Home செய்திகள் கடவுள் யார்?

கடவுள் யார்?

3618
0
கடவுள் யார்?

‘கடவுளின் அந்தரங்க ஞானத்தை நீர் ஆராய்ந்தறிய முடியுமோ?” யோபு 11:7

கடவுள் யார்? அவர் எப்படிப்பட்டவர்? அவர் இருக்கிறார் என்று நிச்சயமாய் அறிவது எப்படி? அவர் எப்போது தோன்றினார்? நாம் அவரை அறிய முடியுமா?

இக்கேள்விகளை ஒவ்வொரு மனிதனும் எப்போதாகிலும் பிறரிடத்திலாவது தன்னிடததிலாவது கேட்டிருப்பான். ஏனெனில் நம்மைச் சூழ்ந்துள்ள உலகத்தைக் கவனிக்கையில் அதன் படைப்பைப்பற்றி நாம் வியப்படையாமலிருக்க முடியாது. உயிராகிய அற்புதம், மரணத்தின் இரகசியம். பூத்துக் குலுங்கும் மரங்களின் அழகு, விண்மீன்கள் நிறைந்த வாநத்தின் சிறப்பு, மலைகளின் உயரம், கடலின் பரப்பு ஆகிய இவைகளை நாடோறும் காண்கிறோம். இவற்றையெல்லாம் உண்டாக்கினவர் யார்? பொருள்களை அவற்றிற்குரிய இடங்களில் நிலைத்திருக்குமாறு செய்யும் ஈர்ப்பு ஆற்றல் விதி (Law of gravita) யார் மனதில் தோன்றிற்று? இரவையும் பகலையும் பருவ கால ஒழுங்கையும் நியமித்தவர் யார்?

இவை அனைத்தும் இன்னும் பலவும் உன்னதமான சிருஷ்டிகர் ஒருவரின் கைவேலையே. இது தான் சொல்லக்கூடிய ஒரே விடையாகும். கடிகாரம் ஒன்று இருந்தால் அதைத் திட்டமிட்ட ஒருவரும் இருக்வேண்டும். அவ்வாறே மிக நுட்பமாக அமைந்துள்ள பிரபஞ்சத்திற்கும் (Universe) மாபெரும் திட்ட நிபுணர் ஒருவர் உள்ளார். அவரைக் கடவுள் என்று சொல்லுகிறோம். கடவுள் என்கிற பெயர் மனுக்குலத்தார் யாவருக்கும் நன்றாகக் தெரியும். இளங்குழவிப் பருவ முதற் கொண்டே அவர் நாமத்தை உச்சரித்து வந்திருக்கிறோம். இவ்வுலகத்தைப் படைத்து அதில் நம்மை வைத்தவர், நாம் பேசுகிறவரும், நாம் பாடுகிறவரும், எல்லா நன்மைக்கும் ஊற்றும் காரணமுமாயிருகிறவருமான கடவுளே என்று சத்திய வேதம் விளம்புகிறது.

அவர் யார் என்றும், அவர் எங்கே இருக்கிறார் என்றும் நீங்கள் கேட்கிறீர்களா? அவர் பெயரை நாமெல்லாரும் அறிவோம். நாம் மிகுந்த துன்பத்திற்குள்ளாகும்போது அவரை நோக்கிக் கூப்பிடுகிறோம். நாம் எப்பொழுதுமே அவரை நினைத்துக் கொண்டேயிருக்க வேண்டும் என நம்மில் பலர் ஆசைப்படுகிறோம். ஆயினும் நாங்கள் அவரை நம்புவதில்லை. கடவுள் என்ற ஒருவர் இல்லை என்று கூறுவோரும் சிலர் உளர். கடவுள் எனக்கு விளக்கிக் காட்டினால் ஒருவேளை அவரை ஏற்றுக்கொள்வேன், என்று வேறு சிலர் சொல்லுகின்றனர்.

ஒருவேளை இது உங்கள் மனநிலையாக இருக்கலாம். உங்கள் ஆயுள் காலமெல்லாம் கடவுளைப்பற்றிக் கேள்விப்பட்டு வருகிறீர்கள். ஆனால் அவரில் நம்பிக்கை வைக்குமுன் அவரை யாராவது உங்களுக்கு விளக்கிக் காட்ட வேண்டுமென்று காத்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால், கடவுளைப்பற்றிக் கிறிஸ்தவத் திருமறை எவ்வளவு தெளிவான விளக்கவுரை தருகிறது என்பதைக் கவனிப்போம்.
உலக வரலாற்றின் இந்த மிக முக்கியமான காலத்தில், இறைவன் எப்படிப்பட்டவர் என்ற வினாவிற்கு ஒவ்வொருவரும் விடை தேடவேண்டும். ஒவ்வொருவரும் இக்கேள்வியின் விடை இன்னதென நிச்சயித்துக்கொள்வதவசியம். கடவுள் இன்னார் என்றும் அவர் ஆற்றுக்கூடியது இன்னதென்றும் யாவரும் ஐயந்திரிபற அறிதல் வேண்டும்.

