என் இயேசு நாதனுக்காய்
இனி நான் பாடுவேன்
என் இயேசு நாதனுக்காய்
இனி நான் பாடுவேன்
வாழ்வில் எல்லை இல்லா மகிழ்ச்சியுடன்
நான் ஆடுவேன் நான் ஆடுவேன்
என் இயேசு நாதனுக்காய்
இனி நான் பாடுவேன்
பின் தேடும் மாந்தருக்கு
அவர் விளக்காய் வந்தவர்
மனு குலம் வாழ அவதார
இறையும் ஆனவர்
மனு குலம் வாழ அவதார
இறையும் ஆனவர்
குறையாத தெய்வ அன்பில்
நிறைவானவர் இயேசு
எங்கள் மனக்கோயில் இருப்பிடத்தில்
நிலையும் ஆனவர் நிலையும் ஆனவர்
எங்கள் மனக்கோயில் இருப்பிடத்தில்
நிலையும் ஆனவர் நிலையும் ஆனவர்
என் இயேசு நாதனுக்காய்
இனி நான் பாடுவேன்
கண்பாடும் காதலுக்கு
அவர் உருவாயானவர்
சின்ன பாலகரின் உள்ளத்தையே
விரும்புகின்றவர்
சின்ன பாலகரின் இதயத்தையே
விரும்புகின்றவர்
தன் நலத்தை கண்டுமே
மனம் சகிக்காதவர் இயேசு
தன் நலத்தை கண்டுமே
மனம் சகிக்காதவர் இயேசு
இந்த மண்ணுலகம் கண்ட மனித
தெய்வம் ஆனவர்
இந்த மண்ணுலகம் கண்ட தெய்வம்
மனிதன் ஆனவர்
என் இயேசு நாதனுக்காய்
இனி நான் பாடுவேன்
முன்னோரின் வேதத்துக்கே
அவர் முதலாய் ஆனவர்
உலக முடிவினிலே
அவதாரம் செய்கின்றவர்
உலக முடிவினிலே
அவதாரம் செய்கின்றவர்
ஆதியிலே வார்த்தையோடு
மூலம் ஆனவர்
ஆதியிலே வார்த்தையோடு
மூலம் ஆனவர்
எங்கள் ஆண்டவராய் இயேசு அவர்
நெஞ்சில் வாழ்பவர்
எங்கள் ஆண்டவராய் இயேசு அவர்
நெஞ்சில் வாழ்பவர்
என் இயேசு நாதனுக்காய்
இனி நான் பாடுவேன்
என் இயேசு நாதனுக்காய்
இனி நான் பாடுவேன்
வாழ்வில் எல்லை இல்லா மகிழ்ச்சியுடன்
நான் ஆடுவேன் நான் ஆடுவேன்
என் இயேசு நாதனுக்காய்
இனி நான் பாடுவேன்








