கடவுள் காணும் மனிதன்

  2101
  0
  கடவுள் காணும் மனிதன்

  ‘ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனிதருடைய கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைப் பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத் தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது” (யோவான் 3:19). இதுவே கடவுள் மனிதனைக் குற்றஞ்சாட்டுவதற்குரிய காரணம். மனிதர்கள் கீழ்ப்படியாமை, பாவத்தன்மை, அசுத்தம், கேடுகள், ஆவிக்குரிய குருட்டுத்தன்மை, ஆவிக்குரிய மரணம் ஆகியவை உள்ளவர்கள் என வேதாகமம் எச்சரித்து, அதற்கு அவர்களின் திட்டமிட்ட தீய செயல்கள் பலத்த சாட்சியாயிருக்கின்றன எனவும் கூறுகிறது.

  மனிதனைக் குறித்து வேதாகமம் சித்தரிப்பது புகழ்ச்சியானதல்ல. ஆனால் அது உண்மை நிலைமையைக் காட்டுகிறது. நோய் நம்மை நித்திய ஆக்கினைத் தீர்ப்புக்கு ஆளாக்கிவிடும் என்று நாமக்கு உணர்த்தப்படாவிட்டால் நாம் ஒருபோதும் அதற்கு மாற்று மருந்து தேடவே மாட்டேம் என்பதும் உண்மையாகும். நம்மை எதிர் நோக்கியிருக்கும் ஆக்கினைத் தீர்ப்பைப்பற்றி நாம் முழுமையாக உணரும்போதுதான் சுவிசேஷத்தின் பூரண பொருளும் நம்முடைய உள்ளத்துக்கும் இருதயத்துக்கும் புலன்படும். சுவிசேஷம் என்றால் ‘நற்செய்தி”. இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் என்பது மனிதருக்கு நல்ல செய்தி எனப்பொருள்படும். நாம் நம்முடைய பயங்கரமான நிலைமையைத் தெரிந்து நம்முடைய நலைமையைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே கடவுள் நம்மைக் குற்றஞ்சாட்டியுள்ளார். நாம் உண்மையில் இருக்கிறபடியே நம்மை நாம் காணவேண்டுமென அவர் விரும்புகிறார். ஆனால் கடவுள் அதோடு நின்று விடுவதில்லை. நம்மைக் குறித்த கடவுளின் ஒவ்வொரு குற்றச் சாட்டிற்கும் அவரே மாற்று மருந்து கொடுத்துள்ளார்.

  மனிதன் ஒரு பாவி என்பது முதலாவது குற்றச்சாட்டாகும். வேதாகமத்தில் இது பெரிய எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளது. முன்பு கூறப்பட்டுள்ளதுபோல் வரலாறு உறுதிப்படுத்துகிறது. மனிதன் பாவியாக இருந்த போதிலும்கூட கடவுள் அவனுக்கு ஓர் இரட்சகரை அளித்துள்ளார்.

  கிறிஸ்து எவ்வாறானவர் என்பதைக் குறித்து வேதாகமத்தில் மிகவும் தெளிவாக இருக்கிறது. இது அவருக்குக் கொடுக்கப்பட்டுள்ள பெயரின் மூலம் காட்டப்பட்டுள்ளது. மத் 1:21 இல் உள்ளபடி தேவதூதன்,யோசேப்பினிடத்தில் ‘அவன் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக: ஏனெனில் அவர் தமது ஜனங்களி; பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்” என்றான். பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசிகளும் புதிய ஏற்பாட்டு அப்போஸ்தலர்களும் கொடுத்த செய்தியின் சாராம்சம் இதுதான். ‘அன்றியும் அவரே உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தோர்களுக்கும் தேவனால் ஏற்படுத்தப்பட்ட நியாயாதிபதியென்று, ஜனங்களுக்குப் பிரசங்கிக்கவும், சாட்சியாக ஒப்புவிக்கவும் அவர் எங்களுக்குக் கட்டளையிட்டார். அவரை விசுவாசிக்கிறவன் எவனே அவன் அவருடைய நாமத்தினால் பாவமன்னிப்பைப் பெறுவானென்று தீர்க்கதரிசிகளெல்லாரும் அவரைக் குறித்தே சாட்சி கொடுக்கிறார்கள்” (அப் 10:42-43).

  இயேசுவைப்பற்றியும், அவருடைய உயிர்த்தெழுதலைப்பற்றியும் பிரசங்கிக்கும்போது பவுல் பின்வருமாறு சொன்னார்: ‘ஆதலால் சகோதரரே இவர் மூலமாய் உங்களுக்குப் பாவமன்னிப்பு உண்டாகுமென்று அறிவிக்கப்படுகிறதென்றும், மோசேயின் நியாயப் பிரமானத்தினாலே நீங்கள் எவைகளினின்று விடுதலையாகி நீதிமான்களாக்கப்படக்கூடாதிருந்ததோ, விசுவாசிக்கிறவன் எவனும் இவராலே அவைகளினின்று விடுதலையாகி நீதிமானாக்கப்படுகிறான் என்றும் உங்களுக்குத் தெரிந்திருக்கக் கடவது” (அப் 13:38-39). இது மனிதனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்குக் கடவுளின் பதிலாகும். அவர் தமது குமாரனை மனிதரின் இரட்சகராக இந்த உலகத்திற்கு அனுப்பினார். அவர் மென்மையான இரக்கம் நிறைந்த ஆசிரியரை அனுப்பவில்லை. நம்மை நமது பாவங்களிலிருந்து இரட்சிக்க ஓர் இரட்சகih அனுப்பினார். இந்த தேவ மனிதராகிய இயேசு கிறிஸ்துதான் நம்முடைய பாவங்களுக்குக் கடவுளின் மாற்று மருந்து ஆவார். அவரைத் தவிர வேறொருவரும் இல்லை. ஒரே இரட்சகர், ஒரே மத்தியஸ்தர், ஒரே பாவ நாசகர், ஒரே ஆண்டவர், இரட்சிக்கிற ஒரே நம்பிக்கைதான் நமக்குண்டு. இங்கே குழப்பமடைவதற்கு எவ்வித வழியுமில்லை. முட்டாளான வழிப்போக்கனுங்கூட தவறிப்போகாத அளவுக்கு இது மிகவும் எளிமையானது. வேதாகமம் போதிக்கிற எல்லாக் காரியங்களையும் நான் இதில் சேர்க்கவில்லை. ஆனால் இரட்சிப்பின் வழியைப்பற்றி அவை போதிக்கிறதையே நான் இங்கு கூறுகிறேன்.