நம்மை நெருக்குகிற எல்லாக் கஷ்டங்களுக்கும் ஆதி காரணம் கடவுளைப்புற்றிய அறிவின்மையும், மனிதர் அவருக்கு கீழ்ப்படிய மறுப்பதுமே ஆகும். கடவுளின் திட்டடத்தை மனிதர் சரிவர அறியாததே உலகத்தை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. கடவுளின் கட்டளைகளை கற்கவும் அவற்றிற்கும் கீழ்ப்படியவும் மனிதர் மனமற்றிருப்பதே நம் ஆன்மாக்களில் ஒரு பளுவான பாரத்தைச் சுமத்தியுள்ளது. எனவே கடவுளைப்பற்றி அறியக்கூடிய அனைத்தையும் நாம் படிப்போமாக.
இந்த அறிவைப்பெற நாம் எங்குச் செல்லவேண்டும்? நம்மில் யார் நமக்கு இவ்வுண்மையை உரைக்க முடியும்? நாம் அனைவருமே இவ்விஷயத்தழல் வரையறைக்குட்பட்ட அறிவுடையவர்கள் அன்றே? நம்மைக் குறித்து முழு அதிகாரதத்துடன் பேசக்கூடிய யாரையாவது கடவுள் இந்த உலகத்தில் நியமித்திருக்கிறாரா? இல்லையே. அவ்வாறு பேசக்கூடிய ஒருவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வந்தார். ஆனால் அவரை நாம் சிலுவையில் அறைந்து விட்டோம்! அப்படியிருக்க இந்த அறிவை நாம் எங்ஙனம் அடைவது?

கல்வி கற்ற நிபுணரைக்கேட்டால் அவர்கள் என்ன சொல்லுவார்கள்? இயற்கையிலும் வாழ்க்கையிலும் உள்ள அனைத்தின் தோற்றமே (Expression) இறைவன். உயிருள்ளவை எல்லாம் கடவுளோடு ஒன்றாய் இணைந்துள்ளன. உயிரே தெய்வத்தின் ஒருதோற்றம் தான். மிகச்சிறிய நீர்த்துளி முதலாய் பிரமாண்டமான விண்வரைக்குமுள்ள யாவற்றிலும் அவரைக் காணலாம் என்று அவர்கள் கூறுவர்.
தத்துவ அறிஞர் ஒருவரைக் கேளுங்கள். படைப்புக்குக் கர்த்தா ஆதியும் மாறாததுமான சக்தி வாய்ந்தவரான கடவுள். அவரே எல்லா உலகங்களையும் இயக்கி வருகிற தலையாய சக்தியானவர். அவர் தொடக்கமாவது முடிவாவது இல்லாதவர் சர்வ வல்லவர், உயிரும் நாம் காணும் அழகிய யாவும் இச்சக்கியினின்று பாய்ந்து மீண்டும் அதற்கே திரும்புகிற ஆற்றுலின் ஒரு வெளிப்பாடே ஆகும் என்று அந்தத் தத்துவ அறிஞர் உரைப்பர்.

இன்னும் சில படிப்பாளிகளைக் கேட்டுப்பாருங்கள். கடவுள் வரம்பற்றவர். அவர் எல்லாவற்றிலும் எல்லாமாய் இருக்கிறவர்: இதைவிட அதிகமாக அவரைப்பற்றி எவரும் எதையும் அறிய முடியாது என்று அவர்கள் கூறுவர். கடவுளை விளக்கும் பல்வேறு விளக்கங்கள் உள்ளன. ஒவ்வொரு நாட்டாரும் இனத்தவரும் குடும்பத்தினரும் ஒவ்வொரு தனி மனிதனும், தாம் உண்டாக்கிய பிரபஞ்சத்தில் மறைந்துள்ள இறைவனை விளக்க முயன்றுள்ளார்கள். படைப்பைக்குறித்தும் படைத்தவரை அறியாத எல்லாக் காலத்து மாந்தரும் அவரைக் கண்டறிய முயன்றுள்ளனர். மேற்கூறிய பலதரப்பட்ட விளக்கங்களில் எது சரியானது? அவற்றில் எதை நாம் ஏற்பது?

சத்திய வேதாகமம் என்று நாம் அழைக்கிற புத்தகத்தின் மூலம் கடவுள் தம்மை வெளிப்படுத்தியுள்ளார். இதை நாம் நம்பினால் நம் மனம் இந்த விஷயத்தில் முற்றிலும் திருப்தியடைய முடியாது. கடவுளைப்பற்றிய கேள்விகளுக்குச் சரியான விடையைச் கண்டுபிடித்துவிட்டோம். கடவுளின் தன்மையை அறியும் வழியில் செல்லுகிறோம் என்ற உறுதியுடைவர்களாக நாம் இருப்போம்.
திருமறையில் நூற்றுக்கணக்கான விதங்களில் கடவுள் தம்மை வெளிப்படுத்துகிறார். செய்தித்தாள்களைக் கவனமாவும், ஒழுங்காகவும் வாசிப்பதுபோல வேதாகமத்தை நாம் வாசித்து வந்தால் கடவுளோடு நெருங்கிய பழக்கம் உள்ளவர்களாகவும் அவரைப்பற்றி நன்கறிந்தவர்களாகவும் இருப்போம் – நமக்குப் பிரியமானஒரு விளையாட்டுவீரனின் விளையாட்டு விவரங்களை நாம் நன்கு அறிந்திருப்பதைப்போல.

