அருள் நிறைந்த மேரியிடம்
இறைத்தூதர் கபிரியேல்
ஆண்டவரின் சேதி சொன்னார்
அழகு மணி திரு வயிற்றில்
ஆண்டவரின் திருக்குமாரன்
வரப்போகும் சேதி சொன்னார்
தாயோடு தங்க மகன்
இறைவன் அருள் மிகப்பெற்ற
தன்மைகளை தான் உரைத்தார்
தலைமுறைகள் பலனூறாய்
காத்திருந்த மேசியாவின்
வருகைதனை முன்னுரைத்தார்
வயலை தேடி மாமழை வந்தது இரக்கத்தின் அடையாளம்
வானத்தில் கதிரவன் மண்ணில் மலர்ந்தது அன்பின் பிணைப்பாகும்

எல்லோரும் கொண்டாடுங்கள்
இயேசுவில் பண்பாடுங்கள்
எல்லோரும் கொண்டாடுங்கள்
இயேசுவில் பண்பாடுங்கள்
வாழ்நாள் முழுதும் வழித்துணையாகும் வள்ளல் பிறந்தாரே

இங்கு நாம் மறந்தாலும் நம்மை மறவா நாயகன் அவர்தானே

தேனாய் இனிக்கும் மீட்பை அடையும் வாழ்க்கை அவருடனே

நம்பி திருவடி தொழுதால் உறவென மகிழ்வார் இறைவனின் திருமகனே
எங்கள் இறைமகன் திருமகனே