Home செய்திகள் விலையுயர்ந்த முத்து

விலையுயர்ந்த முத்து

1982
0

‘பரலோகராஜ்யம் நல்ல முத்துக்களைத் தேடுகிற வியாபாரிக்கு ஒப்பாயிருக்கிறது!” (மத்தேயு 13:45).

பிதாவாகிய தேவனின் ஒரே பேறான மைந்தனான இயேசு கிறிஸ்து பிதாவினுடைய அரும்பெரும் செல்லப்பிள்ளை. அவருக்கு மிகவும் பிரியமானவர். விலையுயர்ந்த முத்து. இந்த விலைமதிக்கக்கூடா சத்திய முத்து பிதா உலகின் மீட்புக்காய் தந்தருளி இவ்வளவாய் உலக மக்கள்பேரில் அன்பு கூர்ந்தார். இவராலேயன்றி மனிதருக்கு மீட்பில்லை. நாம் இரட்சிக்கப்படும்படி இயேசுவின் நாமமேயல்லாமல் வேறொரு நாமம் மனிதருக்குக் கட்டளையிடப்படவில்லை. இரட்சிக்கப்பட விரும்புகிறவர்களுக்கு இவரே விலையுயர்ந்த முத்து. எல்லாப் பொருள் விலை கொள்ளப் பொருள் இவரே. இந்த ஒன்றைப் பெற நாம் செய்யவேண்டியது, அவரை என் ஆண்டவரும் இரட்சகருமாக ஏற்றுக்கொள்வதுதான்!

உலகப் பொருள்களும், செல்லம், சீர் அனைத்தும் நிலையற்றவை. இந்த உலகத்திற்குரியவை. ஆனால்; இயேசுவே நித்தியமானவர். மாறாதவர். நித்திய ஜீவனையளிப்பவர். மெய்யான சமாதானத்தைத் தருபவர். இப்பிரபஞ்சத்தின் சந்தோஷங்கள் மாறிப்போகக்கூடியவை. உலகச் சிறப்புகள் எதுவுமே மனிதனுக்கு நிலையான திருப்பதியையளிப்பவையல்ல. கடைசியில் அவனை ஏமாற்றத்துக்கும் அதிருப்பதிக்குமே கொண்டு போகக்கூடியவை. அவனுள்ளத்தில் ஒரு வெறுமையையும் ஏக்கத்தையுமே விட்டுவிட்டு அவை நீங்கும். ஆதனால் ஒருவன் எதைப் பெறாவிட்டாலும் இயேசுவைப் பெற்றுக்கொள்ள ஆவலுடையவனாயிருத்தல் வேண்டும். இவரே மெய்யான ஜீவன்.

இயேசு சொன்ன ஓர் உவமையில் நல்ல முத்தக்களைத் தேடுகிற ஒரு வியாபாரியைப்பற்றிக் கூறுனார். உலகில் கெட்டவைகள் பலவுள. பிசாசானவனும் அநேகபோலி முத்துக்களைக் காட்டுகிறான். அற்ப நேரமகிழ்ச்சியைத் தரும் பல காரியங்களை மனிதரின் கண்களுக்கும் உள்ளங்களுக்கும், முன்பாகக் காட்டி அவை விரும்பத்தக்க முத்துக்கள் என்று சொல்லுவான். மெய் வாழ்வை நாடுகிற மனமோ அவைகளைக்கண்டு ஏமாறுவதில்லை. உண்மையிலேயே நல்ல முத்தையே அது தேடும். தேடுகிறவர்கள் கண்டடைவார்கள் என்று சத்தியபரன் கூறியதுபோல கர்த்தரை உண்மையான மனதோடு தேடுகிறவர்கள் அவரைக் கண்டடைவார்கள். இந்த வியாபாரி ஒரு விலையுயர்ந்த முத்தைக் கண்டு விடுகிறான். அதை எப்படியாவது தான் பெற வேண்டும் என்று ஆவல் கொள்கிறான். சதா அதுவே அவன் எண்ணமும் விருப்பமும் ஆகிறது. அதைப் பெற தன்னிடத்தில் போதிய பணம் இல்லாவிடினும் அவனுடைய ஆவல் அவனை உந்தித்தள்ளுகிறது. அவன் போய் தன்குண்டான எல்லாவற்றையும் விற்று அந்த முத்தைக் கொள்ளுகிறான் (மத்தேயு 13:45-46).

