இனிப் பாடும் பாட்டெல்லாம் இயேசுவுக்காக
இனிப் பாடும் பாட்டெல்லாம் இயேசுவுக்காக
நான் பாடிடுவேன் நாள் முழுதும் வாழ்வதற்காக
நான் எழுதும் பாட்டுக்கெல்லாம் பொருளாய் வருவார்
நான் எழுதும் பாட்டுக்கெல்லாம் பொருளாய் வருவார்
நம்மை இசை தந்து அருள்காட்டும் அன்புக்காகவே
இனிப் பாடும் பாட்டெல்லாம் இயேசுவுக்காக
வழிகாட்டும் தெய்வம் என்று வணங்கிடுவோமே
இவர் மகிமை சொல்லி நாளெல்லாம் ஸ்தோத்தரிப்போமே
வழிகாட்டும் தெய்வம் என்று வணங்கிடுவோமே
இவர் மகிமை சொல்லி நாளெல்லாம் ஸ்தோத்தரிப்போமே
கதியற்று கலங்கி நாங்கள் கதறியவேளை
கதியற்று கலங்கி நாங்கள் கதறியவேளை
இரு கரம் நீட்டி அன்போடு அடைக்கலம் தந்தார்
இரு கரம் நீட்டி அன்போடு அடைக்கலம் தந்தார்
இனிப் பாடும் பாட்டெல்லாம் இயேசுவுக்காக
கண்ணீரோடும் கவலையோடும் கலங்கிய நேரம்
நம்மைத் தண்ணீருள்ள அண்டையிலே கொண்டுசெல்லுவார்
கண்ணீரோடும் கவலையோடும் கலங்கிய நேரம்
நம்மைத் தண்ணீருள்ள அண்டையிலே கொண்டுசெல்லுவார்
கண்மூடித்தனமாய் நாம் நடந்திட்டபோதும்
கண்மூடித்தனமாய் நாம் நடந்திட்டபோதும்
கையில் தடி கொண்டு வழிகாட்டும் ஆயனாகினார்
இனிப் பாடும் பாட்டெல்லாம் இயேசுவுக்காக
பொன் தேடி பொருள் தேடி புதைத்திடவேண்டாம்
தேவன் அருள்தேடி வகைதேடும் மார்க்கம் காணுவோம்
பொன் தேடி பொருள் தேடி புதைத்திடவேண்டாம்
தேவன் அருள்தேடி வகைதேடும் மார்க்கம் காணுவோம்
கண்மூடி இவர் நாமம் பாடுவதாலே
கண்மூடி இவர் நாமம் பாடுவதாலே
மாய சிறை நீங்கி சித்தமெல்லாம் சுத்தமாகுமே