பாடல்கள்

Home பாடல்கள்

மரண இருளில் இருந்த எமக்கு

மரண இருளில் இருந்த எமக்கு
ஒளியைத் தந்தவர் யார்
இந்த மானிலத்தை ஜெயித்தெழுந்த
இயேசு ஒருவர் தான்
இயேசு ஒருவர் தான்…..

பாவச் சேற்றில் எம்மை மீட்டுத்
தூக்கி எடுத்தவர் யார்
தூய இரத்தம் சிந்தி தூய்மை செய்த
இயேசு ஒருவர் தான்
இயேசு ஒருவர் தான்…..

தேவ சாயல் எமக்குத் தந்த
தேவ மைந்தனும் யார்
இங்கு நாளும் நம்மை வழி நடத்தும்
இயேசு ஒருவர் தான்
இயேசு ஒருவர் தான்…..

மாய உலகில் வாழும் நமக்கு
வாழ்வைத் தந்தவர் யார்
எங்கள் ஆயனாக இங்கு வந்த
இயேசு ஒருவர் தான்
இயேசு ஒருவர் தான்…..

திசைகள் மாறிச் சென்ற நமக்கு
உதவி செய்தவர் யார்
என்றும் மேய்ப்பராகி வழியைக் காட்டும்
இயேசு ஒருவர் தான்
இயேசு ஒருவர் தான்…..

மனித வாழ்வின் நடை முறைக்கு
வழி வகுத்தவர் யார்
எம்மை மனந்திருப்பி அணைத்துக் கொண்ட
இயேசு ஒருவர் தான்
இயேசு ஒருவர் தான்…..

என்னிடம் வாவென்று இயேசு

என்னிடம் வாவென்று  இயேசு
இரு கையை நீட்டுகிறார்
அழைக்கின்ற தேவனையே என்றும்
ஆண்டவனாய் வணங்கு

வருத்தப்பட்டுத் தினமும் பாரத்தை
நீயேன் சுமக்கின்றாய்
வருத்தப்பட்டுத் தினமும் பாரத்தை
நீயேன் சுமக்கின்றாய்
என்னிடம் வாருங்கள் இளைப்பாறுதல்
தருவேன் என்றார்

என்னிடம் வாவென்று  இயேசு
இரு கையை நீட்டுகிறார்
அழைக்கின்ற தேவனையே என்றும்
ஆண்டவனாய் வணங்கு

வார்த்தையில் மாமிசமாய்  இயேசு
மானிடராய் உதித்தார்
வார்த்தையில் மாமிசமாய்  இயேசு
மானிடராய் உதித்தார்

ஆவியில் அசைவாடி எங்கள்
உணர்விலும் வாழுகின்றார்
ஆவியில் அசைவாடி எங்கள்
உணர்விலும் வாழுகின்றார்

என்னிடம் வாவென்று  இயேசு
இரு கையை நீட்டுகிறார்
அழைக்கின்ற தேவனையே என்றும்
ஆண்டவனாய் வணங்கு

வேதத்தின் வார்த்தையினால்  தேவன்
ஜீவனைக் கொடுக்கின்றார்
வேதத்தின் வார்த்தையினால்  தேவன்
ஜீவனைக் கொடுக்கின்றார்
அன்பால் எமை மீட்டு  நல்ல
வழியினைக் காட்டுகின்றார்
அன்பால் எமை மீட்டு  நல்ல
வழியினைக் காட்டுகின்றார்

என்னிடம் வாவென்று  இயேசு
இரு கையை நீட்டுகிறார்
அழைக்கின்ற தேவனையே என்றும்
ஆண்டவனாய் வணங்கு

ஆண்டவர் இயேசுவிடம்  உன்னை
அடைக்கலம் கொடுத்து விட்டால்
ஆண்டவர் இயேசுவிடம்  உன்னை
அடைக்கலம் கொடுத்து விட்டால்

உன்னையும் மீட்டுக் கொள்வார்  நித்திய
வாழ்வையும் தந்திடுவார்
உன்னையும் மீட்டுக் கொள்வார்  நித்திய
வாழ்வையும் தந்திடுவார்

என்னிடம் வாவென்று  இயேசு
இரு கையை நீட்டுகிறார்
அழைக்கின்ற தேவனையே என்றும்
ஆண்டவனாய் வணங்கு

