நல்ல பாடலொன்று தினமும்
நல்ல பாடலொன்று தினமும்
உனக்காய் நான் தருவேன்
வல்ல தேவன் என்றே என்னை நீ
வாழ்த்தியே பாடிவிடு மகனே
நல்ல பாடலொன்று தினமும்
உனக்காய் நான் தருவேன்
உள்ளம் களிகூர்ந்தே
எனக்காய் பாடிடும் வரம் தருவேன்
உள்ளம் களிகூர்ந்தே
எனக்காய் பாடிடும் வரம் தருவேன்
நீ செல்லுமிடமெல்லாம் எந்தன்
நாமத்தையே பாடு மகனே
நீ செல்லுமிடமெல்லாம் எந்தன்
நாமத்தையே பாடு மகனே
நல்ல பாடலொன்று தினமும்
உனக்காய் நான் தருவேன்
கள்ளமில்லா எனது அடியவர்
உள்ளத்தில் வாசம் செய்வேன்
கள்ளமில்லா எனது அடியவர்
உள்ளத்தில் வாசம் செய்வேன்
நீ பாடும் துதியில் எல்லாம் எந்தன்
பரிவினை எடுத்துச் சொல்லு மகனே
நீ பாடும் துதியில் எல்லாம் எந்தன்
பரிவினை எடுத்துச் சொல்லு மகனே
நல்ல பாடலொன்று தினமும்
உனக்காய் நான் தருவேன்
வள்ளலே உமதன்பை என்றும் நான்
பாடிடும் வரம் தாரும்
வள்ளலே உமதன்பை என்றும் நான்
பாடிடும் வரம் தாரும்
என் வாழ்வு முடியும் வரை
உமக்காய்ப் பாடிக்கொண்டேயிருப்பேன்
என் வாழ்வு முடியும் வரை
உமக்காய்ப் பாடிக்கொண்டேயிருப்பேன்
உமக்காய்ப் பாடிக்கொண்டேயிருப்பேன்