வைரம் பல பட்டைகள் கொண்டதாயிருப்துபோலக் கடவுள் வெளிப்பாட்டில் எண்ணிறந்த கருத்துக்கள் அடங்கியுள்ளன. அவற்றையெல்லாம் விபரிக்கக் புகுந்தால் நூல்கள் பல ஆகும். இச்சிறி புத்தகத்தில் கடவுள் தாமே தம்மைப்பற்றிய வெளிப்படுத்திய நான்கு மிகவும் முக்கியமான அம்சங்களைப்பற்றி மட்டும் சிறிது கூறுவோம். இவை எப்போதும் நம் உள்ளத்தில் இடம்பெற்றிருக்க வேண்டும்.

1. கடவுள் ஆவியாயிருக்கிறார் என்று வேதாகமம் விளம்புகிறது. சீகார் கிணற்றருகே சமாரியா பெண் ஒருத்தியோடு பேசுகையில் ‘தேவன் ஆவியாயிருக்கிறார்” என்று இயேசு கூறினார் (யோவான் 4:24).

ஆவி என்ற பதத்ததைக் கேட்டவுடனே எதைப்பற்றி நினைக்கிறீர்கள்? உங்கள் மனதில் எத்தகைய தோற்றத்தை அது உண்டாக்குகிறது? ஆகாயத்தில் காணப்படும் ஒரு வாயுவைப்பற்றி நினைக்கிறீர்களா? இந்தப் பதம் பூதத்தைக்குறிக்குமா? உருவமற்ற ஒன்றுமில்லாமை என்பது அதன் கருத்தா? இப்படிப்பட்ட கருத்துக்களுன்தான் ‘கடவள் ஆயியே” என்று இயேசு கூறினாரா?

‘ஆவி” என்பது இன்னதென்றும், எந்தக் கருத்தில் அச்சொல்லை இயேசு பயன்படுத்தினார் என்றும் கண்டறிய வேதாகமத்தை நாம் மீண்டும் படித்துப்பார்க்கவேண்டும். கிறிஸ்து தாம் உயிர்த்தெழுந்த பின்னர், ‘என்னைத் தொட்டுப்பாருங்கள்: நீங்கள் காண்கிறபடி, எனக்கு மாம்சமும் எலும்புகளும் உண்டாயிருக்கிறதுபோல ஒரு ஆவிக்கும் இராதே’ என்றார் (லூக்கா 24:39). எனவே, ஒர் ஆவி உடல் இல்லாதது என்று நாம் திட்டமாய் அறியலாம். அது உடலுக்கு முற்றும் எதிரிடையானது. எனினும் அது வாழ்கிறது: அதற்கு வல்லமையும் உண்டு. இதை அறிவது கடினமாயிருக்கிறது. ஏனெனில், வரையறைக்குட்பட்டதும் உடலால் கட்டுப்படுத்தப்பட்டதுமான மனதால் நாம் அதை அறிய முயற்சிக்கிறோம்.

கடவுள் மனிதருக்கு அளிய வரம்பற்ற பார்வைத்திறனை நாம் இழந்துவிட்டோம். எனவே, தொலைவில் காணப்படும் ஆவியின் மகத்துவத்தை அறிந்துகொள்ளும் திறமை நமக்கு இல்லை. ‘ஆவி” என்ற சொல்லை நம்முடைய மிகச்சிறிய அளவுக்கு நாம் சுருக்கி நம் சிறு மனம் அறிந்துகொள்ளக்கூடியவாறு இதை மட்டுப்படுத்துகிறோம். அழுக்கு நீருள்ள ஒரு குட்டையை மட்டுமே அறிந்துள்ள ஒருவனுக்குப் பெருங்கடலில் பரப்பையும் அதன் பெருமிதத்தையும், அச்சமூட்டும் தோற்றத்தையும் விளக்கிக்கூற முற்படுவதைப் போன்றது இது! அப்படிப்பட்ட மனிதன் எல்லையில்லாத கடலின் காட்சியைக் கிரகித்துக்கொள்வது எப்படி? ஆழமில்லாத அழுக்கு நீர் குட்டையை மட்டுமே கண்டிருக்கிற அவன் அளவிடக்கூடாத ஆழங்களையும்,, ஓய்வற்ற அலைகளின் ஆற்றலையும், கடற் புயலின் கொடுமையையும், கடல் அமைதியின் இணையற்ற அழகையும் எப்படி அறியக்கூடும்? தேங்கிக் கிடக்கும் சேற்று நீரைத் தவிரவேறொன்றையும் கண்டிராதவன் நீங்கள் கடலைப்பற்றி சொல்லுகிறசெய்தியை எவ்வாறு அறிந்துகொள்வான்? வலிய கடலை அவனுக்கு விவரிக்க எந்தச் சொற்களைப் பயன்படுத்துவீர்கள்? வியப்புண்டாக்கும் பொருளாகிய கடலானது உண்மையில் இருக்கத்தான் செய்கிறது என்பதை அவன் எவ்வாறு நம்புமாறு செய்வீர்கள்?
அப்படியிருக்க, ‘ தேவன் ஆவியாயிருக்கிறார்” என்று இயேசு சொன்ன செய்தியின் கருத்தை அறிவது அதைவிட எவ்வளவு கடினம்! அதன் கருத்தை இயேசு அறிந்திருந்தார். அவர் மனம் நம் மனத்தைப்போல வரம்பிற்குட்டதல்ல. அவர் சேற்றுக்குட்டைபோன்ற இவ்வாழ்க்கையை நோக்கிக்கொண்டிருக்கவில்லை. தேவ ஆவியின் எல்லையற்ற பரப்பினை அவர் அறிந்திருந்தார். அதன் விந்தை, ஆறுதல் சமாதானமாகிய இவற்றை ஓரளவாகிலும் நமக்கு விளக்கிக்காட்டும்படி வந்தார்.
ஆவி என்பது ஒர் உடலில் கட்டுப்பட்டுக் கிடப்பதில்லை என அறிவோம். ஆவியானது உடலைப்போல் அறியப்படக்கூடியதல்ல. அது உடலைப்போல மாறுதல் அடையக்கூடியதுமன்று. கடவுள் அத்தகைய ஆவி என்று திருமறை கூறுகிறது. அவர் ஓர் உடலுக்கோ, ஓர் உருவத்துக்கோ, எவ்வகையான வரம்புக்கோ உட்பட்டவர் அல்லர். அவர் அளவிடப்படாதவர்: சரீரக் கண்களால் அவரைக் காணமுடியாது. எத்தகைய வரம்புக்கும் அவர் உட்படாதவரானபடியால் அவர் ஒரே சமயத்தில் எல்லா இடங்களிலும் இருக்கவும் எல்லாவற்றையும் பார்க்கவும், எல்லாவற்றையும் அறியவும் முடியம் என்பதாக வேதாகமம் கூறுகிறது.