  கடவுள் மனிதனுக்கு எதிராகக் கூறும் இரண்டாவது குற்றச்சாட்டு அவன் இழக்கப்பட்டுவிட்டான் என்பதாகும். ஆனால் இங்கேயோ கடவுள் மனிதனைக் கைவிடவில்லை. கடவுள் மனிதனிடம் வந்தார். அவனை இரட்சிக்கவே வந்துள்ளார். லூக்கா 19:10 இல் இயேசு கூறுவதை நாம் கேட்கிறோம். ‘இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார்” என்றார். இந்த உண்மையானது லுக்கா 15ம் அதிகாரத்தில் காணமற்போன ஆட்டைப்பற்றிய கதையின் மூலம் பொருந்தமாக விளக்கப்படுகின்றது.

  ஆவிக்குரிய வழியில் மனிதன் அசுத்தமாயிருக்கிறான் என்பது மற்றொரு குற்றச்சாட்டாகும். எவ்வாயறாயினும் கடவுள் அவனைப் பனியைப்போல் சுத்தமாக்கக் கூடும். ஏசாயாவின் புத்தகத்தில் நாம் பின்வருமாறு வாசிக்கிறோம்.’வழக்காடுவோம் வாருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்: உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப்போல் வெண்மையாகும்: அவைகள் இரத்தாம்பரச் சிவப்பாயிரு;தாலும் பஞ்சைப் போலாகும்” (ஏசாயா 1:18).

  கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே உண்மையான சாட்சி. மரணத்தின் முதற்போறானவர். பூமியின் இராஜாக்களுடைய இளவரசன் என வெளிப்படுத்தின விசேஷம் கூறுகிறது. அர் நம்மை நேசித்து தம் சொந்த இரத்தத்தினால் நம்மை நம்முடைய பாவங்களறக் கழுவினார். இது உண்மையிலேயே நற்செய்தியாகும். இரட்சிப்பு என்பது கடவுள், பாவத்தை மன்னித்து குற்றங்களை நீக்குவதைவிட மிகவும் மேலானதாகும். பாவியாகிய மனிதன் கடவுளின் முன்னால் நிற்கவே முடியாது. வீழ்ந்த மனிதன் தனக்கென்று எந்த நீதியும் இல்லாதவனாக இருக்கிறான். ஆனால் கிறி;துவில் நம்பிக்கையுள்ளவர்களுக்கு அவர் நீதியை அளித்துள்ளார்.

  மனிதன் கடவுளுக்கு முன்பாகச் சரியான இடத்தை அடைவதைவிட மேலானதொன்று தேவையுள்ளவனாக இருக்கிறார். மனிதன் பரம்பரையாகப் பாவியாக இருக்கிறான். மனிதனை அவனுடைய பாவக்குற்றத்திலிருந்து சுத்தமாக்கும்போது கடவுள் அவனைச் சீர்த்திருத்துவதில்லை. அவனை முழுமையாக உருமாற்றுகிறார். கடவுள் மனிதனை கிறிஸ்துவின் மூலமாகப் புதுப்பிக்கிறார். மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலான தன்மையைக் கொடுக்கிறார் (எபே 4:24).

  நாம் செய்யவேண்டிய ஒரே வேலை யோவான் 6:29 இல் கூறப்பட்டுள்ளபடி விசுவாசிப்பதேயாகும். நீங்கள் அதை விலைக்கு வாங்கவேண்டியதில்லை. ‘ஓ, தாகமுள்ளவர்களே எல்லாரும் தண்ணீரண்டைக்கு வாருங்கள். பணமில்லாதவர்களே வந்து வாங்கிப் புசியுங்கள்: வாருங்கள், திராட்சரசத்தையும் பாலையும் பணமின்றி, விலையின்றி, வாங்குங்கள்”. நீ எவ்வாறு இதைப் பெற முடியும்? அது இலவசமானது. அது ஒரு பரிசு. ஒன்றும் தரவேண்டாம். பெற்றுக்கொண்டால் போம். கிறிஸ்து அதை வாங்கினார். அதற்காக விலைகொடுத்தார். அதை உனக்கும் கொடுக்கிறார். முழுமையான இலவசமான இரட்சிப்பு. இருதயத்தை கிறிஸ்துவுக்குத் திறந்து ஓப்புக்கொடு.