்வாறு கூறினார். ‘ஐயா! பாவத்தைப்பற்றி இவ்வளவு அதிகமாகவாவது தெளிவாகவாகது தாங்கள் பேசக்கூடாது என்று சபையாராகிய நாங்கள் நினைக்கிறோம். நீங்கள் இப்பொருளைப் பற்றி இவ்வளவு அதிகமாகப் பேசுவதை நம் இளைஞர் கேட்டால் அவர்கள் மிக எளிதாகப் பாவிகள் ஆகிவிடுவார்கள் என்று நாங்கள் நினைக்கிறோம். பாவத்தை தவற என்ற பெயரால் நீங்கள் அழைத்தால் என்ன? அல்லது நம் வாலிப மக்கள் நன்கு நிதானிக்காமல் குற்றத்திற்குள்ளாகின்றனர் என்று சொல்லுங்கள். ஆனால் தயவு செய்து இத்தனை வெளிப்படையாகப் பாவத்தைப் பற்றிப்பேச வேண்டாம்.

இதைக்கேட்ட போதகர் உயரமான ஓர் அலமாரியிலிருந்து விஷம் நிறைந்த புட்டி ஒன்றை எடுத்து வந்து, அந்த மூப்பருக்குக் காட்டினார். ‘விஷம்! தொடாதே!” என்று தெளிவாகப் பெரிய சிவப்பு எழுத்துக்குளில் அதில் எழுதப்பட்டிருந்தது. ‘இந்தச் சீட்டைக் கிழித்து விட்டு ‘இனிய பழரசம்” என்று எழுதி ஒட்டட்டுமா? அது சரி என்று சொல்வீர்களா? எல்லாரும் பிரியப்படக் கூடிய பெயரை இந்தச் சீ;ட்டில் எழுதினால் விஷத்தின் ஆபத்து அதிகமாகிறதன்றோ? ” என்று கேட்டாh அந்த போதகர்.
ஆதாமைக் கெடுத்த பாவம்தான் இப்பொழுது நம்மையும் வாட்டுகிறது. நம் மனதுக்கு சற்று உகந்த ஒரு பெயரைக் கொண்டு அதை அழைப்பது நமக்கு நன்மையை அல்ல. மிக்க தீங்கையே விளைவிக்கும். இதை அழைக்குப்புதுச்சொல் வேண்டியதில்லை. ஏற்கனவே உள்ள சொல்லின் பொருளைப் புரிந்து கொள்வதே நாம் செய்ய வேண்டியது! ஏனென்றால், தற்கால உலகில் பாவம் மிகுதியாகப் பாவி இருந்தும் திரளான மக்களுக்கு அப்பதத்தின் அர்த்தம் சற்றேனும் தெரியாது. பாவத்தைப்பற்றிய தவறான கருத்தே அநேகர் குணப்படாதபடி தடுத்து நிற்கிறது. பாவத்தைப்பற்றிய அறிவின்மையே ப கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவுக்கேற்ற வாழ்க்கை நடக்கத் தடையாக அமைகிறது.

‘பரலோகத்தைப்பற்றிப் பேசுவோரெல்லாம் அதனுள்ளே செல்லுவதில்லை” என்ற சொல் பாவத்தைப் பற்றியும் உண்மையே ஆகும். தெளிவாக உணர்ந்தவர்கள் அல்லர். பாவத்தை குறித்துப் பரிசுத்த வேதாகமம் போதிப்பதை நாம் நன்கறிந்து கொள்ள வேண்டியது மிகவும் முக்கியமேயாகும்.