நாம் இவ்வாறு செய்தல் இயலாது. எனவே, நாம் வரம்புகளுக்குட்பட்டிருப்பது போலக் கடவுளுக்கும் எல்லை வரையப் பார்க்கிறோம். நாம் செய்ய முடியாதவற்றைக்கடவுள் செய்ய வல்லவர் என்பதை மறுக்கிறோம். ஒரே சமயத்தில் நாம் எல்லா இடத்திலும் இருக்க முடியாது என்கிறோம்! பெருங்கடலைப்பற்றிக் கேள்வியுற்றுக் கடற்கரைக்குச் சென்று கொஞ்சம் நீரைத் தன் கையில் அள்ளிக்கொள்கிறவன் போல் காணப்படுகிறோம். அவ்வாறு செய்பவன், ‘கடலை என்னுடையதாக்கிக்கொண்டேன்: பெருங்கடல் என் கையில் இருக்கிறது, அது எனக்குச் சொந்தமாகிவிட்டது” என்று கூறுகிறான். உண்மைதான்! சமுத்திரத்தின் ஒரு சிறிய பகுதியை அவன் வைத்திருக்கிறான். ஆனால் அதே நேரத்தில் கடலின் ஆயிரக்கணக்கான ஏனைய கரைகளில் நின்று கடல் நீரைக் கைகளில் அள்ளித் தங்களுடையது என்று சொல்லும் பிறரும் இருக்கலாம். கோடிக்கணக்கான மக்கள் கடலை அணுகி அதன் நீரில் சில துளிகளைத் தங்கள் கைகளை நீட்டி எடுக்கலாம். அவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு வேண்டிய அளவு எடுத்துக்கொள்ளலாம். எனினும், சமுத்திரம் அதனால் மாறிவிடாது. அதன் வலிமையும் ஆற்றலும் மாறாமலே இருக்கும். அளவு கடந்த அதன் ஆழங்களிலுள்ள பிராணிகளின் வாழ்க்கையும் எவ்வித மாற்றமுமன்றி நடைபெற்றுக்கொண்டே இருக்கும்.
கடவுளும் அப்படியே! கிறிஸ்துவின் நாமத்தில் தம்மை நேக்கிக்கூப்பிடும் அனைவரின் விண்ணப்பத்தையும் கேட்கத்தக்கதாக அவர் ஒரே சமயத்தில் எல்லா இடங்களிலும் இருக்கக்கூடும். விண்மீன்கள் தங்கள் இடங்களில் இருக்கவும், விரையின் முளை பூமிக்குள்ளிருந்து கிளம்பவும், கடலிலே மீன்கள் நீந்தித் திரியவும் காரணமான அற்புதச் செயல்களை அவர் செய்து வருகிறார். கடவுள் எல்லை இல்லாதவர். அவர் ஞானத்திற்கும், வல்லமைக்கும், அன்புக்கும், இரக்கத்திற்கும் எல்லை கிடையாது.
நீங்கள் கடவுளை உங்கள் மனதால் மட்டுப்படுத்தலாகாது. அவ்வாறு செய்வதுண்டானால் உடனே அதை நிறுத்துங்கள். அவரையோ அர் செயலையோ ஏதோ ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுப்படுத்தாதீர்கள். பெரும் கடலுக்குக் கரையிட முயலமாட்டீர்களே. சந்திரனின் ஓட்டத்தை மாற்றவோ பூச்சக்கரம் சுற்றாதபடித் தடுக்கவோ துணிவீர்களோ?
அப்படியிருக்க வியப்பிற்குரிய இவற்றையெல்லாம் படைத்து ஆண்டு நடத்தும் கடவுளை மட்டுப்பத்துவது எத்துணை பெரிற மதியீனம்!
என் தாயாரிடம் நான் பெற்றுக்கொண்ட பலவற்றிற்காக நான் அவர்களுக்கு எப்போதும் நன்றியுள்ளவனாய் இருக்கிறேன். அவற்றில், நான் பத்து வயதுள்ளவனாய் இருந்தபோது, ‘கடவுள் ஆவியாயிருக்கிறார். அவர் வரம்பில்லாதவர், நித்தியர், மாறாதவர்” என்று அவர்கள் எனக்குக் கற்றுக்கொடுத்ததே மிகவும் நிலையான நன்மையாகும். கடவுளைப்பற்றிய இந்த விளக்கம் எப்போதும் என்னோடிருந்திருக்கிறது. கடவுள் பரம்பற்றதும், நித்தியமும், மாறாததுமான ஆவியாயிருக்கிறார் என்று ஒருவன் அறிந்திப்பானேயாகில் அவ்வறிவு அவரை மட்டுப்படுத்தாதபடி அவனைத் தடத்தாளும் நாம் செய்ய முடியாதவற்றை அவர் செய்ய வல்லவர் என்ற உண்மையைச் சந்தேகிக்காதபடி நமது நம்பிக்கையைப் பலப்படுத்தும்.
வேதாகமம் உண்மையான கடவுள் வார்த்தை என்பதைச் சிலர் சந்தேகிப்பதற்குக் காரணம் யாதெனில், தாங்கள் ஆற்று முடியாதவற்றைக் கடவுள் ஆற்றுக்கூடியவர் என்பதை அவர்கள் ஓப்புக்கொள்ள மனமற்று இருப்பதே ஆகும். பரிசுத்த ஆவியின் ஏவுதலால் வேதாகமம் எழுதப்பட்டது பற்றி உங்களுக்குச் சந்தேகம் உண்டானால் திரும்ப அவ்விஷயத்தைப் யோசித்துப்பாருங்கள். தன் ஆயுள்காலமெல்லாம் ஒரு சேற்று நீர்க்குட்டையைப் பார்த்து வந்த ஒருவன் முதல் தடவையாக சமுத்திரத்தைக் காண்பதுபோல அதை யோசித்துப் பாருங்கள். ஒருவேளை நீங்கள் இப்போதே கடவுள் சர்வ வல்லவர் என முதல் முதலாகப் பார்க்கிறீர்கள். அவர் இன்ன தன்மையுடையவர் என்பதை ஒருவேளை நீங்கள் இப்போதுதான் கூறுகிறபடி கடவுள் ஆவியாயிருக்கிறார் என நம்புகிறவருக்குத் தெய்வச்செயல்களையாவது, கிறிஸ்தவத் திருமறையை இயற்றிய மனிதர் கடவுளின் ஆவியால் ஏவப்பட்டு எழுதினதை நம்புவதரிதன்று. கடவுள் இன்னாரென்று நீங்கள் அறிந்துகொண்டால் இப்படிப்பட்ட சிக்கல்கள் தீரும்.

