Home பாடல்கள் கர்த்தரை நோக்கியே கூப்பிடு

கர்த்தரை நோக்கியே கூப்பிடு

கர்த்தரை நோக்கியே கூப்பிடு
உன்னைக் கரம் பிடிப்பாரவர் புறப்படு
எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும்
உன்னைக் காத்திடும் மேய்ப்பனைப் பணிந்திடு
கர்த்தரை நோக்கியே கூப்பிடு
உன்னைக் கரம் பிடிப்பாரவர் புறப்படு

வல்லமை நிறைந்தவர் வாக்குமாறாதவர்
பரிசுத்தரும் இவரே
உன்னதமானவர் உயிர்த்தெழுந்தே இன்னும்
ஜீவிக்கிறார் நம்பிக் கூப்பிடு

கர்த்தரை நோக்கியே கூப்பிடு
உன்னைக் கரம் பிடிப்பாரவர் புறப்படு

தேவனை நோக்கியே கூப்பிடு
உன்னைத் தெரிந்து கொள்வாரவர் கூப்பிடு
உன்னத கிருபையால் தினம் உன்னைத் தேற்றிடும்
மன்னவனைப் போற்றியே கூப்பிடு

கர்த்தரை நோக்கியே கூப்பிடு
உன்னைக் கரம் பிடிப்பாரவர் புறப்படு

பரிசுத்த இரத்தத்தால் பாவங்கள் கழுவிய
இயேசு நாதனையே கூப்பிடு
அற்புதமானவர் இரட்சிப்பைத் தந்திடவே
அழைக்கத் துடிக்கிறார் கூப்பிடு

கர்த்தரை நோக்கியே கூப்பிடு
உன்னைக் கரம் பிடிப்பாரவர் புறப்படு
எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும்
உன்னைக் காத்திடும் மேய்ப்பனைப் பணிந்திடு
கர்த்தரை நோக்கியே கூப்பிடு
உன்னைக் கரம் பிடிப்பாரவர் புறப்படு

Exit mobile version