என் தேவனே என் தேவனே
வந்தே எம்மைத் தடுத்தாளுமே
காலங்களை நாம் வீணாக்கினோம்
கர்த்தாவே இன்று உமை நோக்கினோம்
காலங்களை நாம் வீணாக்கினோம்
கர்த்தாவே இன்று உமை நோக்கினோம்
என் தேவனே என் தேவனே
வந்தே எம்மைத் தடுத்தாளுமே
கண்ணீருடன் இன்று கை கூப்பினோம்
எம் இயேசுவே கடைக் கண் பாருமே
கண்ணீருடன் இன்று கை கூப்பினோம்
எம் இயேசுவே கடைக் கண் பாருமே
செந்நீரையே எமக்காகச் சிந்த
செந்நீரையே எமக்காகச் சிந்த
நீர் வந்தீரென்றே விசுவாசிக்கின்றோம்
நீர் வந்தீரென்றே விசுவாசிக்கின்றோம்
என் தேவனே என் தேவனே
வந்தே எம்மைத் தடுத்தாளுமே
பாவங்களை அன்று நீர் சுமந்ததால்
பலி பீடங்களில் இன்று செந்நீர் இல்லை
பாவங்களை அன்று நீர் சுமந்ததால்
பலி பீடங்களில் இன்று செந்நீர் இல்லை
கலி காலங்களால் இன்று கண் மூடினோம்
கலி காலங்களால் இன்று கண் மூடினோம்
என் ஜீவனே மீண்டும் வரவேண்டுமே
என் ஜீவனே மீண்டும் வரவேண்டுமே
என் தேவனே என் தேவனே
வந்தே எம்மைத் தடுத்தாளுமே
வேதங்களில் என்றும் உம் நாமமே
ஜீவ நாதங்களும் உம் புகழ் பாடுமே
வேதங்களில் என்றும் உம் நாமமே
ஜீவ நாதங்களும் உம் புகழ் பாடுமே
பாவங்களும் இன்று பறந்தோடுமே
பாவங்களும் இன்று பறந்தோடுமே
வந்து வரம் தாருமே எம் நேசரே
வந்து வரம் தாருமே எம் நேசரே
என் தேவனே என் தேவனே
வந்தே எம்மைத் தடுத்தாளுமே
காலங்களை நாம் வீணாக்கினோம்
கர்த்தாவே இன்று உமை நோக்கினோம்
காலங்களை நாம் வீணாக்கினோம்
கர்த்தாவே இன்று உமை நோக்கினோம்
என் தேவனே என் தேவனே
வந்தே எம்மைத் தடுத்தாளுமே