நீர் கொடுத்த வாழ்வு இது

நீர் கொடுத்த வாழ்வு இது நினைக்கின்றேன் தேவா
நினையாத நேரத்திலும் எமைக் காக்கும் இறைவா
நீர் கொடுத்த வாழ்வு இது நினைக்கின்றேன் தேவா
நினையாத நேரத்திலும் எமைக் காக்கும் இறைவா
பார் முழுக்க உமதன்பு பரவுகின்றதல்லவா
பாவியெம்மை மீட்க வந்த இரக்கத்தின் தலைவா

நீர் கொடுத்த வாழ்வு இது நினைக்கின்றேன் தேவா
நினையாத நேரத்திலும் எமைக் காக்கும் இறைவா

தேவ பிள்ளையாகிவிடத் திருமுழுக்கும் பெறுவேன்
தெவிட்டாத தீந்தமிழில் உமதன்பை இசைப்பேன்
தேவ பிள்ளையாகிவிடத் திருமுழுக்கும் பெறுவேன்
தெவிட்டாத தீந்தமிழில் உமதன்பை இசைப்பேன்
மறக்காத மனம் தன்னை மலரடிக்குத் தருவேன்
மனம் திரும்பி உம்மோடு மரித்திடவும் வருவேன்
மறக்காத மனம் தன்னை மலரடிக்குத் தருவேன்
மனம் திரும்பி உம்மோடு மரித்திடவும் வருவேன்

நீர் கொடுத்த வாழ்வு இது நினைக்கின்றேன் தேவா
நினையாத நேரத்திலும் எமைக் காக்கும் இறைவா

அன்னை தரா அரவணைப்பை உமதன்பில் பெறுவேன்
ஆண்டவரே என்று உமை அணைத்துவிடத் துடிப்பேன்
அன்னை தரா அரவணைப்பை உமதன்பில் பெறுவேன்
ஆண்டவரே என்று உமை அணைத்துவிடத் துடிப்பேன்
நீர் கொடுத்த வாக்குகளை வேதமதில் படிப்பேன்
நிலையான ஜீவனையும் உம்மிடத்தில் பெற்றேன்
நீர் கொடுத்த வாக்குகளை வேதமதில் படிப்பேன்
நிலையான ஜீவனையும் உம்மிடத்தில் பெற்றேன்

நீர் கொடுத்த வாழ்வு இது நினைக்கின்றேன் தேவா
நினையாத நேரத்திலும் எமைக் காக்கும் இறைவா

இறைவா என் இயேசு என இதயத்தில் நினைப்பேன்
இணையில்லா உமதன்பை பருகிவிடத் துடிப்பேன்
இறைவா என் இயேசு என இதயத்தில் நினைப்பேன்
இணையில்லா உமதன்பை பருகிவிடத் துடிப்பேன்
கரை காண முடியாத கன்மலையைக் காண்பேன்
கர்த்தா என்றே உமது காலடியைத் துதிப்பேன்
கரை காண முடியாத கன்மலையைக் காண்பேன்
கர்த்தா என்றே உமது காலடியைத் துதிப்பேன்

நீர் கொடுத்த வாழ்வு இது நினைக்கின்றேன் தேவா
நினையாத நேரத்திலும் எமைக் காக்கும் இறைவா
பார் முழுக்க உமதன்பு பரவுகின்றதல்லவா
பாவியெம்மை மீட்க வந்த இரக்கத்தின் தலைவா
பாவியெம்மை மீட்க வந்த இரக்கத்தின் தலைவா…

பேரின்பக் கன்மலையே என்னை

பேரின்பக் கன்மலையே  என்னை
வாரி அணைத்துக் கொள்ளும்
பேரின்பக் கன்மலையே  என்னை
வாரி அணைத்துக் கொள்ளும்
யாரையும் நம்பி விடேன்  இந்த
நானில மீதினிலே
யாரையும் நம்பி விடேன்  இந்த
நானில மீதினிலே
வேறு துணை இல்லையே
இளைப் பாறுதலைத் தாரும்
வேறு துணை இல்லையே
இளைப் பாறுதலைத் தாரும்

பேரின்பக் கன்மலையே  என்னை
வாரி அணைத்துக் கொள்ளும்

தேசத்தை விட்டு வந்தேன் பிள்ளைப்
பாசத்தையும் பிரிந்தேன்
நேசத்தைத் தந்து என்னை இங்கு
மீட்டவரே வாரும்
ஆயனே இங்கு வந்து  என்னை
ஆதரித்துக் கொள்ளும்

