Home பாடல்கள் வார்த்தையினால் பிழைப்பேன்

வார்த்தையினால் பிழைப்பேன்

வார்த்தையினால் பிழைப்பேன் – உமது
வார்த்தையினால் பிழைப்பேன் – இயேசுவே
வார்த்தையினால் பிழைப்பேன்

ஆண்டவரே உமதருள் மொழி கூறிடும்
வேதத்தை நான் படிப்பேன் – அதில்
நீர் தரும் வாக்கினை வாஞ்சித்து மனதில்
மகிழ்ந்து களி கூறுவேன்
ஆண்டவரே உமதருள் மொழி கூறிடும்
வேதத்தை நான் படிப்பேன் – அதில்
நீர் தரும் வாக்கினை வாஞ்சித்து மனதில்
மகிழ்ந்து களி கூறுவேன்

வார்த்தையினால் பிழைப்பேன் – உமது
வார்த்தையினால் பிழைப்பேன் – இயேசுவே
வார்த்தையினால் பிழைப்பேன்

நொறுங்குண்ட இதயத்தின் காயத்தை ஆற்றிடும்
தேவா உன் வார்த்தையன்றோ
இருபுறம் கருக்குள்ள பட்டயம் போலது
பாவத்தை அறுக்குமன்றோ – இயேசுவே
நொறுங்குண்ட இதயத்தின் காயத்தை ஆற்றிடும்
தேவா உன் வார்த்தையன்றோ
இருபுறம் கருக்குள்ள பட்டயம் போலது
பாவத்தை அறுக்குமன்றோ – இயேசுவே

வார்த்தையினால் பிழைப்பேன் – உமது
வார்த்தையினால் பிழைப்பேன் – இயேசுவே
வார்த்தையினால் பிழைப்பேன்

வார்த்தையின் வடிவாய் வாழ்வுக்குத்
துணையாய் வந்தவர் நீரல்லவோ
எம்மை வாழ்விக்கும் தேவா
இயேசுவே உமது நாமத்தை நாம் துதிப்போம்
வார்த்தையின் வடிவாய் வாழ்வுக்குத்
துணையாய் வந்தவர் நீரல்லவோ
எம்மை வாழ்விக்கும் தேவா
இயேசுவே உமது நாமத்தை நாம் துதிப்போம்

வார்த்தையினால் பிழைப்பேன் – உமது
வார்த்தையினால் பிழைப்பேன் – இயேசுவே
வார்த்தையினால் பிழைப்பேன்