கல்வாரி சிலுவைப் பலி

2205
0
கல்வாரி சிலுவைப் பலி

ஏதேனில் தேவன் தாமே ஒரு ஆட்டைப் பலியாக்கித் துவக்கிவைத்த பலிகளின் திரட்சிகளெல்லாம் கல்வாரிச் சிலுவையில் இயேசு கிறிஸ்து நிறைவேற்றிய பரமபலியில் நிவர்த்தியானது. நியாயப்பிரமாணத்திற்கு முந்திய தனிநபர் பலிகள் அத்துடன் ஓய்ந்தது. ஆசரிப்பு கூடாரத்தில் அமைந்த அதிகாரப் பூர்வ பலிகளும் கூட அடியோடு அகன்றது. சாலமோன் அரசனின் பிரதாபமிக்க 1,20,000 பலிகளும் இனி ஏற்கப்படுவதில்லை. ஏழை எளிய மக்களுக்கு வகுக்கப்பட்ட புறாக்குஞ்சு பலிகளும் இனி வேண்டவே வேண்டாம். பலிகளைச் செலுத்து மனிதன் பட்டபாடமெல்லாம் கொஞ்சமல்ல. பலியின் பேரில் சிந்தப்பட்ட இரத்தமும் குறைவல்ல. தேவன் ஏற்படுத்திய மிருகபலி போதாதென மதிகெட்ட மனிதர்கள் நரகபலியையும் செய்து, பலியோடு பாவத்தையும் கூட்டிவிட்டனர். சத்திய தேவனின் நாமத்தில் ஆரம்பித்த பலிகள் விக்கிரகங்களுக்கும் திருப்பிவிடப்பட்டது. இவ்வாறு பலிகள் பாவத்தை நிவர்த்தி செய்வதற்குப் பதிலாக பாவத்தைப் பெருகச் செய்ததைக் கண்ட தேவன் பலிகளுக்கெல்லாம் ஓய்வுண்டாக்க எண்ணினார். அத்துடன் இந்த பலி கிருபையின் காலத்திற்கு துவக்கமிட்டது.

துவக்கமும், முடிவும் தேவன்:

மிருகங்களைப் பலியிடச் சொன்னவர் தேவனே. தேவ கட்டளையை மீறிய மனிதன் அகப்பட்டுக்கெண்ட மரணக்கட்டுகளிலிருந்து அவனை விடுவித்து இரட்சிக்கப் பலிகளை அவரே ஏற்படுத்தினார். ஆரம்பத்தில் அவரவர் விருப்பத்திற்கு விடப்பட்ட பலிகளை ஆசரிப்புக் கூடாரத்தில் அதிகாரப்பூர்வமாக்கினார். ஒவ்வொரு பலியும் மனிதனுக்கு பாவ மன்னிப்பாக அமைந்ததுடன் கடினமான பாரமாகவும் அமைந்தது. வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களை இளைப்பாறுதலுக்கு அழைத்தபோது பாவத்தின் பாரத்திலும் பாவநிவாரணத்தின் பாரத்திலுமிருந்து இளைப்பாறுதலுக்கு அழைத்தார் எனக்கருத்தாகிறது (மத் 11:28). ஆம் இன்று இரட்சிப்பு எத்தனை எளிதாயிருக்கிறது? விசுவாசத்தால்- விசுவாசத்தால் மட்டும், பாவத்தோடு போராடித் தளர்ந்தவன் இனி பாவநிவாரணத்திற்காகவும் போராடித் தளருவதா? இல்லவே இல்லை. ஒரே பலியினால், ஒரு மனிதனின் அனைத்துப் பாவங்களும், அனைத்து மக்களின் பாவங்களும் தீர்ந்தன. அது என்றென்றைக்குமாக தீர்ந்தன. தேவன் மனிதனுக்கு இரங்கினார். தமது ஒரேபேறான குமாரனை பலியாக்குமளவிற்கு இரங்கினார். இந்தப் பலியினால் அனைத்துப் பலிகளையும் நிறைவேற்றி பலியையே முடித்தார்.

முடிந்தது

இது இயேசு சிலுவையில் ஜீவனைத் துறப்பதற்கு முன் கூறிய வார்த்தை. இந்த வார்த்தையை இயேசு கூறியது மிகவும் அவசியமாக இருந்தது.

1. பலிகளையெல்லாம் நிறைவேற்றி முடித்தார் என்று பொருள்.

2. தாம் மனிதனாக வந்ததின் நோக்கத்தை நிறைவேற்றி முடித்தார் என்ற கருத்தும் அதற்கு உண்டு.