பேரின்பக் கன்மலையே  என்னை
வாரி அணைத்துக் கொள்ளும்

வேதத்தில் மனம் லயித்தேன் உமது
போதனையில் திளைத்தேன்
என் மகனே என்று என்னை நீர்
கூப்பிட்ட குரல் கேட்டேன்
அந்நியன் என்றே என்னை கணமும்
தள்ளி விடாதேயும்

பேரின்பக் கன்மலையே  என்னை
வாரி அணைத்துக் கொள்ளும்

அந்தி பகல் மறையும் அப்பா உன்
ஆறுதல் மறைந்திடுமோ
மந்திர மாயமெல்லாம் உமது
மலரடி கண்டிடுமோ
ஐயனே அழைக்கின்றேன் என்
அருகினில் வாருமையா

பேரின்பக் கன்மலையே  என்னை
வாரி அணைத்துக் கொள்ளும்
பேரின்பக் கன்மலையே  என்னை
வாரி அணைத்துக் கொள்ளும்
பேரின்பக் கன்மலையே …

அன்புள்ளங்கள் இங்கே கூடுது

அன்புள்ளங்கள் இங்கே கூடுது
அந்தக் கன்மலையைத் தான் தேடுது
அன்புள்ளங்கள் இங்கே கூடுது
அந்தக் கன்மலையைத் தான் தேடுது
ஆண்டவர் நாமத்தைப் பாடுது
அவர் அண்டையிலே வந்து சேருது
ஆண்டவர் நாமத்தைப் பாடுது
அவர் அண்டையிலே வந்து சேருது

வேதத்திலே மனம் சேருது 
வேத நாயகனைத் தான் தேடுது
வேதத்திலே மனம் சேருது 
வேத நாயகனைத் தான் தேடுது
பேரின்பப் போதனை தந்தவரை
தினம் நன்றியினால் துதி பாடுது
பேரின்பப் போதனை தந்தவரை
தினம் நன்றியினால் துதி பாடுது

அன்புள்ளங்கள் இங்கே கூடுது
அந்தக் கன்மலையைத் தான் தேடுது
தேவனின் பிள்ளைகள் ஆகிட
இவர் நெஞ்சங்கள் இங்கே ஏங்குது
தேவனின் பிள்ளைகள் ஆகிட
இவர் நெஞ்சங்கள் இங்கே ஏங்குது
தாகங்கள் தீர்த்திடும் ஜீவ நீரை
எமக்குத் தாருங்கள் என்றே கேட்குது
தாகங்கள் தீர்த்திடும் ஜீவ நீரை
எமக்குத் தாருங்கள் என்றே கேட்குது

அன்புள்ளங்கள் இங்கே கூடுது
அந்தக் கன்மலையைத் தான் தேடுது
பாவங்கள் போற்றிடும் தேவனை
இங்கு பார்த்திடக் கண்கள் ஏங்குது
பாவங்கள் போற்றிடும் தேவனை
இங்கு பார்த்திடக் கண்கள் ஏங்குது
வாருங்கள் இயேசுவின் பாதத்தில்
ஜென்ம சாபங்கள் தீர்ந்திடும் வேதத்தில்
வாருங்கள் இயேசுவின் பாதத்தில்
ஜென்ம சாபங்கள் தீர்ந்திடும் வேதத்தில்

அன்புள்ளங்கள் இங்கே கூடுது
அந்தக் கன்மலையைத் தான் தேடுது
நித்திய ஜீவனை நாமடைய
அந்தச் சத்திய நாதனை நாடுவோம்
நித்திய ஜீவனை நாமடைய
அந்தச் சத்திய நாதனை நாடுவோம்
கேட்டதைத் தந்திடும் தேவனிடம்
எங்கள் கேட்டினை இரட்சிக்கப் பாடுவோம்
கேட்டதைத் தந்திடும் தேவனிடம்
எங்கள் கேட்டினை இரட்சிக்கப் பாடுவோம்

அன்புள்ளங்கள் இங்கே கூடுது
அந்தக் கன்மலையைத் தான் தேடுது
அன்புள்ளங்கள் இங்கே கூடுது
அந்தக் கன்மலையைத் தான் தேடுது
அந்தக் கன்மலையைத் தான் தேடுது….