தேவனுடைய இராஜ்யத்தைப் பெற விரும்புகிறவர்கள் இந்த முத்து வியாபரியைப் போன்ற ஒரே நோக்கமுடையவர்களாயிருக்க வேண்டும் என்பதை நமது கர்த்தர் இந்த உவமையின்மூலம் போதித்தார். இயேசு நமக்கு அளிக்கும் இரட்சிப்பு நாம் விலை கொடுத்து வாங்கக்கூடியது என்று இந்த உவமையிலிருந்து நாம் முடிவு செய்யக்கூடாது. அப்படி அர்த்த்படுவது தவறு. ஆனால் நம்முடைய இரட்சிப்பு மிக விலையுயர்ந்தது. எதையெல்லாம் நாம் துறக்க வேண்டுமோ அவற்றையும் விட மேலானது.

இயேசு விலையேறப்பெற்று கல் என்று அவருடைய சீஷனாகிய பேதுரு உரைப்பதையும் காண்பீர். அவர் மனுஷரால் புறக்கணிக்கப்புட்டவர். ஆனாலும் அவரே தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையேறப்பெற்றதுமான ஜீவனுள்ள கல். விசுவாசிக்கிற உங்களுக்கு அது விலையேறப்பெற்றது. இந்த விலையுயர்ந்த கல்லின் மதிப்பை மனுஷர் அறியவில்லை. வீடுகட்டுகிறவர்களாகிய உங்களால் அற்பமாய் எண்ணப்பட்ட அவரே மூலைக்குத் தலைக்கல்லானவர் என்று பேதுரு தம்முடைய ஜனமான இஸ்ரவேல் மக்களுக்கு அன்று உரைத்தார் (அப்போஸ்தலர் 4:11). அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார். அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. அவருடைய சகோதரரும் கூட அவரை விசுவாசிக்கவில்லை (யோவான் 3:5). அவர் வாழந்து வந்த சொந்த ஊராரும் அவரை செங்குத்தான ஒரு சிகரத்திலிருந்து அவரைத் தலைகீழாய்த் தள்ளிவிட பார்த்தனர். பிரதான ஆசாரியரும் வேத பாரகரும் அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டனர். அவரைக் புறக்ணித்துப் பரிகாசித்தனர். பிலாத்துவும், தன்கையைக் கழுவி இயேசுவை மரணத்திற்கு ஒப்புக்கொடுத்தான். மக்கள் கூட்டத்தினரோ இயேசுவுக்குப் பதிலாய்ப் பொல்லாதவனான பரபாவை விடுதலை செய்யக் கேட்டுக் கொண்டனர். இயேசுவை அகற்றும், அவனைச் சிலுவையில் அறையும் என்று பிலாத்துவுக்கு முன்பாகக் கோஷமிட்டனர். போர்ச் சேவருகம் அவர்மேல் துப்பி அவர் தலையில் அடித்துப் பரிகாசம்பண்ணினார்கள்.