பாவ பரிகார நோக்கத்துடன் வராத அவதாரங்கள் நிறைந்த, வழி தவறிப்போன உலகத்தில் இயேசு ஒருவரே நல்ல நோக்கத்துடன் வந்து தாம் வந்த நோக்கத்தைப் புனிதமாய் நிறைவேற்றிச் சென்றார். நமது தேவன் நோக்கம் தவறாதவர். உதாரணமாக, இலங்காபுரியை ஆண்ட இராவணனன் என்ற இராட்சதன் தன் தவ வலிவால் மூவுலகத்தையும் ஆண்டு தேவர், முனிவர் யாவரையும் துன்புறுத்தியதால் அவனைக் கொல்லுவதற்காகவே ஒரு அவதாரம் வந்ததாம். ஆனால் அவர் இராவணனைக் கொல்லும் முன்னரே இராவணன் அவரது மனைவியை கடத்திச் சென்றதால் கதிகலங்கிப்போனதைக் காண்கிறோம். தன் மனைவியைக் காப்பாற்று குரங்கு படையை திரட்டவேண்டிய நிர்ப்பாக்கியம் படைத்தவர். மற்றவர்களை இரட்சிப்பது எப்படி? நிற்க! அவதாரமாக வந்தவர் குழந்தையைப் பெற்றது ஏன்? வேதாகமம் வெளிப்படுத்துகின்ற தேவன், பலுகிப்பெருகி பூமிழய நிரப்பும் வேலையை மனிதர்களிடம் ஒப்படைத்தார். ஆதி. 1:27-28. அவர் எப்போதுமே இந்த செயலை ஏற்றதில்லை.

அவருடைய ஒரே குமாரன் மனித அவதாரமெடுத்தபோதும் குழந்தைப் பேறு குடும்பம் நடத்தப்போகவில்லை. அந்த பொறுப்பை எப்போதுமே மனிதர்களிடம் விட்டு விட்டு தாம் என்றைக்கும் தேவனாகவே இருக்கிறார். அப்படியே இயேசு மக்களின் பாவத்தை சுமந்து தீர்க்க வந்தபடியே அப்புணியைச் செய்து முடித்தார். அவரைச் சிலுவையில் அறைந்து கொல்லுவது தான் எதிரிகளின் நோக்கம் என்று நினைக்கக்கூடாது. அவரைச் சிலுவையில் அறைந்ததால் முன் தீர்க்கதரிசனங்கள் நிறைவேறிவிடும் என அறிந்த சாத்தான் அவரை திசை திருப்பும் சோதனைகளைக் கொண்டு வந்தான். இறுதியில் அவை பலிக்காததினால் உலகமெல்லாம் அவர் பின்னாலே போவதைக்கண்டு எப்படியாவது இயேசுவை ஒழித்துக்கட்டி விடுவதற்காக சிலுவையில் அறையப்படவிட்டுவிட்டான். திசை திருப்பும் சோதனைகளாவன:

1. சாத்தான் சோதிக்கும்படி சகல இராஜ்ஜியங்களையும் இயேசுவுக்குத் தருவேன் என்றான் (மத் 4:8-10). இயேசு அவனைத் துரத்தினார். ஏனெனில், அவர் பூமியின் இராஜ்ஜியங்களைக் கைப்பற்ற அப்போது வரவில்லை. பிதாவுக்கு சமமாயிருப்பதையோ, கொள்ளைப்பாக்கியமாக எண்ணாமல் அதைத் துறந்து வந்தவர் இந்த மண்ணுக்காக அலையவில்லை. அல்லேலூயா! அவர் மக்களுடைய பாவங்களுக்காக பலியாக வந்ததில் உறுதியாக இருந்தார். அவரது சிலுவை மரண நோக்கத்தை வீழ்த்த சாத்தானால் முடியவில்லை.

2. ஒரு முறை இயேசுவைப் பிடித்துக்கொண்டுபோய் இராஜாவாக்க பொதுஜனம் கூடி எத்தனம் பண்ணினார்கள் யோவா6:15. மனிதரில் எவராயினும் இப்படிப்பட்ட தருணத்தை நழுவவிட்டிருக்கமாட்டார்கள். இயேசுவோ, அவர்களைவிட்டு விலகி தனியே சென்றுவிட்டார். அவர் தாம் வந்த நோக்கத்தில் கண்ணாயிருந்தார். இயேசுவை வழி விலகச் செய்ய பொதுமக்களால் முடியவில்லை. இராஜாங்கப் பதவியில் அவர் தடுக்கி விழவில்லை.