2. கடவுள் ஆள்தத்துவமுடையவர் என்று வேதம் விளக்குகிறது. ‘கடவுள் அன்புகூறுகிறார், கடவுள் பேசுகிறார்” என்பதாக வேதாகமம் முழுவதிலும் வாசிக்கிறோம். ஓர் ஆளுக்கு இருப்பனவாக நாம் கூறுகிற அனைத்தும் இறைவனுக்கு உண்டெனக் கூறியிருக்கிறது. ஓர் ஆள் உணருகிறான். நினைக்கிறான். விரும்புகிறான். மேலும் ஆள்தத்துவத்துக்குரிய சகல ஆற்றல்களையும் ஆற்றி வருகிறான்.
இவ்வுலகத்திலுள்ள நாம் ஆள்தத்துவத்தை மனித உடலோடு இணைத்துக் கட்டுபடுகிறோம். தசை, எலும்பு முதலியவற்றின் மூலமாக வெளிப்படுத்தப்படாத ஆள்தத்துவத்தை நம் மனம் கிரகித்துக்கொள்ள முடியாது. நாம் இப்போது குடியிருக்கிற சரீரங்களில் என்றும் தங்குவதில்லை என அறிவோம். நமக்கு மரணம் நேரிட்டதும் நாம் நம் சரீரத்தை விட்டு நீங்கி நமக்காக நியமித்துள்ள இடத்தை அடையச் செல்லுகிறோம். இதையெல்லாம் நாம் அறிந்திருந்தும் அவற்றைச் சரிவர நம்புவது நமக்குக் கடினமாகும்.
ஆள்தத்துவமானது அவசியமான உடல் வாழ்க்கையுடன் இணைக்கப்பட்ட வேண்டுவதில்லை என்பதை நாமெல்லாம் உணர்ந்தால் அது எத்துணை பெரிய வெளிப்பாடாகும்! கடவுள் உடல் ஒன்றில் கட்டப்பட்டிருப்பவர் அல்லர்: ஆனாலும் அவர் ஆள்தத்துவமுடையவர். அவர் உணருகிறார். அன்பு கூருகிறார். மன்னிக்கிறார். நாம் அடையும் கஷ்டங்களிலும் துக்கங்களிலும் நம்மோடு அனுதாபப்படுகிறார்.
3. கடவுள் ஆவியாகவும் ஆள்தத்துவமுடையவராகவும் மட்டுமன்றி, அவர் பரிசுத்தமும் நீதியுமுள்ளவராகவும் இருப்பதாகத் திருமறை தெரிவிக்கிறது. ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தின விசேஷம் வரைக்கும் கடவுள் தம்மைப் பரிசுத்தராகவே வெளிப்படுத்துகிறார். அவர் முற்றிலும் பூரணர்: ஒவ்வொரு விஷயத்திலும் அவர் பரிபூரணரேயாவார்: அவர் பாவமுள்ள மனிதனைத் தொடக்கூடாத தூயர்: பாவ வாழ்க்கையைச் சகிக்கக்கூடாத பரிசுத்தர்: அவர் பரிசுத்தரும் பூரணருமான கடவுள்.
அவரது மாட்சிமை மிக்க நீதியை நாம் சரிவரக் கிரகித்துக் கொள்ளக்கூடுமானால் அது வெவ்வேறு நாட்டாராகவும் தனித்தனி ஆள்களாகவும் நாம் வாழும் முறையில் எத்தகைய மாற்றமுண்டாக்கும்! கடவுளின் பூரணநீதிக்கும் அநீதியுள்ள மனிதனுக்குமுள்ள மாபெரும் வித்தியாசம் இன்னதென்று நாம் உணர்ந்துவிட்டால், உலகமே உடனடியாக மாறுதல் அடைந்துவிடும்! அவர் ஒளியாயிருக்கிறார். அவரில் எவ்வளவேனும் இருளில்லை. அவர் எல்லாருக்கும் மேலானவர் இவ்வாறு வேதம் கடவுளைக் குறித்து விளம்புகிறது.
இச்சத்தியமானது குறைந்த அறிவுள்ள மனிதர் புரிந்துகொள்வதற்கரியதேயாகும். நம் குறைகளும் பலவீனங்களும் எங்குமே தெளிவாயக் காணப்படுகின்றன. இப்படியிருக்க புத்திக்கெட்டாத கடவுளின் பரிசுத்தத்தை நாம் அறிவது அரிது. ஆனால் வேதாகமம் நமக்கு விளங்கிப்பயன்பட வேண்டுமானால் நாம் அதை எப்படியாவது அறிந்துகொள்ளவேண்டும்.