நாம் பாவத்ததை இலேசாக எண்ணி, அது ‘மனித பலவீனம்” எனலாம். அது ஒரு பெரிய காரியமல்ல என்று கூறலாம். ஆயினும் அது மிகவும் துக்ககரமானது என்று கடவுள் கூறுகிறார். எப்படியோ நிகழ்ந்து விட்டது என்று சொல்லி நாம் தட்டிக்கழிக்கலாம். ஆனால் அது அதிக அருவருப்பானது என்று கடவுள் தீர்க்கிறார். மனிதர் தங்கள் பாவங்களைக் குறித்து சாக்குப்போக்கு சொல்லுகின்றனர். ஆனால் பாவத்தை அவர்களுக்கு உணர்த்தி அவர்களை இரட்சிக்கக் கடவுள் விரும்புகிறார். வேடிக்கை காட்டும் ஒரு பொம்மை அல்ல. பாவம்: நாம் பயந்து விலகியோட வேண்டியது அது. அப்படியிருக்க, கடவுள் பார்வையில் பாவமானது இன்னதென்பதைக் கற்றுக்கொள்வோமாக.

ரிச்சர்டு பீல் (சுiஉhயசன டீநயட) என்னும் அறிஞர் பாவத்தை விளக்கும் ஐந்து சொற்களைத் தருகிறார்.

1. பாவம் என்பதற்கு மீறுதல் என்று அர்த்தம். அதாவது கடவுளுடைய நியாயம் பிரமாணத்தை மீறுதலாகும் (1யோவான் 3:4). நன்மைக்கும் தீமைக்கும் நடுவே கடவுள் எல்லைக்கோடு வரைந்திருக்கிறார். அந்தக் கோட்டை நாம் தாண்டும்போதெல்லாம் (விலக்கப்பட்ட தீங்கினுள் புகும் போதெல்லாம்) நாம் கடவுளின் நியாயப்பிரமாணத்தை மீறுகிறோம். அவர் விதித்த பத்து கற்பனைகளுக்கு ஏற்ப நாம் வாழத்தவறும்போதெல்லாம், மலைப்பிரசங்க அறிவுரைகளுக்கு முரண்பட்டு நடக்கும் போதெல்லாம் கடவுளுடைய பிரமாணத்தை மீறிப் பாவம் செய்தவர்கள் ஆகிறோம்.

நாம் யாவரும் குற்றவாளிகள் என்பதை யாக்கோபு தெளிவாக்கியுள்ளார். ‘அவனவன் தன்தன் சுய இச்சையினாNலு இழுக்கப்பட்டு சிக்குண்டு , சோதிக்கப்படுகிறான். பின்பு இச்சையானது கர்ப்பம்தரித்து, பாவத்தை பிறப்பிக்கும் பாவம் பூரணமாகும்போது மரணத்தைப் பிறப்பிக்கும்” (யாக் 1:14-15) என்று அவர் கூறுகிறார்.

கடவுளுடைய விதிகளை நாமெல்லாரும் மீறியிருக்கிறோம். அவர் கட்டளைகளை நாம் கைக்கொள்ளவில்லை. எனவே நாம் அனைவரும் பாவிகள் என்று அழைக்கப்படுவது அவசியமேயாகும்.

2. அக்கிரமம் என்று பாவத்தை வேதம் வர்ணிக்கிறது. அக்கிரமமானது சரியானதை விட்டு விலகுதல் ஆகும். ஒரு குறிப்பிட்ட செயல் திட்டவட்டமாக விதியால் விலக்கப்பட்டிருந்தாலும் சரி, விலக்குப்படாவிட்டாலும் சரி, சரியானதை விட்டு நீங்குதல் அக்கிரமமேயாகும். அக்கிரமம் நம் உள்ளார்ந்த சித்தத்தைப் பொறுத்தது. இப்படிப்பட்ட அக்கிரம செய்தைகளைத்தான் கடவுளுக்கும் மனிதருக்கும் தெரியாத படி மறைத்துப்பார்க்கிறோம். இவை சூழ்நிலையின் வலிமையால் சில சமயங்களில் நாம் செய்துவிடும் பொல்லாத செயல்கள் அல்ல. கெட்டுப்போன நம்முடைய சுபாவத்தினின்று பிறக்கும் தவறுகளே இவை.

