Home கட்டுரைகள் இரட்சிப்பின் கேள்விகள்!

இரட்சிப்பின் கேள்விகள்!

1791
0
இரட்சிப்பின் கேள்விகள்!
1. எனது மார்க்கம் எனக்குப் போதாதா?

‘நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப் போல் ஆகாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள்.” (மத் 18:3)

‘நான் எட்டாம் நாளிலே விருத்தசேதனமடைந்தவன், இஸ்ரவேல் வம்சத்தான், பென்யமீன் கோத்திரத்தான், எபிரெயரில் பிறந்த எபிரெயன், நியாயப்பிரமாணத்தின்படி பரிசேயன்@ பக்திவைராக்கியத்தின்படி சபையைத் துன்பப்படுத்தினவன், நியாயப்பிரமாணத்திற்குரிய நீதியின்படி குற்றஞ்சாட்டப்படாதவன். ஆகிலும், எனக்கு லாபமாயிருந்தவைகளெவைகளோ அவைகளைக் கிறிஸ்துவுக்காக நஷ்டமென்று எண்ணினேன்.”

‘அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன்@ குப்பையுமாக எண்ணுகிறேன்.” (பிலி 3:5-7, 11)

2. நான் யாருக்கும் அநியாயம் செய்யாமல் முடிந்த அளவு நன்மையே செய்துவந்தால் போதாதா?

‘அவர் அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷர்முன்பாக உங்களை நீதிமான்களாகக் காட்டுகிறீர்கள், தேவனோ உங்கள் இருதயங்களை அறிந்திருக்கிறார்@ மனுஷருக்குள்ளே மேன்மையாக எண்ணப்படுகிறது தேவனுக்கு முன்பாக அருவருப்பாயிருக்கிறது.” (லூக் 16:15)

‘ஒருவன் நியாயப்பிரமாணம் முழுவதையும் கைக்கொண்டிருந்தும், ஒன்றிலே தவறினால் எல்லாவற்றிலும் குற்றவாளியாயிருப்பான்.” (யாக் 2:10)
‘கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்@ இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு@ ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல@” (எபே 2:8-9)

3. அன்புள்ள தேவன் யாரையும் நித்திய நரகத்திற்கு அனுப்புவாரா?

‘இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள்@ கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது@ அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர்.” (மத் 7:13)

‘ராஜா பணிவிடைக்காரரை நோக்கி: இவனைக் கையுங்காலும் கட்டிக் கொண்டுபோய், அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கிற புறம்பான இருளிலே போடுங்கள் என்றான்.” (மத் 22:13)

4. இரட்சிக்கப்பட்டிருக்கிறேன் என்று மாய்மாலம் பண்ணுகிறவர்களைவிட என்னைப்போல சும்மா இருந்துவிடுவது நலமன்றோ?

‘உன் மனக்கடினத்திற்கும் குணப்படாத இருதயத்திற்கும் ஏற்றபடி, தேவனுடைய நீதியுள்ள தீர்ப்பு வெளிப்படும் கோபாக்கினைநாளிலே உனக்காகக் கோபாக்கினையைக் குவித்துக்கொள்ளுகிறாயே. தேவன் அவனவனுடைய கிரியைகளுக்குத்தக்கதாய் அவனவனுக்குப் பலனளிப்பார்.”

‘தேவனிடத்தில் பட்சபாதமில்லை.”

‘தேவன் இயேசுகிறிஸ்துவைக்கொண்டு மனுஷருடைய அந்தரங்கங்களைக்குறித்து நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் நாளிலே இது விளங்கும்.”
(ரோம 2:5-6, 11,16)

5. கிறிஸ்தவ வாழ்வு அவ்வழவு சுலபமா? என்னால் மன்னிக்க முடியாதவர்கள், விடமுடியாத பழக்கங்கள் எல்லாம் ஏராளம் உண்டே!

‘வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்@ நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்@ என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்@ அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது என்றார்.” (மத் 11:28-30)

‘என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு.” (பிலி 4:13).

6. தேவன் தாம் விரும்புகிற வேளையில் என்னை இரட்சிக்கமாட்டாரா?

‘தேவனுடைய கிருபையை நீங்கள் விருதாவாய்ப் பெறாதபடிக்கு, உடன் வேலையாட்களாகிய நாங்கள் உங்களுக்குப் புத்திசொல்லுகிறோம். அநுக்கிரக காலத்திலே நான் உனக்குச் செவிகொடுத்து, இரட்சணியநாளிலே உனக்கு உதவிசெய்தேன் என்று சொல்லியிருக்கிறாரே@ இதோ, இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணியநாள்.” (2கொரி 6:1-2)