பரிபூரணரான கடவுளை விட்டு குறைந்த மலிந்த மனிதனைப் பிரித்துவைக்கும் பெரும் பிளபஇபினைப்பற்றித் திருமறையின் எல்லாப் பாகங்களும் போதிக்கின்றன. ஆசரிப்புக்கூடாரமும், தேவாலயமும் பரிசுத்த ஸ்தலம் என்றும், மகா பரிசுத்த ஸ்தலம் என்றும் இரு பாகங்களாகப் பிரிக்கப்பட்டிருந்ததில் இதைக் காண்கிறோம். கடவுளை அணுகவிரும்பும் பாவிகள் செலுத்த வேண்டிய பலியிலும் இது சுட்டிக்காட்டப்படுகிறது. கடவுளுக்கும் மனிதருக்குமு; நடுவில் நின்று மத்தியஸ்தம் செய்ய ஒரு சிறப்பு ஆசாரியக்குழு நியமிக்கப்பட்டது இதனைத் தெளிவுபடுத்துகிறது. மேலும் பலவகையான அசுத்தங்கள் குறித்து லேவியராக மத்தில் விதிக்கப்பட்டுள்ள விதிகள் இதை வலியுறுத்துகிறது. அதுவுமன்றி யூதர் கொண்டாடி வந்த பல விழாக்களிலும், அவர்கள் பாலஸ்தீனா நாட்டில் தனித்து வாழ்ந்ததிலும் இது காணப்படுகிறது. கடவுளின் சகல பண்புகளையும் ஆண்டு நடத்துவது அவரது பரிசுத்தமே.
அவரது அரியணை அவரது பரிசுத்தத்தின் மேல் நிலைநாட்டப்பட்டிருக்கிறது என்று வேத நூல் உறுதியாகக் கூறுகிறது. கடவுளுக்கும் மனந்திரும்பாத பாவிக்கும் இடையில் வெகுதூரம் இருப்பதின் காரணம் யாதெனில் கடவுள் பரிசுத்தராகவும் மனிதன் அசுத்தனாகவும் இருப்பதேயாகும். நம்முடைய அக்கிரமங்களே நம்மைக் கடவுளை விட்டுப்பிரித்துவிட்டன என்று பரிசுத்த வேதாகமம் பகருகிறது. அந்தப் பரிவினையின் பயனாகக் கடவுள் தமது முகத்தை நமக்கு மறைத்துவிட்டதோடு நம் கூப்பிடுதலுக்குச் செவி கொடுப்பதுமில்லை. ஏனெனில் கடவுல் பொல்லாங்கைக் காணப்கூடாத புனிதர். பாவத்தோடு எவ்விதத் தொடர்பும் கொள்ளக்கூடாத பரிசுத்தர். மனுகுலத்தினுள் பாவம் புகுமுன் கடவுளும் மனிதரும் ஐக்கியம் கொண்டிருந்தனர். ஆனால் அந்த ஐக்கியம் அற்றுப்போயிற்று. இயேசு கிறிஸ்துவினாலேயொழியக் கடவுளும் மனிதரும் எவ்விதத்திலும் தொடர்பு கொள்ள முடியாது. இயேசு கிறிஸ்துவின் மூலமாக மட்டுமே மனிதர் மீண்டும் கடவுளோடு ஐக்கியமாகக்கூடும்.
மனிதர் பாவிகள்: தங்கள் நிலைமையை மாற்றிக்கொள்கத் திறனற்றவர்கள்- அவர்கள் பாவமுள்ள குரல் கடவுளின் தூய செயியை எட்டுவது இயலாது. கடவுள் தம் அளவற்ற இரக்கத்தால் தமது மைந்தனை இவ்வுலகிற்கு அனுப்பாதிருந்தாரேயாகில் மனிதர் அழிவுற்ற நிலையிலேயே என்றும் இருந்திருப்பர்.
