Home கட்டுரைகள் இயேசு

இயேசு

1971
0

இயேசு

உலகம் உண்டாவதற்கு முன்பே இருந்தவர்

முன்னுரைப்பு: நீதி 8:22-30 (கி.மு 1014)

22. கர்த்தர் தமது கிரியைகளுக்குமுன் பூர்வமுதல் என்னைத் தமது வழியின் ஆதியாகக் கொண்டிருந்தார்.
23. பூமி உண்டாகுமுன்னும், ஆதிமுதற்கொண்டும் அநாதியாய் நான் அபிஷேகம் பண்ணப்பட்டேன்.
24. ஆழங்களும், ஜலம் புரண்டுவரும் ஊற்றுகளும் உண்டாகுமுன்னே நான் ஜநிப்பிக்கப்பட்டேன்.
25. மலைகள் நிலைபெறுவதற்கு முன்னும், குன்றுகள் உண்டாவதற்கு முன்னும்,
26. அவர் பூமியையும் அதின் வெளிகளையும், பூமியிலுள்ள மண்ணின் திரள்களையும் உண்டாக்குமுன்னும் நான் ஜநிப்பிக்கப்பட்டேன்.
27. அவர் வானங்களைப் படைக்கையில் நான் அங்கே இருந்தேன்@ அவர் சமுத்திர விலாசத்தை வட்டணிக்கையிலும்,
28. உயரத்தில் மேகங்களை ஸ்தாபித்து, சமுத்திரத்தின் ஊற்றுகளை அடைத்து வைக்கையிலும்,
29. சமுத்திர ஜலம் தன் கரையை விட்டு மீறாதபடிக்கு அதற்கு எல்லையைக் கட்டளையிட்டு, பூமியின் அஸ்திபாரங்களை நிலைப்படுத்துகையிலும்,
30. நான் அவர் அருகே செல்லப்பிள்ளையாயிருந்தேன்@ நித்தம் அவருடைய மனமகிழ்ச்சியாயிருந்தது, எப்பொழுதும் அவர் சமுகத்தில் களிகூர்ந்தேன்.

நிறைவேறுதல் : யோவான் 17:5 (கி.பி 33)

இயேசு கூறியது: ‘பிதாவே உலகம் உண்டாகிறதற்கு முன்னே உம்மிடத்தில் எனக்கு உண்டாயிருந்த மகிமையினாலே இப்பொழுதும் நீர் என்னை உம்மிடத்திலே மகிமைப்படுத்தும்”
யோவான் 1:1-3 (கி.பி 30)
1. யோவான் எழுதி வைத்தது : ‘ஆதியிலே வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை தேவனிடத்தில் இருந்தது. அந்த வார்த்தை தேவனாயிருந்தது”
2. ‘அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.”
3. ‘சகலமும் அவர்மூலமாய் உண்டாயிற்று: உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.”
இயேசுக்கிறிஸ்து ஆபிரகாம், ஈசாக்கு, யூதா, தாவீதின் சந்ததியில் பிறப்பார்
முன்னுரைப்பு : ஆபிரகாமுக்குக் கடவுள் உரைத்தது:
ஆதி 17:19 (கி.மு 1898)
‘அப்பொழுது தேவன் உன் மனைவியாகிய சாராள் நிச்சயமாய் உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள். அவனுக்கு ஈசாக்கு என்று பேரிடுவாயாக. என் உடன்படிக்கையை அவனுக்கும் அவனுக்குப் பின்வரும் அவன் சந்ததிக்கும் நித்திய உடன்படிக்கையாக ஸ்தாபிப்பேன்.”
ஆதி 21:12 (கி.மு 1892)
‘………… ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும்”
ஆதி 22:18 (கி.மு 1872)
‘நீ என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்தபடியினால், உன் ச்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும்”
யாக்கோபு தன் குமாரரை ஆசீர்வதிக்கும்போது யூதாவுக்குக் கொடுத்த ஆசீர்வாதம்;: ஆதி 49:10 (கி.மு 1689) ‘சமாதான கர்த்தர் வருமளவும் செங்கோல் யூதாவை விட்டு நீங்குவதும் இல்லை: நியாயப் பிரமாணிக்கன் அவன் பாதங்களைவிட்டு ஒழிவதும் இல்லை: ஜனங்கள் அவரிடத்தில் சேருவார்கள்.”
ஏசாயா 11:1-2 (கி.மு 713)
1. ‘ஈசாயென்னும் அடிமரத்திலிருந்து ஒரு துளிர் தோன்றி அவன் வேர்களிலிருந்து ஒரு கிளை எழும்பிச்செழிக்கும்”
2.’…… கர்த்தருடைய ஆவியானவர் அவர்மேல் தங்கியிருப்பார்”
தாவீதின் வம்சத்தில் மேசியா வருவார்:
எரேமியா 23:5 ( கி.மு 599)
‘இதோ நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார். அப்பொழுது தாவீதுக்கு ஒரு நீதியுள்ள கிளையை எழும்பப்பண்ணுவேன்: அவர் ராஜாவாயிருந்து, ஞானமாய் ராஜரீகம் பண்ணி, பூமியிலே நியாயத்தையும், நீதியையும் நடப்பிப்பார்”
நிறைவேறுதல்: பரிசுத்த மத்தேயு எழுதின சுவிசேஷம் முதலாம் அதிகாரம் 1முதல் 16 வசனங்களில் ஆபிரகாமிலிருந்து இயேசு கிறிஸ்துவரை வம்ச வரலாறு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதன் பிரகாரம் இயேசுவாகிய மேசியா ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, யூதா, தாவீது முதலியவர்களின் வழியில் வந்த மரியாளின் மைந்தனாக அவதரித்தார் என்று காண்கிறோம். இப்படியாக பல காலங்களில் கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தங்களும், முன்னறிவிப்புகளும் வார்த்தைக்கு வார்த்தை இயேசு கிறிஸ்துவில் நிறைவேறின.
இயேசு கிறிஸ்து கடவுளுடைய மைந்தன்

முன்னறிவிப்பு : சங் 2:7 (கி.மு 1000)

‘தீர்மானத்தின் விவரம் சொல்லுவேன்: கர்த்தர் என்னை நோக்கி: நீர் என்னுடைய குமாரன்: இன்று நான் உம்மை ஜநிப்பித்தேன்””
ஏசாயா 9:6-7 (கி.மு 740)
‘நமக்கு ஒரு பாலகன் பிறந்தார். நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார். கர்த்தத்துவம் அவர் தோளின் மேலிருக்கும். அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தர், வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதான பிரபு எனப்படும். “