பாடிடுவேன் ஒரு சங்கீதம்
என் தேவனின் நாமத்தை போற்றியே
மகிழ்ந்துகொண்டு களிகூருவேன்
ஒரு மறுமொழி கொடும் என்று மன்றாடுவேன்
பாடிடுவேன் ஒரு சங்கீதம்
விண்ணப்பம் கேட்பார் என் தேவன்
என்னை விலக்கியே கூட்டி சேர்த்துக்கொள்வார்
விண்ணப்பம் கேட்பார் என் தேவன்
என்னை விலக்கியே கூட்டி சேர்த்துக்கொள்வார்
என்னப்பன் என் ஐய்யன் என்று சொல்லி
தினம் நன்றியினால் துதி பாடிடுவேன்
என்னப்பன் என் ஐய்யன் என்று சொல்லி
தினம் நன்றியினால் துதி பாடிடுவேன்
பாடிடுவேன் ஒரு சங்கீதம்
என் தேவனின் நாமத்தை போற்றியே
பாடிடுவேன் ஒரு சங்கீதம்
மதிகெட்ட மூடர்க்கு மறைந்திடுவார்
நம்பி துதிக்கின்ற பாவியை தேற்றிடுவார்
மதிகெட்ட மூடர்க்கு மறைந்திடுவார்
நம்பி துதிக்கின்ற பாவியை தேற்றிடுவார்
நீதிக்கு துணையாய் நடந்திடுவார்
எம்மை ஆபத்துநாளிலும் காத்துக்கொள்வார்
நீதிக்கு துணையாய் நடந்திடுவார்
எம்மை ஆபத்துநாளிலும் காத்துக்கொள்வார்
பாடிடுவேன் ஒரு சங்கீதம்
என் தேவனின் நாமத்தை போற்றியே
பாடிடுவேன் ஒரு சங்கீதம்
பாடுங்கள் கர்த்தரின் நாமத்தையே
எமக்காய் பாடுகள் பட்ட நம் இயேசுவையே
பாடுங்கள் கர்த்தரின் நாமத்தையே
எமக்காய் பாடுகள் பட்ட நம் இயேசுவையே
தேடுங்கள் தேவனின் இராஜ்ஜியத்தை
எம்மை தேடிடும் இயேசுவின் நாமத்திலே
தேடுங்கள் தேவனின் இராஜ்ஜியத்தை
எம்மை தேடிடும் இயேசுவின் நாமத்திலே
பாடிடுவேன் ஒரு சங்கீதம்
என் தேவனின் நாமத்தை போற்றியே
மகிழ்ந்துகொண்டு களிகூருவேன்
ஒரு மறுமொழி கொடும் என்று மன்றாடுவேன்
பாடிடுவேன் ஒரு சங்கீதம்
பாடிடுவேன் ஒரு சங்கீதம்