இந்த உள்ளார்ந்த கெட்ட நிலையை இயேசு இவ்வாறு விபரிக்கிறார்: ‘;மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும். களவுகளும், பொருளாசைகளும்,துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதிகேடும், புறப்பட்டுவரும். பொல்லாங்கானவைகளாகிய இவைகளெல்லாம் உள்ளத்திலிருந்து புறப்பட்டு மனுஷனைத் தீட்டுப்படுத்தும்” என்றார் (மாற்கு 7:21-23)

3. அடையவேண்டிய இலக்கை அடையாமை என்று வேத நூல் பாவத்தை விளக்குகிறது. கிறிஸ்துவே கடவுள் மனிதன் முன் வைத்த இலக்கு. கிறிஸ்துவின் பரிசுத்த வாழ்க்கையைப் போன்று வாழ்வதே உயிர்வாழ்ககையின் சரியான நோக்கமாகும். உலகில் மக்கள் எதை எய்யக்கூடும் என்பதைக் காட்டவே அவர் வந்தார். நாம் அவர் காட்டிய மாதிரியைப் பின்பற்றுத் தவறும்போது குறிதப்பி, தெய்வீகதரத்தை அடையாமல் போகிறோம்.

4. பாவமானது அத்துமீறி நடப்பதே ஆகும். அதாவது தேவசித்தத்திற்கு விரோதமாய் மனிதசித்தம் எழும்புதல். கடவுள் பால் அன்புகூராமை மட்டுமே பாவம் என்று எண்ணவேண்டாம். ஓருவர் கடவுளுக்குப்பதிலாகத் தன் சுய நலத்தைத் தேர்ந்தெடுத்தல் பாவமாகும். ஒருவன் தன் முழு இருதயத்தோடும் கடவுளைத் தழுவாமல் தன்னைத் தான் நேசிப்பதும்பாவம். களவையும் பொய்யையும் போலவே ‘நான்” என்ற அகங்காரமும் தன்னலமும் பாவத்தின் அடையாளங்களே. ஒருவேளை இவைகளே பாவத்தின் மிகத்தந்திரமும் அழிவு உண்டாக்கக்கூடியதுமான அமைப்பு எனலாம். ஏனெனில் இவ்வுருவத்தில் அது தோன்றும் பொழுது அது விஷம் என்பதைக் காணாமல் இருப்பது மகி எளிது. தங்களையே பற்றிப் பிடித்துக்கொள்வோர், தங்கள் விவகாரங்களில் மட்டுமே கருத்தைச் செலுத்தித் தங்களஇ உரிமைகளை மட்டுமே பாதுகாக்கப் போராடுவோர் ஆகிய இவர்கள் எல்லாரும் குடிகாரரையும் வேசிகளையும் போலவே பாவிகளே ஆவர்.

‘மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும்,தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?” (மாற்கு 8:36) என்றார் இயேசு கிறிஸ்து. தற்கால நடையில் மொழி பெயர்த்தால் இதனைப் பின்வருமாறு கூறலாமல்லவா? ‘ஒருவன் ஒரு பெரிய தொழிலதிபதியாக விளங்கியும் வாழ்க்கையில் ஒன்றையும் அநுபவிக்கமுடியாத வண்ணம் இரணப்பண்பளால் அரிக்கப்பட்டால் அவன் அடையும் ஆதாயம் என்ன? ஒரு சர்வாதிகாரி பாதி உலகத்தை வென்றுவிட்டாலும் பழிவாங்குபவனின் துப்பாக்கிக் குண்டுக்கும் கொலைகாரனின் கத்திக்கும் எப்போதுமே அஞ்சி வாழ வேண்டியதாயிருந்தால் அவன் பெறும் பயன் என்ன? ஒரு தகப்பன் தன் பிள்ளைகளைக் கடினமாக வளர்த்தும் பின்னர் அவர்களால் தள்ளுப்பட்டு வயோதிபக்காலத்தைக் தனித்துக் கழிக்க நேர்ந்தால் அவனுக்கு லாபம் என்ன? மெய்யாகவே ‘நான்” என்னும் பாவம் அழிவுக்குக் காரணமாகும் கொடிய பாவமே.