ஆதிமுதல் வேதமெல்லாம் என்ன சொன்னது

ஆதிமுதல் வேதமெல்லாம் என்ன சொன்னது 
அந்த ஆண்டவரின் மகிமைதன்னை எடுத்துச் சொன்னது
ஆதிமுதல் வேதமெல்லாம் என்ன சொன்னது

முத்தி முதல் கொடிக்கு மோகக் கொடி படர்ந்து
அத்தி பழுத்ததென்றே அர்த்தம் சொன்னது
அந்த ஆண்டவரின் சத்தியத்தை வேதம் சொன்னது
அவர் ஜீவ பலியானதையும் வெளிப்படுத்தியது

ஆதிமுதல் வேதமெல்லாம் என்ன சொன்னது 
அந்த ஆண்டவரின் மகிமைதன்னை எடுத்துச் சொன்னது
ஆதிமுதல் வேதமெல்லாம் என்ன சொன்னது

மூலை இருந்தாரை முற்றத்தில் விட்டிடவே
சாலப் பெரிய எங்கள் சாமி வருவார் என்றும்
தண்டத்தைத் தான் ஏற்று தரணியைக் காத்திடவே
மன்னன் வருவார் எனவும் வேதம் சொன்னது

ஆதிமுதல் வேதமெல்லாம் என்ன சொன்னது 
அந்த ஆண்டவரின் மகிமைதன்னை எடுத்துச் சொன்னது
ஆதிமுதல் வேதமெல்லாம் என்ன சொன்னது

நீற்றைப் புனைந்துமென்ன நீராடப் போயிமென்ன
ஆற்றைக் கடக்கும் வழி அறிந்து கொண்டாயா
மாற்றிப் பிறக்க வழி தெரியா உனைக் காத்து
சேற்றிலும் சிறை மீட்க தெய்வம் வந்தது

ஆதிமுதல் வேதமெல்லாம் என்ன சொன்னது 
அந்த ஆண்டவரின் மகிமைதன்னை எடுத்துச் சொன்னது
ஆதிமுதல் வேதமெல்லாம் என்ன சொன்னது

அளவிட முடியா அன்பாலே

அளவிட முடியா அன்பாலே
ஆண்டவரே எம்மை அழைத்தீரே
இகமதில் பாவங்கள் பறந்தோட
இயேசுவாய் மண்ணில் பிறந்தீரே

அல்லேலூயா தேவனுக்கே
அல்லேலூயா ராஜனுக்கே

பிறவியில் நாமும் பாவியன்றோ எம்
பிழைதனை நீரும் பொறுப்பீரே
பிறவியில் நாமும் பாவியன்றோ எம்
பிழைதனை நீரும் பொறுப்பீரே

பாவமில்லாத ஒரு உடல் எடுத்து எங்கள்
பாலகன் இயேசுவாய் வந்தவரே
பாவமில்லாத ஒரு உடல் எடுத்து எங்கள்
பாலகன் இயேசுவாய் வந்தவரே

அல்லேலூயா தேவனுக்கே
அல்லேலூயா ராஜனுக்கே

நீதியின் தேவன் நீரன்றோ வழி
மாறிடும் நமக்கிங்கு ஆயனன்றோ
நீதியின் தேவன் நீரன்றோ வழி
மாறிடும் நமக்கிங்கு ஆயனன்றோ
தூயவரே உம் கருணையினை நாம்
துதிக்கின்ற வரம்தனைத் தந்துவிடும்
தூயவரே உம் கருணையினை நாம்
துதிக்கின்ற வரம்தனைத் தந்துவிடும்

அல்லேலூயா தேவனுக்கே
அல்லேலூயா ராஜனுக்கே

எமக்காய் மரித்த தேவனல்லோ  நீர்
நமக்காய் உயிர்த்த தெய்வமல்லோ
எமக்காய் மரித்த தேவனல்லோ  நீர்
நமக்காய் உயிர்த்த தெய்வமல்லோ
பிறர்க்காய் வாழ்ந்திடு என்றவரே நல்ல
பேரின்பப் போதனை தந்தவரே
பிறர்க்காய் வாழ்ந்திடு என்றவரே நல்ல
பேரின்பப் போதனை தந்தவரே