ஏசாயா28:16 ஆம் வசனத்தில் இயேசுவாகிய கல்லைப்பற்றிய தீர்க்கதிசனத்தைப் படுக்கிறோம்.’இதோ, அஸ்திபாரமாக ஒரு கல்லை நான் சீயோனிலே வைக்கிறேன், அது பரீட்சிக்கப்பட்டதும், விலையேறப்பெற்றதும், திட அஸ்திபாரமுள்ளதுமான மூலைக்கல்லாயிருக்கும், விசுவாசிக்கிறவன் பதறான்” இவ்விடத்தில் இக்கல் பரீட்சிக்கப்பட்ட கல் என்று கூறப்படுகிறது. பிதாவாகிய தேவன் அவரைப் பரீட்சித்து, இவர் என் நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று சாட்சியும் கொடுத்தார். பிசாசானவனும் அவரைப் பரீட்சை பண்ணிப் பார்த்தான். ஆனால் இயேசு எல்லாச் சோதனைகளையும் வென்றார். இறுதியில் நமதாண்டவர், இந்த உலகத்தின் அதிபதி வருகிறான். அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை என்று சொல்லுமளவுக்கு அவர் களங்கமற்ற பளிங்காய் இருந்தர். தன்னிலே ஏதாவது குற்றம் கண்டுபிடிக்க வேண்டுமென்று ஓயாமல் பிரயாசப்பட்ட யூதர்களைப் பார்த்து ஆண்டவர், ‘என்னிடத்தில் பாவம் உண்டென்று யாரென்னைக் குற்றப்படுத்தக்கூடும்” என்று சவால் விடுகிறார் (யோவான் 8:46). பிலாத்துவும் ஏரோதுவும் இயேசுவை விசாரணை செய்து அவரில் ஒரு குற்றத்தையும் காணவில்லை (லூக்கா 23:14-15).

வைரக் கற்கள் முதலில் செதுக்கப்பட்டு பின்பு சானைக் கல்லில் உராய வைத்து மெருக்கேற்படுகின்றன. இந்த வித உபத்திரவங்களினூடே சென்றபிறகு அவை விலையுயர்ந்தவைகளாகின்றுன. கர்த்தராகிய இயேசுவும் பாடுகளின் வழியே சென்று பரீட்சிக்கப்படபடியால் அவர் மிக விலையுயர்ந்த கல்லானார். அவர் பிதாவை நோக்கி பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும், விண்ணப்பம்பண்ணி வேண்டுதல் செய்தார். அவருடைய வியர்வை இரத்தப் பெருந்துளிகளாய் தரையிலே சொட்டிற்று. பின்னர் சிலுவைப்பாடுகளுக்கும் மரணத்திற்கும் உள்ளானார். அவர் குமாரனாயிருந்ததும் பட்டபாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டு பூரணரானார் (எபிரெயர் 5:7-8).

இவரையே தேவன் உயத்தி எல்லா நாமத்துக்கும் மேலான நாமத்தை தந்தருளினார். இவரே அஸ்திபாரக் கல்லானவர். அவர்மேல் விசுவாசமாயிருக்கிறவன் வெட்கப்படுவதில்லை. வேதுருவும் அவனைச் சேர்ந்தவர்களும், அவரை விலைமதிக்கக்கூடாத கல்லாகக் கண்டார்கள். ஆகையால் அவரைப் பெற்றுக்கொள்ளும்படியாக தங்களுக்கு உண்டான எல்லாவற்றையும் விட்டு அவரைப் பின்பற்றினர் (மத்தேயு 19:21). கல்விமானும் நியாயப்பிரமாணத்தைக் குற்றமில்லாமல் கடைப்பிடித்து வந்த சவுலும் இயேசுவாகிய விலையுயர்ந்த முத்தைக் கண்டு கொண்டபின் அவனுக்கிருந்த பிற சிறப்புக்களையெல்லாம் குப்பையென்று தள்ளினான் (பிலிப்பியர் 3:5,8). நண்பரே! இந்த முத்தை நீங்கள் கண்டு கொண்டீரா? இல்லையானால் இவ்வுலக முத்துக்கள்தான் விலையுயர்ந்தவை என்று எண்ணிக்கொண்டு உங்கள் வாழ்வை வீணடிக்கிறீர்களா?