ஆண்டவரே மீண்டும் ஒரு பாடல் எழுத வேணும்
ஆண்டவரே மீண்டும் ஒரு பாடல் எழுத வேணும்
என்னை ஆவியினால் நீர் நிரப்பி அணைத்து மகிழ வேணும்
ஆண்டவரே மீண்டும் ஒரு பாடல் எழுத வேணும்
வேண்டுகிறேன் இயேசு உமது தரிசனத்தைத் தாரும்
வேண்டுகிறேன் இயேசு உமது தரிசனத்தைத் தாரும்
உம்மை ஆண்டவராய் எனது நெஞ்சில் துதிக்க வேணும் நாளும்
ஆண்டவராய் எனது நெஞ்சில் துதிக்க வேணும் நாளும்
ஆண்டவரே மீண்டும் ஒரு பாடல் எழுத வேணும்
மீண்டும் உமது வருகை இந்த மண்ணும் காண வேணும்
மீண்டும் உமது வருகை இந்த மண்ணும் காண வேணும்
அதை காணுகின்ற பாக்கியமாய் நானும் வாழ வேணும்
அதை காணுகின்ற பாக்கியமாய் நானும் வாழ வேணும்
ஆண்டவரே மீண்டும் ஒரு பாடல் எழுத வேணும்
அகிலமெங்கும் உமது நாமம் அறிந்து கொள்ள வேணும்
அகிலமெங்கும் உமது நாமம் அறிந்து கொள்ள வேணும்
எங்கள் ஆயன் என்றே உமதடியில் ஓடி வரவும் வேணும்
எங்கள் ஆயன் என்றே உமதடியில் ஓடி வரவும் வேணும்
ஆண்டவரே மீண்டும் ஒரு பாடல் எழுத வேணும்
இயேசுதானே தெய்வம் என்று தெரிந்து கொள்ளவும் வேணும்
இயேசுதானே தெய்வம் என்று தெரிந்து கொள்ளவும் வேணும்
தேவ ஆட்டுக்குட்டி என்று உமது பலியைப் போற்ற வேணும்
தேவ ஆட்டுக்குட்டி என்று உமது பலியைப் போற்ற வேணும்
ஆண்டவரே மீண்டும் ஒரு பாடல் எழுத வேணும்
தேவன் உண்டு என உலகம் தெரிந்து கொள்ளவும் வேணும்
தேவன் உண்டு என உலகம் தெரிந்து கொள்ளவும் வேணும்
அந்த தேவ அன்பை உமதடியில் கண்டு மகிழ வேணும்
அந்த தேவ அன்பை உமதடியில் கண்டு மகிழ வேணும்
ஆண்டவரே மீண்டும் ஒரு பாடல் எழுத வேணும்
என்னை ஆவியினால் நீர் நிரப்பி அணைத்து மகிழ வேண்டும்
ஆண்டவரே மீண்டும் ஒரு பாடல் எழுத வேணும்