5. அவிசுவாசம் பாவமாகும். அவிசுவாசம் கடவுள் சத்தியபரர் என நம்பாமல் அவரை அவதிப்பதால் அது பாவம். ‘தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் அந்தச் சாட்சியைத் தனக்குள்ளே கொண்டிருக்கிறான். அந்தச் சாட்சியைத் தனக்குள்ளே கொண்டிருக்கிறான். தேவனை விசுவாசியாதவனோ தேவன் தம்முடைய குமாரனைக் குறித்துக் கொடுத்த சாட்சியை விசுவாசியாததினால் அவரைப் பொய்யராக்குகிறான்” (1யோவான் 5:10) என்று வேதம் கூறுகிறது.
அவிசுவாசமே பரலோகத்தின் வாசலை அடைந்து நரகத்தின் வாசலைத் திறந்து வைக்கிறது. அவிசுவாசமே கடவுளின் திருறையை புறக்கணித்துத் தள்ளிக் கிறிஸ்துவை இரட்சகர் என ஏற்க மறுக்கிறது. அவிசுவாசமே கிறிஸ்துவின் நற்செய்திக்குச் செவிச்சாய்க்காமல் கிறிஸ்துவின் அற்புதங்குளை மறுக்கச் செய்கிறது.

பாவம் மரண தண்டனையை வருவிக்கிறது. பாவத்தின் தண்டனையிலிருந்து தன்னைத்தானே விடுவிக்கவோ, மாசுபட்ட தன் இருதயத்தைச் சுத்திகரித்துக் கொள்ளவோ திறமையுடைய மனிதன் ஒருவனுமில்லை. தேவதூதராவது மனிதராவது பாவத்தை நிவர்த்தி செய்ய முடியாது. நாம் கிறிஸ்துவின்மட்டுமே பாவநிவாரணம் கண்டடையக் கூடும். பாவிகளுக்கு நிச்சயமாகவே உண்டாகப் போகிற அழிவிலிருந்து அவர்களை இரட்சிக்கக்கூடியவர் இயேசு கிறிஸ்து மட்டுமே. ‘பாவத்தின் சம்பளம் மரணம்” (ரோமர் 6:23), ‘பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்” (எசே 18:4), ‘ஒருவனாவது, தன் சகோதரன் அழிவைக் காணாமல் இனி என்றைக்கும் உயிரோடிருக்கும்படி, எவ்விதத்தினாலாவது அவனை மீட்டுக்கொள்ளவும், அவனிமித்தம் மீட்கும்பொருளை தேவனுக்குக் கொடுக்கவுங்கூடாதே” (சங் 48:7-8), ‘கர்த்தருடைய உக்கிரத்தின் நாளிலே அவர்கள் வெள்ளியும் அவர்கள் பொன்னும் அவர்களைத் தப்புவிக்கமாட்டாது” (செப் 1:18) என்று சத்திய வேதம் கூறுகிறதன்றோ?

