Home பாடல்கள் கர்த்தாவே என்று நான் கதறி அழுகையிலே

கர்த்தாவே என்று நான் கதறி அழுகையிலே

கர்த்தாவே என்று நான் கதறி அழுகையிலே
என் மகனே என்று நீர் எனை வந்து அணைத்துவிடும்
உம்மையே தஞ்சமென்று நினைக்கின்றேன் தினமும்
என்னையே வழிநடத்த இரங்கி நீர் வந்துவிடும்
கர்த்தாவே என்று நான் கதறி அழுகையிலே
என் மகனே என்று நீர் எனை வந்து அணைத்துவிடும்

கூட்பிட்ட குரல் கேட்டு ஓடிவந்தீர்
என்னைக் குழந்தையாய் அணைத்துமே தேற்றுகிறீர்
குற்றத்தை மன்னிக்கும் பெருந்தகையே
என் கர்த்தரே உம்மால் பிழைத்துக் கொண்டேன்
கர்த்தாவே என்று நான் கதறி அழுகையிலே
என் மகனே என்று நீர் எனை வந்து அணைத்துவிடும்

சித்தம் இரங்கியே வந்துவிட்டீர்
என் சத்தம் உம் காதில் விழுந்தனவோ
இத்தரை வாழ்வெல்லாம் மாயமன்றோ
உமது நித்திய ஜீவனே நிலைக்குமன்றோ
கர்த்தாவே என்று நான் கதறி அழுகையிலே
என் மகனே என்று நீர் எனை வந்து அணைத்துவிடும்

நித்தம் உம் வார்த்தையால் பிழைத்திருப்பேன்
உமது சித்தத்தின் நினைவுக்கே கீழ்ப்படிவேன்
எத் திசை சென்றாலும் உமதன்பை
என் இதயத்தில் ஏந்தியே எடுத்துச் செல்வேன்

கர்த்தாவே என்று நான் கதறி அழுகையிலே
என் மகனே என்று நீர் எனை வந்து அணைத்துவிடும்
உம்மையே தஞ்சமென்று நினைக்கின்றேன் தினமும்
என்னையே வழிநடத்த இரங்கி நீர் வந்துவிடும்

Exit mobile version