இயேசு மரித்ததின் காரணம் கடவுளின் பரிசுத்தமேயாகும். கடவுள் பரிசுத்தராகையால் பாவத்தை மிகக் கண்டிப்பாகத் தண்டிக்கவேண்டியதாகும். அவர் அன்புடையவராகையால் அந்தத் தண்டணையை அடைந்து மனிதருக்கு இரட்சிப்பை நல்க அவர் இயேசுக்கிறிஸ்துவைத் தந்தருளினார். நாம் வழிபடும் கடவுள் தூயரும், பரிசுத்தரும், நீதிபரருமானதால் நாம் தம்மிடம் சேரத்தக்கதாக அவர் தம் ஓரேபோறன குமாரனை இவ்வுலகில் அனுப்பினார். ஆனால் அவர் அனுப்பியுள்ள உதவியை நாம் அலட்சியம் செய்து, அவர் ஏற்படுத்தியுள்ள விதிகளுக்கு கீழ்ப்படியாமல், நாம் அடையவேண்டிய தண்டனையை அநுபவிக்கையில் அவரிடம் இரக்கம் வேண்டக்கூடாது.
4. கடவுள் அன்பாகவே இருக்கிறார். வேத புத்தகத்தை வாசிக்காத பலருக்கு கடவுளின் மற்ற இயற்பண்புகள் விளக்காததுபோலவே ‘ கடவுள் அன்பாகவே இருக்கிறார்” (1யோவான் 4:8) என்பதன் பொருளும் விளங்குவதில்லை.
அன்பு என்ற சொல்லின் பொருளை அறியாமல் அதைப்பயன்படுத்திவிடுகிறோம். தற்காலத்தில் மிகவும் தவறாக எடுத்தாளப்படும் சொற்களில் இதுவும் ஒன்றாகும். மிகவும் கீழ்த்தரமான நடத்தையைக் குறிப்பிடவும் மிக சிறப்பான மனித உறவைக்குறித்துப் பேசவும் இந்த ஓரே பதத்தை உபயோகிக்கிறோம். நம் அயலகத்தாரில் அன்பு செலுத்துவதாகக் சொல்லுகிறோம். ஆனால் நம்மில் பலர் அவ்வாறு பேசுவதைத் தவிர அது விஷயமாhய் வேறொன்றும் செய்வதில்லை! எனவே, வேதாகமம் எந்தக் கருத்துடன், ‘தேவன் இன்பாகவே இருக்கிறார்” என்று கூறுகிறது என்பதை நாம் தெளிவாக அறியாமல் இருப்பது வியப்புக்குரியதல்ல.
கடவுள் அன்பாயிருப்பதால் எல்லாம் இன்பமாகவே நிகழ்ந்துவரும்: ஒருவனும் தன் பாவத்திற்காகத் தண்டனை அடையான் என்ற தவறான எண்ணம் கொள்ளாதீர்கள். எல்லாப் பாவமும் தண்டிக்கப்படவேண்டுமெனக் கடவுளின் பரிசுத்தத் தன்மை வற்புறுத்துகிறது. ஆனால் பாவ மனிதர் மீட்கப்படும் வழியையும் திட்டத்தையும் கடவுளின் அன்பு அருளுகிறது. மனிதர் மன்னிப்பும் சுத்திகரிப்பும் அடைவதற்காகக் கடவுளின் அன்பானது இயேசு கிறிஸ்துவின் சிலுவையைத் தந்தது. இயேசு கிறிஸ்துவின் சிலுவையில் மரணடையச் செய்தது கடவுளின் அன்புதான்.
கடவுளின் அன்பைப்பற்றி ஒருபோதும் சந்தோகப்படவேண்டாம். ஏனெனில் அவரது பரிசுத்தத்தைப்போலவே அவரது அன்பும் அவருடைய மாறான இலட்சணங்களில் ஒன்றாகும். உங்கள் எத்துணை பயங்கரமாயிருந்தாலும் கடவுள் உங்களில் அன்புகூருகிறார். கடவுள் அன்புடையவராயில்லாதிருந்தால் நம்மில் ஒருவராகிலும் பரலோக வாழ்விற்கு பங்கடைவதற்கு இடமிராது. கடவுள் அன்பாகவே இருக்கிறார். நம்மேல் அவர் கொண்ட அன்பு ‘நாம் பாவிகளாய் இருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார் (ரோமர் 5:8).
