Home பாடல்கள் இயேசுவைத் தேடிடுவாய் மனமே

இயேசுவைத் தேடிடுவாய் மனமே

இயேசுவைத் தேடிடுவாய் மனமே
இயேசுவைத் தேடிடுவாய்
பாவத்தின் பிடியினின்று உன்னை
மீட்டெடுக்கும் தேவன் – அந்த தூயனாம் இயேசு

ஆவியானவர் எங்கு உண்டோ – அங்கு
விடுதலை உனக்கு உண்டு
ஆவியானவர் எங்கு உண்டோ – அங்கு
விடுதலை உனக்கு உண்டு
பாவியாகி நீ மரிப்பதினாலே
உனக்கென்ன சுகமுண்டு
பாவியாகி நீ மரிப்பதினாலே
உனக்கென்ன சுகமுண்டு

இயேசுவைத் தேடிடுவாய் மனமே
இயேசுவைத் தேடிடுவாய்

ஒரே ஒருதரம் மரிப்பதும் – பின்பு
நியாயத்தீர்ப்பினை அடைவதுமே
ஒரே ஒருதரம் மரிப்பதும் – பின்பு
நியாயத்தீர்ப்பினை அடைவதுமே
மனிதனுக்கென்றே வேதத்தில்
நியமிக்கப்பட்டே இருப்பதையுணர்ந்து
மனிதனுக்கென்றே வேதத்தில்
நியமிக்கப்பட்டே இருப்பதையுணர்ந்து

இயேசுவைத் தேடிடுவாய் மனமே
இயேசுவைத் தேடிடுவாய்

இயேசுவின்றி ஒரு தெய்வத்தினாலும்
இரட்சிப்புக் கிடைக்காது
இயேசுவின்றி ஒரு தெய்வத்தினாலும்
இரட்சிப்புக் கிடைக்காது
அவர் வார்த்தையை நம்பியே மனந்திரும்பு
மன்னிப்பு உனக்கு உண்டு
அவர் வார்த்தையை நம்பியே மனந்திரும்பு
மன்னிப்பு உனக்கு உண்டு

இயேசுவைத் தேடிடுவாய் மனமே
இயேசுவைத் தேடிடுவாய்

இயேசுவைத் தேடிடுவாய் மனமே
இயேசுவைத் தேடிடுவாய்

Exit mobile version