அல்லேலூயா தேவனுக்கே
அல்லேலூயா ராஜனுக்கே

தெய்வம் மீண்டும் திரும்பி வரும்

தெய்வம் மீண்டும் திரும்பி வரும்
நாம் செய்கின்ற தீமைக்கு முடிவு தரும்
தெய்வம் மீண்டும் திரும்பி வரும்
நாம் செய்கின்ற தீமைக்கு முடிவு தரும்
வல்லமை கொண்டவர் வருகையிலே
இங்கு நன்மைகள் நடப்பது சத்தியமே

நால் வகை வேதமும் பொருள் கூறும்
இயேசு நாதனின் மகிமையே அதில் சேரும்
வானமும் பூமியும் உறங்கி விடும் தேவன்
வார்த்தையே ஜீவனாய் இறங்கி வரும்

தெய்வம் மீண்டும் திரும்பி வரும்
நாம் செய்கின்ற தீமைக்கு முடிவு தரும்

தேடிய செல்வங்கள் அழிந்து விடும்
தேவனை நாடிய உள்ளங்கள் உயிர்;த்து விடும்

இயேசுவின் வருகையில் இவை நடக்கும்
வேதம் சொல்லிய வார்த்தைகள் பலித்து விடும்

தெய்வம் மீண்டும் திரும்பி வரும்
நாம் செய்கின்ற தீமைக்கு முடிவு தரும்

நிட்சயம் கர்த்தரின் வருகை வரும்
உன் நித்திய வாழ்வுக்கு பதிலும் தரும்
பத்துக் கற்பனை வழிகளில் கருணை வரும்
நம் அப்பனின் சத்தியம் நிலைத்து விடும்

தெய்வம் மீண்டும் திரும்பி வரும்
நாம் செய்கின்ற தீமைக்கு முடிவு தரும்
தெய்வம் மீண்டும் திரும்பி வரும்
நாம் செய்கின்ற தீமைக்கு முடிவு தரும்
வல்லமை கொண்டவர் வருகையிலே
இங்கு நன்மைகள் நடப்பது சத்தியமே

மனந்திரும்ப இன்னும் மனமில்லையோ

மனந்திரும்ப இன்னும் மனமில்லையோ
உனக்கு மறு வாழ்வு தர இங்கு இயேசு இல்லையோ
மனந்திரும்ப இன்னும் மனமில்லையோ
உனக்கு மறு வாழ்வு தர இங்கு இயேசு இல்லையோ

தினமவர் வேதத்தைப் படித்தும் உன் சிந்தையில்
தெளிவின்னும் வரவில்லையோ மகனே
பணம் பட்டம் பதவி மோகம் உனைவிட்டு
நீங்கி விடும் காலமும் வரவில்லையோ மகனே

மனந்திரும்ப இன்னும் மனமில்லையோ
உனக்கு மறு வாழ்வு தர இங்கு இயேசு இல்லையோ
மனந்திரும்ப இன்னும் மனமில்லையோ
உனக்கு மறு வாழ்வு தர இங்கு இயேசு இல்லையோ

சினம் விட்டு நீயும் உன் சீரான வாழ்வுக்கு
வழிவகுக்க எண்ணமில்லையோ
உனை மீட்ட இரட்சகரின் உன்னத சத்தியத்தை
ஏற்றிட மனமில்லையோ மகனே

மனந்திரும்ப இன்னும் மனமில்லையோ
உனக்கு மறு வாழ்வு தர இங்கு இயேசு இல்லையோ
மனந்திரும்ப இன்னும் மனமில்லையோ
உனக்கு மறு வாழ்வு தர இங்கு இயேசு இல்லையோ

உன் பாவச் சிறைமீட்க உலகினில் இரட்சகனாய்
நம் இயேசு வரவில்லையோ
பெண் பாவச் சொல் கேட்டு ஆண் பாவம் தின்ற பழம்
நம் பாவம் தொடரவில்லையோ மகனே

மனந்திரும்ப இன்னும் மனமில்லையோ
உனக்கு மறு வாழ்வு தர இங்கு இயேசு இல்லையோ
மனந்திரும்ப இன்னும் மனமில்லையோ
உனக்கு மறு வாழ்வு தர இங்கு இயேசு இல்லையோ

உன் மனச் சாட்சியினை இன்னும் ஏன் ஏமாற்றி
வாழ்கிறாய் புரியவில்லையோ
ஞானம் எனக்கில்லையென்று நாளை நாளையென்று
காலத்தைக் கடத்துவதேன் மகனே