கடவுளின் அன்பு, மன்னிப்பு ஆகிய இவைபற்றி வாக்குறுதிகள் மிக உண்மையானவை, உறுதியானவை, திட்டமானவை ஆனால் பெருகடலில் வர்ணனையை எவ்வளவுதான் பிறர் கூறக்கேட்டாலும் அதை நேரில் காணும் வரை அதன் முழு வனப்பு புலப்படாது. கடவுளின் அன்பும் அப்படியே. நீங்கள் ஏற்றுக்கொள்ளும்வரை, அதை நீங்கள் அனுபவிக்கும் வரைக்கும், கடவுளோடு நீங்கள் சமாதானம் ஆகும்வரைக்கும் கடவுளின் அன்பை ஒருவரும் உங்களுக்குக் காட்ட முடியாது. கடவுளின் அன்பை நீங்கள் உங்கள் அற்ப புத்தியைக்கொண்டு கிரகித்துக்கொள்வது எளிதன்று. கடவுளின் அன்புபோன்று மிகப் பெரியதொன்றோடு செயல் தொடர்பு கொள்ளும் திறமை உங்களது மனதிற்கு இல்லை. ஒரு கறுப்பு நிற மாடு, பச்சை நிறப்புல்லைத் தின்று, எப்படி வெள்ளை நிறப்பாலைத் தருகிறது என்பது விளக்குவதற்கு உங்கள் மனதிற்குக் கடினமாய் இருக்காலம். ஆனால் பாலை அருந்திப் பயனடைகிறீர்கள்! ஒரு சிறிய விதையிலிருந்து ஒரு பெரிய கொடி வளர்கிறது. சிவப்பும் பச்சையுமான மிக இனிய முலாம் பழங்களை அது தருகிறது. அந்த விதையில் நிகழும் சிக்கலான செயல்களை எல்லாம் உங்கள் மனம் அறிந்துகொள்ளமுடியாது. ஆனால் அக்கனிகளை உண்டு மகிழ்கிறீர்ள்! மின் ஆற்றல் அளிக்கும் ஒளியில் ஒருவேளை இப்போது நீங்கள் படுத்துக்கொண்டிருக்கலாம். அந்த மின் ஆற்றலை விளக்க உங்களால் முடியாதிருக்காலம். ஆனால் மின்சாரம் இருக்கிறதென்றும் நீங்கள் வாசிக்க அது ஒளி தருகிறது என்றும் அறிந்திருக்கிறீர்கள்!
மேற்கூறிய எடுத்துக்காட்டுபோன்று கடவுளை விசுவாசத்தால், அதாவது அவருடைய குமாரனான இயேசு கிறிஸ்துவில் வைக்கும் விசுவாசத்தால், ஏற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்தால் அவரைப்பற்றிய சில சந்தேகங்களும் எந்த இடமும் இராது. உங்கள் இருதயத்தில் கடவுள் தங்குகிறாரா இல்லையா என்கிற கேள்வி எழ வேண்டியதேயில்லை. உங்களுக்கே அது நிச்சயமாயத் தெரியும்.
கடவுள் இன்னார் என்றும், அவர் இன்ன தன்மையுடையவர் என்றும் எப்படி நிச்சயமாய் அறிந்திருக்க முடியும் என்று யாராவது என்னைக்கேட்டால், பட்டம் விட்டுக்கொண்டிருந்த ஒரு சிறுவனின் கதை என் நினைவிற்கு வரும். அந்த நாள் பட்டம் விடுவதற்கேற்ற நாள். நல்ல காற்று அடித்தது. அலை போன்ற மேகங்கள் வானத்தில் அலைந்துகொண்டிருந்தன. பட்டம் வெகு உயர சென்று மேகங்களுக்கப்பால் மறைந்துவிட்டது.
‘என்ன செய்கிறாய்?” என்று பெரியவர் ஒருவர் அவனைக் கேட்டார்.
‘பட்டம் விட்டுக்கொண்டிருக்கிறேன்” என்றான் பையன்.
‘பட்டமா? பார்க்க முடியவில்லை” என்றார் பெரியவர்.
‘ என் கண்ணுக்கும் அது தெரியவில்லைத்தான். ஆனால் அடிக்கடி அது பலமாக இழுக்கிறது. அதை நான் உணருகிறேன். எனவே அது அங்கே பறந்துகொண்டிருக்கிறது என்று எனக்கு நிச்சயமாகத் தெரியும்!” என்றான் அந்த பையன்.
கடளைப்பற்றிப் பிறர் உரைப்பதை எடுத்துக்கொள்ள வேண்டாம். நீங்களே அவரைக் கண்டுபிடியுங்கள். அப்பொழுது உங்கள் நெஞ்சமானது அவரது அதிசய அன்பு இன்தென உணர்ந்து கொள்ளும். அவர் திட்டமாகவே இருக்கிறார் என்று நீங்களும் உணர்ந்து அறிந்துகொள்வீர்கள்.