மக்கள் பாவத்தினின்று அடையக்கூடிய இரட்சிப்பை நாம் காணவேண்டுமானயின் தனிமையும், வறண்டதும், மண்டை ஓட்டின் உருவங் கொண்டதுமாகிய ஒரு குன்றின் உச்சியில் அதைக் காணலாம். அங்கே ஒரு சிலுவையில் ஒரு கள்ளனும், இன்னொன்றில் ஒரு கொலைகாரனும், அந்த இருவருக்கும் நடுவில் முள்முடி அணிந்த ஒருவரும் தொங்குகின்றனர். நடுச் சிலுவையில் தொங்குபவரின் கைகால்களிலிருந்து இரத்தம் வடிகிறது. அவர் விலாவிலிருந்து இரத்தம் பீறிட்டுப் பாய்கிறது. அவுர் நெற்றியிலிருந்து துளித் துளியாக இரத்தம் விழுகிறது. எவ்வித வருத்தமும் இன்றி அவர்முன் நிற்போர் அவரை நிந்தித்துப் பரிகாசம் செய்கின்றனர். இவ்வாறு வதைக்கப்படுகிறவர் யார்? மக்கள் அவமதித்துக் கொலை செய்யும் இந்த மனிதன் யார்? இவர் கடவுளின் குமாரரான, சமாதானப் பிரபு. பாவம் ஆளும் இப்பூமிக்குப் பரலோக ராஜன் நியமித்தனுப்பிய தூதுவர். இவர்முன்தான் தேவதூதர் விழுந்து பணிந்து தங்கள் முகத்தை மூடிக்கொள்ளுகின்றனர். ஆனாலும் இவர் உதிரம் சிந்தி கைவிடப்பட்டு அக்கொடிய மரத்திலே தொங்குகிறார்.
இக்கோர இடத்திற்கு அவரைக் கொண்டு வந்தது எது? நமக்கு அன்பைப் போதிக்க வந்த அந்த மனிதனை இத்தகைய கொடிய வேதனைக்குட்படுத்தியவர் யார்? நீங்களும் நானும் இதற்குக் காரணர். ஏனென்றால், உங்கள்பாவத்தினிமித்தமும் என் பாவத்தினிமித்தமுமே இயேசு சிலுவையில் அறையப்பட்டார். அந்நேரத்தில் மினத குலமானது பாவத்தின் ஆழியில் மூழ்கிற்று. பாவத்தின் மிக அருவருப்பான தனு;மையில் மனித இனம் ஈடுபட்ட காட்சியை இதில் காண்கிறோம். இதனைப் பொறுக்கு முடியாமல் கதிரவன் தன் முகத்தை மூடிக்கொண்டதில் வியப்புண்டோ!

‘அந்தோ என் இரட்சகர் மாண்டார் அன்றோ
ஈந்தார் அன்றோ தம் அரும் உதிரத்தை
தந்தார் அன்றோ தம் திரு தலை தன்னை
வந்தார் அன்றோ என் போன்ற புழுவினுக்காய்”

இருப்பினும் பாவமானது அச்சிலுவையில் தன்னைத் தானே ஏமாற்றிக்கொண்டது. கிறிஸ்து சிலுவையில் அடைந்த மரணம் மனிதர் விடுதலைக்குக் காரணமாயிற்று. அவமானம், பகை ஆகிய இவற்றை வெளிப்புடுத்தும் பாவத்தின் மாபெரும் படைப்பு, இரக்கம் மன்னிப்பு ஆகிய இவற்றை அருளும் கடவுளின் தலைசிறந்த கருணையாயிற்று.

கிறிஸ்துவில் விசுவாசம் வைப்போர், தேவ ஆட்டுக்குட்டியின் சிலுவை மரணத்தால் பாவமே அச்சிலுவையில் அறையப்பட்டதைக் காண்கின்றனர். அவர் மரணமே நம் நம்பிக்கையின் ஆதாரமாகும். நம் வெற்றியின் உறுதிமொழி அதுவே. நமக்கு விலங்கிலும் பாவங்களை கிறிஸ்து தம் சொந்த சரீரத்தில் மரத்தின்மேல் சுமந்தார். அவர் நமக்காக மரித்து மீண்டும் உயிரோடு எஐந்தார். இவ்வாறாக அவர் மனிதருக்குக் கடவுள் வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தின் உண்மையையும் நிரூபித்தார். இப்போதும் விசுவாசத்தால் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வீர்களானால் நீஞ்களும்கூட பாவத்தின் கட்டுகளை அறுக்க முடியும். கிறிஸ்துவின் அன்பினாலே உங்கள் ஆன்மா பாவம் நீங்கக் கழுவப்பட்டது. நரகாக்கினையினின்று இரட்சிக்கப்பட்டது என்ற அறிவடைந்து பத்திரமாகவும் விடுதலை பெற்றவர்களாகவும் நிற்கவும் கூடும்.