மனந்திரும்ப இன்னும் மனமில்லையோ
உனக்கு மறு வாழ்வு தர இங்கு இயேசு இல்லையோ
மனந்திரும்ப இன்னும் மனமில்லையோ
உனக்கு மறு வாழ்வு தர இங்கு இயேசு இல்லையோ

 நிலையற்ற இவ்வாழ்வை நிலையென்று நம்பியே நீ
வேதத்தை படிப்பது ஏன்
கடுகளவு விசுவாசம் இல்லையெனில் உன் மனதில்
கர்த்தரின் அன்பு இல்லையே மகனே

மனந்திரும்ப இன்னும் மனமில்லையோ
உனக்கு மறு வாழ்வு தர இங்கு இயேசு இல்லையோ
மனந்திரும்ப இன்னும் மனமில்லையோ
உனக்கு மறு வாழ்வு தர இங்கு இயேசு இல்லையோ

விசுவாச வீடு கட்டுவோம் நாங்களும்

விசுவாச வீடு கட்டுவோம் நாங்களும்
விசுவாச வீடு கட்டுவோம்
விசுவாச வீடு கட்டுவோம் நாங்களும்
விசுவாச வீடு கட்டுவோம்
இயேசுவின் பிள்ளைகள் ஆகியே
என்றும் அசையாத அஸ்திபாரத்தில்
விசுவாச வீடு கட்டுவோம் நாங்களும்
விசுவாச வீடு கட்டுவோம்

மணலோரம் கட்டுகின்ற வீடுகள்
வெள்ளம் வரும்போது சாய்ந்து போக நேருமே
மணலோரம் கட்டுகின்ற வீடுகள்
வெள்ளம் வரும்போது சாய்ந்து போக நேருமே
கன்மலை மீது கட்டுகின்ற வீடுகள்
காற்றடித்தாலும் அசையாது நிற்குமே
கன்மலை மீது கட்டுகின்ற வீடுகள்
காற்றடித்தாலும் அசையாது நிற்குமே

விசுவாச வீடு கட்டுவோம் நாங்களும்
விசுவாச வீடு கட்டுவோம்
புத்தியுள்ள மனிதர் கட்டும் வீடுகள்
கன்மலைமீது கட்டும் வீடு ஆகுமே
புத்தியுள்ள மனிதர் கட்டும் வீடுகள்
கன்மலைமீது கட்டும் வீடு ஆகுமே
மதியில்லா மனிதர் கட்டும் வீடுகள்
மணலோரம் கட்டும் வீடு ஆகுமே
மதியில்லா மனிதர் கட்டும் வீடுகள்
மணலோரம் கட்டும் வீடு ஆகுமே

விசுவாச வீடு கட்டுவோம் நாங்களும்
விசுவாச வீடு கட்டுவோம்
இயேசு சொன்ன ஜீவனுள்ள வார்த்தைகள்
கன் மலைமீது கட்டும் வீடு ஆகுமே
இயேசு சொன்ன ஜீவனுள்ள வார்த்தைகள்
கன் மலைமீது கட்டும் வீடு ஆகுமே
தேவ ஞானம் தேசம் எங்கும் பெருகவே
இயேசு சொன்ன வார்த்தைகளே போதுமே
தேவ ஞானம் தேசம் எங்கும் பெருகவே
இயேசு சொன்ன வார்த்தைகளே போதுமே

விசுவாச வீடு கட்டுவோம் நாங்களும்
விசுவாச வீடு கட்டுவோம்
விசுவாச வீடு கட்டுவோம் நாங்களும்
விசுவாச வீடு கட்டுவோம்
இயேசுவின் பிள்ளைகள் ஆகியே
என்றும் அசையாத அஸ்திபாரத்தில்
விசுவாச வீடு கட்டுவோம் நாங்களும்
விசுவாச வீடு கட்டுவோம்

Popular Posts

My Favorites

முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாய் இருப்போம்

அக்டோபர் 02 "முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாய் இருப்போம்" ரோமர் 8:37 ஒவ்வொரு விசுவாசியும், தன் சுபாவத்தோடும், உலகத்தோடும், மாம்சத்தோடும் போராட வேண்டியிருக்கிறது. ஊழியம் செய்யத் துவங்கினால் அவனுக்கு மனமடிவுண்டாக்கும் காரியங்கள் அவனைச் சூழ்ந்து கொள்ளுகின்றன. சாத்தான்தான் விசுவாசிக்கு முக்கிய...