3. பின்னொருமுறை இயேசுவின் சீஷரில் பிரதானியாக இருந்த பேதுரு என்பவர் இயேசு அடையப் போகிற பாடுகள் நிறைந்த பலி மரணத்தைக் குறித்துக் கேள்விப்பட்ட உடனே இயேசுவை தனியே அழைத்துக் கொண்டுபோய் இப்படியெல்லாம் சம்பவிக்கக் கூடாது என அவருக்கு ஆலோசனை சொன்னார். இயேசுவோ அவரைக்கடிந்துகொண்டாh மத் 16:21-22. தமது பலி மரண நோக்கத்திலிருந்து விலகச் செய்ய தமது விரோதிகளாலோ, தமது அன்பானவர்களாலோ, சாத்தானாலோ ஒருபோதும் முடியவில்லை. அவரது பாவபரிகார மரணத்தின் உன்னத நோக்கத்தைக் கெடுக்க அன்பர்களாலும் முடியவில்லை.

4. இயேசு மக்களுக்காக மரிக்க வேண்டுமென்றாலும் அவர் கள்ளர்கள் நடுவில் சிலுவையில் தான் மரிக்க வேண்டுமென்பது தீர்க்கதரிசனங்களின் முன்னுறிவிப்பாகும். ஆனால் அவரது தரணத்தை வித்தியாசமான முறையில் நிறைவேற்ற யூதர்கள் முயற்சித்தனர். அவரைப் பிடித்து செங்குத்தான மலையின் சிகரத்திலிருந்து தலைகீழாய் தள்ளிவிடும்படிக்கு கொண்டுபோனார்கள். அவரோ அவர்கள் நடுவிலிருந்து கடந்து போய்விட்டார். லூக் 4:28-30. பின்னொருமுறை கற்களால் அவரை அடிக்க முயற்சித்தனர். இயேசுவோ அவர்களைவிட்டு மறைந்து விட்டார். யோவா 8:59, 10:30. அவருடைய நோக்கத்தை தவறச் செய்ய யூதராலும் முடியவில்லை.

5. இயேசுவின் பிறப்பிலேயே அவரைக் கொன்றுவிட ஒரு அரசன் முயற்சித்தான். ஆனால் அவர் அதற்கெல்லாம் தப்புவிக்கப்பட்ட சரித்திரத்தை மத்தேயு சுவிசேஷம் இரண்டாம் அதிகாரத்தில் விளக்கியுள்ளார். இயேசுவை முளையிலேயே கிள்ளியெறிய ஏரோது அரசனால் முடியவில்லை.
இவ்வாறு இயேசுவை சிலுவை மரணத்திலிருந்து விலகச் செய்ய பல சூழ்ச்சிகள் செய்யப்பட்டது. கொலைமிரட்டல்கள் மட்டுமல்ல, உயர்ந்த பதவிகளும் வாக்களிக்கப்பட்டன. இயேசுவோ அவைகளை ஜெயித்தார். அரச பதவிபோன்ற உயர்வுகளோ, மரணபயங்கரங்களோ அவரைச் சற்றும் தளரச்செய்யவில்லை. மாறாக அவரது வேளை வந்தபோது தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார். கெத்செமனே தோட்டத்தில் கடைசி நாள் இரவில் அவரைப் பிடிக்க வந்தவர்கள் அவரை அடையாளம் தெரியாமல் தடுமாறுகையில் ‘நான் தான் அவர்” என்று கூறி அவாகள் முன் வந்துநின்றார். அவர் கூறிய வார்த்தையின் மகிமையைத் தாங்காது அவரைப்பிடிக்க வந்தவர்கள் பின்னிட்டுத் தரையிலே விழுந்தார்கள். யோவா 18:1-8. இயேசு மீண்டும் பிரதியுத்தரமாக ‘நான் தானென்று உங்களுக்குச் சொன்னேன்” என்றூர். அவ்வாறு சிலுவை மரணத்துக்குத் தம்மைத் தாமே ஒப்புவித்த தமது குறிக்கோளை அடைந்து வெற்றிகண்டார். அவரைச் சிலுவை மரணத்திலிருந்து விலகச் செயயும் அநேக தூண்டுதல்களை வென்று சிலுவையிலே வெற்றி சிறந்தார். முடிந்தது என்றார். அந்த வேலையைச் செய்து முடித்தார். ஆதாமின் சந்திகளின் மீட்புப்பணி முடிந்தது. எண்ணிறந்த பலிகளின் பாடுகளும் பண்டிகைகளின் கோலாகலமும் ஒழிந்தது. மனுக்குலத்திற்கு விடுதலை. பலி மிருகங்களுக்கும் விடுதலை. மனிதன் இனி இயேசுவின் முடிவுற்ற பலியின்மேலுள்ள விசுவாசத்தினால் பிழைப்பான்.